Monday 18 November 2013

சங்காபிஷேகம் :

மனிதன் பிறந்தவுடன் சங்கில் பால், மருந்து முதலியவைகளை ஊட்டுவதே மரபாகும். இறந்த பிறகு சங்கு ஊதுவதன் மூலம் இறந்தவரின் ஆத்மா ஸ்வர்க்கம் அடையும் என்றும் நம்பப்படுகின்றது.
சங்கிலிருந்து எழும் ஒலி பிரணவமாகிய ஓங்கார ஒலி.
...
ஒவ்வொரு வருட கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட் கிழமைகளில் சிவாலயங்களில் சங்காபிஷேகம் நடைபெறும்.கார்த்திகை மாதத்தில் தீப ஒளியால் ஏற்படும் வெப்பத்தை சமன் செய்யவும், சிவரூபத்தை குளிர வைக்கவும் சங்கு அபிஷேகம் நடைபெறுகின்றது.

கடலில் இருந்து கிடைக்கும் சங்கு, பாற்கடலில் இருந்து தோன்றிய சந்திரனின் அம்சமாகப் போற்றப்படுகின்றது.
சங்கினில் நிரப்படும் தீர்த்தம் மேலும் குளிர்ந்து, அதைக் கொண்டு அபிஷேகம் செய்கையில் சிவபெருமான் மனம் குளிர்ந்து சந்திரனுக்கு வரம் அளித்ததைப் போல, பக்தர்களுக்கு என்றும் வளமான வாழ்க்கையை அளிப்பார் என சாஸ்திரங்கள் போற்றுகின்றன.

கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட் கிழமை சந்திர பகவானுக்கு மிக உரியது.

கார்த்திகை மாதம் விருச்சிக மாதம் என அழைக்கப்படும். விருச்சிக ராசியில் சந்திரன் நீசமாக (பலமிழந்து) அமைவார்.
கார்த்திகை மாதத்தில் வரும் அனைத்து சந்திர அம்சம் பொருந்திய நாளாகியஸோமவாரம்எனும் திங்கட்கிழமைகளில்,சந்திர அம்சமான சங்குகளுக்குபூஜை செய்து,சங்கு தீர்த்தம் கொண்டுசிவபெருமானுக்கு பூஜை செய்வது, காண்பது,சந்திரன் பலம் பெற்று வளர்ந்ததைப் போல,நம் வாழ்க்கையையும் நல்வளங்கள் அனைத்தும் பெருகும்.

சந்திரன் இன்பங்களுக்கு அதிபதியாக விளங்குபவர். ஸோமன் என்று சிறப்புப் பெயர் பெற்றவர். ஔஷதம் எனும் மருந்துப் பொருட்களுக்கும், மூலிகைகளுக்கும் அதிபதியாக விளங்குபவர்.

சந்திர அம்சமான சங்கு கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வதும் அதைக் காண்பதும், எல்லையற்ற இன்பங்களையும், நோயற்ற நல்வாழ்க்கையையும் அருளும்.

சந்திரனுக்கு சுய ஒளி இல்லை என்றும் சூரியனின் ஆயிரக்கணக்கான கிரணங்களுள் ஒன்றான சுஷ்முனா அல்லது சுஷ்மா எனும் ஒளிக்கீற்றினால் சந்திரன் ஒளிபெறுவதாக ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன.
ஆகையினால், சந்திர அம்சம் கொண்ட சங்கிற்கு, பூஜைகளின் போது, சூர்யனின் காயத்ரி மந்திரத்தையேச் சொல்லி பூஜிக்க வேண்டும் என்ற நியதியையும் சாஸ்திரங்கள் வகுக்கின்றன.

சிறப்பு வாய்ந்த கார்த்திகை மாதத்து ஸோமவாரம் எனும் கார்த்திகை மாதத் திங்கட் கிழமைகளிலும், சங்கு அபிஷேகம் காணப் பெறுவது பெரும் பேற்றினை அருளக் கூடியது.

சங்கு அபிஷேகம் காண்போம் ! சங்கடங்கள் நீங்கப் பெறுவோம் !

Wednesday 6 November 2013

சிவ பெருமான் அருள் கிடைக்க உதவும் சக்தி வாய்ந்த விரதங்கள்





சோம வாரவிரதம்,  திருவாதிரை விரதம், உமா மகேஸ்வரி விரதம், சிவ ராத்திரி விரதம், கேதார விரதம், கல்யாண சுந்தர விரதம், சூல விரதம், இடப விரதம், பிரதோஷ விரதம்,  ஆகும்.

சோம வார விரதம்

சோம வார விரதம் - கார்த்திகை மாதம் முதல் சோம வாரத்திலிருந்து இருத்தல் வேண்டும் சோமா வாரத்தில் உண்ணா நோன்பு மேற்கொள்வது முறை இவ்விரதம் வாழ்நாள் முழுமையோ, ஓராண்டு , மூன்று ஆண்டுகள், 12 ஆண்டுகள் என்ற கணக்கில் அனுஷ்டிப் பதே முறை.

திருவாதிரை விரதம்

மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தன்று இருவேளை உண்ணா நோன்பும். இரவு பால், பழத்தடன் முடித்துக் கொள்வது.

உமா மகேஸ்வரி விரதம்

இவ்விரதம் கார்த்திகை பௌர்ணமியில் இருக்க வேண்டும். இந்நாளில் ஒரு பொழுது பகல் உணவு அருந்தலாம். இரவு பலகாரம் பழம் சாப்பிடலாம்.

சிவராத்திரி விரதம்

இவ்விரதம் மாசி கிருஷ்ணபட்சம் சதுர்த்தியன்று இருத்தல் வேண்டும். அன்று உண்ணா நோன்பு மேற்கொள்வது சிறப்பு. நான்கு  ஜாமங்களும் உறங்காது சிவபூஜை செய்வது மிக நல்லது.

கேதார விரதம்

இந்த விரதம் புரட்டாசி மாதம் சுக்கிலபட்ச அஷ்டமி முதல் 21 நாட்களும் கிருஷ்ணபட்ச பிரதமை முதல் 14 நாட்களும் கிருஷ்ணபட்சத்து அ
ஷ்டமி முதல் 7 நாட்களும் கிருஷ்ணபட்சத்து சதுர்த்தியன்றும் இருத்தல் வழக்கம்.

இந்த விரதம் அனுஷ்டிக்கும் போது இருபத்தொரு  நூலிழைகளினால் காப்புகட்டிக் கொள்வது முறை ஆண்கள் வலக்கையிலும், பெண்கள் இடக்கையிலும் கட்டுதல் வேண்டும். இவ்விரதம் நிகழ்முறை முதல் 20 நாட்கள் ஒரு பொழுது மட்டும் உணவு கொள்ள வேண்டும். இறுதி நாளன்று உண்ணாவிரத இருத்தல் முறை.

கல்யாண சுந்தர விரதம்

இவ்விரதம் பங்குனி உத்திரத்தன்று மேற்கொள்ளப்படும் ஒரு பொழுது மட்டும் உணவு கொள்ளலாம் இரவில் பால் அருந்தலாம்.

சூல விரதம்

இந்த விரதம் தை மாசம் அமாவாசையன்று இருக்க வேண்டும். ஒரு பொழுது மட்டும் பகல் உணவு உட்கொள்ளலாம் . இரவு உண்ணா நோன்பு இருக்க வேண்டும்.

இடப விரதம்

இவ்விரதம் சுக்கிலபட்சம் அட்டமியன்று மேற்கொள்ள வேண்டும். ஒரு பொழுது பகல் உணவு மட்டும் உண்ணலாம்.

பிரதோஷ விரதம்

இவ்விரதம் சுக்கிலபட்ச திரயோதசி, கிருஷ்ணபட்ச
திரயோதசி ஐப்பசி அல்லது கார்த்திகை அல்லது வைகாசி மாதங்களில் சனி பிரதோஷம் முதல் மேற்கொள்ள வேண்டும். பகலில் உணவு உட்கொள்ளக்கூடாது. பிரதோஷம் கழிந்த பின் உணவு அருந்தலாம்.


Sunday 3 November 2013

நவகிரகங்களின் தொல்லைவிலக அனுதினமும் ஜெபிக்க வேண்டிய தேவாரப் பதிகம்

வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என் 

உளமே புகுந்தவதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பிரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே!

வேயுறு தோளி பங்கன் - மூங்கிலை ஒத்த தோளினை உடைய உமையன்னைக்கு தன் உடம்பினில் பங்கு கொடுத்திருக்கும் ஐயன்

விடம் உண்ட கண்டன் - தேவர்களும் அசுரர்களும் அமுதம் வேண்டி திருப்பாற்கடலைக் கடைந்த போது தோன்றிய ஆலகால விஷத்தை உயிர்களைக் காக்கும் பொருட்டுப் பருகி அது அன்னையின் திருக்கரங்களால் தடுக்கப்பட்டு திருக்கழுத்தினில் தங்கிவிட அதனால் கறுத்த கழுத்தினையுடைய கருணை வள்ளல்

மிக நல்ல வீணை தடவி - மிக இனிமையான இசையை எழுப்பும் வீணையைத் தன் திருக்கரங்களால் தடவிக் கொண்டு

மாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து - களங்கமற்ற பிறையையும் கங்கையையும் தன் திருமுடி மேல் அணிந்து கொண்டு (சந்திரன் இயற்கையாய் களங்கமுள்ளவன். அவன் ஐயன் திருமுடியில் அமர்ந்ததால் அவன் களங்கம் நீங்கி மாசறு திங்களானான்).

என் உளமே புகுந்த அதனால் - அவனாகவே அவன் அருளை முன்னிட்டு என் உள்ளத்தில் புகுந்து நிறைந்ததனால்

ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டும் உடனே - சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது என்னும் ஒன்பது கோள்களும் (பாம்பு இரண்டு ராகுவும் கேதுவும்)

ஆசறு நல்ல நல்ல - ஒரு குற்றமும் இல்லாதவை

அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே - அவையெல்லாம் ஈசன் அடியவர்க்கு மிக மிக நல்லவையாகும்.

ஆலயங்களில் செய்யத் தகாதவை


1. பிறருடைய அன்னத்தைப் புசித்த தினத்தில், இறைவனை ஆலயத்தில் வந்து தரிசிப்பது.
2. பிறர் பொருளைக் கொண்டு சுவாமிக்கு நைவேத்யம் செய்வது
3. வீட்டில் செய்துவரும் நித்திய பூஜையை நிறுத்திவிட்டு ஆலயம் செல்வது
4. ஒருவரைக் கெடுப்பதற்காக சுவாமியை வேண்டிக் கொள்வது
5. தம்பதிகளின் உடலுறுவுக்குப்பின் ஸ்நானம் செய்யாமல் ஆலயம் ப்ரவேசிப்பது
6. ஸ்த்ரீகள் ரஜஸ்வலையாகக்கூடிய நாட்களைக் கணக்கிட்டுக் கருத்தில் கொள்ளாது, அந்நாட்களில் ஆலயம் செல்லுதல்
7. மாதவிடாய்ப் பெண்டிருடன் பேசிக் கொண்டு இருந்தவரோ, அருகில் சென்றவரோ ஸ்நானம் செய்யாமல் ஆலயம் செல்வது.
8. மரணத்தினால் தீட்டு உள்ளவர்கள் ஆலயம் செல்வது
9. பிணத்தைப் பார்த்தவர்கள், பிணத்தோடு உடன் சென்றவர், மரணத்தினால் தீட்டு உள்ளவர்களைத் தீண்டியவர்கள் ஆகியோர் ஸ்நானம் செய்யாமல் ஆலயம் செல்வது.
10. மலஜலங்களை அடக்கிக் கொண்டு ஆலயம் செல்லுதல்.
11. மலஜலம் கழித்தபின் சுத்தி செய்துகொள்ளாமல் ஆலயம் புகுதல்.
12. கருப்பு வஸ்திரம் தரித்துக் கோயிலுக்குச் செல்லுதல், பூஜை செய்தல்
13. கோபத்துடன் ஆலயம் செல்லுதல், பூஜை செய்தல்
14. துவஜஸ்தம்பமும் பலிபீடமும் கடந்து உள்ளே சென்றபிறகு, எங்கேயாவது கீழே விழுந்து நமஸ்காரம் செய்தல்
15. பகவானுக்கும் நந்திக்கும் இடையே குறுக்காக நடத்தல் அல்லது பிரதக்ஷிணம் செய்தல்
16. ஈர வஸ்திரங்களையோ, விழுப்பு வஸ்திரங்களையோ அணிந்து ஆலயம் செல்லுதல்
17. சாப்பிட்டுவிட்டுக் கோயிலுக்கு வழிபாட்டிற்காகச் செல்லுதல்
18. இடுகாடு அல்லது சுடுகாடு சென்று வந்த நாட்களில் ஆலயம் செல்லுதல்
19. புலாலோ, வெங்காயம், பூண்டு போன்றவற்றையோ உண்ட நாட்களில் திருக்கோயில் செல்லுதல்
20. கால் அலம்பாமல் ஆலயத்திற்குள் அடியெடுத்து வைத்தல்
21. மூர்த்திகளைத் தொடுதல்.
22. மூர்த்திகளின் அருகில் கற்பூரம் ஏற்றுதல், அல்லது தீபம் ஏற்றுதல்
23. கோயில் உள்ளே தீபத்தினை விரலால் தூண்டுதல், கைகளைச் சுவரிலும் மற்றுள்ள இடங்களிலும் துடைத்தல்.
24. எச்சில் துப்புதல்
25. நைவேத்யம் ஆகும்போது பார்த்தல்
26. சிவ நிர்மால்யங்களை மிதித்தல் அல்லது தாண்டுதல்
27. விமானம், த்வஜஸ்தம்பம், பலிபீடம், விக்ரஹம் ஆகியவற்றின் நிழலை மிதித்தல்
28. உடலின் மேல் பாகத்தை புருஷர்கள் மூடிச் செல்லுதல்
29. நெற்றிக்கு விபூதி இடாமை
30. சிகை (குடுமி) இல்லாமை
31. தலைமயிரை அவிழ்த்துத் தொங்கவிடுதல்
32. தலைமயிரை ஆற்றுதல்
33. மூக்கைச் சிந்துதல்
34. தும்முதல்
35. கோட்டுவாய் (கொட்டாவி) விடுதல்
36. வாயில் எதையேனும் அடக்கியிருத்தல்
37. பேசுதல்
38. வேகமாக வலம் வருதல்
39. தீபம் அணையும்படி மூச்சுக் காற்று விடுதல்
40. மற்ற ஆலயங்களை பற்றி இங்கு கூறுதல்
41. கை-கால்களை நீட்டிக் கொண்டு உட்காருதல்
42. படுத்தல்
43. உறங்குதல்
44. சிரித்தல்
45. அழுதல்
46. அடித்தல்
47. சண்டையிடுதல்
48. எச்சில் துப்புதல்
49. மலஜலம் கழித்தல்
50. விளையாடுதல்
51. விக்ரஹங்களுக்குப் பின்புறத்தைக் காட்டி நிற்றல்
52. தாம்பூலம் தரித்தல்
53. வாஹனத்தின் மீதமர்ந்தோ, பாதரøக்ஷயுடனோ ஆலயத்துள் செல்லுதல்
54. உற்சவ காலங்களில் விழாக்களைக் கண்டு களித்துவிட்டு, இறை வணக்கம் செய்யாதிருத்தல்
55. தெரிந்து தெரியாமலும் தகாதவற்றைச் செய்தல்
56. உடல் சுத்தம் இல்லாதபோது தொழுதல்
57. ஒரு கையை மட்டும் தூக்கிக் கும்பிடுதல்
58. அப்பிரதக்ஷிணமாகச் சுற்றுதல்
59. மூர்த்திகளுக்கு எதிரில் காலை நீட்டி உண்ணல்
60. தின்பண்டங்களைச் சுவைத்துக்கொண்டிருத்தல்
61. பொய் பேசுதல்
62. உரத்துப் பேசுதல்
63. வாதம் செய்தல்
64. எதையோ நினைத்து வருத்தத்துடன் அழுதல்
65. சண்டை சச்சரவுகளில் ஈடுபடுதல்
66. தன்னை உயர்வாக எண்ணிக்கொண்டு, தன்னை அணுகுபவர்க்கு அருள் புரிதல்
67. தன்னை உயர்வாக எண்ணிக்கொண்டு, மற்றவர்க்குச் சாபம் அளித்தல்
68. ஆடவர் பெண்டிரை நோக்கியும், பெண்டிர் ஆடவரை நோக்கியும் கடும் சொற்களைக் கூறுதல்
69. கம்பளம் முதலியவற்றால் உடலை மறைத்துக் கொள்ளுதல்
70. நர ஸ்துதி செய்தல்
71. பிறரை இழிவு படுத்துதல்
72. அபானவாயு விடுதல்
73. அமங்கலச் சொற்களைக் கூறுதல்
74. வசதிகள் இருந்தும், அவற்றிற்கேற்ப சிறப்பான இறைப்பணிகளும் வழிபாடுகளும் செய்யாமல், நடுத்தரமான அல்லது அதற்கும் குறைவான வகையில் அவற்றைச் செய்தல்
75. கடவுளுக்கு நிவேதனம் செய்யப்படாததைப் புசித்தல்
76. அந்தந்தக் காலகட்டத்தில் விளையும் பழங்கள் போன்ற பொருள்களை இறைவனார்க்கு அளிக்காமல் இருத்தல்
77. வேறு வகைகளில் பயன்படுத்திய பிறகு, எஞ்சியதைக் கடவுளுக்கு அளித்தல்
78. ஸந்நிதிக்குப் பின்புறத்தில் அமர்ந்திருத்தல்
79. ஆலயத்துள், பிறரை வணங்குதல்,
80. ஆலயத்தில் கண்ட தனது ஆசிரியரைக் காணாதது போல் இருத்தல்
81. தற்பெருமை பேசுதல்
82. எந்த ஒரு ஆலயத்தையும் சார்ந்த எந்த ஒரு தேவதையையும் இழிவு படுத்திப்பேசுதல்