Friday 11 October 2013

சைவமே சிறந்தது


சைவம் சிவத்தோடு சம்பந்தம் ஆனமையால்
சைவமே அத்துவிதம் சாதிக்கும் – சைவத்தை
வேறென்று கொள்ளற்க வேறற்ற வேதாந்தக்
கூறென்று கொள்ளுதலே கோள்.

சைவம் வேறு, சிவம் வேறு அன்று. இரண்டும் ஒன்றினுள் ஒன்று அடங்கியுள்ள அத்துவிதம் என்று இந்தப் பாடல் கூறுகிறது.


'உள்ளம் பெரும் கோவில் ஊன் உடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலன்ஐந்தும் காளா மணி விளக்கே.'
இந்தப் பாடல் மூலம் நமக்கு சித்தர் திருமூலத்தேவர் உணர்த்தும் செய்தி திருக்கோவிலுக்குள் எப்படி செத்தபிணத்தை கொண்டு செல்லக்கூடாதோ அது போல் கோபுரவாசலான நம் வாய்க்குள் செத்த பிணமான புலால் உணவை அனுமதிக்கக்கூடாது.
பல மிருகங்களையும் உணவுக்காக வதைக்கும் போது அதன் கண்கள் தான் நம்மைப் பார்த்து பல சாபங்கள் கொடுக்கும். அப்படி இருக்கும் போது ஊண் (மாமிசம்) தின்று ஏன் நம் உடலை வளர்க்க வேண்டும்.
உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் நாம் சைவ உணவின் மூலமே பெற்று விட முடியும். ஆக மிருக வதை வேண்டாம்.

No comments:

Post a Comment

நன்றி