Tuesday 29 October 2013

6 வகை தானங்கள்

தானம் செய்யும் போது உங்களை அறியாமல் ஒரு கர்வம் ஒட்டிக்கொள்ளும். எப்பாடுபட்டாவது அதை துடைத்து எறியுங்கள். நடக்கும் எந்த ஒரு காரியத்திற்கும் கண்டிப்பாக ஒரு பின்னணி இருக்கும். நீங்கள் ஒரு சிறு கருவி மட்டுமே. ஆட்டுபவனும், ஆடுபவனும் அந்த சிவமே. உங்கள் வாழ்வில் எந்த தானம் செய்தால் என்ன பலன்கள் என்ற விவரம் வருமாறு:-


ஆடைகள் : ஆயுள் விருத்தி, குழந்தைகள் சிறு வயதில் இறந்து விடுவது தடுக்கப்படும். கண்டாதி தோஷம் விலகும். அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடை தானம் செய்வது மிக நல்லது. வியாழக்கிழமையன்று ஆடை தானம் செய்வதால் பெண்களிடம் நல்லுறவும், சுக போக பாக்கிய விருத்தியும், உடல் வலிமையும் உண்டாகும்.


தேன் : புத்திர பாக்கியம் இல்லாதவர்கள், கர்ப்பப்பை வலிமை இல்லாதவர்கள், வெண்கலப்பாத்திரத்தில் தாரா பலன் உள்ள நட்சத்திரத்தன்று (இதை அறிய உங்கள் ஆஸ்தான ஜோதிடரை அணுகவும்) சுத்தமான தேனை தானம் செய்ய வேண்டும்.


நெய் : பாவக்கிரக திசை நடப்பவர்கள் (6, 8, 12-ம் அதிபதியின் திசை) நோய் தொல்லையால் அவதிப்படுபவர்கள் வெண்கல கிண்ணத்தில் சுத்தமான நெய் தானம் செய்ய வேண்டும். சகலவிதமான நோய்களும் தீரும்.


தீபம் : இஷ்ட தெய்வ சன்னதியில் மாதம் ஒருமுறை 10 தீபம் ஏற்றினால் கண் கோளாறுகள் தீரும். அல்லது ஏழைகளுக்கும், கோவில்களுக்கும் மின்விளக்கு வசதி செய்து கொடுத்தால் பார்வைத்திறன் எப்போதும் பாதுகாக்கப்படும்.


அரிசி : பூர்வ ஜென்ம தோஷங்கள், தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்கள் விலக ஏழைகளுக்கு அரிசி தானம் செய்ய வேண்டும். யாருக்கு வீடு வாசல் இல்லையோ அவர்களுக்கு தானம் செய்தால் தான் நாம் தானம் செய்த பலன் நமக்கு உண்டு.


கம்பளி - பருத்தி : வாயு சார்ந்த நோய் உள்ளவர்கள் வயது முதிர்ந்தவர்களுக்கு கம்பளி தானம் செய்தால் நோய் தீரும். வெண்குஷ்டம் அறிகுறி தென்பட்டால் பருத்தி தானம் (பருத்தி உடைகள்) செய்து அதிலிருந்து மீண்டுவிடலாம்.

தோஷம் நிறைந்த சந்தியா காலத்தில் தவிர்க்க வேண்டியவை

பகலும், இரவும் கலக்கும் நேரம் சந்தியாகாலம் எனப்படும். சூரிய அஸ்தமன நேரம், தோஷம் நிறைந்த சமயமாக இது கருதப்படுகிறது. அசுரர், பூதம், பேய், பிசாசு போன்ற தீய சக்திகள் வலிமை பெரும் நேரமிது. ஆகவே இவ்வேளையில் உண்பதையும், உறங்குவதையும் தவிர்க்கவேண்டும்.


தோஷம் நிறைந்த இந்த நேரத்தில் உணவு உண்டால் அந்த உணவு விஷமாக மாறும். எனவே இந்த நேரத்தில் சாப்பிடுவதை தவிர்ப்பது மிகவும் நல்லது

தீய கனவுகளின் தீய பலன் நீங்கும், தோஷங்கள் விலகும் மந்திரம்

பலன்: தீய கனவுகளின் தீய பலன் நீங்கும், தோஷங்கள் விலகும்
சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம்
ஔர்வோஜ சோபிதோரஸ்கம் ரத்னகேயூரமுத்ரிதம்
தப்த காஞ்சன ஸங்காசம் பீதநிர்மலவாஸஸம்
இந்த்ராதிஸுர மௌளிஸ்த ஸ்புரன்மாணிக்ய தீப்திபி:
– ந்ருஸிம்ஹ கவசம்.
தமிழ் பொருள்:
நான்கு கைகளை உடையவரே, மிருதுவான உடல் பாகங்களைக் கொண்டவரே, தங்க குண்டலங்களை அணிந்து பேரெழிலுடன் காட்சி தருபவரே, நரசிம்மா, நமஸ்காரம். லட்சுமியின் பிரகாசமான ஒளியால் மின்னும் திருமார்பைக் கொண்டவரே, ரத்னமயமான தோள்வளைகளால் அலங்கரிக்கப்பட்டவரே, தூய்மையான பீதாம்பரத்தைத் தரித்தவரே, நமஸ்காரம். இந்திரன் முதலான தேவர்கள் அடிபணியும் மாணிக்க பாதுகைகள் அணிந்த பாதங்களை உடையவரே நரசிம்மா நமஸ்காரம்.
இந்தத் துதியை தீய கனவு ஏற்பட்டால் விழித்தெழுந்து சொல்லலாம்.
இந்த ஸ்லோகத்தை உளமாற ஜபித்தால், இனி தீய கனவுகளே உருவாகாது

நம்மை சுற்றி எப்போதும் இருக்கும் ஒரு தேவதை

வீடுகளில் நம்மை சுற்றி எப்போதும் ஒரு தேவதை இருந்து கொண்டே இருக்கிறது. நாம் எதைச் சொன்னாலும் அப்படியே ஆகட்டும் என்ற அந்த தேவதை ஆசீர்வதித்துக்கொண்டே இருக்கும்.

நாம் பேசுவது, சொல்வது, நல்ல வார்தைகளாகவும், மங்கள வாக்காகவும் இருந்தால் அந்த தேவதையும், அப்படியே ஆகட்டும் என்று ஆசீர்வதிக்கும். எனவே எல்லாம் நல்லதாகவே அமையும்.

ஏதாவது ஒருபொருள் இருக்கிறதா என்று கணவன் கேட்டால் இல்லையே என்று மனைவி சொல்லக்கூடாது. நிறைய இருந்தது. மறுபடியும் வாங்கவேண்டும் என்பது போல் சொன்னால் தேவதையும் அப்படியே ஆகட்டும் என்று ஆசீர்வதிக்குமாம். வீட்டில் எந்த பொருளும் எப்போதும் நிறைந்திருக்கும். வீடு எப்போதும் மங்களகரமாகவே இருக்கும். எனவே பேசும்போது நல்ல வார்த்தையாக அனைவரும் பேசுவோம்

காஞ்சி பெரியவரின் ஆன்மிக சிந்தனைகள் பத்து

  1. காலையில் எழுந்தவுடன் இரண்டு நிமிடமாவது கடவுளை மனதில் நினைத்து பிரார்த்தனை செய்யுங்கள்.
  2. அன்றைய நாள் நல்ல நாளாக அமையவேண்டும் என்ற இறைவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள்.
  3. புண்ணியநதிகள், கோமாதா, சிரஞ்சீவிகள், சப்தகன்னியர் ஆகியோரை குறைந்தபட்சம் ஒரு நிமிடம் நினைப்பது அவசியம்.
  4. வாரத்தில் ஒருநாளாவது அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்யுங்கள்.
  5. அக்கம் பக்கத்தினரையும், மற்றவர்களையும் அன்போடு நேசித்து வாழுங்கள்.
  6. உணவு உண்ணும் முன் மிருகங்களுக்கோ, பறவை களுக்கோ சிறிது அளித்துவிட்டு பிறகு சாப்பிடுங்கள்.
  7. உங்களால் முடிந்த அளவுக்கு தர்மம் செய்து வாருங்கள்.
  8. நெற்றியில் எப்போதும் திருநீறு, குங்குமம் அணிந்து கொள்ளுங்கள்.
  9. தூங்கச் செல்லும் முன் அன்றைய நாளில் நடந்த நன்மை, தீமைகளை அலசி ஆராய்ந்து திருத்திக் கொள்ளுங்கள்.
  10. கடவுளின் நாமத்தை 108 முறையாவது உச்சரித்துவிட்டு பின்னர் உறங்குங்கள்

முன்னோர்கள் சொன்னவை அர்த்தமுள்ள தகவல்கள்

சொன்னவை அர்த்தமுள்ளவை

மனிதனின் நல்வாழ்க்கைக்கு உடல்,உள்ளம் நலமுடன் இருத்தல் மிக அவசியமாகும்.இதை நம்தமிழ் முன்னோர்கள் மிகதெளிவாக
கூறிசென்றுள்ளார்கள்.

‘உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே.’

‘உடம்பை முன்னம் இழுக்கென்றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே உறுப்பொருள் கண்டேன்
உடம்பினுள் உத்தமன் கோயில் கொண்டானென்று
உடம்பினை யானிருந் தோம்புகின்றேனே’

“மறுப்பது உடல்நோய் மருந்தென லாகும்
மறுப்பது உளநோய் மருந்தெனச் சாலும்
மறுப்பது இனிநோய் வாரா திருக்க
மறுப்பது சாவை மருந்தென லாமே” [திருமூலர்]

நாம் நோயின்றி நீண்டநாள்வாழ சில அன்றாட
நாள் ஒழுக்கம்பற்றி பார்ப்போம்.
சுவரின்றி சித்திரமில்லாதது போல் உடல் இருக்கும் வரைதான் உயிர்நிலைக்கும்.அகத்தூய்மை,புறத்தூய்மையுடன் உடலைப்பேணிக்காத்தல் நம் கடமையாகும்.

அதிகாலைஎழுந்து பல்துலக்கியபின்புன்புதான் எதுவும்
குடிக்கவேண்டும்.காப்பிதான் உங்கள் உயிர் என்றாலும்
நிறையதண்ணீர் குடித்தபின் காப்பி குடியுங்களளேன்.

காலைக்கடன்களை இயல்பாக கழிக்க பழகிக்கொள்ளவேண்டும்.
மலம் ஒன்று[அ]இரண்டுமுறையும்,சிறுநீர் 5[அ]6 முறைகழித்தல் இயல்பு. இதற்கு மிகினும் குறையினும் நோய் என அறிக.

காபிக்குப்பதிலாக அருகம்புல் சாறு மிகவும் நன்று.
அல்லது கீழ்க்கண்ட பானம் செய்து குடிக்கலாம்
கரிசாலை இலை 100 கிராம்,தூதுவளை,முசுமுசுக்கை,சீரகம்,
வகைக்கு 25 கிராம் இவைகளை நிழலில் உலர்த்தி பொடியாக்கி
வைத்துக்கொண்டு தேவையானபோது தண்ணீரில் காய்ச்சி பால்+
சர்க்கரை [நாட்டு சர்க்கரை] சேர்த்து அருந்தல் நலம்.இதனால்
இரத்த விருத்தி,உடல் வலிமை உண்டாகும், சளி மற்றும் வயிறு
சம்மந்தமான தொந்தரவுகள் உண்டாகாது.

உடற்பயிற்சி பழக்கம் உடலுக்கு வலிமையும் மனதுக்கு அமைதியும் அளிக்கும்.”வாக்கிங்” , யோகாசன முறைகள் நல்ல பயந்தரும். தியானம், மூச்சுப்பயிற்சி உடலுக்கும் உள்ளத்திற்கும் வன்மைதரும்.

தினசரி இருமுறை குளிப்பது உடல் வலி நீங்கும்,கண் தெளிவு,தோல் மிருது உண்டாகும்.வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பது நலம்.உடல்தூய்மை ஆரோக்கிய தாம்பத்திய வாழ்வுக்கு வழிவகுக்கும்.

சுத்தமான தண்ணீர் நாள்முழுதும் குடித்தால் வயிற்றுப்புண்,சிறுநீரககோளாறுகள் தோன்றாது. உறங்கச்செல்லும் முன் நிறைய தண்ணீர் குடிக்கவேண்டும்.தண்ணீரில் சீரகம் போட்டு காய்ச்சி குடிப்பதும் நல்லது.

உணவுமுறைகளில் அறுசுவையும் கலந்த கலப்புணவு உடலுக்கு தேவையாகும்.
[அறுசுவைகள்-காரம்,கைப்பு ,இனிப்பு ,புளிப்பு ,உவர்ப்பு ,துவப்பு]
இனிப்பு ,புளிப்பு ,உப்பு – கபத்தை அதிகரிக்கும்
காரம் ,கசப்பு ,துவர்ப்பு – வாயுவை அதிகரிக்கும்
இனிப்பு ,கசப்பு ,துவர்ப்பு – பித்தத்தை குறைக்கும்
புளிப்பு ,உப்பு ,காரம் – பித்தத்தை அதிகரிக்கும்.”வயிற்றுப்புண்” இருந்தால் அதிகமாகும்.
இனிப்பு – மகிழ்ச்சி,பலம்,உடல் பருமன்
கசப்பு – ஜீரணம்,புழுக்கொல்லி
புளிப்பு – ஜீரணம்,வாயு குறையும்,அரிப்பை அதிகரிக்கும்
உவர்ப்பு – மலம் சிறுநீர்த்தூய்மை ,உடல் மிருதுவாகும்,வியர்வை அதிகரிக்கும்,முடி நரைக்கும்
துவர்ப்பு – இரத்தம் சுத்தமடையும்,தோல் மிருதுவாகும்
கார்ப்பு – ஜீரணம் ,வெப்பம்

உணவைப்பொருத்தவரை அவரவர் உடலுக்கேற்ப ,செய்யும் தொழிலுக்கேட்ப,தட்பவெட்ப காலநிலைகளுக்கு தகுந்தாற்போல் ,எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுவகைகளை பழகிக்கொள்தல் நலம்.

சித்தமருத்துவத்தில்
“ஒருவேளை உண்பான் யோகி
இருவேளை உண்பான் போகி
மூவேளை உண்பான் ரோகி
நான்குவேளை உண்பான் பாவி”என்பர்.

பொரும்பாலான நோய்கள் நம் உணவுப்பழக்கம் அதன் மாறுபாட்டில் ஏற்படுகின்றன.

இதை வள்ளுவன் தெளிவான பார்வையில் எளிதாக விளக்குகிறார் பார்ப்போம்:

“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்”
[உண்டது ஜீரணமாதறிந்து உணவை எடுத்துக்கொண்டால் உனக்கு மருந்தே தேவையிலலை]
“அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதூய்க்கு மாறு”
[நீண்டநாள்வாழ செரிக்கும்தன்மையறிந்து உண்க]
“அற்றது அறிந்து கடைபிடித்து மாறல்ல
தூய்க்க துவரப்பசித்து”
[உண்ட உணவு செரித்து பசித்தபின் புசி]
“மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிக்கு”
[ஒவ்வாத உணவை ஒதுக்கி,அளவோடு உண்ணும் மனிதனுக்கு வியாதியில்லை]
“இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபே ரிரையான் கண் நோய்”
[அளவரிந்து உண்பவனிடம் உள்ள இன்பம்நிலைக்கும், அதிகமாக உண்பவனிடம் நோய் நிலைக்கும்]
“தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்”
[பசியின் தன்மை அறியாமல் அதிகம் உண்பவன் அவதிப்படுவான்]

நமது உடலில் ஏற்படும் வேகங்கள் என14 உள்ளன அவற்றை அடக்கவோ அதில் மாற்றம் ஏற்பட்டாலோ நோய் வருகின்றன-

“பதினான்கு வேகப்பேர்கள்
பகர்ந்திட அவற்றைக்கேளாய்
விதித்திடும் வாதம் தும்மல்
மேவு நீர் மலம் கொட்டாவி
கதித்திடு பசி நீர்வேட்கை
காசமோ டிளைப்பு நித்திரை
மதித்திடு வாந்தி கண்ணீர்
வளர் சுக்கிலம் சுவாசமாமே”
1.அபான வாயு – பசியிண்மை ,உடல்வலி ,மலக்கட்டு
2.சிறுநீர் - கல்லடைப்பு , மூட்டுவலி ,குறிவலி
3.மலம் – மூட்டுவலி ,தலைவலி ,பலக்குறைவு ,மயக்கம் ,பசியின்மை
4.பசி - உடல் இளைத்தல் ,களைப்பு ,மயக்கம்
5.தாகம் – தலைசுற்றல் ,உடல் வறட்சி ,வாய் உலர்தல்
6.தும்மல் – தலைவலி,கண் மூக்கு வாய் இவற்றில் வலி
7.இருமல் - மார்புவலி,மூச்சுத்திணறல்,இரைப்பு
8.வாந்தி – சுரம்,இரைப்பு ,பித்தம்
9.கொட்டாவி – செரியாமை,தும்மல்,உடல்வலி
10.கண்ணீர் – தலைவலி,கண்நோய்,பீனிசம்,
11.தூக்கம் – தலைகனம்,கண்நோய்,மயக்கம்
12.ஆயாசம்[களைப்பு] – மயக்கம்,வெப்பம்,நினைவுக்குறைவு
13.சுக்கிலம்[விந்து] – சுரம்,நீர் அடைப்பு,மூட்டுவலி,வெள்ளை
14.சுவாசம்[மூச்சு] – இருமல்,வயிற்றுப்பொருமல்,சுவையின்மை

இவையன்றியும் நாம் நமக்குள் ஏற்படுத்திக்கொள்ளும்மனசின் தாக்கங்கலால் வினை வந்துசேர்கிறது.அந்த வகையில்

நோய் உண்டாக்கும் குணங்கள்:
கோபம்
குற்ற உணர்வு
பயம்
சளிப்பு
துக்கம்

நோய் போக்கும் குணங்கள்:
அன்பு
சிரிப்பு
ஆர்வம்
நம்பிக்கை
மனவலிமை[சகிப்புத்தன்மை]
இத்தகைய குணங்களை ஏற்படுத்திக்கொள்தல் எந்தநோயையும் வெல்லமுடியும்.

பகல்பொழுது சிறிதுநேரஉறக்கம் நல்லது.புத்துணர்ச்சி தரும். அதிகநேர உறக்கம் சோம்பலையும் உடல்பருமனையும் ஏற்படுத்தும்.

“திண்ணமி ரண்டுள்ளே சிக்கல டக்காமல்
பெண்ணின் பாலொன்றை பெருக்காமல்-உண்ணுங்கால்
நீர்கருக்கி மோர்பெருக்கி நெய்யுருக்கி யுண்பார் தம்
பேருரைக்கில் போமே பிணி” – தேரையர் பதார்த்தகுண சிந்தாமணியில் நோய்வராதிருக்க கூறும் அறிவுரை இது.

மலம்,சிறுநீர் கழிப்பதில் சிக்கல் இல்லாமல்,அதிக போகத்தில் ஈடுபடாமல், நீரை காய்ச்சிக்குடித்தும்,அதிக மோர்சேர்த்தும், நெய்யை உருக்கியும் உண்ணவேண்டும் என்கிறார் சித்தர்.

இரவு உணவு குறைவாக எடுத்துக்கொள்ளாம். நார்ச்சத்துள்ள பழவகைகள் சேர்த்தல் மலச்சிக்கலைதவிர்க்கும்.

பால் அருந்தும்பழக்கம் உள்ளவர்கள்- பசும்பால் நலம்.

ஆடை தூய அவரவர் காலசூழலுக்கு ஏற்றபடி அணியலாம். இரவில் தூங்கும்போது தழர்வான ஆடை அணிவது அவசியம்.

இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள்

இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள்

இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் (அறிவுரை) இடது கையால் ஆசனம் போட்டால் ஆயுள் குறைவு; இடது கையால் எண்ணெய் தேய்த்துக் கொண்டால் புத்திர நாசம்; இடது கையால் சாப்பாடு போட்டுக் கொண்டால் செல்வம் அழியும்; இடது கையால் படுக்கையை போட்டால் இருப்பிடம் சேதமாகும். (அறிவுரை) ஜோதிடர், குரு, நோயாளி, கர்ப்பிணி, மருத்துவர், சந்நியாசி முதலியவர்களுக்கு, அவர்களுடைய ஆபத்துக் காலத்தில் கண்டிப்பாக உதவ வேண்டும். இது மிகவும் புண்ணியம். (அறிவுரை) சகோதரன் அல்லது சகோதரி தாழ்ந்த நிலையிலிருந்தால், அவர்களுக்கு உதவ வேண்டும். (அறிவுரை) அண்ணியை தினசரி வணங்க வேண்டும். (அறிவுரை) பசு, தேர், நெய்குடம், அரச மரம், வில்வம், அரசுடன் சேர்ந்த வேம்பு இவைகள் எதிரில் குறுக்கிட்டால், வலது புறம் சுற்றி செல்ல வேண்டும். (அறிவுரை) குடும்பஸ்தன் ஒரு ஆடை மட்டும் அணிந்து உணவு உட்கொள்ள கூடாது. ஒரு கையை தரையில் ஊன்றி சாப்பிடக் கூடாது. துணியில்லாமல் குளிக்கக் கூடாது. சூரியனுக்கு எதிரில் மலஜலம் கழிக்கக் கூடாது. (அறிவுரை) கன்றுக் குட்டியின் கயிறை தாண்டக் கூடாது. மழை பெய்யும் போது ஓடக் கூடாது. தண்ணீரில் தன் உருவத்தை பார்க்கக் கூடாது. (அறிவுரை) நெருப்பை வாயால் ஊதக் கூடாது. (அறிவுரை) கிழக்கு, மேற்கு முகமாக உட்கார்ந்து மலஜலம் கழிக்கக் கூடாது. (அறிவுரை) எதிர்பாராத விதத்திலோ, தவறு என்று தெரியாமலோ, பெண்கள் கற்பை இழந்து விட்டால், புண்ணிய நதியில், 18 முறை மூழ்கிக் குளித்தால் தோஷம் நீங்கும். (அறிவுரை) திருமணம் ஆகாமலே ஒரு பெண்ணுடன் வாழ்பவனை சுபகாரியங்களில் முன்னிறுத்தக் கூடாது. (அறிவுரை) சாப்பிடும் போது, முதலில் இனிப்பு, உவர்ப்பு, புளிப்பு, கசப்பு பதார்த்தங்களை வரிசையாக சாப்பிட்டு, பின் நீர் அருந்த வேண்டும். (அறிவுரை) சாப்பிடும் போது தவிர, மற்ற நேரத்தில் இடது கையால் தண்ணீர் அருந்தக் கூடாது. (அறிவுரை) கோவணமின்றி, வீட்டின் நிலைப்படியை தாண்டக் கூடாது. (அறிவுரை) இருட்டில் சாப்பிடக் கூடாது. சாப்பிடும் போது விளக்கு அணைந்து விட்டால், சூரியனை தியானம் செய்து, மீண்டும் விளக்கேற்றி விட்டு சாப்பிட வேண்டும். (அறிவுரை)சாப்பிட்டவுடன் குடும்பஸ்தன் வெற்றிலை போட வேண்டும். வெற்றிலை நுனியில் பாவமும், முனையில் நோயும், நரம்பில் புத்திக் குறைவும் உள்ளதால் இவற்றை கிள்ளி எறிந்து விட வேண்டும். (அறிவுரை)சுண்ணாம்பு தடவாமல் வெற்றிலையை வெறுமனேயோ, வெறும் பாக்கை மட்டுமோ போடக் கூடாது. வெற்றிலையின் பின்பக்கம் தான் சுண்ணாம்பு தடவ வேண்டும். (அறிவுரை) மனைவி, கணவனுக்கு வெற்றிலை மடித்துக் கொடுக்கலாமே தவிர, கணவன், மனைவிக்கும், மகன், தாய்க்கும், பெண், தந்தைக்கும் மடித்துத் தரக் கூடாது. (அறிவுரை) குரு, ஜோதிடர், வைத்தியர், சகோதரி, ஆலயம் இங்கேயெல்லாம் செல்லும் போது வெறுங்கையுடன் செல்லக் கூடாது. (அறிவுரை) தலையையோ, உடம்பையோ வலக்கையினால் மட்டும் சொறிய வேண்டும். இரண்டு கைகளாலும் சொறியக் கூடாது. (அறிவுரை) இரு கைகளாலும் தலைக்கு எண்ணெய் தேய்க்க கூடாது. வலது உள்ளங்கையில் எண்ணெய் ஊற்றி தலையில் தேய்க்க வேண்டும். (அறிவுரை) தலைவாசலுக்கு நேரே கட்டில் போட்டோ, தரையிலோ படுக்கக் கூடாது. (அறிவுரை) வானவில்லை பிறருக்கு காட்டக் கூடாது. (அறிவுரை) மயிர், சாம்பல், எலும்பு, மண்டையோடு, பஞ்சு, உமி, ஒட்டாஞ்சில்லி இவற்றின் மீது நிற்கக் கூடாது. (அறிவுரை) பேசும் போது துரும்பைக் கிள்ளிப் போடக் கூடாது. (அறிவுரை) ஈரக்காலுடன் படுக்கக் கூடாது. (அறிவுரை) வடக்கிலும், கோணத் திசைகளிலும் தலை வைத்து படுக்கக் கூடாது. நடக்கும் போது முடியை உலர்த்த கூடாது. (அறிவுரை) ஒரு காலால், இன்னொரு காலை தேய்த்துக் கழுவக் கூடாது. (அறிவுரை) தீயுள்ள பொருட்களை தரை மேல் போட்டு காலால் தேய்க்கக் கூடாது. பூமாதேவியின் சாபம் ஏற்பட்டு, பூமி, மனை கிடைக்காமல் போய் விடும். (அறிவுரை) பகைவன், அவனது நண்பர்கள், கள்வன், கெட்டவன், பிறர் மனைவி இவர்களுடன் உறவு கொள்ளக் கூடாது. (அறிவுரை) பெற்ற தாய் சாபம், செய்நன்றி கொல்லுதல், பிறன் மனைவி கூடுதல் இவை மூன்றுமே பிராயச்சித்தமேயில்லாமல் அனுபவித்தே தீர வேண்டிய பாவங்கள். (அறிவுரை) அங்கஹீனர்கள், ஆறு விரல் உடையவர்கள், கல்வியில்லாதவர்கள், முதியோர், வறுமையிலுள்ளவர்கள் இவர்களது குறையை குத்திக் காட்டிப் பேசக் கூடாது. (அறிவுரை) ரிஷி, குரு, ஜோதிடர், புரோகிதர், குடும்ப வைத்தியர், மகான்கள், கெட்ட ஸ்திரியின் நடத்தை இவர்களைப் பற்றி வீண் ஆராய்ச்சியில் ஈடுபடவோ, அவர்களிடம் உள்ள தவறுகளை விளம்பரப்படுத்துவதோ கூடாது. (அறிவுரை) பிறர் தரித்த உடைகள், செருப்பு, மாலை, படுக்கை இவற்றை நாம் உபயோகிக்கக் கூடாது. (அறிவுரை) பிணப்புகை, இளவெயில், தீபநிழல் இவை நம் மீது படக் கூடாது. (அறிவுரை) பசுமாட்டை காலால் உதைப்பது, அடிப்பது, தீனி போடாமலிருப்பது பாவம். (அறிவுரை) பசு மாட்டை, "கோமாதா வாக எண்ணி, சகல தேவர்களையும் திருப்திப்பட வைப்பதற்கு, அம்மாட்டுக்கு, புல், தவிடு, தண்ணீர், புண்ணாக்கு, அகத்திக்கீரை கொடுப்பது புண்ணியம். (அறிவுரை) தூங்குபவரை திடீரென்று எழுப்பக் கூடாது; தூங்குபவரை உற்றுப் பார்க்கக் கூடாது. (அறிவுரை) பகலில் உறங்குவது, உடலுறவு கொள்வது கூடாது. (அறிவுரை) தலை, முகம் இவற்றின் முடியை காரணம் இல்லாமல் வளர்க்கக் கூடாது. (அறிவுரை) அண்ணன் - தம்பி; அக்காள் - தங்கை; ஆசிரியர் - மாணவர்; கணவர் - மனைவி; குழந்தை- தாய்; பசு - கன்று இவர்களுக்கு இடையில் செல்லக் கூடாது. (அறிவுரை) வீட்டுக்குள் நுழையும் போது, தலைவாசல் வழியாகத் தான் நுழைய வேண்டும். (அறிவுரை) நம்மை ஒருவர் கேட்காதவரையில், நாம் அவருக்கு ஆலோசனை கூறக் கூடாது.

சாப்பிடும் பொழுது கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள்.


கயத்தூர்ப் பெருவாயின் முள்ளியார்
இயற்றிய
ஆசாரக்கோவை லிருந்து
  • நீராடி, காலைக் கழுவி, வாய் துடைத்து, உண் கலத்தை சுற்றி, நீரிரைத்து உண்பவரே உண்பார். இப்படி செய்யாமல் உண்டாரைப் போல் வாயை கழுவி போவார் ஊனை அரக்கர் எடுத்துக் கொள்வார்.
  • கால் கழுவின ஈரம் உலர்வதற்கு முன்னே உணவு உண்ண வேண்டும். கால் ஈரம் உலர்ந்த பிறகே படுக்கைக்கு செல்ல வேண்டும். இதுவே அறிவாளர்களின் கொள்கையாகும்.
  • ஒருவன் உண்ணும்போது கிழக்கு திசையில் அமர்ந்து, தூங்காமல், அசையாமல், வேறொன்றினையும் பார்க்காமல், பேசாமல், உண்கின்ற உணவை கையாலெடுத்து சிந்தாமல் நன்றாக உண்ண வேண்டும்.
  • நல்லொழுக்கத்தினின்று தவறாத பெரியோர்கள், விருந்தினர்க்கும், மூத்தோர்களுக்கும், பசுக்களுக்கும், பறவைகளுக்கும், பிள்ளைகளுக்கும் உணவு அளிக்காமல் தான் உண்ணமாட்டார்.
  • கிழக்கு திசையும், ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் மற்ற திசைகளும் நல்லவைகளாகும். உச்சிப் பொழுதில் உண்ணுதல் நலம்.
  • படுத்தோ, நின்றோ, வெளியிடத்தில் நின்றோ உண்ணல் ஆகாது. விரும்பி மிகுதியாக உண்ணலும் ஆகாது. கட்டில் மேலிருந்து உண்ணுதல் கூடாது.
  • தம்மிலும் பெரியாருடன் உண்ணும்போது அவர்க்கு முன்னே தாம் உண்ண மாட்டார். முந்தி எழுந்திருக்க மாட்டார். அவரை நெருங்கி அமர்ந்து உண்ணமாட்டார். எல்லா செல்வமும் பெறுவதாயினும் வலப்புறம் அமர்ந்து உண்ணார்.
  • உணவை உண்ணும்போது கசப்பானவைகளை கடைசியிலும் தித்திப்பான பண்டங்களை முதலாகவும் மற்றவைகளை இடையிலும் உண்ண வேண்டும்.
  • வாயை நன்றாக கொப்புளித்து, நன்றாக துடைத்து, முக்குடி குடித்து, முகத்திலுள்ள உறுப்புகளை மந்திரம் சொல்லி வாய் துடைத்தல் பெரியோர் அறிந்துரைத்த ஒழுக்கங்களாகும்.

12 வகை விரதங்கள்

12 வகை விரதங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகின்றன. அவை முறையே.....

* யாசிதம் இரு பகல் உணவு கொள்பவர்கள் இவ்விரதத்தை இருப்பர்.

* இந்த வகை பாதக்கிரிச்சனம். இவ்விரதம் இருப்போர் நல்லுணர்வு கொண்டிருப்பவர்.

* இவ்வகை விரதம் பன்னகிரிச்சனம் எனப்படும். இவ்விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் வில்வ மரம், அரச மரம், அத்திமரம் ஆகியவற்றின் தளிர் இலைகளை மட்டுமே தண்ணீரில் நனைத்து உண்பர்.

* ஹெளமிய கிரிச்சனம் என்று அழைப்பர். இவ்விரதத்தை இருப்பவர்கள் பகலில் மட்டும் உண்பார்கள். பால், மோர், நீர், பொரி மாவு இவற்றில் ஒன்றை உண்பர்.

* இதற்கு அதிகிரிச்சனம் எனப் பெயருண்டு. இவ்வகையான விரதத்தை இருப்பவர்கள் 3 நாள் ஒவ்வொரு பிடி அன்னம் உண்டோ, உண்ணாமலோ இருப்பது.

* கிரிச்சனாதி கிரிச்சனம் என்ற பெயர் ஆகும். 21 நாள் பால் மட்டுமே அருந்தி, கிரிச்சனாதி கிரிச்சனம் விரதம் இருப்பர்.

* கிரசா பத்தியகிரிச்சனம். 3 நாள் காலை 3 நாள் இரவு, 3 நாள் நடுப்பகல், 3 நாள் முழுமையும் உணவின்றி இருப்பது.

* பார்ககிரிச்சனம் என அழைப்பர். 12 நாட்கள் உணவின்றி இவ்விரதத்தை இருப்பார்கள்.

* சாந்தபன கிரிச்சனம் எனப்படும். ஒரு நாள் போசனம். ஒரு நாள் கோமியம், ஒரு நாள் பால், ஒரு நாள் தருப்பை நீர் மட்டுமே அருந்தி, ஒரு நாள் ஊண், உணவு எதுவும் இல்லாமல் இருப்பது.

* மகசாந்தாவன கிரிச்சனம் என்பர். 9-வது விரதத்தில் கூறியவற்றில் ஒன்றை மட்டும் உண்டு இருப்பது.

* சாந்திராயன விரதம் எனக்கூறப்படும். வலது கையில் தொடங்கி ஒவ்வொரு பிடி அன்னம் குறைத்துக் கொண்டே வந்து தேய்பிறை முதல் ஒவ்வொரு பிடி அன்னம் கூட்டிக் கொண்டே செல்லுதல். 3 வேளையும் குளிக்க வேண்டும்.

* வாலசாந்திராயணம். சாந்திராயணத்தின் அன்று இரவில் 4 பிடி அன்னம் மட்டும் உண்பது

ஆறு பண்புகளை கடைபிடியுங்கள்.

 *ஒருவர் பாவச் செயல் புரிந்தால் அது பலரையும் பாதிக்கும். அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களின் நிலைமை காலப்போக்கில் சரியாகி விடும். ஆனால் பாவச்செயல் புரிந்தவரை விட்டு, பாவம் ஒருநாளும் நீங்காது.
*தகுதியற்றவர்களுக்குப் பணம் கொடுத்தல், தகுதி உடையவர்களுக்கு உதவ மறுத்தல்- இந்த இரு நடவடிக்கைகளும் நாம் சம்பாதித்த செல்வத்தைத் தவறாக பயன்படுத்துவதாகவே கருதப்படும்.
*காமம், கோபம், பேராசை ஆகிய மூன்றும் நரகத்தின் வாயில்களாக அமைந்துள்ளன. இவை நம் ஆத்மாவை களங்கப்படுத்தி விடும்.
*வாய்மை, தர்மசிந்தனை, சுறுசுறுப்பு, பொறாமை கொள்ளாதிருத்தல், பொறுமை, மனவலிமை ஆகிய ஆறு பண்புகளையும் கடைபிடியுங்கள். இவற்றையுடையவனின் மனம் ஆறுதலாக இருக்கும்.
*பெண் மோகம், சூதாடுதல், வேட்டையாடுதல், குடிப்பழக்கம், கடுமையான சொற்கள் பேசுதல், மிகையான தண்டனை கொடுத்தல், செல்வத்தை தவறான வழிகளில் செலவழித்தல் ஆகிய ஏழும் பெரும் அழிவை விளைவிக்கக் கூடியவை.
*யார் திமிருடன் நடந்து கொள்வதில்லையோ, பிறரை இகழ்ந்து தன்னை புகழ்ந்து கொள்வதில்லையோ, உணர்ச்சி வசப்பட்டாலும் தன்னை மறந்து பிறரை கடுஞ்சொல் கூறுவதில்லையோ அவர் எல்லோராலும் விரும்பப்படுபவர் ஆகிறார்.
*பிறர் பெற்றுள்ள செல்வம், அழகு, வீரம், குலகவுரவம், மகிழ்ச்சியான வாழ்க்கை, அதிர்ஷ்டம், பட்டம் பரிசுகள் ஆகியவற்றைக் கண்டு ஒருவர் பொறாமைப்பட்டால், வாழ்நாள் முழுவதும் தீராத நோயாளியைப் போல் மனம் புழுங்கியபடி இருக்க நேரிடும்.
*குடிப்பழக்கம் போன்ற போதைகளை விடச் செல்வ மிகுதியால் ஏற்படும் போதை அதிக அபாயம் கொண்டது. செல்வ போதை கொண்டுள்ளவர் தனக்கு பேரழிவு ஏற்பட்ட பிறகுதான் சுயநினைவிற்குத் திரும்புகிறார்.
*அறிவு குழம்பி அதனால் வீழ்ச்சியடையும் தருணம் நெருங்கி விட்டால், ஒருவருக்கு, தான் செய்யும் அநியாயம் எல்லாம் நியாயமாக தோன்றும்.
*பேசுவதைவிட மவுனமாக இருப்பது சிறந்தது. பேச வேண்டிய அவசியம் ஏற்படும் போது உண்மையே பேச வேண்டும். அந்த பேச்சு பிறருக்கு நன்மை செய்வதாக அமைய வேண்டும்.
*ஏரி வறண்டு போனால் அன்னப் பறவைகள் வெளியேறி விடுவதைப் போல், ஒருவர் சஞ்சலமான மனதை உடையவராகவும், சுயக்கட்டுப்பாடு அற்றவராகவும், ஆசைகளுக்கு வசப்பட்டவராகவும் இருந்தால், அவருடைய செல்வமும் வசதிகளும் அவரை விட்டு நீங்கி விடும்.
*வாழ்வில் வளமாக இருக்க விரும்புகிறவர், பொருத்தமான உணவையே, தன்னால் சாப்பிடக் கூடிய உணவையே, சாப்பிட்டால் செரிக்கக் கூடியதையே, செரித்தால் நன்மை தரக் கூடியதையே உண்ண வேண்டும் அல்லது ஏற்க வேண்டும்.
*பணிவின் மூலம் அவமானத்தைத் தவிர்க்கலாம். வலிமையின் மூலம் பெரிய துன்பத்தைப் போக்கிக் கொள்ளலாம். பொறுமையின் மூலம் கோபத்தை, கோபப்படுபவர்களை வெல்லலாம். நன்னடத்தையின் மூலம் எல்லா தீய விளைவுகளையும் நீக்கலாம்.

விரத நாட்களில் அரிசி உணவு ஏன் சாப்பிடக் கூடாது


"
விரதம்' என்ற சொல்லுக்கு "கஷ்டப்பட்டு இருத்தல்' என்று பொருள். நாள் முழுக்க தெய்வசிந்தனை மாறாமல் பசியோடு இருப்பது "விரதம்'. "பசி' என்ற நினைப்பு வரும்போதெல்லாம் "தெய்வத்திற்காக விரதம் இருக்கிறோம்' என்ற நினைவும் இருக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதனால்தான் விரதத்திற்கு "உபவாசம்' (கடவுளின் அருகில் வசித்தல்) என்ற பெயரும் உண்டு. அரிசி உணவை உண்டால் தூக்கம் வந்துவிடும். பால், பழம் போன்ற மென்மையான உணவுகளை உண்டு தெய்வ சிந்தனையுடன் நாளை கழிப்பதே முழுமையான விரதம்.

குனித்த புருவமும் -அப்பர் சுவாமிகள்

குனித்த புருவமும் = பரத நாட்டியத்தில் புருவங்கள் ஏறி இறங்குவதின் மூலம் பாவங்களை வெளிப்படுத்தும் கலை உண்டு அல்லவா? இங்கே இறைவன் தன் புருவங்களைக் குனிப்பதின் மூலம் அடியார்களின் குறைகளைக் கூர்ந்து கேட்டு அறிந்து, தன்னையே சரண் என வந்தவர்களின் குறைகளைக் களையும் விதமாய்ப் புருவம் குனித்துக் கொள்வதாயும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்= தன்னை அடைக்கலம் என நம்பி வந்தோரை வருக என வரவேற்று அவர்களின் பிழைபொறுக்கும் விதமாய் கருணையுடன் கூடிய சிரிப்பையும், பனித்த சடையும்= சிவநெறியாளர்க்கு உரிய ஒழுக்கத்தைக் காட்டும் விதமாய் அமைந்ததாம் அந்தச் சடை பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும்= நெருப்பை ஒத்த வண்ணத்தை ஒத்த இறைவன், தன்னிடம் நெருங்கும் பொருட்களை நெருப்பானது எவ்விதம் எரித்துத் தன்னில் ஐக்கியம் செய்து கொள்ளுகிறதோ, அவ்வாறே இறைவனும் தன்னிடம் நெருங்கும் அடியார்களைத் தன்னில் ஐக்கியம் செய்து கொள்ளுகிறான் என்னும் விதமாய் இனித்த முடைய எடுத்த பொற்பாதமும்=இறைவன் தன் தூக்கிய திருவடியால் அனைத்து உயிர்களையும் பிறவிக்கடலில் இருந்து விடுவிக்கிறான். ஊன்றிய திருவடியால், இப்பிறவியின் அனைத்துக் கருமங்களான ஆணவம், கன்மம், மாயையை அழுந்தித் தேய்த்து அவற்றை அகற்றுகிறான். இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆடல் வல்லானின் ஆடல் திருக்கோலத்தைக் காணப் பெறுவோருக்கு வேறு என்ன வேண்டும் இந்த உலகில்? இதைவிடப் பேரானந்தம் வேறே உண்டோ? என்கிறார் அப்பர்.

பெண்கள் இடப்பக்கமும் ஆண்கள் வலப்பக்கமும் நின்று வழிபடுதல் அவசியமானதா

மாதொருபாகனாகிய சிவனாரின் வலப்பக்கம் சிவனாகிய ஆணும் இடப்பக்கம் பெண்ணாகிய உமையும் இருப்பதைக் கொண்டு எழுந்ததாக இருக்க வேண்டும்.தோடுடைய செவியன் என்று ஞான சம்பந்தர் பாடுகிறார். தோடு என்பது பெண்கள் அணிவது. ஆண்கள் காதில் அணிவதற்கு குழை என்று பெயர். எனவே இறைவனின் இடப்பாகம் பெண்ணுக்குரியது என்பதை திருஞானசம்பந்தர் விளக்கியுள்ளார். காலனை சிவபிரான் இடப்பக்க காலால்தான் உதைக்கிறார். அதனாலேயே காலன் பிழைத்தான் என்பர் ஆன்றோர். காரணம் சிவனின் இடப்பக்கம் பெண்ணாகிய உமையம்மையாதலால் பெண்மை குணமாகிய இரக்கத்தின் விளைவால் இடக்கால் காலன்மேல் இரக்கம் கொண்டு காலனின் உயிர்பறிக்காது தண்டித்தது என்பர்.எனவே வலம்-ஆண் என்றும் இடம்-பெண் என்பதும் மரபாயிற்று.பேருந்தில் கூட வலப்புறம் ஆண்களும் இடப்புறம் பெண்களும் அமர்வது தமிழகத்தில் விதியாக்கப் பட்டுள்ளதை கண்டிருப்பீர்கள். இந்த "இடம்" பெண்களுக்கு என்பது காலம் காலமாக திருமணத்தில் தாலி ஏறியது தொட்டு குடும்ப நல்லதுகள்வரை பெண்களுக்கு "இடம்" என்ற பண்பாடு இருந்தமையால் ஏற்பட்டதே!எனவே இடப்புறமாக பெண்கள் நின்றும் வலப்புறமாக ஆண்கள் நின்றும் வழிபடல் வேண்டும் என வந்துள்ளது.ஆனால் இதை ஆலய வழிபாட்டு விதியாகக் கருதமுடியாது. இறைவன் தில்லையில் கூத்தாடும்போது வலப்புறமும் இடப்புறமும் வியாக்கிரதபாதரும் பதஞ்சலி முனிவரும் வழிபடுகின்றனர். எனவே இறைவனை இடப்பக்கமாக பெண்களும் வலப்பக்கமாக ஆண்களும் நின்று வழிபடல் வேண்டும் என்பது கட்டாய விதி அல்ல. ஆனால் ஆலயத்தில் துஷ்டர்களால் பெண்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களைத் தவிர்க்க இம்முறையை சில ஆலயங்களில் கட்டாயவிதியாக கடைப்பிடிப்பர். அப்படி கடைப்பிடிப்பது நன்மையே என்பதால் "அவ் விதியை" ஒழுகுவதே உத்தமம்.

சிவாலய பிரதட்சிண பலன்கள்

நந்தியையும் பலிபீடத்தையும் சேர்த்தே பிரதட்சிணம் செய்ய வேண்டும். அதனால் கிடைக்கும் பலன்கள் வருமாறு:-

3 முறை செய்தால் - நினைத்தது நடக்கும்.
5 முறை செய்தால் - வெற்றி உண்டாகும்.
7 முறை செய்தால் - நல்ல குணம் ஏற்படும்.
9 முறை செய்தால் - குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
11 முறை செய்தால் - நீண்ட ஆயுள் கிடைக்கும்.
13 முறை செய்தால் - வேண்டுதல் நிறைவேறும்.
15 முறை செய்தால் - செல்வம் கிடைக்கும்.
17 முறை செய்தால் - செல்வம் பெருகும்.
108 முறை செய்தால் - அஸ்வமேத யாகப் பலன்.
1008 முறை செய்தால் -ஒருவருட தீட்சை யாகப்பலன்

எந்தெந்த கிழமையில் என்னென்ன நைவேத்யம் செய்யலாம்

ஞாயிறு-சர்க்கரைப்பொங்கல்
திங்கள்-பால் (அ)தயிர் அன்னம்
செவ்வாய்-வெண்பொங்கல்
புதன்-கதம்பசாதம்
வியாழன்-சித்ரான்னம்
வெள்ளி-பால் பாயசம்
சனி-புளிசாதம்,

சிவபூஜைக்கு கத்தரிக்காய் பக்குவம் நிவேதனம் செய்வது விசேஷம்.சிவபூஜைக்கு பின்னர் இருபது சிவபக்தர்களுக்கு அன்னம் அளிப்பது மிகவும் விசேஷம். 108 ருத்ர காயத்ரி ஜபிப்பது விசேஷம்.

சிவனை எப்படி வணங்க வேண்டும்........

சிவாலயத்தில் பலி பீடத்தருகில் தான் நமஸ்கரிக்க வேண்டும். 3,4,7,9 என்ற எண்ணிக்கைகளில் ஏதாவது ஒன்றினை மேற்கொள்ளலாம். வடபுறம், கிழக்குப்புறம் கால் நீட்டக்கூடாது. ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும், பஞ்சாங்க நமஸ்காரமும் செய்ய வேண்டும். கிழக்கு நோக்கிய சன்னதியானால் பலிபீடத்திற்குத் தென்கிழக்கு மூலையில் சிரம் வைத்து நமஸ்கரிக்க வேண்டும்.
தெற்கு, மேற்கு நோக்கிய சன்னதிகளில் பலிபீடத்திற்கு தென்மேற்கு மூலையில் சிரம் வைத்து நமஸ்கரிக்க வேண்டும். வடக்கு நோக்கிய சன்னதியானால் பலிபீடத்திற்கு வடமேற்கு மூலையில் சிரம் வைத்து நமஸ்கரிக்க வேண்டும். சூரிய கிரகணத்தின் போதும், சங்கராந்தி காலத்திலும் மேற்கே கால் நீட்டி நமஸ்கரிக்கலாகாது.
அதே சமயம் திரியாங்க நமஸ்காரம் (இருகரங்களையும் சிரம் மேல் குவித்து) செய்ய வேண்டும். பிராகாரத்தில் பிரதக்ஷிணம் செய்யும்பொழுது மிகவும் நிதானமாகச் செய்யவேண்டும். உட்பிராகார பிரதக்ஷிணத்தைவிட வெளிப்பிரகார பிரதக்ஷிணமே சாலச் சிறந்தது. 3,5,7,7,15,21 என்ற எண்ணிக்கையில் ஒன்றினை மேற்கொண்டு செய்யலாம்.

Monday 28 October 2013

சிவபூஜைக்குரிய மலர்கள்- பலன்கள்

செந்தாமரை- தனலாபம், வியாபார விருத்தி, ஆயுள் விருத்தி

* மனோரஞ்சிதம், பாரிஜாதம்-பக்தி, தம்பதி ஒற்றுமை, ஆயுள்விருத்தி

* வெண்தாமரை, நந்தியாவட்டை, மல்லிகை, இருவாட்சி-மனச்சஞ்சலம் நீங்கி, புத்திக்கூர்மை ஏற்படும். சகலகலாவிருத்தி.

* மாசிப்பச்சை, மரிக்கொழுந்து-நல்ல விவேகம், சுகபோகங்கள், உறவினர் ஒற்றுமை உண்டாகும்.

* மஞ்சள் அரளி, தங்க அரளி, செவ்வந்தி-கடன் நீங்கும் கன்னியருக்கு திருமண பாக்கியம் ஏற்படும்.

* செம்பருத்தி, அடுக்கு அரளி- புகழ், தொழில் விருத்தி.

* நீலச்சங்கு-அவச்சொல், அபாண்டம், தரித்திரம் நீங்கும் அருளும் ஆயுளும் கிட்டும்.

* வில்வம் கருந்துளசி, மகிழம்பூ- சங்கடங்கள் நீங்கி, சகலகாரியமும் கைக்கூடும்.

தாமரை, செண்பகம் ஆகியவற்றை மொட்டுகளாகவும் பூஜை செய்யலாம். ஏனையவை மலர்ந்திருக்க வேண்டும்.குங்குமப்பூ தவிர மற்ற முள் உள்ள பூக்கள் பூஜைக்கு உகந்தவை அல்ல.

கிளுவை, விளா, வெண்நொச்சி, மாவிலங்கை, வில்வம் ஆகியவை பஞ்ச வில்வங்களாகும்.மாதப்பிறப்பு, சோமவாரம், அமாவாசை, பவுர்ணமி, சதுர்த்தி, சதுர்த்தசி, அஷ்டமி, நவமி நாள்களில் வில்வத்தை மரத்திலிருந்து பறிக்க கூடாது.

சிவ பூஜா முறைகள்

உஷத்கால பூஜை : சிவாச்சாரியார், சூர்ய உதயத்துக்குக் குறைந்தது 5 நாழிகைகள் (2 மணி நேரம்) முன்பு எழுந்து வாக்கினால் தோத்திரமும் மனத்தினால் இறைவனது தியானமும் செய்துகொண்டு, இரண்டு நாழிகைக்குள் காலைக்கடன்களை முடித்துக்கொள்ளவேண்டும். பின்னர், ஸ்நானம் செய்து, வெண்மையான வேஷ்டி அங்கவஸ்த்ரம் உடுத்தி, விபூதி, ருத்ராக்ஷம் போன்ற சிவச் சின்னங்களை அணிந்து, ஆசமனம், அனுஷ்டானங்களை செய்துவிட்டு, ஆலயம் செல்ல வேண்டும். கோயில் வாயிலில் கைகால்களைக் கழுவிக்கொண்டு எதிர்ப்படும் நந்தி தேவரையும் துவாரபாலகர்களையும் ப்ரார்த்தித்து அவர்தம் அனுமதி வேண்டி, திருக்கோவில் வளாகம் புக வேண்டும். அங்கே சகளீகரணம் செய்து, சாமான்யார்க்யம் கூட்டி, அந்த அர்க்ய நீரினால் தன் மீதும் புறத்தே உள்ள பொருள்கள் மீதும் தெளித்து, அனைத்தையும் தூய்மையாக்க வேண்டும். இதைத் தொடர்ந்து ஆத்மார்த்த பூஜையாக கரந்யாஸம், ப்ராணாயாமம் செய்து, பூதசுத்தி, அந்தர்யாகம், சிவோகம்பாவனை ஆகிய மூன்று கிரியைகளைச் செய்ய வேண்டும். இவற்றால் அருச்சகர் சிவபூஜைக்குத் தகுதி வாய்ந்தவர் ஆகிறார். பின்னர், திருக்கோயில் வளாகம் காவல் காக்கும் பொறுப்புள்ளவரிடம் இருந்து பைரவர் ஸந்நிதியின் திறவுகோலைப் பெற்று, பைரவரின் நடையைத் திறக்க வேண்டும். ÷க்ஷத்திரபாலகரை (பைரவரை) பூஜித்து, பொறி நைவேத்யம் செய்து, முதல் நாள் இரவு ஒப்புவிக்கப்பட்டு இதுகாறும் அவர் வயம் இருக்கும் பள்ளியறைத் திறவுகோல் மற்றும் முத்திரா தண்டம் (சாவிக்கொத்து) ஆகியவற்றை அங்குச் முத்திரையால் எடுக்க வேண்டும். பின்னர், அனைத்து ஸந்நிதிகளையும் திறக்கச் செய்து அவற்றின் ஸாந்நித்யம் கலைக்கப்படாமல் வாத்தியங்கள், தோத்திரப் பாடல்கள் இசைக்க, பள்ளியறை சென்று, வெளியே இருந்து திருப்பள்ளி எழுச்சிப் பாடல்கள் இசைக்க வேண்டும். பின்னர் துவார பூஜை செய்து, கதவுகளைத் திறப்பதற்குக் காலகாலனது அனுமதியை வேண்டி, கதவில் திறவுகோல் நுழைவதற்குரிய துவாரத்தை பிந்து வடிவினாகத் தியானித்து, பின் அருச்சித்து, திறவுகோலை நாத வடிவினதாகத் தியானித்து பிந்துவினுள் செலுத்தி, சக்தி-சிவ மந்திரங்களை உச்சரித்த வண்ணம் பள்ளியறைக் கதவினைத் திறந்திடல் வேண்டும். பவித்ரமான அர்க்ய நீரினால் உட்புறம் முழுதும் தெளித்து, நிர்மால்யம் களைந்து, பாவனையால் ஸ்நானம் முதலானவை செய்வித்து, ஆசமநீயம் ஆகியவற்றை முறைப்படி அளித்து, அவரை வெளியே எழுந்தருளும் வண்ணம் வேண்டி நிற்றல் வேண்டும். பின்னர் சக்தியை (மனோன்மணியை) அங்கேயே விடுத்து, இறைவனை (பாதுகையை) மட்டும் சிவிகையில் (பல்லக்கில்) எழுந்தருளுச் செய்து, வலமாக எடுத்து வந்து, கருவறை சேர்ப்பிக்க வேண்டும். அங்கு மூல மூர்த்திக்கு முன் பூவைக் கையில் எடுத்துக் கொண்டு, மூலலிங்கத்தில் சேர்த்திடல் வேண்டும். பிறகு உஷத்கால பூஜையாக ஸ்தான சுத்தி செய்து, பூதேவியை வழிபட்டு, திரவ்ய சுத்தி செய்து, கணபதியை பூஜிக்க வேண்டும். பிறகு, ஸ்வாமி, ஸோமாஸ்கந்தர், மகேச்வராதிகள், அம்பாள் ஆகியோரை விதிப்படி பூஜிக்க வேண்டும். பூஜையின் முடிவில் சூர்யோதயம் ஆக வேண்டும்.
தீர்த்த ஸங்க்ரஹணம், காலசந்தி பூஜை : சிவபெருமான் அர்த்தயாம பூஜையின் முடிவில், சிவிகை மீதமர்ந்து கீதம், நர்த்தனம், வாத்ய கோஷங்களுடன் சயனாலயத்திற்குச் சென்றதும், பரமசிவனுடைய ஜடையிலுள்ள கங்கை, அங்கு பள்ளி அறையிலுள்ள மனோன்மணியம்மையை வணங்கி, வெகு வேகமாக அங்கிருந்து நீங்குவாள். மீண்டும் கங்கா தேவியை பரமசிவனுடைய ஜடாமகுடத்தில் சேர்க்கும் பொருட்டு செய்யப்படும் கிரியையே கங்காஹரணம் அல்லது தீர்த்த ஸங்க்ரஹணம் எனப்படும். தன்னை நன்றாகச் சுத்தி செய்து கொண்ட சிவாச்சாரியார், சுவர்ணம் முதலிய ஏதாவதொரு குடத்தில் நதியிலிருந்து நீரை நிரப்பி, மாவிலை தேங்காய் முதலியவற்றால் அலங்கரித்து, பரிசாரகரின் தலை மீது அந்தக் குடத்தை ஏற்றி, வாத்ய கோஷங்களுடன் உபசாரங்களுடனும் எடுத்து வந்து, சிவலிங்கத்தின்மீது விசர்ஜனம் செய்ய வேண்டும். இதன் பிறகே காலசந்தி பூஜை தொடங்கும். முதலில் சூர்ய பூஜையும், கணேச பூஜையும். பின்னர், பஞ்சகவ்யம், ஸ்நபன திரவியங்கள் செய்து வைத்துக்கொண்டு, த்வாரபூஜை, வ்ருஷபதேவர் பூஜை, வாஸ்துபூஜை, லிங்கசுத்தி ஆகியன செய்து, போகாங்க பூஜை செய்து, நைவேத்யம் முதலிய உபசாரங்கள் செய்ய வேண்டும். பின்னர் தேவி பூஜையும், பரிவார பூஜையும், தொடர்ந்து நித்யாக்னி கார்யம், ஸ்ரீபலி, நித்யோத்ஸவ நிகழ்ச்சிகள். நிறைவாக சண்டிகேச்வரர் பூஜை.
உச்சிகால பூஜை : விக்நேச்வர பூஜை, புண்ணியாகம் (புண்ணியாஹவாசனம்) பூதசுத்தி, அந்தர்யஜனம், தியானம், ஸ்தானசுத்தி, விசேஷார்க்யம், த்ரவ்யசோதனை, மந்திரசோதனை, சிவாகம்பாவனை ஆகிய பூர்வாங்கக் கிரியைகள் முதலில், பின்னர், ஸ்நபன பூஜை செய்து, துவாரபாலகரை வணங்கி, உட்புகுந்து, ஆதாரசக்தி முதல் மானசாபிஷேகம் வரை முறையாக மூலவரை அர்ச்சிக்க வேண்டும். பிறகு அபிஷேகம், அலங்காரம், ஆவரண பூஜை, பிறகு, தூப தீப நைவேத்யங்கள். பிறகு நடேசர், சோமாஸ்கந்தர் முதலிய மூர்த்திகளுக்கும், தேவிக்கும் பூஜை, சில திருக்கோவில் சம்ப்ரதாயங்களில், தொடர்ந்து நித்யாக்னி கார்யம், ஸ்ரீபலி, நித்யோத்ஸவ நிகழ்ச்சிகள் உண்டு. பூஜையின் நிறைவாக, சிவ நிர்மால்யத்தைச் சிவசண்டேச்வரரிடம் சமர்ப்பித்தல்.
சாயங்காலத்தில் செய்யப்படும் பூஜை : ஸூர்யன் சாயும் காலத்தில் செய்யப்படுவது சாயுங்கால அல்லது சாயங்கால பூஜை. இதுவே நித்திய ப்ரதோஷ பூஜை எனவும் கூறப்படும். (நித்திய-நைமித்திக ப்ரதோஷ பூஜை என்பது க்ருஷ்ண-சுக்ல பக்ஷ த்ரயோதசி நாட்களில் சாயுங்காலத்தில் செய்யப்படும் சிறப்ப பூஜையாகும்). முதலில் கணேசருக்கும், நடராஜருக்கும் பூஜை. பின்னர் மூல லிங்கத்திற்கு தூப தீப நைவேத்யம் உள்ளிட்ட பூஜை. பிறகு சோமாஸ்கந்தர் முதலிய மூர்த்திகளுக்கும், தேவிக்கும் பூஜை.
இரண்டாங்கால பூஜை (இரவு முதல் யாம மகாசந்தி பூஜை) : முதலில் விக்நேச்வர பூஜை செய்து, பின்னர் ஸ்வாமி ஸந்நிதியில் துவார பூஜை; சிவோகம்பாவனை செய்து, ஐந்து ஆவரணங்களுடன் இறைவனைப் பூஜித்து, வ்யோமவ்யாபி மந்திரத்தினால் எண்ணெய் முதல் ஸ்நபனம் வரை அபிஷேகம்; அலங்காரம்; தூப தீப நைவேத்யம், ராஜோபசாரம்; தேவி பூஜை; பரிவாரங்களுக்கு பூஜை; தொடர்ந்து நித்ய அக்கினி காரியம், நித்யோத்ஸவம், ஸ்ரீபலி; நிறைவாக சண்டிகேச்வரர் பூஜை.
இரவு அர்த்தயாம பூஜை: த்வாரபூஜை கிடையாது; ஸ்நாபனம்; மூலவருக்கு அபிஷேகம், அலங்காரம்; பஞ்சாவரண பூஜை; அப்பம் ஈறாஜ நைவேத்யம்; தேவி பூஜை; போகசக்தி பூஜை; பின் ஸ்வாமி ஆலயத்தில் சந்த்ரசேகரர், ஸோமாஸ்கந்தர், நடேசர், மூல மூர்த்தி இப்படி ஒடுக்கக் கிரமமாய் பூஜித்துத் திரையிட்டு, பாதுகாராதன பிம்பத்தில் மூர்த்தியை ரஹஸ்யமாய் சம்யோஜித்து பூஜித்து, சிவிகையில் ஏற்றி, சகல உபசாரங்களுடன் பள்ளி அறையில் சேர்த்தல். பின் அம்பாள் ஆலயத்தில், திரையிட்டு, அங்குள்ள சயனாலய பிம்பத்தில் அல்லது பீடத்ரிகோணத்தில் சக்தியை ரஹஸ்ய பூஜையுடன் சம்யோஜித்து ஆராதனையை முடித்தல். பின்னர் சயனாலயத்தில் சுவாமி பாதுகையில் இடப்பக்கத்தில் சக்தி பிம்பத்தை எழுந்தருளச் செய்து, பள்ளியறை பூஜை; பால், பால் பாயஸம், வடை நைவேத்யம்; வாசனைப் பொருட்களுடன் கூடிய தாம்பூலம் சமர்ப்பணம்; திரை இட்டு, இறைவனைப் பள்ளி கொண்டருளும்படி தோத்திரப் பாடல்கள் இசைத்தல்; பள்ளியறை நடைஅடைத்தல். சண்டேச்வரர் பூஜை; பிறகு, . ÷க்ஷத்ரபாலகருக்கு (பைரவருக்கு) பூஜை செய்து, அவரிடம் முத்திரா தண்டத்தை (திருக்கோவில் சாவிக்கொத்து) ஒப்படைத்தல். பின்னர் பைரவர் ஸந்நிதி நடை அடைத்து அந்தச் சாவியை திருக்கோயில் வளாகம் காவல் காக்கும் பொறுப்புள்ளவரிடம் அளித்தல்.
பூஜா கால அளவு : ஒவ்வொரு காலத்திலும் செய்யப்படும் பூஜைக்கு ஆகக்கூடிய நேரம் : அபிஷேகத்திற்கு - 2 நாழிகை; அர்ச்சனைக்கு - 1 நாழிகை; நைவேத்யத்திற்கு - அரை நாழிகை; நித்யாக்னி கார்யம் - அரை நாழிகை; நித்யோத்ஸவம் - அரை நாழிகை; நர்த்தனம் முதலிய கலா உபசாரங்கள் - 1 நாழிகை.
நித்யாக்கினி காரியம் : இதற்காக ஸ்வாமி ஸந்நிதியில் குண்டம் அமைக்கப்பட்டிருக்கும். நிரீக்ஷணம், ப்ரோக்ஷணம், தாடனம், அப்யுக்ஷணம் ஆகிய நான்கு வகை கிரியைகளைச் செய்து புனிதமாக்கப்பெற்ற நீரினால் குண்டத்தை ப்ரோக்ஷணம் செய்து கலாமயமாகக் கற்பித்து, எண்வகை மலர்களால் அருச்சித்து, அவிச்சின்னமான (தடைப்படாது இருந்து வருகின்ற) அக்நியைத் தியானித்து, பரிதிகளையும் விஷ்டரங்களையும் (குண்டத்தில் படிகள்) உரிய இடத்தில் வைத்து, பரிதிகளில் ப்ரஹ்மா, விஷ்ணு, ருத்ரன், ஈமானன் ஆகியோரையும். விஷ்டரங்களில் இந்திரன் முதலிய திக்பாலகர்களையும் ஆவாஹனம் செய்து அருச்சித்து, அர்க்யம் கொடுத்து, சிருக்சுருவ ஸம்ஸ்காரங்களையும் ஆஜ்ய (நெய்) ஸமஸ்காரங்களையும் செய்தல் வேண்டும். கனன்று எழும் அக்கினியைச் சிவாக்கினியாகப் பாவித்து, அதன் நடுவேயுள்ள இதயத் தாமரை மலரில் சிவபிரானை ஆவரணங்களுடன் அருச்சித்து, மூலமந்திரம் மற்றும் பஞ்சப்ரஹ்ம மந்திரங்களால் ஆகுதி செய்து பூர்ணாஹுதி செய்திடல் வேண்டும். பின்னர், பரிதி விஷ்டரங்களில் அன்னத்தால் பலி; அங்கிருந்து புஷ்பங்களை அஞ்சலி முத்திரையால் எடுத்து, மூலவரிடம் கொண்டு சென்று, க்ஷமாபராத மந்திரம் கூறி, உற்பவ முத்திரையால் வணங்கி வரத ஹஸ்தத்தில் மலர்களை சமர்ப்பித்தல் வேண்டும்.
ஸ்ரீபலி : தினமும் மூன்று வேளைகள் இல்லாவிடினும், காலை - மாலை இரு வேளைகளிலுமாவது (அல்லது மிகக் குறைந்தபக்ஷமாக ஒரு வேளையாவது) நித்திய பலி இடுதல் வேண்டும். நாமாவளியின் இறுதியில் நம: என்று கூறி அருச்சித்தல் முறை; அவ்வாறே, நாமாவளியின் இறுதியில் ஸ்வாஹா என்று கூறி ஸ்ரீபலி இடுவது முறை. மற்றொருவர் பலி நாயகரைச் சுமந்து வர, பரிசாரகர் அன்னம் எடுத்து வர, சிவாச்சாரியார் ஒரு கையில் அர்க்ய பாத்திர நீரும், மற்றொன்றில் மணியும் எடுத்துச் செல்வார். இறைவன் ஸந்நிதி முன்னுள்ள துவாரபாலகரிடமிருந்து தொடங்கி, பலி பீடங்கள், திருநந்திதேவர் ப்ரதிஷ்டையாகியுள்ள இடங்கள், த்வஜஸ்தம்பதத்தின் அருகிலுள்ள பத்ரலிங்கம் என்றழைக்கப்பெறும் மஹாபலிபீடம். திக் பாலகர்கள். அனைத்துப் பரிவார தெய்வங்களுக்குமான பலிபீடங்கள் ஆகிய அனைத்து இடங்களிலும் பூமியில் நீர் தெளித்துப் புனிதமாக்கி, பரிசாரகர் தரும் சுத்த அன்ன உருண்டைகளை வைத்து சிவாச்சாரியார் பலி இடுவதே ஸ்ரீபலி

நவ(9) வாசல் கொண்ட நம் உடம்பில் உள்ள 96 தத்துவங்கள்

இறைவனின் படைப்பு துருவ வேற்றுமை ஒற்று மைகளாக, வினையும் எதிர்வினையும் கொண்ட வைகளாக, இது வரையிலும் அவிழ்க்க முடியாத புதிராகவும் உள்ளது. அவைகளில் சிலவற்றை ஞான, விஞ்ஞான, அஞ்ஞான, வேதாந்த விளக்க ங்களின் மூலம் ஆன்றோர்கள், சான்றோர்கள் விளக்கி உள்ளனர். அறிந்து கொள்வோமா!!!!
அறிவு …………………………………..1 புத்தி
வினைகள் …………………………..2 நல்வினை, தீவினை
ஆசைகள் …………………………….3 மண், பொன், பெண்
அந்த கரணங்கள்…………………4 மனம், புத்தி, அகங்காரம், சித்தம்
பஞ்சபூதங்கள்…………………5 (பிருதிவி/பூமி/நிலம்/மண்),(அப்பு/ஜலம்/ நீ​ர் / புனல்) , (தேயு / அக்னி / நெருப்பு / அனல்), (வா​யு / கால் / கற்று / கனல்), (ஆகாயம் / வெளி / வானம் / விசும்பு)
பஞ்ச ஞானேந்திரியங்கள்….5 மெய், ,கண், மூக்கு, செவி
பஞ்ச கன்மேந்திரியங்கள்….5 (வாக்கு-வாய், பாணி-கை, பாதம்-கால், பாயுரு-மலவாய், உபஸ்தம்-கருவாய்)
பஞ்ச தன்மாத்திரைகள்.…….5 (சுவை-ரசம், ஒளி-ரூபம், ஊறு- ஸ்பரிசம், ஓசை-சப்தம், நாற்றம்-கந்தம்)
பஞ்சகோசங்கள்………………….5 (அன்னமய கோசம், பிராமணய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம்)
மூன்று மண்டலங்கள………..3 ( அக்னி மண்டலம், சூரிய மண்டலம், சந்திர மண்டலம் )
குணங்கள்…………………….​……..3 ராஜசம், தாமசம், சாத்வீகம்.
மலங்கள்……………………..​………3 ஆணவம், கன்மம், மாயை
பிணிகள்……………………..​……….3 வாதம், பித்தம், சிலேத்துமம்.
ஏட…………………………………​……..3 லோக ஏடணை, அர்த்த ஏடணை, புத்திர ஏடணை.
ஆதாரங்கள்…………………..​…….6 மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆஞ்ஞா
அவஸ்தைகள்…………………….​5 சாக்கரம்-நனவு, சொப்பனம்-கனவு, கழுத்தி-உறக்கம், துரியம்-நிஷ்டை, துரியாதீதம்-உயிர்ப்படக்கம்
தாதுக்கள்……………………​……….7 இரசம், இரத்தம், மாமிசம், மேதஸ், அஸ்தி, மச்சை, சுக்கிலம்/சுரோனிதம்
ராகங்கள்.……………………​……….8 காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சர்யம், இடம்பம், அகங்காரம்.
தசநாடிகள்…………………….​ …..10 இடகலை/இடபக்க நரம்பு, பிங்கலை /வலபக்க நரம்பு, சுழுமுனை/நாடு நரம்பு, சிகுவை/உள்நாக்கு நரம்பு, புருடன்/வலக்கண் நரம்பு, காந்தாரி/இடக்கண் நரம்பு, அத்தி/வலச்செவி நரம்பு, அலம்புடை/இடச்செவி நரம்பு, சங்கினி/கருவாய் நரம்பு, குகு/மலவாய் நரம்பு.
தசவாயுக்கள்……………………..10பிராணன்/உயிர்க்காற்று, அபாணன்/ மலக்கற்று, வியானன்/தொழிற்காற்று,உதானன்/ஒலிக்காற்று, சமானன் /நிரவுக்காற்று, நாகன்/விழிக்காற்று,கூர்மன்/இமைக்காற்று, கிருகரன்/ தும்மல்காற்று,தேவதத்தன்/கொட்டாவிக்காற்று, தனஞ்செயன்/வீங்கல் காற்று.
ஆக கூடுதல் 96 தத்துவங்கள்.ஆகும்

Saturday 26 October 2013

எந்த கடவுளை எந்த காரியத்திற்கு வணங்குவது




 கடவுள் ஒருவனே , என்கிறது பிற மதங்கள். ஆனால், இந்து மதத்தில் மட்டும் எதற்கு இத்தனை கடவுள்கள் , என்கிற கேள்வி நம் எல்லோர் மனத்திலும் நிகழும். மும் மூர்த்திகள் என்று கருதப்படுபவர்கள் கூட , ஒரு யோக நிலையில் இருப்பது போல நாம் எத்தனை படங்களில் பார்த்து இருக்கிறோம். அவர் யாரை எண்ணி தவம் செய்கிறார். மும்மூர்த்திகளுடன் . சதாசிவம், ருத்ரன், என்று - ஐந்து மூர்த்திகள் இருக்கின்றனராம்.
உலக பரம்பொருள் என்று சர்வ வல்லமை பொருந்திய அந்த கடவுள் ஒன்று தான். அவரைத்தான் சிவனும் , யோக நிலையில் தியானிக்கிறான். அந்த ஆதி சிவன் ஒருவனே. மீதி நாம் வணங்கும் அனைவரும், தேவதைகள் , தெய்வங்கள் - அவதாரங்கள் , ஒரு சில காரண , காரியத்துக்காக அந்த பரம்பொருள் அனுப்பியவர்கள் என்கின்றனர் பெரியோர்கள். சித்தர்களுக்கு மேல் இருக்கும் உயர்ந்த நிலை , இந்த தெய்வங்கள். 

 முருகனும், விநாயகரும் கூட - சித்தர்கள் போன்று வாழ்க்கை நடத்தி, பின் சிவனின் மைந்தனானவர்கள் என்கின்றனர். பலப்பல யுகங்கள் கடந்து , நாமும் இறைநிலை அடைய விருக்கிறோம். அதை இன்றிலிருந்தே தொடங்குவது , நமக்கு இன்னும் நல்லது.

 எப்படி இறைவனுக்கும் சில கடமைகள் விதிக்கப்பட்டு இருக்கின்றனவோ, அதே போல மனிதர்களுக்கும் சில கடமைகள் விதிக்கப்பட்டுள்ளன.


ஒரு பெரிய தொழிற்சாலை இருப்பதாக எடுத்துக்கொள்வோம். நாமெல்லாம் தொழிலாளர்கள். நம்மை சூப்பர்வைஸ்  செய்ய - நவ கிரகங்கள். நவ கிரகங்கள் - பக்காவாக நம்மை கண்காணித்து , நம்மை வேலை வாங்குகின்றன. பஞ்ச பூதங்களை - ரா மெட்டீரியலாக கொண்டு , பஞ்ச பூத கலவையாலான அந்த உடலைக் கொண்டு இந்த பிரபஞ்ச தொழிற்சாலை இயங்குகிறது. 


இந்த சூபர்வைசர்களுக்கு  மேலே மேலாளர்கள். அவர்களுக்கும் மேலே - பொது மேலாளர்கள் . அவர்களையும் இயக்குவது இயக்குனர்கள். அந்த இயக்குனர்களுக்கும் மேலே - சேர்மன் என்கிற முதலாளி. 


 செய்யும் வேலை , திறமை , அவர்கள் செய்து முடிக்கும் திறன் , என்று ஒவ்வொருவரின் உழைப்பும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. உழைக்க வேண்டும். அதாவது , வாழ வேண்டும் - வாழ்ந்து அவரவர் கடமையை செய்ய வேண்டும். இப்படியே , ஒவ்வொருவருக்கும் அடுத்தடுத்த நிலை தீர்மானிக்கப் படுகிறது. ஒரு செக்சனிலிருந்து  , மற்றொரு  பிரிவுக்கு அவர் மாற்றப்படுவர்.  நல்ல திறமையுடன், நல்லவராக இருந்தவருக்கு - அடுத்த பிரிவு , கொஞ்சம் மேன்மையானது

இந்த அப்ரைசல் தான் - மரணம்  , அடுத்த பிறவி. நீங்கள் திரும்ப உழைப்பதற்கு வசதியாக , திரும்ப இளமை கிடைக்கிறது. மோசமான வேலை செய்தவர்களுக்கு - கடினமான செக்க்ஷனும் கிடைக்கும். 
நீங்களே ஒண்டியா, தனித்தனியே வேலை செய்ய முடியாததால் - உங்களுடன் இணைந்து செயலாற்ற உங்கள் குடும்பம் , நண்பர்கள் , சமுதாயம் என்று ஒரு குழுவே இருக்கிறது.
  
குடும்பத்தில் யாரோ ஒருவர் , ஓவராக ஆட்டம் போட்டாலும், திடு திப் பென்று ( அகால மரணம்) டிபார்ட்மென்ட் மாற்றமும் நிகழும். இதனால் , அவரும் பாதிக்கப் படுகிறார். அந்த குடும்பமும் வேலைப் பளுவால் முழி பிதுங்கும். 

இவை அத்தனையும் சமாளித்து , நரை மூப்பெய்தி - என்னை கூட்டிக்கோப்பா என்று  , நீங்கள் எழுப்பும் ஒரு மன ஓலம் , உங்களுக்கு அடுத்த கதவை திறக்க வைக்கும்.


 நீங்கள் கதவு திறந்து , அடுத்த அறைக்கு வந்ததும், அதே சூப்பர்வைசர்கள். அவர்களுக்கு தெரியும், நம்மோட அருகதை. இதில், பாரபட்சம் பார்க்காது - நமக்கு கிடைக்க வேண்டிய கூலியை , அவர்கள் மேலிடத்திலிருந்து நமக்கு கிடைக்க செய்கின்றனர். 


ஒரு ப்ரோமோஷன் கொடுக்கும் முன், உங்கள் சகல திறமையும் பரிசோதிப்பது போல - உங்களுக்கு பலப்பல கஷ்டங்கள், சோதனைகள் வைக்கப்படுகின்றன. இதிலும் தாக்குப் பிடித்து , உங்கள் அணியிலுள்ள சக தொழிலாளர்களையும் அரவணைத்து , உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை செய்து முடிக்க வேண்டும். 

உங்கள் அணியிலும், சமூகத்திலும் , ஒருவர் மனம் கூட கோணாது , அவர்களுக்கும் ஒத்தாசை செய்து , ஒரு குழுவாக கூடி - உங்கள் கடமையை செய்து முடிக்கவேண்டும். அவர்களை பகைத்துக் கொண்டால், சமயத்தில் சொதப்பிவிடுவார்களே. 


 உங்களை நீங்கள் , உங்கள் ஆன்ம ஒளியை உணர்ந்து கொள்ளுதல் தான் - முதல் படி. உங்கள் பலம் என்ன வென்று அதன் பிறகுதானே உணர முடியும்?  ஹனுமனை போல நீங்களும் கடலை தாண்ட முடியும். மலையையும் தூக்க முடியும்.


 உலகம் ஒரு நாடக மேடைதான். அந்த இறைவன் இயக்குகிறான். திறமையாக , நடித்தால் - நீங்களும் ஒரு நாள் ஹீரோ வைக்கலாம். இல்லையெனில், சாதாரண துணை நடிகர் தான். ஒரு நாடகம் முடிந்ததும் , அடுத்த நாடகம் ஆரம்பிக்கும். அப்போது ஹீரோவும், இரண்டாம் நிலைக்கு தள்ளப்படலாம், தனது பொறுப்பை உணர்ந்து ஜொலிக்காவிடில்.

  ..நமது பிறப்பின் நோக்கம் என்ன, நாம் எந்த இலக்கை நோக்கிப் பயணிக்கிறோம் என்பது மிக முக்கியம்.


இப்போது நாம் எங்கு இருக்கிறோம் ? நமக்கு ஏன் இத்தனை தெய்வங்கள் என்று புரிகிறதா?  எப்படி சூரியனிலிருந்து - தெறித்து வந்த , உஷ்ணத் துளிதான் பூமி என்று விஞ்ஞானம் நிரூபித்ததோ, அதைப் போல ஏராளமான சூரியன்களும் இருப்பது உண்மையோ, அந்த பிரபஞ்சத்திற்கும் மூலப் பொருள் ஒன்று இருக்கும். அந்த மூலத்திலிருந்து வெளியான , துகள்களின் , அணுக்களில் , அணுக்களில் உள்ள அணுதான் , நாம் அனைவரும்.


என்னில் உள்ள அந்த ஜீவ ஒளி தான் , உங்களிலும் உள்ளது. நம் அனைத்து உயிர்களிலும் உள்ளது. இயற்கையிலும் உள்ளது.


 எனவே , ஜாதி மத . இன துவேஷத்தை மறப்போம். சக மனிதர்களை நேசிப்போம். இயற்கையை ஆராதிப்போம். நம் வாழ்வாதாரத்தை வணங்குவோம். குழந்தைகளையும், திறமை இல்லாதவர்களையும், வழி நடத்துவோம். நாம் அனைவரும் கடவுளாவோம். 

 அடி மனத்தில் பரவும் எண்ணம், எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் மறையாது. முதலில் நம் மனம் முழுவதும் நல் எண்ணங்களால் நிறையட்டும். 

பிற உயிர்களுக்கு தீங்கு விளைவிக்க வேண்டாம். பிற உயிர்களை கொன்று புசிக்க வேண்டாம். நடந்தவை மறப்போம். இனியும் மனதறிந்து எந்த பாவமும் செய்யாமல் , நிம்மதியாக வாழ்வோம். 


தோல்விகளை கண்டு துவளாத மனமும், வெற்றிகளைக் கண்டு மமதை கொள்ளாத மனப் பக்குவமும், கஷ்டங்களை தாங்கி கொள்ளும் மனப்    பக்குவமும், வெற்றிப் பாதையை நமக்கு அடையாளம் காட்டும் அந்த பரம்பொருளின் ஆசியும் நம் அனைவருக்கும் கிடைக்கட்டும் !


கீழே , சில காரண காரியங்களுக்கு எந்த தெய்வங்களை வணங்கினால் , உங்கள் குறை தீரும் என்று , நம் முன்னோர்கள் - சித்தர் பெருமக்கள் கூறியவற்றை கொடுத்துள்ளேன்.. உரிய டிபார்ட்மென்ட் மேனஜர் , சூப்பர்வைசர் தானே உடனடியாக தீர்வு கொடுக்க இயலும். முயன்று பாருங்கள்...    மனிதம் வளர்ப்போம் !



காரியம் நடக்க
விக்னங்கள், இடையூறுகள் நீங்க - விநாயகர்
செல்வம் சேர-ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ நாராயணர்
நோய் தீர- ஸ்ரீ தன்வந்தரி, தட்சிணா மூர்த்தி
வீடும், நிலமும் பெற- ஸ்ரீ சுப்ரமண்யர், செவ்வாய் பகவான்
ஆயுள், ஆரோக்கியம் பெற- ருத்திரன்
மனவலிமை, உடல் வலிமை பெற- ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ ஆஞ்சநேயர்
கல்வியில் சிறந்து விளங்க- ஸ்ரீ சரஸ்வதி
திருமணம் நடைபெற- ஸ்ரீகாமாட்சி அம்மன், துர்க்கை
மாங்கல்யம் நிலைக்க- மங்கள கௌரி
புத்திர பாக்கியம் பெற- சந்தான கிருஷ்ணன், சந்தான லட்சுமி
தொழில் சிறந்து லாபம் பெற- திருப்பதி வெங்கிடாசலபதி
புதிய தொழில் துவங்க- ஸ்ரீகஜலட்சுமி
விவசாயம் தழைக்க- ஸ்ரீ தான்யலட்சுமி
உணவுக் கஷ்டம் நீங்க- ஸ்ரீ அன்னபூரணி
வழக்குகளில் வெற்றி பெற- விநாயகர்
சனி தோஷம் நீங்க- ஸ்ரீ ஐய்யப்பன், ஸ்ரீ ஆஞ்சநேயர்
பகைவர் தொல்லை நீங்க- திருச்செந்தூர் முருகன்
பில்லி, சூன்யம், செய்வினை அகல- ஸ்ரீ வீரமாகாளி, ஸ்ரீ நரசிம்மர்
அழியாச் செல்வம், ஞானம், சக்தி பெற- சிவஸ்துதி
நோய் தீர
முடி நரைத்தல், உதிர்தல்- மகாலட்சுமி, வள்ளி
கண் பார்வைக் கோளாறுகள்- சிவபிரான், சுப்ரமண்யர், விநாயகர்
காது, மூக்கு, தொண்டை நோய்கள்- முருகன்
ஆஸ்துமா, சளி, காசம், சுவாசக் கோளாறுகள்- மகாவிஷ்ணு
மாரடைப்பு, இருதய கோளாறுகள்- சக்தி, கருமாரி, துர்க்கை
அஜீரணம், குடல்வால், அல்சர், மூலம், மலச்சிக்கல், மஞ்சள் காமாலை, காலரா- தட்சிணாமூர்த்தி, முருகன்
நீரிழிவு, சிறுநீரகக் கோளாறு- முருகன்
பால்வினை நோய்கள், பெண்களுக்கான மாதவிடாய் கோளாறுகள்- ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ ரங்கநாதர், வள்ளி
மூட்டுவலி, கால் வியாதிகள்- சக்கரத்தாழ்வார்
வாதங்கள்- சனிபகவான், சிவபெருமான்
பித்தம்- முருகன்
வாயுக் கோளாறுகள்- ஆஞ்சநேயர்
எலும்பு வியாதிகள்- சிவபெருமான், முருகன்
ரத்தசோகை, ரத்த அழுத்தம்- முருகன், செவ்வாய் பகவான்
குஷ்டம், சொறி சிரங்கு- சங்கர நாராயணன்
அம்மை நோய்கள்- மாரியம்மன்
தலைவலி, ஜீரம்- பிள்ளையார்
புற்று நோய்- சிவபெருமான்
ஞாபகசக்தி குறைவு- விஷ்ணு