Saturday 27 December 2014

நவ கைலாயம்

அகத்தியரின் சீடரான உரோமச முனிவர் தாமிரபரணி நதிக்கரையில் பல இடங்களில் லிங்க பிரதிஷ்டை செய்யவும், அதற்கான இடங்களை தேர்ந்தெடுத்து தருமாறும் குருவிடம் கேட்டார். சிவனுக்கு பூஜை செய்த தாமரைமலர்களை தாமிரபரணியில் வீசும்படியும், அவை எங்கெல்லாம் கரை ஒதுங்குகிறதோ அங்கெல்லாம் லிங்க பிரதிஷ்டை செய்யும்படியும் அகத்தியர் கூறினார். அதன்படி உரோமசர் தாமரை மலர்களை நீரில் விட, 9 பூக்கள் பல இடங்களில் கரை ஒதுங்கின. இந்த இடங்களில் எல்லாம் சிவலிங்க பிரதிஷ்டை செய்தார் உரோமசர். இவை "நவ கைலாய தலங்கள்' எனப்பட்டன. நவக்கிரகங்கள் ஒன்பது என்பதால் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு இடம் ஒதுக்கப்பட்டது.

நவ கைலாயம் தலங்களின் விபரம்:-

சூரிய தலம்........
 
தலம்: பாபநாசம்
அம்சம்: சூரியன்
நட்சத்திரம்: கார்த்திகை, உத்திரம்
மூலவர்: ஸ்ரீபாபநாசர் என்ற கைலாச நாதர்
அம்பாள்: ஸ்ரீஉலகாம்பிகை
இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து மேற்கே 45 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 
                                                                                 நவ கைலாயங்களில் முதல் கைலாயம் நாம் அறிந்தும், அறியாமலும் செய்த அனைத்து பாவங்களையும் தீர்க்க வணங்க வேண்டிய திருத் தலம் இது. கோயிலின் எதிரில் உள்ள தாமிரபரணி நீராடுபவரது அனைத்து பாவங்களையும் தீர்க்கும் புண்ணிய தீர்த்தம். திருநெல்வேலியில் இருந்து சுமார் 45 கி.மீ. தொலைவில் உள்ள இத் திருத் தலத்தின் மூலவர் ருத்திராட்சத்தினால் ஆனவர். பொதிகை மலையில் தோன்றும் தாமிரபரணி ஆறு சமவெளியினை அடையும் இடமே பாபநாசம். அகத்திய முனி தங்கி வழிபட்ட இத் திருக்கோயிலின் 80 அடி உயர ராஜ கோபுரம் ஏழு அடுக்குகளை கொண்டது. அகத்திய முனிவருக்கு பெருமான் ரிஷப வாகனத்தில் உமையாளுடன் திருமணக் கோல காட்ச்கியளித்த புண்ணிய தலம் இது. விராட்டு என்பவர் மோட்சம் அடைந்த தலம் இது. மூலவர் வயிராச லிங்கம், பழமுறை நாயகர், முக்காளாலிங்கர், பரஞ்சோதிலிங்கர் என்றெல்லாம் வணங்கப்படுகிறார்.
 
சந்திர தலம்........
 
தலம்: சேரன்மகாதேவி
அம்சம்: சந்திரன் நட்சத்திரம்: ரோகினி, ஹஸ்தம், திருவோணம்
மூலவர்: ஸ்ரீஅம்மைநாதர்
அம்பாள்: ஸ்ரீஆவுடைநாயகி
இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து மேற்கே 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 
                                                                                        திருநெல்வேலியிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ள இரண்டாவது நவ கைலாயமாகும். தாமிரபரணி ஆற்றின் தென் கரையில் அமைந்துள்ள இது சந்திரன் ஆட்சி பெற்று விளங்கும் தலமாகும். மூலவர் சுயம்பு மூர்த்தியான " ஸ்ரீ அம்மநாத சுவாமி ", அம்பாள் " ஆவுடை நாயகி ". முன்னொரு சமயம் இத் தல மூலவருக்கான கருவறையை கட்டிட வேண்டி, நெற் குத்தும் தொழில் கொண்ட இரு பெண்கள் காசு சேர்த்து வந்தனர். நீண்ட காலம் ஆகியும் , போதிய பணம் கிடைக்கவில்லையே என எண்ண, சிவ பெருமான் அந்தணர் உருவில் வந்து அவர்களது வீட்டில் உணவருந்தி சென்றார். வீட்டில் செல்வம் பெருகியது. பின்னரே கருவறை கட்டி முடிக்கப்பட்டது. இதை கூறும் வண்ணம் நெற் குத்தும் இரு பெண்டிரின் உருவம் தூணில் பொறிக்கப்பட்டுள்ளது. கோயிலின் அருகில் யாக தீர்த்தம் ஒன்று உள்ளது. இத் தீர்த்தத்தில் 41 நாட்கள் தொடர்ந்து நீராட தீரா கொடிய நோய்களும் தீர்கிறது.
 
செவ்வாய் தலம்.........
 
தலம்: கொடகநல்லூர்
அம்சம்: செவ்வாய் நட்சத்திரம்: மிருக சிரீடம், சித்திரை, அவிட்டம்
மூலவர்: ஸ்ரீகைலாசநாதர்
அம்பாள்: ஸ்ரீசிவகாமி
இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து மேற்கே சேரன்மகாதேவி செல்லும் கல்லூர் சாலையில் நடுக்கல்லுருக்கு தெற்கே ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 
                                                                                                    நவக்கிரகங்களில் " செவ்வாய் " ஆட்சி பெற்று விளங்கும் " கோடகநல்லூர் " , திருநெல்வேலியிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மூன்றாவது நவ கைலாயமாகும். செவ்வாய் திசை நடக்கும் அனைவரும் தவறாமல் சென்று வழிபட வேண்டிய திருக் கோயில் இது. ரிஷி குமாரர் ஒருவரின் சாபத்தால் பரிஷத் மஹாராஜையும், சனி தோஷத்தால் நள மகாராஜாவையும் தீண்டிய கார்கோடகம் என்ற கரு நீல வண்ண சர்ப்பம், முக்தி வேண்டி மஹா விஷ்ணுவை வேண்ட, விஷ்ணுவோ கோடகநல்லூருக்கு சென்று தவம் செய்ய சொன்னார். அவ்வறே கார்கோடகன் முக்தி பெற்ற தலம் இது என்பதால் " கோடகநல்லூர் " என்றானது. இன்றும், இங்கு கரு நீல வண்ண பாம்புகள் நிறைந்து காணப்பட்டாலும், நல்லோரை தீண்டுவதில்லை. மூலவர் " ஸ்ரீ கைலாசநாதராக " கிழக்கு நோக்கியும், அம்மை " சிவகாமி அம்பாளாக " தெற்கு நோக்கியும் அருள்பாளிக்கின்றனர். 
 
ராகு தலம்.........
 
தலம்: குன்னத்தூர் (சங்காணி)
அம்சம்: ராகு
நட்சத்திரம்: திருவாதிரை, சுவாதி, சதயம்
மூலவர்: ஸ்ரீகோத்த பரமேஸ்வரர் என்ற கைலாய நாதர் அம்பாள்: ஸ்ரீசிவகாமி
இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் திருவேங்கடநாதபுரம் குன்னத்தூருக்கு  தெற்கே  உள்ளது. இது சங்காணி சிவன் கோவில் என்று அவ்வூர் மக்களால் அழைக்கப்படுகிறது. 
                                                                                                            நவக்கிரகங்களில் ராகு பகவான் ஆட்சி புரியும், செங்காணி, சங்காணி என்றெல்லாம் அழைக்கப்படும் குன்னத்தூர் திருநெல்வேலியில் இருந்து மேலவேங்கடபுரம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ள இத் திருத் தலத்தில் சுவாமி " கைலாச நாதர், கோத பரமேஸ்வரர் " எனவும், அம்பாள் " சிவகாமி அம்மையாகவும் " வழிபடப்படுகிறார்கள். கருவறையில் கோத பரமேஸ்வரர் மார்பில் சர்ப்பம் தரித்த நிலையில் அருளுகிறார். இந்த சிலை ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்டது. கோயிலில் நில அளவு கோல் ஒன்று உள்ளது. இது, நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை கையாள பயன்படுத்தப்பட்டதாக கல்வெட்டுகள் கூறுகின்றன. தடைபட்டு கொண்டே போகும் திருமணங்கள் இனிதே நடக்க, நல்ல மக்கட் பேறு அமைய, கால சர்ப்ப தோஷங்கள் நீங்க, உத்தியோக பிராப்தி கிட்ட, லாப ஸ்தானம் அடைய, ராகு தோஷ நிவர்த்தி பெற இத் தல வழிபாடு சிறந்தது. 
 
குரு தலம்........
 
தலம்: முறப்பாடு
அம்சம்: வியாழன் (குரு)  
நட்சத்திரம்: புனர்பூசம், விசாகம், பூரட்டாதி
மூலவர்: ஸ்ரீகைலாச நாதர்
அம்பாள்: ஸ்ரீசிவகாமி
இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி  செல்லும் சாலையில் 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 
                                                                   நவ கைலாயங்களில் ஐந்தாவது தலமான " முறப்ப நாடு " குரு பகவான் ஆட்சி புரியும் தலமாகும். திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் சுமார் 17 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. நவ கைலாயங்களில் எந்த தலத்திற்க்கும் இல்லாத ஒரு சிறப்பாக, சிவ பெருமானே இங்கு "குரு பகவானாய்" அருள் புரிகிறார். தாமிரபரணி ஆறு, காசியைப் போன்றே, வடக்கில் இருந்து தெற்கு நோக்கி செல்வதால், இவ்விடம் " தட்சிண கங்கை " என்றானது. இங்கு நீராடுவது காசியில் நீராடுவதற்கு நிகர். இத் தலத்தில் ஒரே கல்லிலாலான தசாவதாரச் சிற்பம் ( மஹா விஷ்ணுவின் பத்து அவதாரங்களும் ) ஒன்றுள்ளது. இத் தலத்தில் உள்ள சபரி தீர்த்தத்தில், தை மாத அமாவாசைகளிலும், மாதாந்திர கடைசி வெள்ளிக் கிழமைகளிலும் நீராடி கைலாச நாதரை வழிபட்டால் வாழ்வில் பேரின்பம் கிட்டும். மூலவர் கைலாசநாதராகவும் , அம்பாள் சிவகாமியாகவும் அருள் புரியும் தலமாகும்.
 
சனி தலம்.......
 
தலம்: ஸ்ரீவைகுண்டம்
அம்சம்: சனி
நட்சத்திரம்: பூசம், அனுஷம், உத்திரட்டாதி
மூலவர்: ஸ்ரீ கைலாச நாதர்
அம்பாள்: ஸ்ரீசிவகாமி
இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் முப்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 
                                                                நவ கைலாயங்களில் சனீஸ்வர பகவான் ஆட்சி புரியும் ஆறாவது திருத் தலமாகும். இது, குமர குருபரர் அவதரித்த புண்ணிய பூமி. பூத நாதர் மற்றும் நவக்கிரக வழிபாடுகள் சிறப்பு பெற்ற இத் தலம், சனி திசை நடப்பவர்கள் அனைவரும் தவறாமல் வந்து வணங்க வேண்டிய தலமாகும். இத் தல அம்பிகை, சிவகாமி அம்பாளாகவும், இறைவன், சுயம்புவாய் ஸ்ரீ கைலாசநாதராகவும் வீற்றிருக்கின்றனர். ஸ்ரீ வைகுண்டம் நவ திருப்பதிகளில் ஒன்றாகவும், நவ கைலாயங்களில் ஒன்றாகவும் விளங்கும் சிறப்பு பெற்ற திருத் தலமாகும். குமர குருபரர் தன் திருவாய் மொழிந்த தலம் என்ற சிறப்பு பெற்றது.  ஆறு கால பூஜையும் மிகச் சிறப்பாக நடைபெறும், சிவ பெருமான் சனி பகவானாய் விளங்கும் இத் திருத் தலத்தில் செய்யப்படும் சனி தோஷ பரிகார வழிபாடுகள், நடைபெறாமல் தடை பட்டுக் கொண்டே வரும் திருமணங்களை இனிதே நிறைவேற்றி தரும். இழந்த செல்வங்களை மீட்டுத் தரும். 
 
புதன் தலம்.........
 
தலம்: தென் திருப்பேரை
அம்சம்: புதன்
நட்சத்திரம்: ஆயில்யம், கேட்டை, ரேவதி
மூலவர்: ஸ்ரீகைலாசநாதர்
அம்பாள்: ஸ்ரீஅழகிய பொன்னம்மை
இருப்பிடம்: ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 
                                                                           புதன் பகவான் ஆட்சி புரியும் " தென் திருப்பேரை " ஏழாவது தலமாகும். நவ கைலாயங்களில் ஒன்றான இத் தலம் நவ திருப்பதிகளில் ஒன்றாகவும் விளங்கும் இரட்டை சிறப்பு கொண்டது. திருநெல்வேலியில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ளது. இறைவன் ஸ்ரீ கைலாசநாதர். இறைவி சிவகாமி என்ற அழகிய ஸ்ரீ பொன்னம்மாள். கருவறையில் மூலவர் சிறிய லிங்க வடிவில் தாமரை மலரில் காட்சி அருள்கிறார். சுவாமிக்கும் அம்பாளுக்கும் தனித் தனியே விமானங்கள் கொண்டிருக்கும் இத் தலம் அழகிய சிற்ப வேலைப்பாடுகளை கொண்டது. கோயில் சந்நதியில் கொம்பு முளைத்த தேங்காய் ஒன்று உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில், கேப்டன் துரை என்ற கலெக்டர் " கோயில் தோப்பு இளநீருக்கு என்ன கொம்பா இருக்கிறது? " என்று கேட்டு இளநீர் பறிக்க, பறித்த இளநீர் மூன்று கொம்புகளுடன் இருந்ததாம். அந்த, இளநீர்தான் இன்றும் கோயிலில் தொங்க விடப்பட்டுள்ளது.  
 
கேது தலம்.........
 
தலம்: ராஜபதி
அம்சம்: கேது
நட்சத்திரம்: அசுவதி, மகம், மூலம்
மூலவர்: ஸ்ரீகைலாசநாதர்
அம்பாள்: ஸ்ரீஅழகிய பொன்னம்மை என்ற சிவகாமி
இருப்பிடம்: தென்திருப்பேரை கோவிலில் இருந்து அதே பாதையில் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 
                                                                  நவ கைலாயங்களில் எட்டாவது திருத் தலமாக விளங்குவது, கேது பகவான் அருளாட்சி புரியும் " ராஜ கேது ". எவ்வளவு சோதனைகள் வந்தாலும், நான் தர்மத்தின் பக்கமே நிற்பேன் என்று உள்ளோருக்கு கண்கண்ட தெய்வமாக விளங்குபவர் கேது பகவான். நவ கைலாயங்களில் மற்ற தலங்களை போல் இல்லாது, வெட்ட வெளியில் கூரையின்றி, வானமே கூரையாக, பூமியே கோவிலாக ஒரு கற்சிலை மட்டுமே கோயிலாக உள்ளது. கோயில் இருந்த இடம் முழுவதும் இயற்கை சீற்றத்தால் அழிந்து விட்டது. சிவ பெருமான் இருந்த இடத்தில் , தற்பொழுது இருக்கும் ஒரு கல்லையே மூலவராக வழிபடுகின்றனர். கோயிலாக இல்லாவிட்டாலும், இத் தலத்தை வணங்கினால் கைலாச நாதனின் அருளாசி கிடைக்கும் என்பது நிச்சயம். இத் தலத்தை வணங்கினாலோ அல்லது இத் தல நந்தி பெருமான் உள்ள ஒட்டப்பிடரத்தில் நந்திக்கு அபிஷேகம் செய்தாலோ கால் நடைகளுக்கு நோய்கள் வருவதில்லை. 
 
சுக்கிரன் தலம்........
 
தலம்: சேர்ந்த பூமங்கலம்
அம்சம்: சுக்கிரன்
நட்சத்திரம்: பரணி, பூராடம், பூரம்
மூலவர்: ஸ்ரீகைலாசநாதர்
அம்பாள்: ஸ்ரீசௌந்தர்யா நாயகி
இருப்பிடம்: திருச்செந்தூரில் இருந்து புன்னைக்காயல் செல்லும் சாலையில் ஆத்தூரில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
                                                              நவக்கிரகங்களில் சுக்கிர பகவான் ஆட்சி புரியும் நவ கைலாய தலமாக விளங்குவது " சேர்ந்த பூ மங்களம் ". இத் தலத்தின் அருகில் தான் தாமிரபரணி ஆறு கடலில் சங்கமிக்கிறது. எத்தனையோ இயற்கை சீற்றங்களை இந்த ஊர் சந்தித்து இருந்தாலும், இத் திருக் கோயில் மட்டும் மிக கம்பீரமாக காட்சி அளிக்கிறது. அகத்திய முனிவர் ஆற்றில் விட்ட மலர்களில் ஒன்பதாவது மலர் வந்து நின்ற இடம் இது. மற்ற தலங்களை போலவே இங்கு இறைவன் ஸ்ரீ கைலாச நாதராகவும், அம்மை சிவகாமி அம்பாளாகவும் அருளுகின்றனர். திருச் சுற்றில் தட்சிணா மூர்த்தி, கன்னி விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் , நவக்கிரகங்கள் மற்றும் சனீஸ்வரர் ஆகியோர் தனி சந்நதி கொண்டு அருள்பாளிக்கின்றனர்.  இறைவன் சந்நதி கிழக்கு நோக்கியும், அம்பாள் சந்நதி தெற்கு நோக்கியும் அமைந்துள்ள இத் திருத்தல வழிபாட்டினால் சுக்கிர யோகம் கிடைக்கும் என்பது சர்வ நிச்சயம்.  
 
 
 இந்த ஒன்பது கோவில்களையும் ஒரே நாளில் தரிசித்தால் கைலாயத்தை அடைந்த பலன் உண்டு என்பது சான்றோர் வாக்கு. இந்த ஒன்பது கோவில்களில் தரிசனம் செய்தால் நம் பாவங்கள் நீங்குவது மட்டுமின்றி புண்ணியமும் வந்து சேரும்.

Tuesday 9 December 2014

உபநிடதங்கள் என்பதன் பொருள்


உபநிஷத் என்றால் அருகில் அமர் என்பது பொருள். குருவின் அருகில் அமர்ந்து சீடனால் கேட்கப்பட்ட அரிய பெரிய தத்துவங்கள் அடங்கியதே உபநிடதம் எனப்பட்டது. உபநிடதங்கள் மொத்தம் 108 என்று சொல்லப்படுகிறது. அவற்றுள் மிக முக்கியமானவை பத்து. அவை ஈசாவாஸ்யம், கேனம், கடம், பிரச்சினம், முண்டகம், மாண்டுக்யம், தைத்தரீயம், ஐதரேயம், சாந்தோக்யம், பிரகதாரணியகம் எனப்படும். உபநிடதங்கள் இறைவனின் உண்மை வடிவைக் காண, அதாவது பிரம்மத்துடன் ஒன்றி ஐக்கியம் அடைதலாகிய வீடு பேற்றைப் பெறவேண்டும் என்னும் கருத்தைக் கொண்டவை. அஹம் பிரம்மாஸ்மி (நான் பிரம்மமாயிருக்கிறேன்) தத்வம் அசி (நீயும் அதுவாகவே இருக்கிறாய்) என்ற இந்தப் பேருண்மையை உபநிடதங்கள் சொல்லி நிற்கின்றன. வேதங்களின் சாரமே உபநிடதங்கள் என்பர்.

ஈசாவஸ்யம் : இதை ஈசோபநிடதம் என்பர். இது இரண்டு வழிகளைக் கற்பிக்கிறது. ஒன்று ஞானத்தின் வழி; மற்றது ஞானத்தின் வழி நின்று பற்றுகளை விட்டொழிக்கும் வழி. முதல் சுலோகம் ஈசா வாஸ்யம் எனத் தொடங்குவதால் காரணப் பெயராயிற்று.

கேன வாஸ்யம் : உளநூற் பாகுபாடுகளைத் தெளிவாகச் சொல்லி அனைவருக்கும் பரம்பொருளின் நிலைமை அறியச் செய்கிறது. உருவத்தில் சிறியது, கருத்தில் பெரியது என்ற தத்துவத்தின் படியும் அவனன்றி ஓரணுவும் அசையாது என்ற உண்மையையும் விளக்குகிறது. சங்கராச்சாரியார் இதற்கு பதபாஷ்யமும் வாக்யபாஷ்யமும் செய்திருக்கிறார். முதல் ஸ்லோகம் கேன் என்று தொடங்குவதால் காரணப் பெயராயிற்று.

கடோப நிடதம் : வேதாந்தத்தின் மிக உயர்ந்த கோட்பாடுகளை எடுத்து உரைக்கின்றது. மறைத் தத்துவத்தை விளக்கும் பூரணமான நூல். வாழ்க்கையின் இன்ப துன்பங்களையும் வேதத்தின் விழுமிய கருத்துகளையும் நன்குணர்ந்த ஆத்ம ஞானியான யமனை ஆசிரியனாகவும் நசிகேதனை மாணவனாகவும் கொண்டு வேதாந்தத்தின் அதீத பயனை உலகுக்கு எடுத்துக் காட்டுகிறது.

பிரசின உபநிடதம் : ஆறு இளஞ்சீடர்கள் பிப்பிலாதன் என்னும் நல்லாசிரியனை குருவாகக் கொண்டு தங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களை கேட்டு ஐயங்களைத் தீர்த்துக் கொண்டனர். அதுவே பிரசின உபநிடதம்.

முண்டக உபநிடதம் : துறவிகளின் ஞான வாழ்க்கையைப் பற்றியும் கடைப்பிடிக்க வேண்டிய முறைகளையும் போதிப்பது.

மாண்டுக்ய உபநிடதம் : உருவில் சிறியது. பன்னிரண்டு மந்திரங்கள் மட்டுமே கொண்டது.

தைத்திரிய உபநிடதம் : சிறந்த வாழ்க்கை முறைக்கு வழிகாட்டும் நூல். குரு சீடனுக்கு உபதேசிக்கும் அறிவுரைகள் கொண்ட முறையில் அமைந்தது.

ஐதரேய உபநிடதம் : நாம் உண்ணும் உணவே பிரம்மம் என்பதையும், உயிரைக் காப்பாற்றக்கூடிய உணவுப் பொருள் பிரத்தியட்சமான தெய்வம் என்பதையும் விரிவாகச் சொல்வது. இதை வருண பகவான் தனது மகன் பிருகுவுக்கு உபதேசித்ததாம்.

சாந்தோக்கிய உபநிடதம் : மூச்சுக் கலை எனப்படும் பிராண வித்தையைப் பற்றிக் கூறுவது. ஜாபாலசத்திய சாமர் என்பவர் வியாக்கிர பாதருடைய குமாரன் கோசுருத்திக்கு உபதேசம் செய்தது.

பிரக தாரணியகம் உபநிடதம் : ஆறு அத்தியாயங்களைக் கொண்டது. முதல் இரண்டு அத்தியாயங்கள் மதுகாண்டம் எனவும் மத்திய இரண்டு அத்தியாயங்கள் யாக்ஞவல்கிய காண்டம் எனவும் கூறப்படும். உபதேசம், விளக்கம், உபாசனை இம்மூன்றும் ஒவ்வொரு காண்டத்திலும் இடம் பெறுகிறது.

மரத்தடி பிள்ளையாரும் அவருக்கான பரிகாரப் பலன்கலும்.


அரச மர நிழலும், வன்னி மர நிழலும் ஆனைமுகன் விரும்பி அமரும் இடங்கள். இவை மட்டுமின்றி, மேலும் பல்வேறு மரங்களின் கீழும் வீற்றிருந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். எந்தெந்த மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகப் பெருமானை, வழிபடும் அடியவர்களுக்கு என்னென்ன பலன் கிட்டும் என்பதைப் பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வன்னிமரப் பிள்ளையார்:
அவிட்ட நட்சத்திர நாட்களில் வன்னி விநாயகரை நெல் பொரியினால் அர்ச்சனை செய்து வழிபட்டால், திருமணம் கைகூடும். 
புன்னை மரப் பிள்ளையார்:
 ஆயில்ய நட்சத்திர தினத்தில் இவருக்கு இளநீர் அபிஷேகம் செய்து வஸ்திரங்களை அணிவித்து, பின் ஏழை நோயாளிகளுக்கு உணவு, உடைகளை தானம் செய்தால், தம்பதியர்களிடையே உள்ள மனக் கசப்பு நீங்கும். 
மகிழ மரப் பிள்ளையார்:
இந்தப் பிள்ளையாருக்கு, அனுஷ நட்சத்திரத்தில் மாதுளம் பழ முத்துக்களால் அபிஷேகம் செய்தால், பணிக்காக குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்றிருப்பவர்கள் நலமுடன் இருப்பர். 
மாமரப் பிள்ளையார்:
இந்தப் பிள்ளையாருக்கு கேட்டை நட்சத்திரத்தன்று விபூதிக் காப்பிட்டு, ஏழை சுமங்கலிகளுக்கு உடை, உணவு அளித்து வந்தால், கோபம், பொறாமை, பகைமை மாறி, பாதிக்கப்பட்ட வியாபாரம் சீர் பெறும். 
வேப்ப மரத்து விநாயகர்:
உத்திரட்டாதி நட்சத்திர நாளில், தீபம் ஏற்றி இவரை வழிபட்டால் கன்னியருக்கு மனம் போல் மாங்கல்யம் கிட்டும். 
ஆலமரப் பிள்ளையார்:
ஆலமரத்தின் கீழ், வடக்கு நோக்கி அமர்ந்து இருக்கும் விநாயகருக்கு, நோயாளிகள் மகம் நட்சத்திரத்தன்று சித்ரான்னங்களை நிவேதனம் செய்து, தானமளித்தால் கடுமையான நோயிலிருந்து நிவாரணம் பெறலாம்.
வில்வ மரப் பிள்ளையார்:
சித்திரை நட்சத்திரத்தன்று, இவ்விநாயகருக்கு வழிபாடு செய்து ஏழைகளுக்கு முடிந்த அளவு தானம் அளித்து, வில்வ மரத்தைச் சுற்றி வந்தால், பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர். 
அரச மரப் பிள்ளையார்:
பூச நட்சத்திரத்தன்று இவ்விநாயகருக்கு அன்னாபிஷேகம் செய்தால், விளைபொருள் மற்றும் பூமியால் லாபம் கூடும். 
பிணம் மீட்ட பிள்ளையார்:
அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் குங்கிலியக்கலயநாயனார். இவர் மகன் இறந்து விட்டான். அவனது உடலை தகனம் செய்ய எடுத்துச் செல்லும் போது விநாயகப் பெருமான் வழி மறித்து, நாக கன்னிகை தீர்த்தத்தில் நீராடிச் செல்லுமாறு, கட்டளையிட்டார். பிறகு அவர்கள் வீடு வந்து சேர்ந்ததும், இறந்த மகன் உயிர் பெற்று வந்தான். கும்பகோணத்திற்கு வடகிழக்கில் 20 கி.மீ. தொலைவில் உள்ள திருப்பனந்தாள் திருத்தலத்தில் இந்த பிணம் மீட்ட விநாயகரை, தரிசிக்கலாம்.

கிழமை, திதி,ருது அகியவைகள் தேவ பாஷயில்

நாம் பூஜைகள் செய்யும் பொழுது பூஜா விதானம் அல்லது எந்த பூஜை செய்கிறோமோ அதற்குண்டான புத்தகத்தை வைத்துக் கொண்டு பூஜை சிறப்பாக செய்து விடுவோம். அன்றைய கிழமை, திதி, நட்சத்திரம் ஆகியவற்றை தினசரி காலண்டரை வைத்துக் கொண்டு சொல்லி விடுவோம். ஆனால், ருது என்ன வென்று சரியாகத் தெரிந்து இருக்காது. பூஜை முடிந்ததும் பழங்கள், பக்ஷணங்கள் எல்லாம் இருக்கும். அவற்றின் நிவேதனப் பெயர்கள் தெரிந்து இருக்காது. இந்த நிவேதனப் பெயர்களை தெரிந்து கொண்டு பூஜை செய்தால் இன்னும் சுலபமாக இருக்கும்.

1. கதலீபலம் - வாழைப்பழம்
2. பீஜாபூரபலம் - கொய்யாப்பழம்
3. வேத்ர பலம் - பெரப்பம் பழம்
4. பதரி பலம் - எலந்தைப் பழம்
5. கர்ஜுர பலம் - பேரிச்சம் பழம்
6. ஜம்பூ பலம் - நாவல் பழம்
7. கபித்த பலம் - விளாம் பழம்
8. த்ராஷா பலம் - திராøக்ஷ பழம்
9. சூ பழம் - மாம்பழம்
10. மாதுஸங்கபழம் - மாதுளம் பழம்
11. நாரங்கபலம் - நார்த்தம்பழம் அல்லது சாத்துக்குடி
12. பனஸ பலம் - பலாப் பழம்
13. உர்வாருகம் - வெள்ளரிக்காய்
14. ஜம்பீர பலம் - எலுமிச்சம் பழம்
15. இக்ஷúகண்டம் - கரும்பு
16. சணகம் - கடலை
17. ப்ருதுகம் - அவல்
18. ஸர்க்கரா - சர்க்கரை
19. ததி - தயிர்
20. குடோபஹாரம் - வெல்லம்
21. ஆப்பிள் - காஷ்மீர பலம்
22. அமிருதம் - தீர்த்தம்
23. நாரிகேளம் - தேங்காய்
24. ஸால்யன்னம் - சம்பா அன்னம்
25. குளா பூபம் - அதிரசம், அப்பம்
26. தத்யன்னம் - தயிர் சாதம்
27. திந்திரியன்னம் - புளியோதரை
28. ஸர்கரான்னம் - சர்க்கரை பொங்கல்
29. மாஷா பூபம் - வடை
30. ரஸகண்டம் - கற்கண்டு
31. மோதகம் - கொழுக்கட்டை
32. திலான்னம் - எள்ளு சாதம்
33. ஆஜ்யோபகாரம் - நெய்
34. லட்டூகம் - லட்டு
35. சித்ரான்னம் - பலவகை கலந்த சாதம்3
6. நாரிகேளகண்டத்வயம் - இரண்டாக உடைத்த தேங்காய்
37. க்ருதகுள பாயஸம் - வெல்லம் போட்ட பாயஸம்
38. கோக்ஷீரம் - பசும் பால்

ருதுக்கள்

சித்திரை, வைகாசி - வஸந்த ருது ,
ஆனி, ஆடி - க்ரீஷ்ம ருது,
ஆவணி, புரட்டாசி - வர்ஷ ருது,
ஐப்பசி, கார்த்திகை - சரத் ருது,
மார்கழி, தை - ஹேமந்த ருது,
மாசி, பங்குனி - சிசிர ருது

கிழமைகளைச் சொல்லும் முறை

ஞாயிறு - பானு வாஸர,
 திங்கள் - இந்து வாஸர,
 செவ்வாய் - பவும வாஸர,
புதன் - சவும்ய வாஸர,
 வியாழன் - குரு வாஸர,
வெள்ளி - ப்ருகு வாஸர,
சனி - ஸ்திர வாஸர.

பூஜைகள் செய்யும் பொழுது, மாதங்களைச் சொல்ல வேண்டிய முறை

சித்திரை - மேஷ மாஸே,
வைகாசி - ரிஷப மாஸே,
ஆனி - மிதுன மாஸே,
ஆடி - கடக மாஸே,
ஆவணி - ஸிம்ம மாஸே,
புரட்டாசி - கன்யா மாஸே,
ஐப்பசி - துலா மாஸே,
கார்த்திகை - வ்ருச்சிக மாஸே,
மார்கழி - தனுர் மாஸே,
தை - மகர மாஸே,
மாசி - கும்ப மாஸே,
பங்குனி - மீன மாஸே.

விரதங்களும் அவற்றின் பலனும்!


நமது உடலுறுப்புக்கள் பலவித செயல்களைச் செய்கின்றன. அவற்றில் நல்லதும், கெட்டதும் அடக்கம். இந்த செய்கைகள் மனதின் தூண்டுதலால் வெளிப்படுகிறது. நல்லவற்றை மட்டும் செய்து, தீய செயல்களை ஒடுக்க வேண்டுமானால், பட்டினி கிடக்க வேண்டும் அல்லது உணவைக் குறைக்க வேண்டும். இதற்காகவே விரதங்கள் ஏற்படுத்தப்பட்டன.

சோமவார விரதம்

நாள் : கார்த்திகை மாத திங்கள்கிழமைகள்

தெய்வம் : சிவபெருமான்

விரதமுறை : இரவு மட்டும் சாப்பிட வேண்டும். முடியாதவர்கள் மட்டும் காலையிலும் சாப்பிடலாம்.

பலன் : திருமணமாகாதவர்களுக்கு தகுந்த வாழ்க்கை துணை, திருமணமானவர்களுக்கு தகுந்த வாழ்க்கை

சிறப்பு தகவல் :  கணவன், மனைவி இருவரும் இணைந்து சிவாலயம் சென்று வருவது மிகவும் நல்லது.

பிரதோஷம்

நாள் : தேய்பிறை, வளர்பிறை திரயோதசி திதிகள்.

தெய்வம் : சிவபெருமான், நந்திதேவர்

விரதமுறை : சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய நான்கு மாதங்களில் ஏதாவது ஒன்றில் வரும் சனிப் பிரதோஷம் முதலாக தொடங்கி வாழ்நாள் முழுவதும் அனுஷ்டிக்க வேண்டும். பகலில் சாப்பிடக்கூடாது. மாலை 4.30 மணிக்கு நீராடி, சிவாலயம் சென்று வணங்கி, பிரதோஷ காலம் கழிந்தபிறகு சிவனடியார்களுடன் இணைந்து சாப்பிட வேண்டும்.

பலன் : கடன், வறுமை, நோய், அகால மரணம், பயம், அவமானம் ஏற்படுதல், மரண வேதனை ஆகியவற்றிலிருந்து விடுதலை, பாவங்கள் நீங்குதல்.

சிறப்பு தகவல் : பிரதோஷ நேரத்தில் சாப்பிடுதல், தூங்குதல், குளித்தல், எண்ணெய் தேய்த்தல், விஷ்ணு தரிசனம் செய்தல், பயணம் புறப்படுதல், மந்திர ஜபம் செய்தல், படித்தல் ஆகியவை கூடாது.

சித்ரா பவுர்ணமி விரதம்

நாள் : சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம்

தெய்வம் : சித்திரகுப்தர்

விரதமுறை : இந்நாளில் இரவில் மட்டும் சாப்பிட வேண்டும். காலையில் பிதுர் தர்ப்பணம் செய்ய வேண்டும்.

பலன் : மறைந்த முன்னோர் பாவம் நீங்கி பிறப்பற்ற நிலையை எய்துவர்.

தை அமாவாசை விரதம்

நாள் : தை அமாவாசை

தெய்வம் : சிவபெருமான்

விரதமுறை : காலையில் சாப்பிடாமல் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல்

பலன் : முன்னோர்களுக்கு முக்தி, குடும்ப அபிவிருத்தி

சிறப்பு தகவல் : பிற அமாவாசைகளில் தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள், இன்று அவசியம் தர்ப்பணம் செய்ய வேண்டும்.

கந்தசஷ்டி விரதம்

நாள் : ஐப்பசி மாதம் வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை 6 நாட்கள்

தெய்வம் : சுப்பிரமணியர்

விரதமுறை : முதல் 5 நாட்கள் ஒருபொழுது சாப்பாடு. கடைசிநாள் முழுமையாக பட்டினி, சூரசம்ஹாரம் முடிந்தபிறகு வாழைப்பழம், சிறிதளவு மிளகு சாப்பிட்ட பின், மாம்பழச்சாறு, பால், பானகம் இவற்றில் ஏதாவது ஒன்று அருந்துதல்.

பலன் :  குழந்தைப்பேறு

மங்களவார விரதம்

நாள் : தை மாதம் முதல் செவ்வாய் துவங்கி ஆயுள்முழுவதும் செவ்வாய் கிழமைகளில் அனுஷ்டித்தல்

தெய்வம் : பைரவர், வீரபத்திரர்

விரதமுறை : பகலில் ஒரு பொழுது சாப்பிடலாம்

பலன் : பயணத்தின்போது பாதுகாப்பு, பயம் நீங்குதல்

உமா மகேஸ்வர விரதம்

நாள் : கார்த்திகை மாத பவுர்ணமி

தெய்வம் : பார்வதி, பரமசிவன்

விரதமுறை : காலையில் மட்டும் சாப்பிடக்கூடாது.

பலன் : குடும்ப ஒற்றுமை ஏற்படும்.

விநாயக சுக்ரவார விரதம்

நாள் : வைகாசி மாதம் வளர்பிறை முதல் வெள்ளிக்கிழமை துவங்கி வாழ்நாள் முழுவதும் அனுஷ்டித்தல்

தெய்வம் : விநாயகர்

விரதமுறை : பகலில் பட்டினி இருந்து இரவில் பழம், இட்லி உள்ளிட்ட உணவு சாப்பிடலாம்.

பலன் : கல்வி அபிவிருத்தி

கல்யாணசுந்தர விரதம்

நாள் : பங்குனி உத்திரம்

தெய்வம் : கல்யாண சுந்தர மூர்த்தி (சிவனின் திருமண வடிவம்)

விரதமுறை : இரவில் சாப்பிடலாம்

பலன் : நல்ல வாழ்க்கைத்துணை அமைதல்

சூல விரதம்

நாள் : தை அமாவாசை

தெய்வம் : சூலாயுதத்துடன் கூடிய சிவபெருமான்

விரதமுறை : இரவில் மட்டும் சாப்பிடக்கூடாது, காலையில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும்

பலன் : விளையாட்டில் திறமை அதிகரிக்கும்

இடப விரதம்

நாள் : வைகாசி மாதம் வளர்பிறை அஷ்டமி திதி

தெய்வம் : ரிஷபவாகனத்தில் அமர்ந்த சிவன்

விரதமுறை : பகலில் ஒரு பொழுது மட்டும் சாப்பிடலாம். நந்திதேவரை வழிபட வேண்டும்.

பலன் : குடும்பத்திற்கு பாதுகாப்பு

சுக்ரவார விரதம்

நாள் : சித்திரை மாதம் வளர்பிறை முதல் வெள்ளிக்கிழமை துவங்கி வாழ்நாள் முழுவதும் அனுஷ்டிக்க வேண்டும்

தெய்வம் : பார்வதி தேவி

விரதமுறை : பகலில் ஒருபொழுது மட்டும் சாப்பிடலாம்

பலன் : மாங்கல்ய பாக்கியம்

தைப்பூச விரதம்

நாள் : தை மாத பூச நட்சத்திரம்

தெய்வம் : சிவபெருமான்

விரதமுறை : காலையில் மட்டும் சாப்பிடக்கூடாது.

பலன் : திருமண யோகம்

சிவராத்திரி விரதம்

நாள் : மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதி

தெய்வம் : சிவன்

விரதமுறை : மூன்று வேளையும் சாப்பிடாமல் இருப்பது நல்லது. தண்ணீர் அல்லது பால் குடிப்பது மத்திமம். முடியாதவர்கள் பழம் சாப்பிடலாம். உடல் நிலை சரியில்லாதவர்கள் மட்டும் இட்லி முதலான சாத்வீக உணவு வகைகளை சாப்பிடலாம். இரவில் சிவாலயத்தில் தங்கி நான்கு ஜாம பூஜையிலும் பங்கேற்க வேண்டும்.

பலன் : நிம்மதியான இறுதிக்காலம்

திருவாதிரை விரதம்

நாள் : மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம்

தெய்வம் : நடராஜர்

விரதமுறை : பிரசாதக்களி மட்டும் சாப்பிடலாம்.

பலன் : நடனக்கலையில் சிறக்கலாம்

சிறப்பு தகவல் : காலை 4.30க்கு நடராஜர் திருநடன தீபாராதனையை தரிசித்தல்.

கேதார விரதம்

நாள் : புரட்டாசி மாதம் வளர்பிறை அஷ்டமி முதல் தேய்பிறை சதுர்த்தசி வரை 21 நாட்கள் அல்லது தேய்பிறை பிரதமை முதல் சதுர்த்தசி வரை 14 நாட்கள் அல்லது தேய்பிறை அஷ்டமி முதல் சதுர்த்தசி வரையான 7 நாட்கள். இதுவும் முடியாதவர்கள் தேய்பிறை சதுர்த்தசி நாள் மட்டும்.

தெய்வம் : கேதாரநாதர்

விரதமுறை : ஆண்கள் 21 இழையால் ஆகிய காப்பை வலக்கையிலும், பெண்கள் இடக்கையிலும் கட்டிக்கொள்ள வேண்டும். முதல் 20 நாள் ஒருபொழுது உணவு, கடைசிநாள் முழுவதும் உபவாசம் உடல்நிலை சரியில்லாதவர்கள் உப்பில்லாத உணவு சாப்பிடலாம்.

பலன் : தம்பதிகள் நீண்டநாள் வாழ்வர்

விநாயகர் சஷ்டி விரதம்

நாள் : கார்த்திகை மாதம் தேய்பிறை பிரதமை முதல் மார்கழி மாதம் வளர்பிறை சஷ்டி வரை 21 நாட்கள்

தெய்வம் : விநாயகர்

விரதமுறை : ஆண்கள் 21 இழையால் ஆகிய காப்பை வலக்கையிலும், பெண்கள் இடக்கையிலும் கட்டிக்கொள்ள வேண்டும். முதல் 20 நாளும் ஒருபொழுது மட்டும் சாப்பிட்டு கடைசிநாள் முழுமையாக பட்டினி இருக்க வேண்டும்.

பலன் : சிறந்த வாழ்க்கைதுணை, புத்திசாலியான புத்திரர்கள் பிறத்தல்.

முருகன் சுக்ரவார விரதம்

நாள் : ஐப்பசி மாதம் முதல் வெள்ளி துவங்கி மூன்று ஆண்டுகள் வரை அனுஷ்டிக்க வேண்டும்.

தெய்வம் : சுப்ரமணியர்

விரதமுறை : பகலில் ஒருபொழுது உணவு, இரவில் பழம் மட்டும் சாப்பிட வேண்டும்.

பலன் : துன்பம் செய்தவருக்கும் நன்மை செய்யும் மனம் கிடைக்கும்.

கிருத்திகை விரதம்

நாள் : கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரம் தொடங்கி, ஒவ்வொரு மாதம் கார்த்திகை நட்சத்திரத்திலும் அனுஷ்டிப்பது. தொடர்ந்து 12 ஆண்டுகள் அனுஷ்டிக்க வேண்டும்.

தெய்வம் : சுப்பிரமணியர்

விரதமுறை : பகலில் பட்டினி கிடந்து இரவில் பழம், இட்லி சாப்பிடலாம்

பலன் : 16 செல்வமும் கிடைத்தல்

நவராத்திரி விரதம்

நாள் : புரட்டாசி மாத வளர்பிறை பிரதமை முதல் நவமி திதி வரை

தெய்வம் : பார்வதிதேவி

விரதமுறை : முதல் 8 நாள் பழம், இட்லி உள்ளிட்ட சாத்வீக உணவு சாப்பிடலாம். 9ம் நாளான மகாநவமி அன்று (சரஸ்வதி பூஜை) முழுமையாக சாப்பிடக் கூடாது.

பலன் : கல்வி, செல்வம், ஆற்றல்

கார்திகை மாத சோமவார சங்காபிஷேகம்

2014ம் வருடதிய இருதிசோமவார சங்காபிஷேகம் வரும் 15-12-2014 அன்று காலை 5மனிக்கு மேல் 7மனிக்குல் நடைபெரும்.....

ஒவ்வொரு வருட கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட் கிழமைகளில் சிவாலயங்களில் சங்காபிஷேகம் நடைபெறும்.கார்த்திகை மாதத்தில் தீப ஒளியால் ஏற்படும் வெப்பத்தை சமன் செய்யவும், சிவரூபத்தை குளிர வைக்கவும் சங்கு அபிஷேகம் நடைபெறுகின்றது.
கடலில் இருந்து கிடைக்கும் சங்கு, பாற்கடலில் இருந்து தோன்றிய சந்திரனின் அம்சமாகப் போற்றப்படுகின்றது.
சங்கினில் நிரப்படும் தீர்த்தம் மேலும் குளிர்ந்து, அதைக் கொண்டு அபிஷேகம் செய்கையில் சிவபெருமான் மனம் குளிர்ந்து சந்திரனுக்கு வரம் அளித்ததைப் போல, பக்தர்களுக்கு என்றும் வளமான வாழ்க்கையை அளிப்பார் என சாஸ்திரங்கள் போற்றுகின்றன.
கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட் கிழமை சந்திர பகவானுக்கு மிக உரியது.
கார்த்திகை மாதம் விருச்சிக மாதம் என அழைக்கப்படும். விருச்சிக ராசியில் சந்திரன் நீசமாக (பலமிழந்து) அமைவார்.
கார்த்திகை மாதத்தில் வரும் அனைத்து சந்திர அம்சம் பொருந்திய நாளாகியஸோமவாரம்எனும் திங்கட்கிழமைகளில்,சந்திர அம்சமான சங்குகளுக்குபூஜை செய்து,சங்கு தீர்த்தம் கொண்டுசிவபெருமானுக்கு பூஜை செய்வது, காண்பது,சந்திரன் பலம் பெற்று வளர்ந்ததைப் போல,நம் வாழ்க்கையையும் நல்வளங்கள் அனைத்தும் பெருகும்.
சந்திரன் இன்பங்களுக்கு அதிபதியாக விளங்குபவர். ஸோமன் என்று சிறப்புப் பெயர் பெற்றவர். ஔஷதம் எனும் மருந்துப் பொருட்களுக்கும், மூலிகைகளுக்கும் அதிபதியாக விளங்குபவர்.
சந்திர அம்சமான சங்கு கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வதும் அதைக் காண்பதும், எல்லையற்ற இன்பங்களையும், நோயற்ற நல்வாழ்க்கையையும் அருளும்.
சந்திரனுக்கு சுய ஒளி இல்லை என்றும் சூரியனின் ஆயிரக்கணக்கான கிரணங்களுள் ஒன்றான சுஷ்முனா அல்லது சுஷ்மா எனும் ஒளிக்கீற்றினால் சந்திரன் ஒளிபெறுவதாக ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன.
ஆகையினால், சந்திர அம்சம் கொண்ட சங்கிற்கு, பூஜைகளின் போது, சூர்யனின் காயத்ரி மந்திரத்தையேச் சொல்லி பூஜிக்க வேண்டும் என்ற நியதியையும் சாஸ்திரங்கள் வகுக்கின்றன.
சிறப்பு வாய்ந்த கார்த்திகை மாதத்து ஸோமவாரம் எனும் கார்த்திகை மாதத் திங்கட் கிழமைகளிலும், சங்கு அபிஷேகம் காணப் பெறுவது பெரும் பேற்றினை அருளக் கூடியது.
சங்கு அபிஷேகம் காண்போம் ! சங்கடங்கள் நீங்கப் பெறுவோம் !

பொதுவாக நமது இறை வழிபாட்டிலேயே சங்குக்கு முக்கிய பங்கு உண்டு. தர்மத்தின் வடிவம் என்பதால் பஞ்ச பாண்டவர்களின் கைகளில் ஒவ்வொரு விதமான பெயர்களில் விளங்குகிறது. தருமர் வைத்துள்ள சங்கு, ` அனந்த விஜயம் ` என்றும்,அர்ஜூனர் வைத்திருக்கும் சங்கு, ` தேவதத்தம் ` என்றும் , பீமசேனன் வைத்திருக்கும் சங்கு , ` மகாசங்கம் ` என்றும், நகுலன் வைத்திருக்கும் சங்கு, `சுகோஷம் ` என்றும், சகாதேவன் வைத்திருக்கும் சங்கு, ` மணிபுஷ்பகம் ` என்றும் அழைக்கப்படுகிறது. ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா தன் இடக்கையில் வைத்திருக்கும் ` பாஞ்சஜன்யம் ` என்ற சங்கு,
இறந்தவருக்கு நற்கதி அளிக்கக்கூடியது. சங்குகளில் மணிசங்கு, துவரி சங்கு, பாருத சங்கு, வைபவ சங்கு, பார் சங்கு, துயிலா சங்கு, வெண்சங்கு, பூமா சங்கு ஆகிய எட்டு வகையும், அரிய வகையான வலம்புரிச் சங்கும் தோற்றங்களால் வேறுபட்ட இன்னும் 7 வகை சங்குகளும் மிகவும் சக்தி வாய்ந்தவை. இந்த பதினாறு வகை சங்குகளில் வலம்புரிச் சங்கு மிகவும் உயர்ந்ததும் தெய்வத்தன்மை கொண்டதும் ஆகும்.
திருக்கழுக்குன்றம் குளத்தில் உருவாக்கும் புனித சங்கு :
மார்க்கண்டேயர் அனைத்து சிவ தலங்களையும் வழிபட்டு விட்டு திருக்கழுகுன்றம் திரிபுரசுந்தரி சமேத வேதகிரீஸ்வரர் திருக்கோவிலுக்கு வருகை தந்தார். அங்கு அவர் பூஜை செய்யும்போது தீர்த்தம் எடுப்பதற்கான பாத்திரம் இல்லை. அவர் பூஜைக்குரிய தீர்த்தப் பாத்திரம் வேண்டி சிவனை நினைத்தார்.
அப்போது சங்கு தீர்த்தக்குளத்தில் ஒரு அற்புதமான சங்கு கரை ஒதுங்கியது. அச்சங்கை சிவபெருமானே பூஜைக்கு கொடுத்து அருள் புரிந்ததாக தல வரலாறு கூறுகிறது. இதனையடுத்து 12 ஆண்டுக்கு ஒருமுறை சங்கு தீர்த்தக் குளத்தில் சங்கு உருவாகிறது. இதனை புனித சங்காக பூஜையில் வைத்து பூஜித்து வருகிறார்கள்.
ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் கடைசி சோமவாரத்தில் வேதகிரீஸ்வரருக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெறும்போது சங்குதீர்த்தக்குளத்தில் உருவாகும் புனித சங்கு பூஜையில் முதன்மை பெறும். இந்த குளத்தில் குளித்தால் தோல் நோய் தீரும் என்பது நம்பிக்கை. இதனால் இந்தியா முழுவதும் இருந்து ஆன்மீக சுற்றுலா வருபவர்கள் இந்த குளத்தில் நீராடி செல்கின்றனர்.
1939-ல் இருந்து இதுவரை 6 சங்குகள் பிறந்துள்ளன. அவை பத்திரமாக பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 1999-ம் ஆண்டு ஆடி பூரம் தினத்தில் சங்கு தீர்த்தக்குளத்தில் புனித சங்கு உருவானது. இதனையடுத்து 12 ஆண்டுக்குப் பிறகு கடந்த 2011-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தியான வியாழக்கிழமை சங்கு தீர்த்தக்குளத்தில் புனித சங்கு கரைஒதுங்கியது. இது 7-வது புனித சங்காகும். அடுத்த புனித சங்கு 2023-ம் ஆண்டு பிறக்கும்.
சங்கு தரிசனம் :
சிவன் கோவில்களில் ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை தீபம் போல, கார்த்திகை, சோமவார சங்காபிஷேகம் மிகவும் விசேஷமானது. `சித்தாந்த ரத்னாகரம்' என்ற நூலில் சங்காபிஷேகம் செய்வது மிகவும் விசேஷமானது என குறிப்பிடப்பட்டுள்ளது. சங்காபிஷேகம் செய்ய இயலாதவர்கள் அதை தரிசித்தாலே அபிஷேகம் செய்த பலனை அடைவர் என்பது நம்பிக்கை

Saturday 6 December 2014

கார்த்திகை தீபத்தின் கதை தெரியுமா?


முன்னொரு காலத்தில் ஒரு கார்திகை பௌர்ணமயின்றி ஒரு சிவாலயத்தில் தீபம் ஒன்று நீண்ட நேரம் எரிந்து திரி கருகி அணையும் தருவாயில் மெல்லியதாக எரிந்து கொண்டிருந்தது. அந்த சமயம் அங்கு வந்த எலி ஒன்று விளக்கிலிருந்த திரியை இழுத்துப் போகும் நோக்கத்தோடு அணைந்துபோகும் நிலையிலிருந்த அந்ததிரியை இழுத்தது. எலியினால் தூண்டப்பட்ட திரி பிரகாசமாக எரியத் துவங்கியதும் எலி பயந்து ஓடிவிட்டது.
கார்த்திகை பௌர்ணமியன்று சிவன் ஆலயத்தில் விளக்கை பிரகாசமாக எரியவைத்து புண்ணியத்தைச் செய்வதால், அந்த எலி அடுத்த பிறவியில் மகாபலி சக்கரவர்ததியாகப் பிறந்து சிறந்து சிவ பக்தராக விளங்கினார். இறைவனின் கருணையால் தன் முற்பிறவியினை அறிந்த மகாபலி தன் ஆட்சிகாலத்தில் கார்த்திகை தீப விழாவை சிறப்பாக கொண்டடிடி வந்ததன் பின்னர் அவன் இறைவனின் திருவடியைச் சேரும் காலத்தில், இறைவனை நோக்கி 'மக்கள் அனைவரும் இக்கார்த்திகை பௌர்ணமியன்று தீபமேற்றி வழிபட்டு நன்மை அடைய வேண்டும்' என்று வேண்டினான். அவ்வாறே ஈசனும் வரமளிக்க இன்றும் மக்கள் அனைவரும் இல்லந்தோறும் தீபமேற்றி வழிபடுகிறோம்.

காலக் கணிதம்……


செயற்கைகோள் உதவியில்லை தொலைக்காட்சிகளின் துணையுமில்லை ஆனாலும் பன்னிரு மாதங்களின் காலநீட்டிப்பினை அறுதியிட்டுகூறியுள்ளனர் நம் பண்டைய தமிழர் .
பண்டைய வானவியலில் ஒருநாளினை 60 நாழிகையாக பிரித்துள்ளனர் . ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்களை குறிப்பதாகும் ஆக 60 நாளிகை என்பது 1440 நிமிடங்களை குறிப்பதாகும் . நாம் ஒரு நாளினை 24 மணி நேரமாக பிரித்து இருக்கிறோம் அப்படியெனில் ஒரு நாளுக்கு கிடைக்கும் நிமிடங்கள்24*60=1440 ஆகும் .
வருடத்தின் சில நாட்களில் பகல்நீண்டு இருக்கும் சில நாட்களில்இரவு நீண்டு இருக்கும் என நாம் பள்ளியில் அறிவியல் பாடத்தில் படித்து இருப்போம் ஆனால் நம்முடைய முன்னோர்கள் செயற்கைகோள் உதவியில்லாமலும் தொலைக்காட்சிகளின் துணையுமில்லாமலும் 12 மாதங்களையும் பிரித்து எவற்றில் பகல் நீடிக்கும் எவற்றில் இரவு நீடிக்கும் என அறிதியிட்டுகூறியுள்ளனர் ஆகவே தமிழன்தான் பகல் – இரவு நீட்டிப்பு அறிவியலைமுதன் முதலில் உலகிற்கு கூறினான்.
சரி நமது முன்னோர்கள் பன்னிரு மாதங்களின் பகல் – இரவு நாழிகையை எவ்வாறு பிரித்துள்ளனர் என்பதை அறிவோம்
“ சித்திரையும் ஐப்பசியும் சீரொக்கும் சித்திரைவிட்டு
ஐப்பசிமுன் னைந்தும் அருக்கேறும் – ஐப்பசிக்குப்
பின்னைந்து மாதம் பிசகாமல் இரவேறும்
மின்னே விடுபூ முடி “
சித்திரை மாதமும் ஐப்பசி மாதமும் சீரொக்கும் அதாவது பகல் – இரவு நாழிகைகள் சமமாக( பகல்=30, இரவு =30 ) இருக்கும்
ஐப்பசிக்கு முன் ஐந்தும் அருகேறும் அதாவது ஐப்பசிக்கு முன் உள்ள வைகாசி,ஆனி,ஆடி,ஆவணி,புரட்டாசி ஆகிய ஐந்து மாதங்களில் பகல்நீடிக்கும்
ஐப்பசிக்கு பின் ஐந்து மாதம் பிசகாமல் இரா ஏறும் அதாவது ஐப்பசிக்கு பின் உள்ள கார்த்திகை , மார்கழி, தை, மாசி , பங்குனி ஆகிய மாதங்களில் இரவு நீடிக்கும்
பாடலின் கடைசி வரி ” விடுபூ முடி ” மிக மிக முக்கியமான வரியாகும் இந்த வரியினை அடிப்படையாக கொண்டு வாக்கிய கணித முறை என்னும் புதிய முறை தோன்றியது.
வாக்கிய கணித முறை என்பது வாக்கியத்தின் முதல் வார்த்தையிலிருந்து கடைசி வார்த்தை வரை கணக்கிட வேண்டும் ஒவ்வொரு எழுத்துக்கும் 1/4 கால அளவு கொடுக்க வேண்டும்
thamizh2bmaathangal
பகல் நீட்டிப்பை காண
வி – டு – பூ – மு – டி எனும் ஐந்து வார்தைகளைஎடுத்துக்கொள்வோம் வி என்பது வைகாசி
டு என்பது ஆனி
பூ என்பது ஆடி
மு என்பது ஆவணி
டி என்பது புரட்டாசி
இது போலவே வி – டு – பூ – மு – டி எனும் அதே ஐந்து வார்தைகளைகொண்டு இரவு நீட்டிப்பு மாதங்களுக்கு கொடுத்து இரவு நீட்டிப்பும் அறியலாம்
மாதிரிக்காக வைகாசி மாதத்தின் பகல் நீட்டிப்பை காணும் முறை
வி என்ற எழுத்தின் தொடக்கம் வ ஆகும் எனவே
வ = 1/4 நாழிகை
வா= 1/4 நாழிகை
வி=1/4 நாழிகை ஆக மொத்தம் கிடைப்பது ¾ நாழிகை பகல் நீடிக்கும் 3/4 நாழிகை என்பது 18 நிமிடத்திற்கு சமம்
இது போல வி – டு – பூ – மு – டி ஆகிய வாக்கியங்களின் முதல்எழுத்து முதல் கடைசி எழுத்து வரை கணக்கிட்டால் கிடைப்பது
பகல் நீட்டிப்பு
வைகாசி 3/4 நாழிகை = 18 நிமிடம்
ஆனி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்
ஆடி 1 1/2 நாழிகை = 36 நிமிடம்
ஆவணி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்
புரட்டாசி 3/4 நாழிகை = 18 நிமிடம்
இரவு நீடிப்பு
கார்திகை 3/4 நாழிகை = 18 நிமிடம்
மார்கழி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்
தை 1 1/2 நாழிகை = 36 நிமிடம்
மாசி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்
பங்குனி 3/4 நாழிகை = 18 நிமிடம்

நம் முன்னோர்கள் காலத்தை நொடி, நாழிகை, நாள், கிழமை, மாதம், ஆண்டு, ஊழி என்று வானியல் முறைப்படி வரையறை செய்துள்ளனர். 60- நாழிகையை ஒரு நாளாகவும் ஒரு நாளை வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம் என்று ஆறு சிறுபொழுதுகளாகவும் ஓர் ஆண்டை இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி என்று ஆறுபெரும் பொழுதுகளாகவும் பிரித்துள்ளார்கள்.
தமிழ் திங்கள் (மாதம்)
“““““““““““““““`
பன்னிரண்டு ஓரை[ராசி]களின் பெயர்களே பனனிரண்டு திங்களின் பெயர்களாக
வழங்கி வந்தன.
அவை:–
1. சுறவம் (தை)
2. கும்பம் (மாசி)
3. மீனம் (பங்குனி)
4. மேழம் (சித்திரை)
5. விடை (வைகாசி)
6. ஆடவை (ஆனி)
7. கடகம் (ஆடி)
8. மடங்கல் (ஆவணி)
9. கன்னி (புரட்டாசி)
10. துலாம் (ஐப்பசி)
11. நளி (கார்த்திகை)
12. சிலை (மார்கழி)
இப்படியாக நாம் பின்பற்றிய தமிழ் திங்கள் காலபோக்கில் ஆட்சி மாற்றத்தால் வடமொழிக்கு மாற்றம் செய்யப்பட்டுவிட்டன.

கார்த்திகை விரதம்(நட்சத்திர விரதம்)



கார்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரத்தன்று இந்த

விரதத்தை முதன் முதலில் தொடங்குவர்.தொடர்ந்து ஒவ்வொரு மாதமும்

வரும் கிருத்திகை கிருத்திகையன்று விரதமிருப்பது முறையாகும்.இது

முருகனுக்குரிய நட்சத்திர விரதம்.