Wednesday 9 July 2014

10 வகை பிரதோச வழிபாடுகள்

பிரதோச வழிபாடு சிவவழிபாட்டிற்குரிய மிகச் சிறப்பான மிக முக்கியமான வழிபாடாகும். தோசம் என்ற வடமொழிச் சொல்லிற்கு குற்றம் என்று பொருள். பிரதோசம் என்றால் குற்றமற்றது என்று பொருள். குற்றமற்ற இந்தப் பொழுதில் ஈசனை வழிபட்டோமானால் நாம் செய்த சகல பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.
தியோதசி திதியன்று மாலை 4 - 6 மணி வரை உள்ள நேரமாகும். அமாவாசையிலிருந்து 13-ம் நாளும் பவுர்ணமியிலிருந்து 13-ம் நாளும் திரயோதசி திதியாகும்.
மாதத்தில் இரண்டு பிரதோசம் வருகிறது.
பிரதோசத்தில் பத்து வகையுண்டு:

1. நித்தியபிரதோசம்: தினமும் 4 மணி முதல் 6 மணி வரையிலான நேரம்
2. நடசத்திர பிரதோசம்: திரயோதசி திதி எந்த நட்சத்திரத்தில் எந்த நட்சத்திரம் வருகிறதோ அந்த நட்சத்திர உருவமாக சிவனை வழிபடுவது.
3. பட்சபிரதோசம்: சுக்ல பட்ச அதாவது வளர்பிறையில் வரும் திரயோதசி திதியில் பட்சலிங்க வழிபாடு செய்வது.
4. மாதப் பிரதோசம்: கிருஸ்ண பட்ச அதாவது தேய்பிறையில் வரும் திரயோதசி திதியில் சந்திர கலையில் நின்று சிவனை வழிபடுவது.
5. பூர்ண பிரதோசம்: திரயோதசி திதியும் சதுர்த்தி திதியும் பின்னப்படாமல் இருக்கும் போது சிவனை வழிபாடு செய்வது. சுயம்பு லிங்க வழிபாடு சிறப்பான பலனைத் தரும்.
6. திவ்ய பிரதோசம்: துவாதசியும் திரயோதசியும் அல்லது திரயோதசியும் சதுர்த்தியும் ஆக இரட்டைத் திதிகள் சேர்ந்து வருவது. மரகத லிங்க வழிபாடு சிறப்பான பலனைத் தரும்.
7. அபய பிரதோசம்: ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் வரும் திரயோதசி திதியில் சப்தரிசி மண்டலத்தை வழிபடுவது.
8. தீபப் பிரதோசம்: திரயோதசி திதியில் தீபத் தானங்கள் செய்து வழிபடுவது. சிவாலங்களில் தீப அலங்காரங்கள் செய்வது. பஞ்சாடசர தீப ஆராதனை முறைப்படி செய்து சிவனை வழிபடுவது.
9. சப்த பிரதோசம்: திரயோதசி திதியில் நடனங்கள் காட்டி சாகா கலையை விளக்குவது. இது யோகிகளிற்குரிய முறையாகும்.
10. மகா பிரதோசம்: ஈசன் விசமுண்டது கார்த்திகை மாதம் திரயோதசி திதி சனிக்கிழமை ஆகும். சனிக்கிழமை திரயோதசி திதி வரும் பிரதோச வழிபாடே மகா பிரதோச வழிபாடாகும்.
தேய்பிறை பிரதோசம் ஞாயிற்றுக்கிழமைகளில் வரும்போது ராகு காலமும் பிரதோச வேளையும் கூடி வரும் 4.30-6.00 மணி வரையிலான காலத்தில் மேலே குறிப்பிட்ட வழிமுறையில் பஞ்சாட்சர மந்திரத்தை ஜெபித்தபடி சிவனை வழிபடுபவர்களுக்கு முனிவர் சாபம், முன்னோர் சாபம், கிரக தோசங்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஆன்றோர் வாக்கு.
13 பிரதோசங்கள் தொடர்ந்து முறைப்படி பிரதோச வழிபாடு செய்பவர்களின் வாழ்வில் சகல நலமும், வளமும் கிடைக்கும். 108 பிரதோச பூஜை செய்து அவர்கள் செய்த சகல பாவங்களும் நீங்கி சிவனின் திருவடியில் வசிக்கும் பலன் கிட்டும்.

Sunday 6 July 2014

காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர்’’

 



* காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர்’’என்னது காக்கைக் கறி சமைத்து கருவாடு தின்பவர்தான் சைவர்களா என பதற வேண்டாம்.
* இதன் தமிழ் விளையாட்டும் பொருளும் பின்வருமாறு :காக்கை =கால் கை அளவு
கறி சமைத்து= காய்கறி சமைத்து கரு வாடு =கரு எனும் உயிர் வாடும் என்றுஉண்பர் சைவர்= உண்பவர்கள் சைவ சமயத்தை சார்ந்தவர்கள்அதாவது சிவனை வழிபாடு செய்யும் சைவ சமயத்தை சேர்ந்தவர்கள் கால் வயிறு மட்டும் உண்பார்கள். இதுதான் அவர்களது அடிப்படை நியதி.

தாமரையின் தனிச்சிறப்பு



செல்வத்தின் கடவுளான திருமகள் சிவப்புத் தாமரையில் அமர்ந்திருப்பதாகவும், கல்வியின் கடவுளான கலைமகள் வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பதாகவும் நம் நாட்டில் சித்தரிக்கப் படுகிறார்கள். மகாவிஷ்ணுவின் நாபியில் இருந்து தாமரை வருவதால் மகாவிஷ்ணுவிற்கு பத்மநாபன் என்ற பெயரும் உண்டு. கண்ணனின் கண்கள் தாமரை போன்ற அழகுடன் இருப்பதால் கண்ணனுக்கு கமலக் கண்ணன் என்ற பெயரும் உண்டு.

தாமரை நம் நாட்டு தேசிய மலர் மட்டுமல்ல வியட்னாம், எகிப்து போன்ற நாடுகளுக்கும் அது தேசிய மலர் ஆகும். பண்டைய எகிப்தில் தாமரை நைல் நதிக்கரை ஓரத்தில் பரவலாகக் காணப்பட்டதாகவும், அக்கால எகிப்தியர்கள் தாமரை மலரைப் புனிதமாகப் போற்றியதாகவும் சொல்லப்படுகிறது. நம் நாட்டு தெய்வங்களைப் போலவே பண்டைய எகிப்திய கடவுள்களும் தாமரை மலரைக் கையில் வைத்திருப்பதாக பழங்கால எகிப்திய சிற்பங்கள் கூறுகின்றன. ஆனால் எகிப்திய தாமரை நம் நாட்டு தாமரையை விட தோற்றத்தில் சற்று வேறுபட்டிருக்கிறது.

இனி தாமரை மலருக்கு ஆன்மிக ரீதியாகவும், மற்ற விதங்களிலும் உள்ள தனிச்சிறப்புகளைப் பார்ப்போம்.

தாமரை மலர் சத்தியம், சிவம், சுந்தரம் என்ற முக்குணங்களின் இருப்பிடம். இறைவனும் இந்த முக்குணங்களையும் கொண்டவன் தானே? அதனால் தான் இறைவனின் பல அம்சங்களும் தாமரை மலருடனேயே ஒப்பிடப்படுகின்றன. தாமரைக் கண்கள், தாமரைப் பாதங்கள், தாமரைக் கைகள், இதயத்தாமரை என்றெல்லாம் சொல்கிறோம். தாமரை மலர் இறைவனைப் பூஜிக்க மட்டுமே பயன் படுத்தப்படுகிறது. தாமரை மலரைத் தலையில் யாரும் சூடிக்கொள்வதில்லை.

நம் வேதங்களிலேயே தாமரை பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. சோம என்பது தாமரையை குறிக்கும் என்பது டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆண்ட்ரூ மெக்டொனால்ட் என்ற தாவரவியலாளரால் நிறுவப்பட்டிருக்கிறது. வேதம் சொல்லும் தாவரம் நிச்சயமாக இந்திய கண்டத்தில் மிக முக்கியமான, மையமான இடம் கொண்டதாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் அவர் சிந்து சமவெளி நாகரிகத்திலிருந்து பிற்காலத்திய சைவ, வைணவ, பவுத்த பண்பாடுகள் வரை ஆராய்ச்சி செய்தார். இத்தகைய முழுமையான பண்பாட்டு ஆராய்ச்சியின் விளைவாக அவர் சோமத் தாவரம் என்பது வேறெதுவும் அல்ல தாமரை (Nelumbo nucifera) தான் என முடிவு செய்தார். வேதங்களின் உருவகத்துக்கும் சிந்து சமவெளி நாகரிக முத்திரைகளில் காணப்படும் சித்திரங்களுக்கும் இருக்கும் ஒற்றுமையை அவர் சுட்டிக்காட்டினார். சிந்து வெளி பண்பாட்டு முத்திரைகளில் காணப்படும் இலச்சினை சித்திரத்தில் புனிதத் தாமரை மிக அழகான முறையில் காட்டப்பட்டுள்ளது. தாமரைப்பூவின் தூண் போன்ற பீடம் முக்கியப்படுத்தப் பட்டுள்ளது என்பதை ஆதாரபூர்வமாகக் காட்டி உள்ளார்.

இப்படி பழமைச் சிறப்பு வாய்ந்துள்ள தாமரையின் வேர் தரையில் சேற்றில் இருந்தாலும் அதன் மலர்கள் அத்தகைய சுற்றுப்புறத்தினால் பாதிக்கப்படாதவையாக அழகுடன் ஒளி வீசுபவையாக இருக்கும். அப்படியே நாமும் எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தாலும் அந்த சூழ்நிலையில் இருந்து மேல் எழுந்து தாமரையைப் போலவே உள்ளும் புறமும் தூய்மையுடனும், அழகுடனும் விளங்க வேண்டும் என்கிறார்கள் ஆன்மிகப் பெரியோர்கள்.

அதே போல தண்ணீரிலேயே இருந்தாலும் தாமரை இதழ்கள் தண்ணீரினால் நனைவதில்லை. இது ஞானிகளின் மனநிலைக்கு உதாரணமாக இருக்கிறது. எத்தனையோ துன்பங்களுக்கும் பிரச்சினைகளுக்கும் நடுவே ஞானியின் உலக வாழ்க்கை அமைந்தாலும் ஞானி அவற்றால் சிறிதும் பாதிக்கப்படாமல், தன் மேலான இயல்பு மாறாமல் இருப்பதை தாமரை இலை - தண்ணீர் உதாரணம் மூலம் அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.

தனியாக ஓரிடத்தில் இருப்பவன் எதனாலும் பாதிக்கப்படாமல் இருக்கலாம். அது ஒரு கஷ்டமான காரியம் அல்ல. துன்பங்களும், பிரச்சினைகளும், கவர்ந்திழுக்கும் விஷயங்களும் நிறைந்த உலகின் மத்தியில் வாழ்ந்து கொண்டு இருந்தும் அவற்றால் பாதிக்கப்படாமல் இருப்பது தான் பேருயர்வு. அது தான் உன்னத நிலை. அந்த நிலைக்கு ஒருவன் உயர்ந்திருக்க ஏண்டும் என்று சதா நினைவூட்டிக் கொண்டிருப்பது தாமரையின் தனிப்பெரும் சிறப்பு.

பகவத் கீதையிலும் கிருஷ்ண பரமாத்மா ஒரு சுலோகத்தில் தாமரை மலர் உதாரணத்தையே அர்ஜுனனிற்கு சொல்லி விளக்குகிறார். ”எவனொருவன் செயல் புரிகையில் அச்செயல்களிடத்தில் பற்றுதல் கொள்ளாமல் அவற்றை இறைவனுக்கு அர்ப்பணித்து விடுகிறானோ அவன் நீரில் இருப்பினும் நீரினால் நனைக்கப்படாத தாமரை இதழ்களைப் போல் பாவங்களினால் பாதிக்கப்படாமல் இருப்பான்”.

மனித உடலில் “சக்ரா” என்னும் சக்தி மையங்கள் ஏழு உள்ளன என்று யோக சாஸ்திர நூல்கள் கூறுகின்றன. மூலாதார சக்ராவில் இருந்து சஹஸ்ரர சக்ரா வரை உள்ள அந்த ஒவ்வொரு சக்ராவும் குறிப்பிட்ட எண்ணிக்கையுடைய இதழ்கள் கொண்ட தாமரையாக உருவகப்படுத்தப் படுகின்றது. உதாரணத்திற்கு மூலாதார சக்ரா என்னும் முதல் சக்ரா நான்கு இதழ் தாமரையான சக்ராவாகவும், ஏழாவது சக்ராவான சஹஸ்ரர சக்ரா ஆயிரம் இதழ் கொண்ட தாமரையின் வடிவாகவும் உருவகப்படுத்தப்படுகிறது. இப்படி சக்தி மையங்களை உருவகப்படுத்தும் போது கூட தாமரை மலரைக் கொண்டே உருவகப்படுத்தும் அளவு தாமரை சிறப்புப் பெற்றிருக்கிறது.

இப்படி வேத காலத்தில் இருந்து ஆன்மிக மலராய் கருதப்படும் தாமரைக்கு மருத்துவத் தன்மைகளும் இருக்கின்றன. பழங்காலத்திலிருந்தே தாமரை ஆயுர்வேத வைத்தியத்தில் பயன்படுவதால், அதைப் பற்றிய விவரங்கள் ஆயுர்வேத நூல்களில் அதிகம் சொல்லப்பட்டிருக்கின்றன. கப, பித்தங்களை சீராக்கவும், பேதிக்கு மருந்தாகவும் தாமரை பயனாகிறது. முக்கியமாய் இதய நோய்களைக் கட்டுப்படுத்தும் மருந்தாக தாமரை கருதப்படுகிறது.

பொதுவாக ஜுரங்களுக்கு மருந்தாகவும், தாகத்தை தணிப்பதாகவும், வயிற்றுப்பூச்சிகளை போக்கும் மருந்தாகவும், உடலில் உஷ்ணம், எரிச்சல் இவற்றை குறைக்க வல்லதாகவும் ஆயுர்வேதத்தில் தாமரை கருதப்படுகிறது. தாமரை விதைகள் தானியங்களை விட சத்துள்ள உணவாக கருதப்படுகிறது. தாமரையின் வேர்கிழங்கு (Rhizome) உடல் வளர்ச்சிக்கு சத்துணவாகும். இது உடலுக்கு ‘டானிக்’ காக செயல்படும். கல்லீரல் நோய்கள், இருமல், மாதவிடாயில் அதிக ரத்தப்போக்கு, மூலத்தில் ரத்தம் வருவது போன்றவற்றுக்கு மருந்தாக கொடுக்கப்படுகிறது. தாமரை பிராங்கைடீஸ் போன்ற நுரையீரல் நோய்களுக்கும் மருந்தாகும். செந்தாமரையை விட வெண் தாமரைக்கு மருத்துவ குணங்கள் அதிகம் என்கின்றனர்.

இப்படி மகாலட்சுமியின் உறைவிடமாகவும், மெய்ஞான நிலையின் உதாரணமாகவும், மருத்துவ குணங்களின் தொகுப்பாகவும் இருக்கும் நம் நாட்டு தேசிய மலரான தாமரையின் மகத்துவத்தை அறிந்திருந்து, முறையாகப் பயன்படுத்தி நாம் முழுப்பலன் அடைவோமாக!
 

ருத்ராக்ஷங்களை கையில் , கழுத்தில்,மார்பில் அணிவது எப்படி?


இரு தோல்களில் முப்பத்திரெண்டு  தனித்தனியாக 16
இரண்டு கைகளில் (மணிக்கட்டுகளில்) தனித்தனியே 12
மார்பில் 108
கழுத்தில் 32
தலையில் 32
கழுத்தை சுற்றி மாலையாக 36
கழுத்தில் 50
புழுக்கள் அரித்தவை ,பிளவுபட்டவை உடைந்தவை, முட்களில்லாதவை, காயப்பட்டவை, மூடப்பட்டவை ஆகிய ஆறு வகையான ருத்ராக்ஷட்சங்களையும் விலக்கிவிட வேண்டும் ஐந்து முகம் கொண்ட ருத்ராக்ஷங்களை எளிதில் கண்டுபிடிக்க தண்ணீரில் போட்டவுடன் மூழ்கி விடும்,
நீங்கலாகவே கோர்த்து ,பசுவின் பால், தயிர், நெய், பசுவின் மூத்திரம், சாணம் என்னும் ஐந்தும் சேர்ந்தது பஞ்சகவ்வியம் எனப்படும் இதில் உர வைக்கவேண்டும் ,பின்பு நல்ல குருநாதரிடம் இருந்து மாலையை அணிந்து யோகம், தியானம் ,தவம்
செய்து சிவபெருமானை வணங்கி அணியலாம்
கண்டிகை தரித்தோரை சிவனாகவே கருதி வணங்கவேண்டும் என்ற கருத்துடனேயே “நேயமலிந்தவர் வேடமும் ஆலயந்தானும் அரனெனத் தொழுமே" சிவஞானபோதம்  சூத்திரம் எழுந்தது
ருத்ராக்ஷத்தை அணியும் புண்ணியத்திற்கு ஈடாக வேறேந்தப் புண்ணியமும் கிடையாது. அதனால்தான், இந்த உண்மையை உணர்ந்த முனிவர்கள் ருத்ராட்சம் 

தாலி கட்டுவது ஏன்...?



தாலி கட்டுவது ஏன்...?
தமிழர்களின் திருமண சடங்குகளில் செய்யப்படும் ஒவ்வொரு காரியங்களுக்கும் வலுவான காரணங்கள் உண்டு உதாரணமாக அம்மி மித்திப்பது நான் கற்பு தன்மையில் அம்மியை போல் அதாவது கல்லை போல் உறுதியாக இருப்பேன் என்றும் அருந்ததி பார்ப்பது பகலில் நட்சத்திரத்தை பார்ப்பதற்கு எவ்வளவு விழிப்புணர்வு வேண்டுமோ அதே போன்று விழிப்புணர்வோடு என் குடும்ப கெளரவத்தை காப்பாற்றவும் இருப்பேன் என்றும் பொருளாகும்
திருமண சடங்கில் அக்னி வளர்ப்பது திருமணம் முடித்து கொள்ளும் நாம் இருவரும் ஒருவர்க்கொருவர் விசுவாசமாகவும் அன்யோன்யமாகவும் இருப்போம் உன்னை அறியாமல் நானும் என்னை அறியாமல் நீயும் தவறுகள் செய்தால் இந்த நெருப்பு நம் இருவரையும் சுடட்டும் இருவரின் மனசாட்சியையும் சுட்டு பொசுக்கட்டும் என்பதாகும்
அதே போன்ற அர்த்தம் தான் கல்யாண வீட்டில் வாழை மரம் கட்டுவதில் இருக்கிறது வாழை மரம் வளர்ந்து குலைதள்ளி தனது ஆயுளை முடித்து கொள்ளவேண்டிய நிலைக்கு வந்தாலும் கூட அடுத்ததாக பலன் தருவதற்கு தனது வாரிசை விட்டு செல்லுமே அல்லாது தன்னோடு பலனை முடித்து கொள்ளாது எனவே திருமண தம்பதியரான நீங்கள் இருவரும் இந்த சமூதாயம் வளர வாழையடி வாழையாக வாரிசுகளை தந்து உதவ வேண்டும் என்பதே வாழைமரம் கட்டுவதின் ரகசியமாகும்.
உலக முழுவதும் உள்ள திருமண சடங்கு முறையில் திருமணம் ஆனதற்கான அடையாள சின்னங்களை அணிந்து கொள்வது முறையாகவே இருந்து வருகிறது அதாவது மனித திருமணங்கள் அனைத்துமே எதோ ஒருவகையில் நான் குடும்பஸ்தன் என்பதை காட்ட தனிமுத்திரை இடப்படுவதாகவே இருக்கிறது. அப்படி உலகம் தழுவிய வழக்கங்களில் ஒன்று தான் தாலிகட்டும் பழக்கமாகும் சங்ககாலத்தில் தாலி என்ற வார்த்தை இலக்கியங்களில் அதிகமாக பயன்பாட்டில் இல்லை என்பதற்காக பழங்கால தமிழன் தாலி கட்டாமல் வாழ்ந்தான் என்று சொல்வதற்கு இல்லை
தாலி என்ற வார்த்தை தான் இல்லையே தவிர இதே பொருளை கொண்ட மங்கலநாண் என்ற வார்த்தை இலக்கியங்கள் பலவற்றில் காணப்படுகிறது. ஒரு காலத்தில் அரசியல் கூட்டங்களில் சிலப்பதிகாரத்தில் கோவலன் கண்ணகி திருமண சடங்கில் இளங்கோவடிகள் தாலிகட்டுவதை பற்றி பேசவே இல்லை அதனால் தமிழர் திருமணங்களில் தாலியே இல்லை என்று முழங்கி கொண்டு அலைந்தனர். ஆனால் அவர்களே மங்கள் வாழ்த்து படலத்தில் மங்கல அணி என்ற வார்த்தைக்கு என்ன பொருள் என்றே அறியாமல் போய்விட்டனர்
“முரசியம்பின, முருடதிர்ந்தன, முறையெழுந்தன பணிலம்,வெண்குடை
அரசெழுந்ததோர் படியெழுந்தன, அகலுள்மங்கல அணியெழுந்தது”'''
என்று இளங்கோ அடிகள் மிக அழகாக சொல்கிறார். அதாவது திருமண நேரத்தில் முரசுகள் ஒலிக்கின்றன வெண்குடை உயர்கிறது வாழ்த்துக்கள் முழங்குகின்றன மங்கல அணி எழுத்து போல் பதிகிறது என்பது இதன் பொருளாகும்
ஆண் பெண்ணை அடிமையாக்குவதோ பெண் ஆணை அடிமையாக்குவதோ சமூதாய பிரச்சனையே தவிர அது சடங்கு பிரச்சனை அல்ல தமிழர் சடங்கில் எந்த இடத்திலாவது நீ தாலி அணிந்திருக்கிறாய் அதனால் எனக்கு நீ அடிமை என்ற வாசகம் கிடையவே கிடையாது.
உணமையாக தாலி அணிவதன் பொருள் ஆண்மகனான நான் உன் கழுத்தில் திருமாங்கல்யத்தை அணிவிக்கும் இந்த நேரம் முதல் உன்னை பாதுகாக்கும் காவலனாக இருப்பேன் இந்த மாங்கல்யத்தில் நான் போடும் முதல் முடிச்சி நீ தெய்வத்திற்கும் மனசாட்சிக்கும் கட்டுப்பட்டவள் என்பதை காட்டட்டும் இரண்டாவது முடிச்சி குலபெருமையை நீ பாதுகாப்பாய் என்பதை காட்டட்டும் மூன்றாவது முடிச்சி குலவாரிசுகளை முன்னின்று காப்பவள் நீயென்று காட்டட்டும் என்பதாகும்.
தமிழர்களின் திருமண சடங்குகள் அனைத்துமே ஆணையும் பெண்ணையும் சமமாக பாவித்தே இருக்கிறதே தவிர ஏற்ற தாழ்வு கற்பிக்கும் படி எதுவும் கிடையாது . உண்மைகளை கண்டறிய வேண்டியது தான் உயர்ந்த மனிதர்களின் உன்னத நோக்கமாகும்.
நீங்கள் எப்போதும் உயர்ந்ததையே பாருங்கள் உயர்ந்ததாக சிந்தியுங்கள் உங்கள் வாழ்வும் உயர்ந்ததாக இருக்கும் அதை விட்டு விட்டு ஆகயாத்தில் பறக்கின்ற கழுகு தான் எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் அதை மறந்து கீழே பூமியில் கிடக்கும் அழுகிய மாமிசத்தை பார்ப்பது போல் தாழ்மையான கருத்துக்களை பார்க்காதீர்கள் தாழ்வான சிந்தனைகளை காது கொடுத்து கேட்காதிர்கள் உயர்ந்தவர்கள் எப்போதும் உயர்ந்ததையே காண்பார்கள்

உன் இறுதிக் காலத்தில் நீ எதையும் உன்னுடன் கொண்டு போக முடியாது...



ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன் இறந்து விட்டான். அவன் அதை உணரும் போது கையில் ஒரு பெட்டியுடன் கடவுள் அவன் அருகில் வந்தார்.
கடவுள்: "வா மகனே........நாம் கிளம்புவதற்கான நேரம் நெருங்கி விட்டது......."
ஆச்சரியத்துடன் மனிதன் "இப்பவேவா? இவ்வளவு சீக்கிரமாகவா? என்னுடைய திட்டங்கள் என்ன ஆவது?"
"மன்னித்துவிடு மகனே........உன்னைக் கொண்டு செல்வதற்கான நேரம் இது........."
"அந்தப் பெட்டியில் என்ன உள்ளது?"
"உன்னுடைய உடைமைகள்........."
"என்னுடைய உடைமைகளா!!!.......அதாவது என்னுடைய பொருட்கள், உடைகள், பணம்,.............?"
"இவை அனைத்தும் உன்னுடையது அல்ல........ அவை பூமியில் நீ வாழ்வதற்கானது........."
"என்னுடைய நினைவுகளா?............."
"அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது.........அவை காலத்தின் கோலம்........"
"என்னுடைய திறமைகளா?..........."
"அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது.........அவை சூழ்நிலைகளுடன் சம்பந்தப்பட்டது......."
"அப்படியென்றால் என்னுடைய குடும்பமும் நண்பர்களுமா?......"
"மன்னிக்கவும்...........குடும்பமும் நண்பர்களும் நீ வாழ்வதற்கான வழி.........."
"அப்படி என்றால் என் மனைவி மற்றும் மக்கள்?"
"உன் மனைவியும் மக்களும் உனக்கு சொந்தமானது கிடையாது......... அவர்கள் உன் இதயத்துடன் சம்பந்தப்பட்டவர்கள்............"
"என் உடல்?..........."
"அதுவும் உன்னுடையது கிடையாது..........உடலும் குப்பையும் ஒன்று........."
"என் ஆன்மா?"
"இல்லை........அது என்னுடையது.........."
மிகுந்த பயத்துடன் மனிதன் கடவுளிடமிருந்து அந்தப் பெட்டியை வாங்கி திறந்தவன் அதிர்ச்சிக்குள்ளாகிறான்........ காலி பெட்டியைக் கண்டு..........
கண்ணில் நீர் வழிய கடவுளிடம் "என்னுடையது என்று எதுவும் இல்லையா?" எனக் கேட்க,
கடவுள் சொல்கிறார், "அதுதான் உண்மை. நீ வாழும் ஒவ்வொரு நொடி மட்டுமே உன்னுடையது. வாழ்க்கை என்பது நீ கடக்கும் ஒரு நொடிதான். ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வதுடன் நல்ல செயல்களை மட்டும் செய். எல்லாமே உன்னுடையது என்று நீ நினைக்காதே........"
-- ஒவ்வொரு நொடியும் வாழ்
-- உன்னுடைய வாழ்க்கையை வாழ்
-- மகிழ்ச்சியாக வாழ மறக்காதே.......அது மட்டுமே நிரந்தரம்.......
-- உன் இறுதிக் காலத்தில் நீ எதையும் உன்னுடன் கொண்டு போக முடியாது...

பைரவரை வழிபாடு


புக்திமுக்திதாயகம் ப்ரசஸ்த - சாரு விக்ரஹம்
பக்தவத்ஸலம் ஸ்திதம் ஸமஸ்தலோக - விக்ரஹம்
நிக்வணன் - மனோஜ்ஞஹேம - கிங்கிணீலஸத்கடிம்
காசிகா - புராதிநாத காலபைரவம் பஜே
பொருள் : போகம், மோக்ஷம் இவைகளை அளிப்பவரும் பிரசித்தி பெற்றதும் அழகியதுமாகிய வடிவமுடையவரும், அடியார்களிடம் அன்புள்ளவரும், காத்தல் கடவுளாய் இருப்பவரும், எல்லா உலகத்தையும் தன் வடிவமாகக் கொண்டவரும், நன்கு ஒலிப்பதும் மனதைக் கவருவதாகிய சலங்கையால் பிரகாசிக்கும் இடையை உடையவருமான காசியம்பதியில் தலைவராக விளங்கும் கால பைரவமூர்த்தியை வழிபடுகின்றேன்

குழந்தை பாக்கியத்துக்கும் ஜாதகத்திற்கும் சம்பந்தம் உண்டா?



குழந்தை பாக்கியத்துக்கும் ஜாதகத்திற்கும் சம்பந்தம் உண்டா?

கல்யாணமாகி நாலஞ்சு வருஷம் ஓடிப்போச்சு. இன்னும் வயித்துல ஒரு புழு-புச்சி தங்கலையே... அந்த சாமி கண்ண திறக்க மாட்டேங்குதே’

'கோடி கோடியா சொத்து இருந்து என்ன பிரயோசனம்? வம்சம் தழைக்க ஒரு வாரிசு வேண்டாமா?’

- இப்படி, குழந்தை இல்லாத குறையால் மருகித் தவிக்கும் குடும்பங்கள் நிறைய. பொண்ணும் மாப்பிள்ளையுமாக வெளிநாடுகளில் கை நிறைய சம்பாதிப்பார்கள். ஆனால், அவர்கள் கொஞ்சி மகிழ ஒரு குழந்தை இருக்காது. சம்பாதித்ததை சந்தோஷமாக அனுபவிக்கும் கொடுப்பினை இல்லாமல் தவிப்பார்கள். இன்னும் சில தம்பதிகள் குழந்தைப் பிறப்பை தள்ளிப் போடுவார்கள். ஆனால், அவர்கள் விரும்பும்போது பிள்ளைக்கனி வாய்க்காமல் போகும் சம்பவங்களும் உண்டு.

இப்படி, குழந்தை இல்லாமல் மருகும் நிலை ஏற்படுவது ஏன்? சந்ததி இல்லாமல் சங்கடப் படும் நிலைக்கு, ஜாதகத்தில் என்னென்ன குறைபாடுகள் காரணமாகின்றன? அந்தக் குறைகளைக் களைவதற்கு என்ன வழி?

அதுபற்றி விரிவாகத் தெரிந்துகொள்வோம்.

கணினியில் அதிக நேரம் வேலை பார்க்கும் ஆண்களுக்கு உயிரணுக்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றன என்றொரு கருத்து சொல்லப்படுகிறது. அதேபோன்று பெண்களுக்கு கருப்பையில் முட்டை வளர்ச்சி தடைப்படும்போது கரு தங்காமல் போய்விடுகிறது. இதற்கான காரணத்தை அறிய அவர்களின் சிலேஷ்டும நாடித்துடிப்பை அறிய வேண்டும். 56 நாடிகள் ஓடினால், கரு தங்கும். குறைந்தால் அதற்குத் தகுந்த மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். ஆண்களுக்கு உயிரணுக்களின் கவுன்ட்டிங் அதாவது எண்ணிக்கை '74 ஜீவ அணுக்கள்’ என்று இருக்க வேண்டும். குறைந்தால் குழந்தை பாக்கியம் தடைப்பட வாய்ப்பு உண்டு.

மிக முக்கியமாக... குழந்தையின்மைக்கு உணவும் சூழலும்கூட காரணமாகின்றன.

எல்லாப் பெண்களுக்கும் குழந்தை பாக்கியம் என்பது கண்டிப்பாக உண்டு. திருமணமாகி 15 வருடங்கள் கழித்து குழந்தை பெற்றவர்களும் இருக்கிறார்கள். ஜாதகத்தில் உள்ள குறைபாடுகளை அறிந்து, தகுந்த பரிகார வழிபாடுகளை நம்பிக்கையுடன் செய்து வந்தால், விரைவில் பிள்ளைக்கனி வாய்க்கும்.

பிள்ளை பாக்கியம் தடையாகும் ஜாதக அமைப்புகள்...

* லக்னத்துக்கு 5-ல் குரு அமர்ந்து 5-ஆம் பாவாதிபதி சுக்கிரனுடன் சேர்ந்திருந்தால், காலதாமதம் ஆனாலும் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

* 5-ஆம் பாவாதிபதி 3-ல் இருக்க... சந்திரனும், 4-ஆம் பாவாதி பதியும் 6-ல் இருந்தால் தாயாரின் சாப தோஷத்தால் குழந்தை பிறக்காது தடை ஏற்படலாம்.

* லக்னத்துக்கு ஒன்றில் குரு அமர்ந்து, குருவுக்கு ஒன்பதில் சுக்கிரனும், லக்னாதிபதியும் இருந்தால் 40 வயதுக்கு மேல் குழந்தை பாக்கியம் ஏற்படலாம்.

* லக்னாதிபதி, 5-ஆம் பாவாதிபதி, 7-ஆம் பாவாதிபதி, வாரிசுக்கு உரியவரான குரு ஆகிய நால்வரும் வலிமை இல்லாதிருந்தால், வாரிசு பிறக்க தடை உண்டாகும்.

* 5-ஆம் பாவத்தில் செவ்வாயும் சனியும் அமர்ந்திட, லக்னாதிபதி புதன் வீட்டில் இருந்து புதனின் பார்வையோ அல்லது சேர்க்கையோ ஏற்பட்டால், அந்த ஜாதகன் புத்திரன் இல்லாமல் வேறொருவரின் குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பார்.

* 5-ஆம் பாவத்தில் ராகு அமர்ந்து செவ்வாயால் பார்க்கப்பட்டால், சர்ப்ப தோஷம் ஏற்பட்டு, பிறக்கும்போது குழந்தை இறந்துபோய்விட வாய்ப்பு உண்டு.

* 7-க்கு உடையவன் 11-ல் அமர்ந்து, 5-க்கு உடையவன் சுபரின் இணைப்பு பெற்றிருக்க... செவ்வாயும் சனியும் 5-ல் சேர்க்கைப் பெற்றிருந்தாலும் தத்து புத்திர யோகம் உண்டாகும் என்று பராசர ஹோராவின் விதிகள் சொல்கின்றன.

* பொதுவாக 5-ஆம் இடமே புத்திரஸ்தானம், லக்ஷ்மி ஸ்தானம் எனப்படுகிறது. 5-ஆம் இடத்துக்கு உரிய கிரகமானது 12, 8, 6-ஆம் இடங்களில் பாவரால் சூழப்பட்டால், 10 ஆண்டுகள் கழித்து தாமதமாக பிள்ளைப்பேறு வாய்க்கும். இப்படியான கிரக அமைப்பு உள்ளவர்கள், தங்களுக்கு வாரிசு இல்லையே என்று முடிவு கட்டிவிடக் கூடாது.

ஜாதக ரீதியான இந்த காரணங்களைத் தவிர, வேறு சில விஷயங்களையும் கவனிக்க வேண்டும்.

* வீட்டில் பித்ருக்கள் வழிபாடு முறையாக நடைபெற வேண்டும்.

* கோயில், மடங்கள், குரு பீடங்கள் ஆகியவற்றின் நிலங்களை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டிருந்தால், அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு, வாரிசுத் தடை உண்டாகும்.

* திருமணம் ஆகாமலேயே கன்னி ஒருத்தி இறந்திருந்து, அந்த கன்னிக்கு உரிய பூஜை செய்யப்படாமல் இருந்தாலும் வாரிசு தடை ஏற்படும்.

* ஊரில் உள்ள அரசு, ஆல மரம் மற்றுமுள்ள தலவிருட்சங்களை உங்கள் வீட்டுப் பெரியவர்கள் எவரேனும் வெட்டியிருந்தால், பேரன் பிறக்காத நிலை உருவாகலாம். இதற்கு முறையான விருட்ச பரிகார பூஜை செய்ய வேண்டும்.

* கெமிக்கல் கலப்பில்லாத உணவுப் பழக்கமும், மன அமைதியும் விரைவில் குழந்தை பாக்கியத்தைப் பெற்றுத்தரும்.

சரி! இனி மேற்கண்ட குறைகளைக் களைந்து பிள்ளைப் பாக்கியம் பெறுவதற்கான வழிபாட்டை அறிவோம்.

ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் அனுக்கிரகம் நிறைந்த, அவர் வாசம் செய்கின்ற புன்னை மரத்தை வீட்டில் வளர்ப்பதாலும், அதன் இலையை பூஜை அறையில் வைத்து பூஜிப்பதாலும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்கிறது விருட்ச சாஸ்திரம்.

சுக்கில சதுர்த்தி, பௌர்ணமி தினங்களில் சந்தான கணபதி ஹோமம், சந்தான கோபால ஹோமம் செய்து ஆல், அரசு, புரசம் சமித்துக் களால் ஹோமம் செய்து, அவரவர் குல சம்பிரதாயப்படி வழிபட புத்திரத் தடை நீங்கும்.

வம்ச விருத்தி பூஜை

பஞ்சாங்க சுத்தி உள்ள ஒரு சுபநாளில், புன்னை மரக் கிளை ஒன்றை எடுத்துவந்து, வீட்டு பூஜையறையில் வைத்து, அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு, மலர்ச்சரம் சார்த்துதல் வேண்டும்.

அருகில்... பஞ்சவர்ண நூல் சுற்றிய பித்தளைச் சொம்பில் கலசமும், ஆலிலை கிருஷ்ணர் படமும் வைத்து, நெய்தீபம் ஏற்ற வேண்டும். பின்னர், ஓம் சந்தான கணபதியே நம: என்று மூன்று முறை கூறி நீலோத்பலம் மற்றும் சாமந்திப் பூக்களால் அர்ச்சித்து கணபதியை வழிபட்டுவிட்டு, கிருஷ்ணனை பூஜிக்க வேண்டும்.

'ஓம் ஸ்ரீகிருஷ்ணாய கோவிந்தாய கோபி நேசாய வாசுதேவாய, வம்ச விருத்திகராய ஸ்ரீம் பாலகிருஷ்ணாய நம:’ என்று 12 முறை கூறி, கலசத்துக்கு மலர்கள் சமர்ப்பித்து வணங்க வேண்டும். அடுத்து அவல் பாயசம், பால், கற்கண்டு நிவேதனம் செய்து, ஆரத்தி காட்டி வழிபட வேண்டும்.

மேலும், பூஜையறையில் வைத்திருக்கும் ஆலிலை கிருஷ்ணர் படத்துக்கு... இலையின் காம்புப் பகுதி துவங்கி, தினம் ஒன்றாக 45 தினங்களுக்கு பொட்டு வைத்துவர வேண்டும். தினமும் வம்ச கவசம் படிக்க வேண்டும். இந்த பூஜையின் பலனால், உங்கள் வீட்டில் விரைவில் தொட்டில் சத்தம் கேட்கும்.

தினமும் உணவில் வாழைப்பூ சேர்த்துக்கொள்ள வேண்டும். அத்துடன், கிழக்கில் தலைவைத்துப் படுத்து உறங்குவதையும் வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

வம்ச பூஜை செய்து வரும் தம்பதிகள், தங்களுடய பெற்றோர்கள் பால் உள்ள நட்சத்திரங்களைச் சேர்ந்துள்ளனரா? ஒரே தசையில் ஆண், பெண் இருவருக்கும் திருமணம் செய்ததால் திசா சந்தி ஏற்பட்டுள்ளதா? ஜாதகங்களைப் பொருத்தியபோது நாடிப் பொருத்தம் பார்க்கப்பட்டதா? புத்திர சந்தான பாவகம் சரியாகப் பார்க்கப்பட்டு ஜாதகங்கள் இணைக்கப்பட்டதா என்று உறுதி செய்து கொண்டு, அதற்கான தெய்வ பரிகாரமும் செய்துவிட வேண்டும்.

அதி சீக்ர சத்சந்தான பிராப்திரஸ்து!

- வழிபடுவோம்...

வம்ச கவசம்!

ஓம் நமோ தேவ்யை மகாதேவ்யை
துர்க்காயை ஸததம் நம:
புத்ரபாக்யம் தேஹி தேஹி
கர்ப்ப விருத்திம் குருஷ்வந:
ஓம் ஹ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீம்
ஜம் ஜம் ஜம் மகாகாளீ மகாலக்ஷ்மீ
மகா சரஸ்வதீ ரூபிண்யை நவகோடி மூர்த்யை நம:
ஹ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் துர்கார்த்தி நாசினீ
ஸந்தான சௌக்யம் தேஹி தேஹி
வந்த்யத்வம் ம்ருதவத் ஸத்வம் சார ஹர ஹர
கர்ப்ப ரட்சாம் குரு குரு
குலஜாம் பாஹ்யஜாம் க்ருதாம் க்ருதாம்ஸ
நாஸய நாஸய ஸர்வகாத்ராணி ரக்ஷ: ரக்ஷ:
கர்ப்பம் போஷய போஷய சர்வோ பத்ரவம்
சோஷய சோஷய ஸ்வாஹா
அனேன கலைசேனாங்கம் ஸப்த வாராபி மந்த்ரிதம்
ருதுஸ்நாதா ஜலம் பீத்வா பவேத கர்ப்பவதீத்ருவம்
கர்ப்ப பாதபயே பீத்வா த்ருட கர்ப்பா ப்ரஜாயதே
அனேன கவசேனாத மார்ஜீதாய நிசாகமே
ஸர்வ பாதா விநிர்முக்தா கர்ப்பிணி ஸ்யாநீந ஸம்சய:
அனேன கவசேன ஹக்ரந்திதம் ரக்த தோரகம்:

நந்தி தத்துவம் ................



நந்தி தத்துவம் ................
நந்தியின் நிறம் வெள்ளை. வெண்மை தூய்மையைக் குறிப்பது. அறமாகிய தர்மத்தின் நிறமும் வெண்மையே.
நந்தி தூய்மையும் ஆண்மையும் நிறைந்தது. ஆக தர்மதேவதையே சிவ பெருமானின் வாகனமாக அமைந்துள்ளது.
சிவபெருமானின் வாகனமும் கொடியும் ரிஷபமே (காளை).
தருமதேவதை, சிவபெருமானிடம் தன்னை வாகனமாக ஏற்கும்படி கூறியது.
அவ்வேண்டு கோளுக்கு இணங்க சிவபெருமான், ஒவ்வொரு யுகத்திலும் நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று என்ற பாதங்களால் நீ நடக்க வேண்டும்.
நானே உனக்கு உயிராய் இருந்து உன்னை நடத்துவதால் நம்மை வணங்குவோர் செய்யும் பாவங்கள் கூட அறமாக மாறும் என்று வரமருளினார் சிவபெருமான்.
சிவாலயங்களில் உள்ள நந்திதேவர் மூன்று கால்களை மடக்கி ஒரு காலை மட்டும் நிமர்த்தி யுள்ளதை நாம் காண முடியும்.
கலியுகத்தில் ஒரு காலால் நடக்க வேண்டும் என்ற சிவ பெருமானின் ஆணைக் கேற்பவே அவ்வாறு உள்ளது.
தருமவிடை சிவாலயங்களில் கர்ப்பக் கிரகத்திற்கு எதிரில் கம்பீரமாக அமர்ந்திருக்கும் நந்திதேவர் தருமவிடை எனப்படுவார்.
அழிவே இல்லாதது தருமம். அது விடை (ரிஷபம்) வடிவில் இறைவனிடத்தில் சென்றடைய, அந்த நந்தியின் மீது ஈஸ்வரன் அமர்ந்திருக்கிறார்.
தருமம் இறைவனைத் தாங்குகிறது. அது விடும் மூச்சுக் காற்றுதான் இவருக்கு உயிர்நிலை தருகிறது.
இதனால்தான் மூலவரின் தொப்புள் பகுதியை உயிர் நிலையாகக் கொண்டு, அதன் நேர்க்கோட்டில் நந்தியின் நாசி அமையுமாறு அமைக்கப்படுகிறது.
இம்மூச்சு தடையேதுமின்றி மூலவரைச் சென்றடையத்தான் நந்தியின் குறுக்கே போவதும் விழுந்து கும்பிடுவதும் கூடாது என்பது வழக்கில் இருக்கிறது.
ருத்ரன், தூயவன், சைலாதி, அக்னிரூபன், மிருதங்க வாத்யப்ரியன், சிவவாஹனன், தருணாகரமூர்த்தி, வீரமூர்த்தி, தனப்ரியன், கனகப்ரியன், சிவப்ரியன், இப்படி பல்வேறு சிறப்புப் பெயர்களோடு புராணங்களும் ஆகமங்களும் போற்றும் மூர்த்தி நந்தியெம் பெருமானே.
1. நந்தி என்றால் ஆனந்தம், மகிழ்ச்சி தருபவர் என்று பொருள்.
2. நந்தியின் வேலை தடுப்பது ஆகும். அதாவது இவர் அனுமதி பெறாமல் ஈசன் உறையும் இடங்களுக்குள் யாராலும் செல்ல இயலாது. நந்தி அனுமதி கிடைத்தால்தான் ஈசன் அருளைப்பெற முடியும். எனவேதான் முக்கிய சம்பவங்களின் போது யாராவது தடுத்தால், "என்ன இவன் நந்தி மாதிரி தடுக்கிறான்'' என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது.
3. பிரதோஷ காலங்களில் நந்தியை தவறாமல் வழிபடுபவர்களுக்கு அருள் வரம் தரும் பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்
. திருமந்திரம் எனும் நூலை எழுதிய திருமூலருக்கு குருவாக நந்தி திகழ்ந்தார். திருமூலருக்கு நந்தி பெருமான்தான் 9 வேத ஆகமங்களை விளக்கி அருளியதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
16. சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமார், பதஞ்சலி, சிவயோக மாமுனி, வியாக்கிரமர், திருமூலர் ஆகிய 8 பேரும் நந்தி பெருமானின் மாணவர்களாவர்.
17. கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் நந்தி துர்கா மலையே பரவலாக நந்தி மலை என்று அழைக்கப்படுகிறது. நந்தி மலையே பென்னாறு, பாலாறு பொன்னையாறு ஆகிய ஆறுகளில் பிறப்பிடமாக கருதப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து 1,500 அடி உயரத்தில் இருக்கின்றது. ஆயிரம் வருடத்து பழமை வாய்ந்த நந்தி கோவிலால் நந்தி மலை என்ற பெயர் ஏற்பட்டது.
18. நந்திகேசுரரின் வரலாற்றை லிங்க புராணம் கூறுகிறது. பிறப்பில் எம்பெருமானாகிய சிவபெருமானே நந்திகேசுவரராகப் பிறந்து கணங்களின் தலைவரானார் என்பது புராண மரபு.
19. இந்திய வரலாற்றை ஆராய்ந்தால் தத்துவம், யோகம், நாட்டியம், இசை, ஆயுர்வேதம், அஸ்வவேதம், காமவேதம் முதலிய பல்வேறு சாத்திரங்களைத் தோற்றிவைத்தவராக நந்திகேசுரர் என்ற முனிவர் வாழ்ந்திருக்கிறார் என அறியலாம்.
20. சிவபெருமான் நாட்டியக் கலையைப் பிரும்மாவுக்கு கற்றுக் கொடுக்க அம்முறையை அறிந்த நந்தி பரத முனிவருக்குப் போதித்தார் என்று அபிநய தர்ப்பணம் கூறுகிறது.
21. தமிழ்நாட்டில் ஆடவல்ல பெருமான் தண்டுவுக்கு நாட்டியம் கற்றுக்கொடுப்பதாக ஒரு சிற்பம் மாமல்லபுரத்தில் தர்மராஜ ரதத்தில் உள்ளது. இங்கு சிவன் நாட்டியாசாரியராகவும் தண்டு முனிவர் மனித உருவிலும் உள்ளனர்.
22. காஞ்சிபுரத்தில் இராஜ சிம்மன் கட்டிய கைலாய நாதராலயத்தில் பின்புறச் சுவரில் ஒரு சிற்பம் உள்ளது. அதில் சிவபிரான் ஊர்த்துவதாண்டவம் புரிகிறார். அவர் அருகில் நந்திகேசுவரர் ஆனந்தமாக நாட்டியம் கற்றுக் கொண்டு ஆடுகிறார்.
23. தமிழ்நாட்டில் நந்திகேசுவரரின் மதம் கி.பி. 700லேயே சிறப்பிடம் பெற்றிருந்தது.
24. தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் பிற இடங்களிலும் உள்ள சிற்பங்களில் சிவன் ஆடும்போது நந்திகேசுவரர் பஞ்சமுக வாத்யம் என்னும் குடமுழா வாத்தியத்தை வாசிப்பதாக உள்ளதைக் காணலாம்.
திருவாரூர், திருத்துறைபூண்டி ஆகிய தலங்களில் இன்றும் பஞ்சமுக வாத்தியம் வாசிக்கப்படுகிறது.
25. பஞ்சமுக வாத்தியலடீசணம் என்னும் சுவடியில் குடமுழா வாத்தியம் நந்திகேசுவரரால் இசைக்கப்பட்டது என்றும், ஆதலின் இதை இசைக்கும் முன்னர் நந்திகேசுவரருக்குச் சிறப்பு வழிபாடு செய்ய வேண்டும் என்றும் கூறுகிறது.
26. காமசாஸ்திரத்தை தோற்றுவித்தவரும் நந்திகேசுவரரே என்று பல நூல்கள் கூறுகின்றன. நந்தி இயற்றிய பல செய்யுட்களை ''ரதி ரகசியம்'' என்று தம் நூலில் கொக்கோகர் மேற்கோளாகக் காட்டுகிறார்.
27. ஆகம சாஸ்திரங்களையும், சைவசித்தாந்த தத்துவங்களையும் சிவபெருமானிடம் அறிந்து உலகுக்குப் போதித்தவர் நந்திகேசுவரரே.
சைவமரபில் தலையாயது ''சிவஞான போதம்'' என்னும் நூல். இதை நந்திகேசுவரரே முதலில் போதித்தார்
28. சிவாலயங்களில் துவாரபாலர் இருவரில் தலையில் சூலம் தரித்து நிற்பவர் நந்திகேசுவரர் ஆவார்.
29. சிதம்பரம் நடராஜப் பெருமானின் கோயிலில் நான்கு கோபுரங்களிலும் அதிகார நந்தியின் உருவத்தைக் காணலாம்.
30. நந்திகேசுவரரின் மறு அவதாரமாக அனுமான் கருதப்படுகிறார்.
31. சில சிவாலயங்களில் நந்திக்குப் பதிலாகக் குரங்கு தூவாரபாலனாகத் திகழ்வதைக் காணலாம். எவ்வாறு சிவதத்துவத்தை நந்தி வாயிலாகப் பரமன் போதித்தாரோ அதே போல ராமதத்துவம் அனுமன் வாயிலாகப் போதிக்கப்பட்டது.
32. தானும் நந்தியும் வேறல்ல, ஒருவரே என்று சிவபெருமான் நந்தி புராணத்தில் கூறுகிறார்.
நந்தியைத் தொழுவது சிவபெருமானைத் தொழுவதே ஆகும்.
33. முனிவர்களுக்கும் சித்தர்களுக்கும் யோகிகளுக்கும் நந்திதேவரே ஆதி குரு.
34. `நந்தி' என்ற வார்த்தையுடன் `ஆ' சேரும்போது `ஆநந்தி' என்ற பொருள் தருகிறது. `நீயும் ஆனந்தமாக இரு, பிறரையும் ஆனந்தமாக வைத்திரு!' என்று சிவபெருமான் நந்திக்கு அளித்த வரம் அது.
35. நந்தியைத் தொழாமல் சிவபெருமானைத் தொழ முடியாது. ஆலயத்தில் நந்தியை மட்டுமே தொழுதுவிட்டு திரும்பிவிட்டால் கூட சிவபெருமானை வணங்கியதன் முழுபலனும் கிட்டும்.
36. ஆலயங்களைக் காவல் காக்கும் அதிகாரமும் நந்திக்கே உரியது என்பது தெளிவாகிறது. இதன் அடையாளமாகத் தான் திருக்கோவில்களின் மதில் சுவர்களில் நந்தியின் திருவுருவை அமைத்துள்ளனர்.
37. நந்தி தேவருக்கு சிவ பெருமானைப் போலவே நெற்றிக்கண்ணும் நான்கு புஜங்களும், கையில் பிரம்பும், உடைவாளும், இருபுஜங்களில் மான் மழுவும் உண்டு.
மானும் மழுவும் வேதத்தைக் குறிக்கிறது.
மழு வீரத்தை அல்லது ஆண்மையைக் குறிக்கிறது எனவும் கூறுவர்.
38. நந்திக்கு இவ்வுலகத்தின் எதையும் கண்டிக்கவும் தண்டிக்கவும் அதிகாரம் வழங்கியுள்ளான் பரமேஸ்வரன்.
39. நந்தியின் அருள் இருந்தால்தான் மனிதர்களுக்கு மட்டுமின்றி தேவர்களுக்கும் முக்தி கிடைக்கும். அதனாலேயே தேவர்களும் நந்திதேவரைப் போற்றித் துதிக்கின்றனர்.
40. எல்லா உயிர்களையும் ஒரு காலத்தில் ஓய்வு படுத்துதல் மகாசங்காரம் எனப்படும். இந்த அதிகாரத்தை சிவபெருமான் நந்தி தேவருக்கு வழங்கியிருக்கிறார்.
41. நந்திதேவருக்கு ருத்திரன் என்ற பெயரும் உண்டு.
ருத் என்பது துக்கம்.
ரன் என்பது ஓட்டுகிறவன்.
துக்கத்தை ஓட்டுகிறவன் என்பதே ருத்திரன்.
தூயவன், சைலாதி எனவும் நந்தியை அழைப்பர்.
42. மாலாங்கன், இந்திரன், சோமன், பிரமன், ருத்திரன், கந்துரு, காலாங்கி, கஞ்சமாலையன் போன்ற தேவர்களெல்லாம் நந்தியைக் குருவாகக் கொண்டு வேதம் கற்றவர்கள் ஆவர்.
43. பிரவிர்த்தி என்ற சேர்க்கையை விட்டு நிவிருத்தி என்ற விலகலைத் தேர்ந்தெடுப்பது ஞானத்தின் மார்க்கம். இதைக் கற்றுக் கொடுத்தவர் நந்திதேவரே. இவர் வழி வந்தவர்களே மெய் கண்ட சந்தானத்தின் குருபரம்பரை என்றழைக்கப்படுகிறார்கள்.
44. சிவபெருமானின் முக்கண்ணின் பார்வைக்கு எதிரில் நிற்க நந்திதேவரைத் தவிர வேறுயாராலும் இயலாது. இது சிவபெருமானே நந்தி தேவருக்கு அளித்த வரமாகும்.
45. சிவ பெருமான் திருநடனம் புரிகையில் நந்திதேவரே மத்தளம் வாசித்ததாக சிவபுராணம் கூறுகிறது.
46. பிரதோஷ காலம் மட்டுமின்றி எக்காலத்தும் நாம் சிவபெருமானி டம் வைக்கும் வேண்டுதல் களை நந்திதேவரிடம் வைத்தால் போதும். அவர் அதைப் பரமேஸ்வரனிடம் கொண்டு சேர்த்துவிடுவார் என்பது ஐதீகம்.
47. நந்தியை வழிபடும்போது, `சிவனடியில் சரணம் புகுந்து சிவத்தியானத்தில் ஆழ்ந்திருக்கும் மகா புண்ணியம் பெற்ற நந்திகேசுவரரே!
சன்னிதிக்குச் சென்று உமையோடு கூடிய ஈஸ்வரனைத் தரிசிக்க எனக்கு உத்தரவு தருக' என்று பிரார்த்திக்க வேண்டும்.
48. நந்திதேவருக்கு அருகம்புல் மாலையும், சிவப்பு அரிசி நிவேதனமும் நெய்விளக்கும் வைத்து வழிபட வேண்டும்.
49. பிரபஞ்சத்தில் உள்ள தீர்த்தங்கள் எல்லாம் பிரதோஷ காலத்தில் பீஜத்தை வந்தடைகின்றன. அதனால் நந்தியின் பீஜத்தைத் தொட்டு வணங்கிய பிறகே சிவதரிசனம் காணவேண்டும். பிறகு வாலைத் தொட்டு வணங்க வேண்டும்.
50. நாட்டியம் பயில்வோரும் இசை பயில்வோரும் நந்தியை வழிபட்டால் அவர்களின் கலைகள் தடையின்றி சிறந்து வளரும்.*
நந்தி வழிபாட்டுக்கான கிழமைப்பலன்
ஞாயிறு- சுப மங்களத்தைத் தரும்.
திங்கள்- சோம சூத்ர பிரதட்சிணநாள். நல்ல சிந்தனைகள் தரும். பல அசுவமேத யாகங்கள் செய்த பலன்கிட்டும்.
செவ்வாய்- வறுமை விலகும்.
புதன்- புத்திரப் பேறு கிட்டும். கல்வி, கேள்விகளில் திறமை வலுப்பெறும்.
வியாழன்- குருவருளோடு, இறை அருள் கிடைக்க பித்ருக்கள் உதவுவார். அனைத்து ஆபத்தும் விலகிப் போகும்.
வெள்ளி- எதிர்ப்புகள் நீங்கும். எதிரிகள் வலுயிழப்பார்கள்.
சனி- மகா பிரதோஷ நாள். பதவி உயர்வு வரும். அஷ்ட லக்ஷ்மிகளின் பரிபூரண ஆசி கிடைக்கும்

சகல மக்களும் அனுசரிக்க வேண்டிய சாமானிய தர்மங்களில் முதலாவது அன்பு; அடுத்தது சத்தியம்.



மகா பெரியவா!

சகல மக்களும் அனுசரிக்க வேண்டிய சாமானிய தர்மங்களில் முதலாவது அன்பு; அடுத்தது சத்தியம்.

சத்தியம் என்றால், வாக்கும் மனசும் சுத்தமாக இருப்பதுதான்; மனசில் ஒன்றும் வாக்கில் வேறொன்றுமாக இருந்தால் அதுவே அசத்தியம் என்று பெரியவர்கள் லட்சணம் சொல்லி இருக்கிறார்கள்.

சத்தியம் என்றால் வாக்கும் மனசும் ஒன்றுபடுவது மட்டுமல்ல; நல்ல மனசிலே தோன்றுகின்ற நல்ல எண்ணங்களை வாக்கில் சொல்வதே சத்தியம். நல்ல விளைவுகளை உண்டாக்குவதே சத்தியம். மக்களுக்கு நன்மை பயப்பதாகவும் பிரியமாகவும் எது இருக்கிறதோ அதுவே சத்தியம் என்பதாக, சத்தியத்துக்கு ஒரு லட்சணத்தை வகுத்திருக்கிறார்கள்.

ஸத்யம் பூதஹிதம் ப்ரியம்

பேச்சினாலும் காரியத்தினாலும் எண்ணத்தினாலும் பிராணிகளுக்கு நன்மையை உண்டாக்குவதே சத்தியம். கெடுதல் செய்வதெல்லாம் அசத்தியமே!

ஒருவனுக்கு நல்லதைச் சொன்னால் மட்டும் போதாது; அதை அவன் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் அன்புடன் சொல்ல வேண்டும். நல்லதைக்கூட கடுமையாகச் சொன்னால், அதையாரும் ஏற்க மாட்டார்கள். இவ்வாறு நிஷ்பலனாகப்போகிற நல்ல வாக்கு சத்தியமாகாது! நல்லதாகவும் இருக்க வேண்டும்; அது யாரை உத்தேசித்துச் சொல்லப்படுகிறதோ, அவனுக்கு இன்பம் தரும் விதத்தில் இதமாகவும் சொல்லப்பட வேண்டும். இதுவே சத்தியம்.

'தெய்வத்தின் குரல்’ நூலில் இருந்து....

பணம் சேர தாந்த்ரீக பரிகாரங்கள்



பணம் சேர தாந்த்ரீக பரிகாரங்கள்
ஒவ்வொரு வெள்ளியும் காலை 6-7 மணிக்குள் குளித்து பூஜைகள் செய்து அருகில் உள்ள மளிகை கடை சென்று மஹாலக்ஷ்மியை வேண்டி கொண்டு கல் உப்பு வாங்கி வந்து உப்பு பாத்திரத்தில் போடவும். இதை ஒவ்வொரு வாரமும் செய்து வர வீட்டில் மஹாலக்ஷ்மி வரவிற்கு குறைவே இருக்காது.
வெள்ளிக்கிழமை காலை 6-7 மணிக்கு 5 வெற்றிலை 5 கொட்டை பாக்கு 5 ஒரு ரூபாய் நாணயம் அனைத்தும் பூஜையில் வைத்து லக்ஷ்மி வழிபாடு செய்து, பின்பு அனைத்தையும் ஒரு தாளில் மடித்து வைக்கவும். பின்பு அடுத்த வாரம் செய்யும் பொழுது மேற்கண்டதை ஒரு உண்டியலில் போட்டு வைக்கவும். இப்படியே 14 வாரங்கள் செய்து முடிந்ததும் நாணயங்களை எடுத்து கொண்டு மற்றதை கடலில் அல்லது ஓடும் ஆற்றில் போட்டு விடலாம்.
வளர்பிறையில் வரக்கூடிய திரிதியை அன்று அன்னதானம் செய்தால் கடன் பிரச்னை மற்றும் பண பிரச்சனைகள் முடிவுக்கு வரும். ஒவ்வொரு மாதமும் செய்யலாம். 

ஆகம வழி நின்ற ஆலய யாகபூஜைகள் – சிறு விளக்கம்



இந்து சமய கிரியை வழிபாட்டு முறையிலே ‘யாகம்’ என்பது தொன்மையானது. இதனைத்
தமிழில் வேள்வி என்று கூறுவார்கள். வேட்டல் என்ற சொல்லும் இதே பொருளுடையது. யாகம் என்ற சொல் யஜ் என்ற அடியை உடையது. யஜ் என்றால் வழிபாடு, ஆகவே பக்தி பூர்வமான சிறப்பான வழிபாடு யாகம் எனலாம். இதனையே யக்ஞம் என்ற சொல்லும் விளக்கி நிற்பதாகவும் காட்டுவர்.
யாகம் என்று சொல்லும் போது, எரியோம்பல் என்கிற அக்னி வழிபாடே முதன்மை பெறுகின்றது. அதற்கு அங்கமாக அந்த அக்னி குண்டத்திற்கு அருகிலும், சுற்றிலும், யாகமண்டபம் அமைத்து, கும்பங்களை ஸ்தாபித்து, பல்வேறு தேவ தேவியர்களை ஆவாஹனம் செய்து வழிபடும் வழக்கம் ஏற்பட்டது. ஆனால், இன்றைய ஆலயங்களில் நடைபெறும் யாகபூஜையில் அக்னி வழிபாடு சிறிது சுருங்கியதாய், யாகவழிபாட்டின் ஓரங்கமாகியிருக்கின்றது.
யாக பூஜையும் யாக மண்டபமும்
யாகசாலை அல்லது யாகமண்டபம் என்பது ஒரு திருவோலக்கம் போன்றது. அதாவது, ஒரு
பெரும் சக்கரவர்த்தி தனது பரிவாரங்களோடு, அத்தாணி மண்டபத்தில் எழுந்தருளியிருப்பது போல நாமும் நமது இறைவனை ஆவரண தேவ தேவியர்களோடு, சகல பரிவாரங்கள் சகிதம் யாகமண்டபத்தில் வீற்றிருக்கச் செய்கின்றோம்.
இவ்வாறு திருவோலக்கத்தில் எழுந்தருளியிருக்கிற பேரரசனுக்கு சகல வித உபசாரங்கள் வழங்குவது போல, இவ்வாறு மஹா யாக மண்டபத்தில் வீற்றருளும் இறைவனுக்கு, நாம் சகல உபசாரங்கள் வாழ்த்தி வழங்கிப் போற்றுகின்றோம்.
இவ்வாறு இந்த யாக உருவாக்கத்திலும், யாக பூஜையிலும், மந்திர பூர்வமாகவும், பாவனை மூலமும், கைலாசம், வைகுண்டம், ஸ்ரீபுரம் போன்ற தோற்றம் நம் பூமியில் உருவாகின்றது. இந்த வழிபாடுகள் நிறைவு பெற்றதும், தேவ தேவியர்களை அவரவர் இருப்பிடத்திற்கு (யதாஸ்தானம்) அனுப்பி வைப்பார்கள். பிரதான மூர்த்தியும், அஷ்ட வித்யேஸ்வரர், பீடசக்தி என்கின்ற ஸ்நபன திருமஞ்சன கும்பங்கள் அபிஷேகம் மூலம் திருவுருவத்துடன் சேர்க்கப்பெறும்.
ஆலயங்களில் நடக்கிற யாக பூஜையினில், இரண்டு மிகச்சிறப்பானது. ஓன்று வருடம் தோறும் குறிப்பிட்ட காலத்தில் நடக்கிற மஹோத்ஸவ யாகம், மற்றையது மஹா கும்பாபிஷேக யாகம்.
இதனை விட சங்காபிஷேகம், பவித்திரோத்ஸவம், பிராயச்சித்தம், விசேஷ அபிஷேகம், போன்றவற்றிலும் யாகபூஜைகள் நடைபெறுகின்றன.
இவற்றுள் மஹோத்ஸவம் என்கிற வருடாந்த பெருந்திருவிழாவுக்கான யாகசாலை நமது தென்னகத்திருக்கோயில்களில் தனியே ஆகம விதிப்படி அமைக்கப்பெற்றிருக்கக் காணலாம். (அநேகமாக திருக்கோயில்களில் ஈசான பாகத்தில் மேற்கு நோக்கியதாக இந்த யாகசாலை அமைந்திருக்கும்) மற்றைய விசேட யாகங்களுக்காக யாகசாலை தற்காலிகமாக, அழகாக அமைக்கப்பெறக் காணலாம்.
மஹோத்ஸவம், கும்பாபிஷேகம் இந்த நிகழ்வுகளில் எல்லாம் தினமும் இரண்டு வேளை
யாகபூஜை நடக்கக் காணலாம். சாதாரணமாக யாகசாலை நாற்புறமும் வாயில்களை உடையதாகவும், 16 தூண்களுடையதாகவும், நடுவில் சதுர வேதிகை (மேடை) உடையதாகவும், இருக்கும்.
இறைவனின் கொலு மண்டப வழிபாடு
யாகசாலையின் வாயுமூலை என்கிற வடமேற்கு மூலையில், அமிர்தேஸ்வரர் என்ற சந்திரகும்பம் வைக்கப்பெற்று பாலிகைகள் வைக்கப்பெற்றிருக்கும். ஈசான மூலையில் (வடகிழக்கில்) யாகேஸ்வரர்- யாகேஸ்வரி என்கிற யாகரட்ஷண மூர்த்தியும், நிருதி மூலையில் (தென்மேற்கு) புண்ணியாகவாசன மேடையும் அமைந்திருக்கும்.
இதனை விட யாகசாலையில் உள்ள தோரணங்கள், கதவுகள், மேல்விதானம், தூண்கள், திரைச்சீலை எல்லாம் தெய்வீகச்சிறப்புடையதாக, தியான ஆவாஹன பூஜை நடக்கக் காணலாம்.
சிவ யாகம்
சிவாகமபூர்வமான, யாகபூஜை, விநாயகர் வழிபாடு, புண்ணியாகவாசனம், பஞ்சகவ்யபூஜை, வாஸ்து சாந்தி, மிருத்சங்கிரகணம் (மண் எடுத்தல்), சூரியாக்னி சங்கிரகணம் (சூரியனிலிருந்து நெருப்பு உண்டாக்கல்), அங்குரார்ப்பணம் (பாலிகை இடுதல்) ரக்ஷாபந்தனம் (சிவாச்சார்யார்கள் காப்பணிதல்), கடஸ்தாபனம் (கும்பங்கள் வடிவமைக்கப்பெறுதல்) என்பவற்றுடன் யாகபூஜை ஆரம்பமாகும். இவற்றினை விடவும் இன்னும் சிறப்பாக விரிவாக பல பூர்வாங்க கிரியைகளும் செய்வர்.
நவக்கிரஹம், நான்மறை, நான்கு யுகம், ஐந்து கலை, எண்திசைப்பாலகர், மஹாலக்ஷ்மி, சரஸ்வதி என பல்வேறு தேவ, தேவியரும் யாகத்தில் பல்வேறு இடங்களில் பூஜிக்கப்படுவார்கள்.
சில மூர்த்திகள் கும்பங்கள் வைக்கப்பெற்றும், சில மூர்த்திகள் கும்பங்கள் இல்லாமலும் பூஜிக்கப்பெறுவதும் ஆகம சம்பிரதாயமாக இருந்திருக்கின்றது. உதாரணமாக, 12 சூரியர்கள், 12 ராசிகள், 8 பைரவர்கள் முதலியவர்கள் கும்பங்கள் இல்லாமலும், எண்திசைப் பாலகர்கள் கும்பத்திலும் ஆவாஹித்து வழிபாடு செய்யும் வழக்கம் இவ்வாறுள்ளது.
அஷ்டமங்கலங்கள், தசாயுதங்கள் போன்றவையும் யாகத்தில் போற்றப்படுகின்றன. சித்திரங்களாக இவற்றை வரைந்து யாகத்தின் பல பாகங்களிலும் வைத்துப் போற்றும் வழக்கமும் உள்ளது.
யாகத்தில் சாதாரண மூர்த்திகளை வழிபட்ட பின் சிவாச்சார்யர் பிரதான மூர்த்தி பூஜைக்குச் செல்ல முன் அந்தர்யாகம், பூதசுத்தி என்னும் கிரியைகள் மூலம் தன்னை தயார்ப்படுத்துமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பரிவாரங்களோடு கும்ப வடிவில் காட்சி தரும் பரமன்
ஆவரண மூர்த்திகள், புடை சூழ நடுவே மேடையில் பிரதான மூர்த்தி தமது ஆயதம், தேவியர், புத்திரர் பரிவாரங்களோடு எழுந்தருளியிருப்பார். இவர் வீற்றிருக்கும் ஆசனத்திற்கே தனிப்பட்ட சிறப்புப் பூஜை உள்ளது. அதனைப் பஞ்சாசனம் என்று குறிப்பிடுவர்.
ஆமை வடிவான ஆதாரசக்தி, அதன் மேல் ஆயிரம் தலை கொண்ட அநந்தன் என்ற அநந்தாசனம், அதன் மேல் சிங்கமுகங்களை உடைய சிம்மாசனம், அதன் மேல் காலம், கலை, நியதி என்ற யோகாசனம், அதன் மேல் தாமரை வடிவான பத்மாசனம், அதன் மேல் சூரிய, சந்திர, அக்னி மண்டல பூர்வமான விமலாசனம் இவற்றுக்கு மேலே கும்பத்தில் பிரதான மூர்த்தி வழிபடப்பெறுவார்.
இந்த ஆசனங்களை பாவனையாகக் காட்ட நவதானியங்களை வதை;து அதன் மேல் பிரதான கும்பத்தை நிறுவும் வழக்கமும் இலங்கையில் இருக்கின்றது. இதன் பிறகு கும்பத்தில் நியாச பூஜை நடக்கும். நியசித்தல் என்றால் பதித்தல் என்று பொருள். ஆக, சுவாமியை அங்கம் அங்கமாக இக்கும்பத்தில் நியசித்து விரிவாக பூஜிப்பர். இதன் பின் நிறைவாக அக்கினி வழிபாடு நடக்கும்.
இந்த அக்கினியில் நடக்கிற ஹோமத்தின் நிறைவாக, பூர்ணாஹுதி வழங்கி, யாகபூஜையை நிறைவு செய்து, பரிவார தேவர்களை விசர்ஜனம் செய்வர். பிரதான கும்பங்களை வீதியுலாவாகக் கொண்டு சென்று மூர்த்திக்கு அபிஷேகிப்பர்.
உதாரணமாக, சிவயாகத்தை எடுத்துக் கொண்டால் யாகத்தில் சுற்றிலும் 30 கும்பங்கள் வைத்து பூஜிப்பர். சந்திரன், சூரியன், சாந்திகலை, நந்தி, மஹாகாலர், வித்யாகலை, பிருங்கி, விநாயகர், நிவிர்த்திகலை, விருஷபர், ஸ்கந்தர், பிரதிஷ்டாகலை, தேவி, சண்டிகேஸ்வரர், வாஸ்துப்பிரம்மா, யாகேஸ்வரர், யாகேஸ்வரி, இந்திரன், அக்னி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன், பிரம்மா, விஷ்ணு, மஹாலக்ஷ்மி, விக்னவிநாயகர், சப்தகுரு என்று இந்த 30 கும்பங்களும் பூஜிக்கப்பெறும்.
இதே போல இன்னொரு உதாரணமாக சுப்பிரம்மண்யர் என்கிற முருகப்பெருமானுடைய யாகத்தை எடுத்துக் கொண்டால் அங்கேயும் 30 கும்பங்கள் பரிவார கும்பங்களாக யாகத்தில் பூஜிக்கப்படும் அதிலும் சிவயாகம் போலவே, எண் திசைப் பாலகர்கள், பிரம்மா, விஷ்ணு, யாகேஸ்வர யாகேஸ்வரி, கலைகள், மஹாலக்ஷ்மி, சப்தகுரு, விநாயகர் போன்ற பொதுவான மூர்த்திகள் பூஜிக்கப்பெறுவர்.
சுப்பிரம்மண்ய யாகம்
இவற்றை விட குமரக்கடவுளுடைய சிறப்பான பரிவாரங்களாகிய சுதேஹர், சுமுகர், மஹாவல்லி, கெஜாவல்லி(தேவசேனா), கஜர், மயூரர், குஹாஸ்திரதேவர், சுமித்திரர், தேவசேனாபதி, முதலிய மூர்த்திகள் பூஜிக்கப்பெறக் காணலாம்.
இவ்வாறே விநாயகர், அம்பாள், பைரவர், முதலிய மூர்த்திகளுடைய யாகசாலையிலும் சில வேறுபாடுகள் காணப்படுகின்றன. மஹா விஷ்ணு யாக மண்டபபூஜை வைஷ்ணவ ஆகமங்களின் வழியே நடைபெறுவதாலும், அவற்றினை பற்றி விவரிப்பதைத் தவிர்க்கிறோம்.
கற்றாங்கு எரியோம்பல்
சிவாகம விதிப்படி கும்பாபிஷேக யாகத்தில் பஞ்சகுண்டம் (5 அக்னி குண்டங்கள்), நவகுண்டம் (9 குண்டங்கள்), சப்ததசகுண்டம் (17 குண்டங்கள்), திரியத்திரிம்சத்குண்டம் (33 குண்டங்கள்) அமைத்து ஹோம வழிபாடு செய்யும் வழக்கம் உள்ளது.
இவற்றில் பஞ்சகுண்ட, நவகுண்ட பூஜைகள் காமிக,காரண ஆகமங்களில் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றது.
உதாரணமாக, நவகுண்ட பக்ஷ குடமுழுக்கு விழா என்றால் ஈசானத்தில் பிரதான குண்டம் விருத்த (வட்ட) வடிவில் அமையும். கிழக்கே சதுஸ்ர வடிவ குண்டமும், அக்னி மூலையில் யோனிகுண்டமும், தெற்கில் அர்த்தசந்திர (அரைவட்ட) குண்டமும், நிருதியில் திரிகோணமும் (முக்கோணம்), மேற்கில் விருத்தமும் (வட்டம்), வாயுவில் ஷடஸ்ரம் என்று, அறுகோணமும், வடக்கில் பத்ம அமைப்புள்ள குண்டமும் அமைத்து ஹோம வழிபாடுகள் செய்யப்படும்.
33 குண்ட யாகசாலை அமைத்தால், அது ஐந்து ஆவரணங்கள்  (பிரகாரங்கள்) கொண்டதாய்ப் பிரம்மாண்டமாக அமையக் காணலாம். முதல் ஆவரணத்தில் பிரதான குண்டத்துடன் 9 குண்டமும், மற்றைய ஆவரணங்களில் முறையே எட்டு, எட்டுக் குண்டங்களும் அமைப்பர். 108 தூண்களும் அமைப்பர். இவ்வாறான கும்பாபிஷேக யாகங்களும் இப்போதெல்லாம் அநேகமாக அமைக்கப்பெற்று வரக் காணலாம். சத்யோஜாத சிவாச்சார்யாரின் ‘பிரதிஷ்டாகாரிகை’ என்ற நூலின் வண்ணமாக இந்த 33 குண்ட யாக பூஜை அழகாகச் செய்யப்படுகிறது.
33 குண்ட யாகசாலை
புரியாத  மொழியில் அர்ச்சகர்கள் ஏதோ செய்கிறார்கள் என்று எண்ணி விலகியிருக்காது இந்த யாகபூஜையை யாவரும் உணர்ந்து அந்த இன்பத்தில் பங்கு கொள்ள வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கம்.
யாகபூஜையை முழுக்க, முழுக்க சம்ஸ்கிருத பாஷையிலேயே ஆற்றி நிறைவு செய்யாமல், அர்ச்சகர்கள் அந்த பிரதேச மொழியில் சில விளக்கங்களை வழங்குவதும் இடையிடையே திருமுறைகள், போன்ற தெய்வீக பாசுரங்களுக்கு இடம் தருவதும் யாகபூஜையில் அனைவரையும் இணைந்து பங்கெடுத்துக் கொள்ள வசதியாக அமையும் எனலாம்.
கற்றாங்கெரியோம்பிக் கலியை வாராமே
செற்றார் வாழ் தில்லைச் சிற்றம்பலம் மேய
முற்றா வெண்திங்கள் முதல்வன் பாதமே
பற்றா நின்றாரைப் பற்றா பாவமே 

தமிழிசைப் பண் அதற்கொத்த இராகம்



தமிழிசைப் பண் அதற்கொத்த இராகம்
1. நட்டபாடை (நைவளம்) – நாட்டை, கம்பீர நாட்டை
2. தக்கராகம் – காம்போதி
3. தக்கேசி – காம்போதி
4. பழந்தக்கராகம் – சுத்தசாவேரி
5. குறிஞ்சி – ஹரிகாம்போதி
6. வியாழக்குறிஞ்சி – ஸெளராஷ்ட்ரம்
7. அந்தாளிக்குறிஞ்சி – சாமா
8. மேகராகக் குறிஞ்சி – நீலாம்பரி
9. யாழ்மூரி – அடாணா
10. காந்தாரம் – நவரோஸ்
11. பியந்தைக் காந்தாரம் – நவரோஸ்
12. கொல்லி – நவரோஸ்
13. கொல்லிக் கௌவாணம் – நவரோஸ்
14. இந்தளம் – மாயாமாளவகௌளை
15. சீகாமரம் – நாதநாமக்ரியா
16. நட்டராகம் – பந்துவராளி
17. சாதாரி – பந்துவராளி
18. செவ்வழி – யதுகுலகாம்போதி
19. காந்தார பஞ்சமம் – கேதாரகௌளை
20. பஞ்சமம் – ஆகிரி
21. பழம்பஞ்சரம் சங்கராபரணம்
22. கௌசிகம் பைரவி
23. புறநீர்மை (நேர்திறம்) – பூபாளம், பௌளை
24. செந்துருத்தி (செந்திறம்) – மத்யமாவதி
25. திருக்குறுந்தொகை – மாயாமாளவகௌளை
26. திருத்தாண்டகம் – ஹரிகாம்போதி
27.திருநேரிசை – நவரோஸ் (ஸாமகான இசை போல)
28. திருவிருத்தம் – பைரவி, சங்கராபரணம், அல்லது ஒத்த ராகங்கள்.

திருவருளும் குருவருளும் இறைவனைக் காண இன்றியமையாதவை

 


ஒரு பெரியவர் அரசமரத்தின் கீழ் அமர்ந்து கடவுளைத் தியானித்துக் கொண்டிருந்தார். அங்கே ஒரு மாணவன் சென்றான். அம்மாணவன் மிடுக்கும், சொல் துடுக்கும் உடையவனாகக் காட்சியளித்தான். “ஐயா! பெரியவரே! ஏன் உட்கார்ந்து கொண்டே தூங்குகின்றீர்? சுகமாகப் படுத்து உறங்கும்” என்றான்.

“தம்பீ! நான் உறங்கவில்லை. கடவுளைத் தியானிக்கிறேன்.”

“ஓ! கடவுள் என்று ஒன்று உண்டா? ஐயா! நான் எம்.ஏ. படித்தவன். நான் மூடன் அல்லன். நூலறிவு படைத்தவன். கடவுள் கடவுள் என்று கூறுவது மூடத்தனம். கடவுளை நீர் கண்ணால் கண்டிருக்கின்றீரா?”

“தம்பீ, காண முயலுகின்றேன்.”

“கடவுளைக் கையால் தீண்டியிருக்கின்றீரா?”

“இல்லை.”

“கடவுள் மீது வீசும் மணத்தை மூக்கால் முகர்ந்திருக்கின்றீரா?”

“இல்லை.”

“ஐயா! என்ன இது மூட நம்பிக்கை? உம்மை அறிவற்றவர் என்று கூறுவதில் என்ன தடை? கடவுளைக் கண்ணால் கண்டீரில்லை, மூக்கால் முகர்ந்தீரில்லை; கையால் தொட்டீரில்லை; காதால் கேட்டீரில்லை; இல்லாதவொன்றை இருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு அரிய நேரத்தை வீணடிக்கிறீரே? உம்மைக் கண்டு நான் பரிதாபப் படுகிறேன். உமக்கு வயது முதிர்ந்தும் மதிநலம் முதிரவில்லையே? பாவம்! உம்போன்றவர்களைக் காட்சிச் சாலையில் வைக்க வேண்டும். கடவுள் என்றீரே? அது கறுப்பா, சிவப்பா?”

“அது சரி, தம்பீ! உன் சட்டைப் பையில் என்ன இருக்கின்றது?”

“தேன் பாட்டில்.”

“தேன் இனிக்குமா, கசக்குமா?’

“என்ன ஐயா! இதுகூட உமக்குத் தெரியாதா? சுத்த மக்குப் பிண்டமாக இருக்கின்றீர். உலகமெல்லாம் உணர்ந்த தேனை இனிக்குமா கசக்குமா என்று வினாவுகின்றீரே, உணவுப் பொருள்களிலேயே தேன் தலைமை பூண்டது. இது அருந்தேன். இதை அருந்தேன் என்று எவன் கூறுவான்? அதற்காக இருந்தேன் என்பான். தேன் தித்திக்கும். இதை எத்திக்கும் ஒப்புக் கொள்ளும்.”

“தம்பீ! தித்திக்கும் என்றனையே, அந்த இனிப்பு கறுப்பா, சிவப்பா! சற்று விளக்கமாக விளம்பு, நீ நல்ல அறிஞன்.”

மாணவன் திகைத்தான். தித்திப்பு என்ற ஒன்று கறுப்பா சிவப்பா என்றால், இந்தக் கேள்விக்கு என்ன விடை கூறுவது என்று திக்கித் திணறினான்.

“ஐயா! தேனின் இனிமையை எப்படி இயம்புவது? இதைக் கண்டவனுக்குத் தெரியாது! உண்டவனே உணர்வான்.”

பெரியவர் புன்முறுவல் பூத்தார். “அப்பா! இந்தப் பௌதிகப் பொருளாக, ஜடவஸ்துவாகவுள்ள தேனின் இனிமையையே உரைக்க முடியாது, உண்டவனே உணர்வான் என்கின்றனையே? ஞானப் பொருளாக, அநுபவவஸ்துவாக விளங்கும் இறைவனை அநுபவத்தால் தான் உணர்தல் வேண்டும்.

“தேனுக்குள் இன்பம் கறுப்போ? சிவப்போ?

வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்!

தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தாற் போல்

ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே!”

என்கிறார் பரம ஞானியாகிய திருமூலர்.

மாணவன் வாய் சிறிது அடங்கியது. “பெரியவரே! எனக்குப் பசிக்கிறது. சாப்பிட்டு விட்டு வந்து உம்முடன் உரையாடுவேன்.”

“தம்பீ! சற்று நில். பசி என்றனையே, அதைக் கண்ணால் கண்டிருக்கின்றனையா?” “இல்லை.”

“என்ன தம்பீ! உன்னை அறிஞன் என்று நீயே கூறிக் கொள்கிறாய். பசியைக் கண்ணால் கண்டாயில்லை, மூக்கால் முகர்ந்தாயில்லை; கையால் தொட்டாயில்லை; அப்படியிருக்க அதை எப்படி நம்புவது? பசி பசி என்று உரைத்து உலகத்தை ஏமாற்றுகின்றாய். பசி என்று ஒன்று கிடையவே கிடையாது. இது சுத்தப்பொய். பசி என்று ஒன்று இருக்கிறது என்று கூறுபவன் முட்டாள். உனக்கு இப்போது புரிகின்றதா? பசி என்ற ஒன்று அநுபவப் பொருள். அது கண்ணால் காணக் கூடியதன்று. அதுபோல்தான் கடவுளும் அநுபவப் பொருள். அதைத் தவஞ் செய்து மெய்யுணர்வினால் உணர்தல் வேண்டும்.”

மாணவன் உடம்பு வேர்த்தது, தலை சுற்றியது. பெரியவர் கூறுவதில் உண்மை உள்ளது என்பதை உணர்ந்தான்.

“என் அறியாமையை உணர்கின்றேன். இருந்தாலும் ஒரு சந்தேகம், கடவுளைக் கண்ணால் காண முடியுமா?”

“உன் கேள்விக்குப் பதில் சொல்வதற்கு முன் ஒரு கேள்வி, தம்பீ! இந்த உடம்பை நீ கண்ணால் பார்க்கின்றாயா?”

“என்ன ஐயா! என்னைச் சுத்த மடையன் என்றா கருதுகின்றீர்? எனக்கென்ன கண் இல்லையா? இந்த உடம்பை எத்தனையோ காலமாகப் பார்த்து வருகிறேன்.” “தம்பீ! நான் உன்னை மூடன் என்று ஒருபோதும் கருதமாட்டேன். நீ அறிஞன்தான். ஆனால் அறிவில் விளக்கந்தான் இல்லை. கண் இருந்தால் மட்டும் போதாது. கண்ணில் ஒளியிருக்க வேண்டும். காது இருந்தால் மட்டும் போதுமா? காது ஒலி கேட்பதாக அமைய வேண்டும். அறிவு இருந்தால் மட்டும் போதாது. அதில் நுட்பமும் திட்பமும் அமைந்திருத்தல் வேண்டும். உடம்பை நீ பார்க்கின்றாய். இந்த உடம்பு முழுவதும் உனக்குத் தெரிகின்றதா?”

“ஆம். நன்றாகத் தெரிகின்றது.”

“அப்பா! அவசரப்படாதே. எல்லாம் தெரிகின்றதா?”

“என்ன ஐயா! தெரிகின்றது, தெரிகின்றது என்று எத்தனை முறை கூறுவது? எல்லாந்தான் தெரிகின்றது?”

“அப்பா! எல்லா அங்கங்களும் தெரிகின்றனவா?”

“ஆம்! தெரிகின்றன.”

“முழுவதும் தெரிகின்றதா?”

அவன் சற்று எரிச்சலுடன் உரத்த குரலில் “முழுவதும் தெரிகின்றது” என்றான். “தம்பீ! உடம்பின் பின்புறம் தெரிகின்றதா?”

மாணவன் விழித்தான்.

“ஐயா! பின்புறம் தெரியவில்லை.”

“என்ன தம்பீ! முதலில் தெரிகின்றது தெரிகின்றது என்று பன்முறை பகர்ந்தாய். பின்னே பின்புறம் தெரியவில்லை என்கின்றாய். நல்லது, முன்புறம் முழுவதுமாவது தெரிகின்றதா?” “முன்புறம் முழுவதும் தெரிகின்றதே.”

“அப்பா! அவசரங்கூடாது. முன்புறம் எல்லாப் பகுதிகளையும் காண்கின்றனையோ? நிதானித்துக் கூறு….”

“எல்லாப் பகுதிகளையும் காண்கின்றேன். எல்லாம் தெரிகின்றது.”

“தம்பீ! இன்னும் ஒருமுறை சொல். எல்லாம் தெரிகின்றதா? நன்கு சிந்தனை செய்து சொல்.”

“ஆம்! நன்றாகச் சிந்தித்தே சொல்கின்றேன். முன்புறம் எல்லாம் தெரிகின்றது.”

“தம்பீ! முன்புறத்தின் முக்கியமான முகம் தெரிகின்றா?

மாணவன் துணுக்குற்றான். நெருப்பை மிதித்தவன் போல் துள்ளினான். தன் அறியாமையை உன்னி உன்னி வருந்தலானான்.

தணிந்த குரலில் பணிந்த உடம்புடன், “ஐயனே! முகம் தெரியவில்லை!” என்றான்.

“குழந்தாய்! இந்த ஊன உடம்பில் பின்புறம் முழுதும் தெரியவில்லை. முகம் தெரியவில்லை. நீ இந்த உடம்பில் சிறிதுதான் கண்டனை. கண்டேன் கண்டேன் என்று பிதற்றுகின்றாய். அன்பனே! இந்த உடம்பு முழுவதும் தெரிய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும், சொல்.”

“ஐயனே! இருநிலைக் கண்ணாடிகளின் இடையே நின்றால் உடம்பு இருபுறங்களும் தெரியும்.”

“தம்பீ! இந்த ஊன் உடம்பை முழுவதும் காண்பதற்கு இருநிலைக் கண்ணாடிகள் தேவைப்படுவதுபோல், ஞானமே வடிவாய் உள்ள கடவுளைக் காண்பதற்கும் இரு கண்ணாடிகள் வேண்டும்.”

“ஐயனே! அந்தக் கண்ணாடிகள் எந்தக் கடையில் விற்கின்றன? சொல்லுங்கள். இப்போதே வாங்கி வருகின்றேன். பெல்ஜியத்தில் செய்த கண்ணாடியா?”

“அப்பனே! அவை பெல்ஜியத்தில் செய்ததன்று. வேதாகமத்தில் விளைந்தவை. ஞானமூர்த்தியைக் காண இருநிலைக் கண்ணாடிகள் வேண்டும். ஒரு கண்ணாடி திருவருள், மற்றொன்று குருவருள். இந்தத் திருவருள் குருவருள் என்ற இரு கண்ணாடிகளின் துணையால் ஞானமே வடிவான இறைவனைக் காணலாம்.

“தம்பீ! திருவருள் எங்கும் நிறைந்திருப்பினும் அதனை குருவருள் மூலமே பெற வேண்டும். திருவருளும் குருவருளும் இறைவனைக் காண இன்றியமையாதவை.”

கிருபானந்தவாரியார்....

Thursday 3 July 2014

பகையை வென்றிடும் பக்திப் பாமலர்கள்






(நம் பாரத நாட்டின் அமைதிக்குப் பங்கம் ஏற்படும் வகையில் பகைவர்களின் எதிர்ப்பு மிகுந்துள்ள இச் சந்தர்ப்பத்தில் தெய்வபக்தியின் வலிமையினால் நம் முன்னோர்கள் பகைவர்களை வென்ற வரலாற்றுப் பாடல்களைப் பாராயணம் செய்வது நமக்கும் நாட்டுக்கும் நற்பயன் அளிக்கும் என்று ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜேயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் திருவுளம் கொண்டதற்கேற்பத் தெய்வீக நூல்கள் சிலவற்றிலிருந்து தொகுக்கப் பெற்ற அருட்பாடல்கள்)
1. திருஞானசம்பந்தர் தேவாரம்:
தீயவழிகளைக் கூறிப்பாண்டியநாட்டு மன்னனுக்கும் மக்களுக்கும் துன்பம் உண்டாக்கிய கொடுமைமிக்க சமணர்களால் திருஞானசம்பந்தருக்குத் துன்பம் ஏற்படுமோ? என்று அஞ்சிய பாண்டிமாதேவியை நோக்கி ஆலவாயரன் அருளினால் இத்தீயவர்களை வெல்வேன் என்று சம்பந்தர் உறுதியளித்த பாடல்கள்
அ, மானின் நேர்விழி மாதராய்வழு திக்கு மாபெருந் தேவி கேள்
பானல் வாயரு பாலன் ஈங்கிவன் என்று c பரிவு எய்திடேல்
ஆனைமாமலை யாதியாய இடங்களில் பல அல்லல் சேர்
ஈனர்கட்கெளி யேன் அலேன் திருஆலவாய் அரன் நிற்கவே

ஆ, சந்துசேனனும் இந்து அசனனும் தருமசேனனும் கருமைசேர்
கந்து சேனனும் கனகசேனனும் முதலதாகிய பெயர்கொளா
மந்திபோல் திரிந் தாரியத்தோடு செந்தமிழ்ப் பயன் அறிகிலா
அந்தர்க்கெளி யேன் அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே

2. திருநாவுக்கரசர் தேவாரம் :
சிவபெருமான் மீது வைத்த உறுதியான பக்தியின் வலிமையால் தம்மைத் துன்புறுத்திய அரசனது ஆணையையே எதிர்த்து வென்ற திருநாவுக்கரசரின் பாடல்கள் :
அ, நாமார்க்கும் குடியல்லோம் நமனை யஞ்சோம்
நரகத்தில் இடர்ப்படோம், நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம்: பணிவோ மல்லோம்
இன்பமே எந்நாளும் துன்பமில்லை
தாமர்க்கும் குடியல்லாத் தன்மையான
சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதில்
கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
கொய்ம் மலர்ச்சே வடியிணையே குறுகி னோமே

ஆ, என்றும் நாம் யாவர்க்கும் இடைவோ மல்லோம்
இருநிலத்தில் எமக்கெதிரா வாரு மில்லை
சென்றுநாம் சிறுதெய்வம் சேர்வோ மல்லோம்
சிவபெருமான் திருவடியே சேரப் பெற்றோம்

இ, ஒன்றினால் குறையுடையோம் அல்லோ மன்றே
உறுபிணியார் செறல் ஒழிந்திட் டோடிப் போனார்
பொன்றினார் தலைமாலை அணிந்த சென்னிப்
புண்ணியனை நண்ணியபுண் ணியத்து யோமே

3. சுந்தரர் தேவாரம் :
தன்பாதுகாப்பில் உள்ள மக்களைத் துன்பத்திலிருந்து காப்பதே இறைவனது கடமை என்பதை உணர்த்தும் வகையில் திருமுருகன்பூண்டி என்னும் தலத்தில் வீற்றிருக்கும் இறைவனிடம் சுந்தரர் தம்மை இம்சித்துத் தம்மிடமிருந்து பொருட்களை செயலைத் தடுக்காமல் இங்கு அமைதியாக வீற்றிருப்பது நியாயமோ? என்று கேட்டுப் பாடியுள்ள பாடல்கள்:-

அ, வில்லைக் காட்டி வெருட்டிவேடுவர் விரவ லாமை சொல்லிக்
கல்லினால் எறிந்திட்டுமோதியும் கூறை கொள்ளுமிடம்
முல்லைத்தாது மணங்கமழ் முருகன் பூண்டி மாநகர் வாய்
எல்லைகாப் பதொன் றில்லை யாகில் எத்துக் கிங்கிருந்தீர்? எம்பிரானிரே

ஆ, பசுக்களே கொன்று தின்று பாவிகள் பாவம் ஒன்றறியார்
உசிர்க் கொலைபல நேர்ந்து நாடொறும் கூறை கொள்ளுமிடம்
முசுக்கள் போல்பல வேடர் வாழ் முருகன்பூண்டி மாநகர்வாய்
இசுக்கழியப் பயிக்கம் கொண்டுநீர் எத்துக் கிங்கிருந்தீர்? எம்பிராணிரே

4. மாணிக்கவாசகர் திருவாசகம்:
இறைவன் திருவருளைப் பெற்றுச் சிவலோகம் ஆள்வதற்குத் தடையாக உள்ள பாச பந்தங்களைப் போரிட்டு வெற்றி கொள்ள அடியார்களை அழைக்கும் மாணிக்க வாசகர் பாடல்கள்:-

அ, ஞானவாள் ஏந்தும்ஐயர் நாதப் பறையறை மின்
மானமா ஏறும் ஐயர் மதிவெண் குடை கவிமின்
ஆன நீற்றுக் கவசம் அடையப் புகுமின்கள்
வானவூர் கொள்வோம் நாம் மாயப்படை வாராமே

ஆ, தொண்டர்காள் தூசி செல்வீர் பக்தர்காள் சூழப் போகீர்
ஒண்திறல் யோகிகளே பேரணி உந்தீர்கள்
திண்திறல் சித்தர்களே கடைக் கூழை செல்மின்கள்
அண்டர் நாடாள்வோம் நாம் அல்லற் படை வாராமே

5. கந்தபுராணம் :
சூரபன்மனால் அல்லலுற்றுத் தம்மைச்சரணாக அடைந்து வழிபட்டு முறையிட்டு வேண்டிக் கொண்ட தேவர்களை, முருகப் பெருமான் அசுரர் கூட்டத்தோடு சூரபன்மனை அழித்துக் காப்பாற்றிய வரலாறு:-
சூரபன்மன் வதைப் படலத்திலிருந்து தொகுத்தளிக்கப்படும் கந்த புராணப் பாடல்கள்:-

அ, ஆடியல் கொண்ட சூரன் அந்தரத் தெழலும் வானோர்
கூடிய ஓதி தன்னால் குறிப்பினால் தெரிந்து நம்மைந்
சாடிய வருவன் என்னாத் தலைத்தலை சிதறி நில்லாது
ஓடினர் கூற்றை நேர்ந்த உயிரென இரங்க லுற்றார்


ஆ, நண்ணினர்க்கினியாய் ஓலம் ஞான நாயகனே ஓலம்
பண்ணவர்க்கிறையே ஓலம் பரஞ்சுடர் முதலே, ஓலம்
எண்ணுதற் கரியாய் ஓலம் யாவையும் படைத்தாய் ஓலம்
கண்ணுதற் பெருமான் நல்கும் கடவுளே ஓலம்,ஓலம்

இ, தேவர்கள் தேவே ஓலம் சிறந்த சிற்பரனே ஓலம்
மேவலர்க் (கு) இடியே ஓலம் வேற்படை விமலா ஓலம்
பாவலர்க் கெளியாய் ஓலம் பன்னிரு புயத்தாய், ஓலம்
மூவருமாகி நின்ற மூர்த்தியே, ஓலம் ஓலம்

ஈ, கங்குலின் எழுந்த கார்வோல் கனையிருள்மறைவின்ஏகி
நுங்கிய செல்வான் சூரன் ஓடவும் நோன்மை இல்லேம்
எங்கினி உய்வம் ஐய இறையும் c தாழ்க்கல் கண்டாய்
அங்கவன் உயிரை உண்டுஎம் ஆவியை அருளு கென்றார்

உ, அங்கவர் மொழியும் வெய்யோன் ஆற்றலும் தெரிந்து செவ்வேன்
செங்கைய (து) ஒன்றில் வைகும் திருநெடு வேலை நோக்கி
இங்கிவன் ஆகம் போழ்ந்தே ஏகுதி இமைப்பின் என்னாத்
துங்கம துடைய சீர்த்திச் சூரன்மேல் செல்லத் தொட்டான்

ஊ, விடம் பிடித் தமலன் செங்கண் வெங்கனல் உறுத்திப் பாணி
இடம்பிடித் திட்டதீயில் தோய்த்துமுணன் இயற்றியன்ன
உடம்பிடித் தெய்வம் இவ்வாறு உருகெழு செலவின் ஏகி
மடம் பிடித் திட்ட வெஞ்சூர் மாமுதல் தடிந்த தன்றே

(துன்பம் நீங்கிய தேவர்கள்)
எ, வள்ளலை வணங்கிப் பலகால் வழுத்தியே தொழுது தத்தம்
உள்ளமும் புறத்தில் என்பும் உருகிட விழியில் தூநீர்
தள்ளுற உரைகள் முற்றும் தவறிடப் பொடிப்ப யாக்கை
கள்ளுணவுற்ற வண்டின் களிமகிழ் சிறந்து நின்றார்

6. திருவிளையாடற் புராணம்:-
தன் நாட்டின் மீது படையெடுத்து வந்த சோழ மன்னனை வெற்றி கொள்ளப் போதிய படைபலம் இல்லாத பாண்டிய மன்னன் சோம சுந்தரக் கடவுளிடம் சென்று தன் வெற்றிக்குத் துணை புரிந்தருள வேண்டுமென்று வேண்டிக் கொண்டதற்கேற்ப, சோம சுந்தரக் கடவுள் ஒரு வேடுவனாக வந்து பாண்டியன் சார்பாகப் போரிட்டு அவனுக்கு வெற்றியைத் தேடித் தந்த வரலாறு:-
சுந்தரப் பேரம்பெய்த படலத்திலிருந்து தொகுத்தளிக்கப்படும் திருவிளையாடற் புராணப்பாடல்கள்:-

அ. என்னை யினிச்செயு மாறென மாறன் இரந்து மொழிந்திடலும்
முன்னவன் வானிடை நின்றச gK மொழிந்தருள்வான் "முதல் c
அன்னவ னோடம ராடு, பின்நாமும் அடைந்துதவித் துணையாய்
நின்னது வாகை, எனப் பொருகின்றனம் c இனி அஞ்சல்" என

ஆ, சிந்தை களித்திரு கண்கள் துளித்திரு செங்கை குவித்திறைவன்
அந்திமதிச்சடை அந்தணனைத் தொழு தன்று புறப்பட முன்
வந்தனன் ஒற்றுவன் "நந்திவரைக்கயல் வந்தது விக்கிரமன்
வெந்தறு கட்படை" என்றர சற்கு விளம்பினன் அப்பொழுதே

இ, அளந்து சூழ்திரு ஆலவாய் மதிரின்புறத்தகழ் ஆழிபோல்
வளைந்த சோழன் நெடும்படைக் கெதிர் வஞ்சிவேய்ந்தெழு பஞ்சவன்
கிளைந்த சேனை அதிர்ந்து கிட்டின கிட்டி அவ்விரு படை ஞரும்
களம் சிறந்திட வஞ்சினங்கொடு கைவகுத்தமர் செய்வரால்

ஈ, அந்த வேலையின் முன அருந்தம தருளெனக்குளிர் கடிபுனல்
பந்தர் நீழல் அளித்தும் ஓடைபடுத்தியும் பகை சாயவே
வந்த வேடர் அவ் வண்ணமே ஒரு மான வேடர சாய்வலம்
சிந்த, ஆகுலம் மூழ்கு மீனவன் சேனை காவல ராயினார்

உ, குன்றவில் வேடன்சாபம் குனிவித்துச்சுந்த ரேசன்
என்றதன் நாமம் தீட்டி இட்ட கூர்ங் கணைகள் தூண்டி
வென்றனம் என்று வாகை மிலைந்துவெண் சங்கம் ஆர்த்து
நின்றவன் சேனைமீது நெறிப்படச் செலுத்தா நின்றான்

ஊ, அன்னகூர் வாளிதன்னைக் கொணர்கென அதனை வாசித் (து)
இன்னது சுந்தரேசன் எனவரைந் திருப்பது : ஈது
தென்னவற் காலவாயான் துணை செய்த செயலென் றஞ்சிப்
பொன்னிநா டுடையான் மீண்டுபோகுவான் போகு வானை
(தடுத்து நிறுத்தி அவனுக்குத் துணையாக வந்த மாற்றரசர்கள் அவனுடன் சேர்ந்து மீண்டும் போரிட்டார்கள். அப்போது...)

எ, புரத்தினில் உயர்ந்த கூடற் புண்ணியன் எழுதி எய்த
சரத்தினில் அவிந்தார் சென்னிக் (கு) உற்றுழிச் சார்வாய் வந்த
அரத்தினை அறுக்கும் வைவேல் அயற்புலவேந்தர் நச்சு
மரத்தினை அடுத்த சந்தும் கதழ்எரி மடுத்த தென்ன

ஏ, வில்லோடு மேகம் அன்ன வெஞ்சிலை வேடவேந்தன்
மல்லோடு பயின்ற தென்னன் மலர் முகச் செல்வி நோக்கி
அல்லோடு மதிவந்தென்ன அருள் நகை சிறிது பூத்துச்
செல்லொடு பகைபோல் கொண்ட திருவுரு மறைந்து போனான்

7. பெரியபுராணம்:
(பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வந்து வெற்றி கொண்ட கருநாடக மன்னன் தனக்குமாறான சைவசமயத்தை அழிக்க முற்பட்டு மதுரையில்
இறைவனுக்குச் சந்தனக்காப்பிடத்தினமும் தவறாமல் சந்தனம் அரைத்துக் கொடுத்து வந்த மூர்த்தியார் என்னும் தொண்டருக்கு எங்குமே சந்தனம் கிடைக்காதபடி செய்து விட்டான். அப்போதும் மூர்த்தியார் தமது முழங்கையையே சந்தனக்கட்டையாகத் தேய்க்க இறைவன் அவரது உண்மையான பக்தியைக்கண்டு உளம் உருகி அசரீரியாக "அன்பனே உமது அன்பின் தன்மையைக் கண்டு மகிழ்ந்தோம். பக்தியின் பரவசத்தால் இப்படி c உன்னையே வருத்திக் கொள்ளாதே உனது தொண்டுக்கு இடையூறு செய்த அரசன் உடனே அழிவான். அவன் ஆண்ட இப்பாண்டி நாட்டுக்கு நீயே அரசனாகித் தொடர்ந்து உமது தொண்டைச் செய்து வந்து நிறைவாக நம்மை அடைவாயாக" என்றருளினார். அவர் அருளியவாறே அன்றையதினம் இரவே அக்கருறாடக அரசன் இறந்தான் பின்னர் மூர்த்தி நாயனரே பாண்டிய நாட்டின் அரசராகப் பொறுப்பேற்று அருளாட்சி புரிந்து இறைவன் திருவடியடைந்தார்.

மூர்த்தி நாயனார் வரலாற்றிலிருந்து தொகுக்கப் பெற்ற பெரிய புராணப்பாடல்கள்:-



1. நாளும் பெருங்காதல் நயப்புறும் வேட்கை யாலே
கேளும் துணையும் முதற் கேடில் பதங்களெல்லாம்
ஆளும் பெருமான் அடித் தாமரை அல்ல தில்லார்
மூளும் பெருகன் பெனும் மூர்த்தியார் மூர்த்தியார்தாம்

2. அந்திப் பிறைசெஞ்சடை மேலணி ஆலவாயில்
எந்தைக் கணிசந்தனக் காப்பிடை என்றும் முட்டா
அந்தச் செயலின் நிலை நின்றடி யார் உவப்பச்
சிந்தைக் கினிதாய திருப்பணி செய்யும் நாளில்

3. கானக் கடிசூழ்வடு கக்கரு நாடர் காவல்
மானப் படை மன்னன் வலிந்து நிலங்கொள்வானாய்
யானைக் குதிரைக்கரு விப்படை வீரர் திண்தேர்
சேனைக் கடலுங்கொடு தென்திசை நோக்கி வந்தான்

4. வந்துற்ற பெரும்படை மண்புதை யப்ப ரப்பிச்
சந்தப் பொதியில் தமிழ் நாடுடை மன்னன் வீரம்
சிந்தச் செருவென்றுதன் ஆணை செலுத்த மாற்றால்
கந்தப் பொழில் சூழ்மது ராபுரி காவல் கொண்டான்

5. செக்கர்ச்சடை யார்விடை யார்திரு ஆல வாயுள்
முக்கட் பரனார்திருத் தொண்டரை மூர்த்தி யாரை
மைக்கற் புரை நெஞ்சுடை வஞ்சகன் வெஞ்ச மண்பேர்
எக்கர்க் குடனாக இகழ்ந்தன செய்ய எண்ணி

6. எள்ளுஞ் செயல் வன்மைகள் எல்லையில் லாத செய்யத்
தள்ளுஞ் செயலில்லவர் சந்தனக் காப்புத் தேடிக்
கொள்ளும் துறையும் அடைத்தான் கொடுங் கோன்மை செய்வான்
தெள்ளும் புனல் வேணியர்க் கன்பரும் சிந்தை நொந்து

7. கல்லின் புறந்தேய்ந்த முழங்கை சுலுழ்ந்து சோரி
செல்லும் பரப்பெங்கணும் என்பு திறந்து மூளை
புல்லும்படி கண்டு பொறுத்திலர் தம்பிரானார்
அல்லின்கண் எழந்த (து) உவந்தருள்செய்த வாக்கு

8. "அன்பின் துணிவால்இது செய்திடல் ஜய உன்பால்
வன்புன்கண் விளைத்தவன்கொண்டமண் எல்லாம் கொண்டு
முன்பின்னல் புகுந்தன முற்றவும் நீத்துக் காத்துப்
பின்புன்பணி செய்துநம்பேருல கெய்து" கென்ன

கோயில்கள்



முன்னோர்களுடைய பண்பாடுகளையும் நாகரீகங்களையும் அறிவதற்குரிய சின்னங்களில் சிறந்தனவாய் அமைந்தவை கோயில்கள். இவைகளில் சிற்பமும் ஓவியமும் சித்திரமும் சேர்ந்து கலைக் காட்சிகளாய் விளங்குகின்றன. எல்லாவற்றையும் படைத்துக் காத்து அழிக்கும்படியான யாவற்றையும் கடந்த பேராற்றலுடைய ஓர் பரம்பொருள் உண்டென்பதையும், அது எல்லாவற்றையும் இயக்குகிறது என்பதையும் நம் முன்னோர்கள் உறுதியாகக் கண்டார்கள். அவ்வுறுதியைப் புலப்படுத்துவதற்கு, உறுதியான கருங்கல்லிலும், பிற உலோகங்களிலும் பல வடிவங்களை அமைத்தார்கள். கோயிலுக்கு அங்கங்களாகிய கோபுரம், விமானம், மண்டபம், தூண்கள் முதலியவைகளையும் அழகிய சிற்பத்திறத்துடன் அமைத்தார்கள். ஓவியங்களையும் சித்திரங்களையும் தீட்டிவைத்தார்கள். சிற்றன்ன வாயில் முதலிய இடங்களில் பழங்காலச் சித்திரங்கள் முதலியவைகளைக் காணலாம்.
யாவற்றையும் கடந்த பரம்பொருளாகிய இறைவன் உலகத்திலுள்ள உயிர்கள் துன்பம் நீங்கி இன்பம் பெற்று உய்யும் வண்ணம், கடந்த நிலையான அருவ நிலையிலிருந்து இறங்கி இவ்வுலகத்தில் ஆங்காங்குள்ள பல இடங்களில் உருவத் திருமேனிகொண்டு எழுந்தருளி, பக்தியுடன் வழிபடும் அடியார்களுக்கு அருள் செய்து வருகிறான். அத்தகைய சிறப்பிடங்களே கோயில்கள் ஆகும்.
பசுவின் உடல் முழுவதும் பால் மறைந்திருந்தபோதிலும், மடியின் மூலமாகவே பால் வெளிப்படுவதுபோலவும், சூரியன் எங்கும் பரவியிருந்த போதிலும், கண்ணாடிகள் மூலமே கிரணங்கள் வெளிப்படுவதுபோலவும், நிலத்துக்கு அடியில் நீர் இருந்தபோதிலும் தோண்டிய இடத்தில் தானே நீர் தோன்றுவதுபோலவும், இறைவன் எங்கும் வியாபித்திருந்தபோதிலும் பெரியோர்கள் அமைத்த ஆலயங்களில் உள்ள மூர்த்திகளின் மூலமாகவே அவன் வெளிப்பட்டு அன்பர்களுக்கு அருள் செய்வான்.
“எங்கும் சிவனிருப்பன் ஆனாலும் ஏசற்ற
சங்கமத்தும் சற்குருவின் தன்னிடத்தும்-லிங்கத்தும்
ஆவினுடன் பெல்லாமும் ஆவரித்து நிற்கினும்பால்
பரவுமுலைக் கண்மிகுதிப் பார்.”
மேலும் மின்சார அணுக்கள் நிறைந்த இடம் (power house) போன்றது திருவருள் அணுக்கள் நிறைந்த சிறப்பிடம். எழுத்தின் ஒலிவடிவத்தை உணர்த்துவதற்கு வரிவடிவெழுத்து அமைந்ததுபோலக் கட்புலனால் காணமுடியாத கடவுளைக் காட்டும் சாதனங்களாகக் கோயில்கள்  விளங்குகின்றன. இவைகளை முன்னோர்கள் தம் உயிரினும் மேலாகப் பாவித்துப் பின்வழியினராகிய நமக்குச் செல்வங்களாக, செல்வன் கழலேத்தும் செல்வங்களாக, வைத்துச் சென்றார்கள். நாட்டின் நலத்துக்கும், மக்கள் வாழ்வுக்கும் கோயில்கள் இன்றியமையாதன. வாழ்க்கைக் கடலில் அகப்பட்டுத் துன்புறும் மக்களுக்குக் கோயில்கள் கலங்கரை விளக்கமாக (light house) விளங்குகின்றன. “கோயில் விளங்கக் குடி விளங்கும்” என்பதும் பழமொழி.
இனி இறைவனுக்குரிய அருவம், அருவுருவம், உருவம் என்ற மூன்று நிலைகளில், அருவம் என்பது கண்ணுக்குத் தோன்றாமல் ஆகாயத்தில் நுண்பொருள் அடங்கியிருப்பது போல எல்லாப் பொருள்களிடத்தும் கலந்து ஊடுருவி நிற்பது. “அவனன்றி ஓரணுவும் அசையாது” என்பர். அருவ நிலையில் உள்ள இறைவன் உயிர்களின் பொருட்டுத் தன் நிலையிலிருந்தும் இரங்கி அடுத்த நிலையாகிய அருவுருவத்தில், அருவமும் உருவமும் கலந்த நிலையில் அதாவது லிங்க வடிவத்தில் காட்சி தருகிறான். அருவம் கண்ணுக்குத் தோன்றாதது. உருவம் கண்ணுக்குப் புலப்படுவது. இந்த இரண்டும் சேர்ந்ததே லிங்கம் என்பர்.
“காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாய்
நீணாகம் அணிந்தார்க்கு நிகழ்குறியாம் சிலைலிங்கம்”
இந்த அருவுருவ வடிவாகியன் சிவலிங்கமே எல்லாக் கோயில்களிலும் மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று தத்துவங்களும் லிங்கத்தில் அடங்கியுள்ளன என்று கூறுவர். பிறநாடுகளிலும் ஒரு காலத்தில் லிங்க வழிபாடு நடந்ததாக ஆராய்ச்சியினால் தெரியவருகிறது. இந்தச் சிவலிங்கத்தில், அருவுருவ நிலையில் விளங்கும் இறைவன் தனது நிலையிலிருந்து மேலும் இறங்கி, பரிப்பக்குவம் பெற்ற, தீவிர பக்தியுள்ள அடியார்களுக்கு அருள் செய்வதற்கு உருவ நிலையில் மனித வடிவம் தாங்கி, குருவடிவாக வருகின்றான். அவ்வப்போது அருள் செய்வதற்குப் பெருமான் அவ்வப்போது எடுத்துக்கொண்ட வடிவங்கள் இருபத்தைந்து எனக் கூறுவர். அவ்வடிவங்கள் தக்ஷிணாமூர்த்தி, நடராஜர், சோமாஸ்கந்தர், பிக்ஷாடனர், சந்திரசேகரர் முதலியன. கோயில் வழிபாட்டில் அருவுருவம் கலந்த லிங்கத்தைத் தரிசித்த பிறகு, உருவ வடிவத்தில் விளங்கும் மற்ற மூர்த்திகளையும் வணங்கி வருகிறோம். இவ்வாறு அருவ நிலையில் நின்ற பெருமான், அருவுருவாகவும், உருவாகவும் காட்சி தருகிறான். அடியார்களின் பொருட்டே படிப்படியாக இறங்கி வந்து அருள் செய்கிறான்.
மேலும், திருவிழாக் காலங்களில் பெருமானும் தேவியும் பல வாகனங்களில் அமர்ந்து வீதிகளில் வந்து காட்சி தருகிறார்கள். மக்களும் வீட்டில் இருந்தபடியே தரிசிக்கிறார்கள். இவ்விதக் கருணை, இருக்கும் இடந்தேடி இன்னமுதம் ஊட்டுவது போல் உள்ளது. இவை யாவற்றுக்கும் அடிப்படையாய் உள்ளது கோயிலேயாகும். அருவம், உருவம், அருவுருவம் மூன்றும் ஒருசேர அமைந்த இடம் கோயில் என்னும் சிறப்புப் பெயர் பெற்ற சிதம்பரம் ஆகும்.
தென்னாட்டில் சமயத் தலைவர்களால் தேவாரம் பாடப்பெற்ற 274 தலங்களும், ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற 108 திருப்பதிகளும், திருப்புகழ் பெற்ற முருகன் கோயில்களும், பெயர் மட்டும் குறிக்கப் பெற்ற வைப்புத்தலங்களும், தலபுராணங்களைப் பெற்ற கோயில்களும், தனிப்பாடல் பெற்ற தலங்களும், அன்பர்களால் அமைக்கப் பெற்ற அபிமானத் தலங்களும், பிற தலங்களும் அடங்கியுள்ளன.
நம் நாட்டில் எங்கே பார்த்தாலும் கோயில்களும் தீர்த்தங்களும் சிவலிங்கங்களும் நிறைந்து, அடைந்தவர்க்கு அருள் வழங்கும் நிலையில் இருப்பதை. திரிசிரபுரம் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை பின்வரும் பாடலில் காட்டுகிறார்.
“நோக்கிய இடங்கள் எல்லாம் நுவலருந் தலங்க ளாகத்
தேக்கிய தீர்த்த மாகச் சிவலிங்க மூர்த்தி யாக
ஆக்கிய தவத்தால் நாளும் அடைந்தவர்க் கறமென் றோதும்
பாக்கிய மாக்கி மேலுய்ப் பதுமுது சென்னி நாடு”.
மனிதர்களேயல்லாமல் மனிதர்க்குக் கீழ்ப்பட்ட அஃறிணை உயிர்களாகிய யானை முதல் எறும்பு வரையுள்ள உயிர்களும் தனித்தனியே வழிபட்ட கோயில்களும் உள்ளன. யானை,பசு, குரங்கு, பாம்பு, ஈ, முயல், எறும்பு, தவளை, நாரை, மயில் முதலியன வழிபட்ட தலங்கள் முறையே திருவானைக்கா, ஆவூர், ஆடுதுறை, சீகாளத்தி, ஈங்கோய்மலை, திருப்பாதிரிப்புலியூர், திருவெறும்பூர், ஊற்றத்தூர், நாரையூர், மாயூரம் முதலியன.
சைவ சித்தாந்தத்தின் முப்பொருள்களாகிய பதி, பசு, பாசம் மூன்றையும் அறிவிக்கும் இடமாகவும் கோயில் விளங்குகிறது. சிவலிங்கமே பதியாகவும், ஏறு பசுவாகவும், பலிபீடம் பாசமாகவும் அமைந்துள்ளன.
“ஆய பதிதான் அருட்சிவ லிங்கமாம்
ஆய பசுவும் அடல் ஏ றென நிற்கும்
ஆய பலிபீட மாகும்நற் பாசமாம்
ஆய சுரனிலை ஆய்ந்துகொள் வார்கட்கே”.------திருமந்திரம்
இவ்வாறு புறத்தே கோயில்கொண்டு விளங்கும் பெருமான் பக்தியுடன் வழிபடும் அடியார்களின் உள்ளத்தையும் பெருங்கோயிலாகக் கொண்டு அருள் செய்கிறான்.
“காலையும் மாலையும் கைதொழு வார்மனம், ஆலயமாகும்” -------அப்பர்
“உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே.” -------திருமந்திரம்
ஆதலின் பெறற்கருமையான மனிதப் பிறவியைப் பெற்றவர் அனைவரும், ஆன்றோர்கள் அமைந்த கோயில்களில் குடிகொண்ட பசுபதியாகிய பரமனை அன்பினால் வழிபட்டு, அவன் வகுந்த நன்னெறியில் சென்று அருள்பெற முயல வேண்டும்.
“உடம்பினைப் பெற்ற பயன தெல்லாம்
உடம்பினில் உத்தமனைக் காண்”    -ஔவையார்
“மானுடப் பிறவி தானும் வகுத்தது மனவாக் காயம்
ஆனிடத் தைந்தும் ஆடும் அரன் பணிக் காக அன்றோ?
வானிடத் தவரும் மண்மேல் வந்தரன் றனைஅர்ச் சிப்பர்
ஊனெடுத் துழலும் ஊமர் ஒன்றையும் உணரார் அந்தோ ! –சிவஞானசித்தியார்