Wednesday 8 October 2014

யாகப் பட்டியல்


சுவாமிகள் 82 ஆண்டுகளுக்கு முன் நடத்திய உரையை மீண்டும் ஒரு முறை படித்தபோது 400 யாகங்களின் பட்டியல் கிடைக்குமா என்று தேடினேன். சுமார் 40 யாக, ஹோமங்கள் பட்டியலே கிடைத்தது. எதிர் கால ஆராய்சியாளருக்காவது நாம் அந்தப் பட்டியலை வைத்திருப்பது நல்லது.
இதோ இதுவரை நான் சேகரித்த யாக, யக்ஜஞ, ஹோம பட்டியல்:
1.ஸ்ரீ மஹா கணபதி ஹோமம்: எந்தக் காரியத்தைத் தொடங்கும் முன்னரும் நாம் செய்ய வேண்டியது.
2.நவக்ரஹ ஹோமம்: புதிய கட்டிடம், வீடு கட்டிய போதும், மேலும் பல புதிய முயற்சிகள் செய்யும்போதும் ஒன்பது கிரகங்களின் தீய பார்வை படாமல் இருக்க செய்யும் ஹோமம்.
3.சுதர்ஸன ஹோமம்: இது எதிரிகளின் தொல்லையைப் போக்கும்.
கேரளத்தில் திருச்சூர் அருகில் நடத்தப்படும் அதிராத்ர யக்ஞம்: பாஞ்சால் என்னும் கிராமத்தில் 1975 முதல் அதிராத்ர யக்ஞம் நடத்தப்படுகிறது. அமெரிக்க கலிபோர்னியா பல்கலைக் கழக தத்துவ இயல் பேராசிரியர் ப்ரிட்ஸ் ஸ்டால் இதை அப்படியே படம்பிடித்து உலகிற்கு அளித்தார்.
puranapanda_srinivas._1_
100 இரவு யாகங்கள்
100 இரவுகள் நடத்தும் யக்ஞம்: திருநெல்வேலி மாவட்ட அரியநாயகிபுரம் ஆர்.அனந்தகிருஷ்ண சாஸ்திரி 1936 ல் எழுதிய மகாமேரு யாத்திரையில் ஒரு இரவு முதல் நூறு இரவு வரை நடத்தப்படும் (சதராத்ர்க் க்ரது) பற்றி சிரௌத சூத்திரங்களால் தெரிந்துகொள்ளலாம் என்று எழுதியுள்ளார்.
ராஜஸ்தான் பல்கலைக் கழக வரலாற்றுப் பேராசிரியர் விபா உபத்யாய எழுதிய கட்டுரையில் அந்த மாநிலத்தில்தான் யூப ஸ்தம்பங்கள் அதிகம் என்று சொல்லி கல்வெட்டுகளில் குறிப்பிட்ட யாகங்களின் பட்டியலை கொடுத்துள்ளார். இந்தக் கட்டுரையின் ஆங்கில மொழிபெயர்ப்பில் விரிவாகக் கொடுத்துள்ளேன்.
12 ஆண்டுகள் நீடிக்கும் யக்ஞம் பற்றிப் புராணங்கள் கூறுகின்றன. நைமிசாரண்யம் காட்டில் நடந்த ரிஷிகள் கூட்டத்தில்தான் புராணங்கள் இயற்றப்பட்டன.
அஸ்வமேதம்: அரசர்கள் செய்யும் மிகப்பெரிய யாகம் இது. இதில் நூறு வகை மிருகங்கள் பலியிடப்படும். ராஜாவின்யாகக் குதிரை எங்கெல்லாம் செல்கிறதோ அவை எல்லாம் ராஜவுக்குச் சொந்தம். அதை மறுப்பவர்கள் குதிரையைப் பிடித்து கட்டிப்போடலாம். பின்னர் பெரிய யுத்தம் நேரிடும். 200 வகையான பிராணிகள், பறவைகள், பூச்சிகள், தாவரங்கள் முதலியன தீயில் இடப்படும். இறுதியில் நாடு நாடாகச் சென்று திரும்பிய குதிரையும் பலியிடப்படும்.
புருஷமேதம்: நர பலி கொடுக்கும் யாகம். ஆனால் இது நடை பெற்றதாகத் தெரியவில்லை. ஜப்பானியர்கள் ஹராகிரி செய்துகொள்வது போல தமிழ் வீரர்கள் போருக்கு முன், கழுத்தை அறுத்து, தங்களைப் பலியிட்டுக் கொண்ட செய்திகள் தமிழ் இலக்கியம் முழுதும் இருப்பதையும், சிலைகள் தமிழ்நாடு முழுதும் இருப்பதையும் பற்றி ஏற்கனவே படங்களுடன் எழுதிவிட்டேன். மஹாபாரதத்திலும் இப்படி களபலி நிகழ்ச்சி இருப்பதையும் குறிப்பிட்டேன். இது போல புருஷமேதம் இருந்திருக்கலாம். ஆனால் அஸ்கோ பர்போலா போன்ற சம்ஸ்கிருத் அறிஞர்கள் இது அடையாள பூர்வமாக (அதாவது மனித பொம்மை செய்து) நடத்தப்பட்டதாகக் கூறுகின்றனர். பல்லாயிரக் கணக்கான குழந்தைகள் பலிகொடுக்கப்பட்ட கல்லறைகள் பஹ்ரைனில் உள்ளன. பல்லாயிரக் கணக்கான அடிமைகள் பலியிடப்பட்டதை எகிப்திய கல்லறைகளில் காண்கிறோம். பாரத நாட்டில் இப்படி எதுவும் நடக்கவில்லை.
ராஜசூயம்: சோழ மன்னன் பெருநற்கிள்ளீ நடத்திய ராஜசூய யக்ஞத்தில் சேர,சோழ,பாண்டிய மன்னர்கள் மூவரும் ஒரே மேடையில் அமர்ந்ததை பிராமணர்களின் முத்தீக்கு ஒப்பிட்டு அவ்வையார் பாடிய பாடல் புறநானூற்றில் (367) உள்ளது. தர்மன் செய்த ராஜசூய யாகம் பற்றி மஹாபாரதத்தில் மிக விரிவாக உள்ளது.
வாஜபேயம்: பாரதத்தின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயி இந்த வாஜபேய குடும்பத்தில் பிறந்த பிராமணர். இந்த ஜாதியினர் செய்யக் கூடிய மிகப் பெரிய யாகம் இதுதான். இதில் 23 பிராணிகள் பலியிடப்படும்.
புத்ர காமேஷ்டி யாகம்: குழந்தைகள் இல்லாதவர்கள் செய்யும் யாகம். தசரதன் செய்த இந்த யாகம் குறித்து ராமாயணத்தில் விரிவாகப் பேசப்படுகிறது.
புறநானூற்றில் யாகம்
பூஞ்சாற்றுர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன் மீது ஆவூர் மூலங்கிழார் பாடிய ஆர்புதமான பாடலில் 21 வகை யாகம் பற்றிய அரிய தகவல்களைப் பாடுகிறார். உரைகாரர்கள் முக்கியத் தகவல்களைச் சேர்த்துள்ளனர்.
ஔபாசனம்: பிராமணர்கள் முதல் நான்கு வருணத்தவர்களும் திருமணம் ஆன பின்னர் செய்ய வேண்டிய தினசரி ஹோமம் இது. சந்யாசி ஆனால் இதைச் செய்ய வேண்டாம்.
சமிதாதானம்: தினமும் இரண்டு முறை பிரம்மச்சாரி மாணவர்கள் செய்யவேண்டிய ஹோமம்.
அக்னிஹோத்ரம்: தினமும் செய்யவேண்டியது. போபாலில் விஷவாயு வெளியேறி 3000 பேர் இறந்தபோது அக்னிஹோத்ரம் செய்த இரண்டு குடும்பத்தினர் மட்டும் விஷவாயு பாதிக்காமல் தப்பிய செய்தி பத்திரிகைகளில் வெளியானது.
புருஷசூக்த ஹோமம் என்பது ரிக்வேதத்தில் உள்ள புருஷசூகத மந்திரத்தைச் சொல்லி செய்வது.
ம்ருத்யுஞ்சய ஹோமம்: ஸ்ரீ ருத்ரத்தில் ஆயுளை வளர்க்கவும் மரண பயத்தைப் போக்கவும் வரும் மந்திரம் ஓம் திரயம்பகம்….. என்ன்னும் மந்திரம் ஆகும். இதைச் சொல்லி செய்யும் ஹோமம் இது.
காயத்ரி ஹோமம்: காயத்ரி மந்திரத்துடனும், பகவத் கீதா ஹோமம் கீதை ஸ்லோகங்களுடனும் செய்யப்படும்.
பாபா செய்த மகத்தான யக்ஞம்
ருத்ரம் என்பது சிவனைப் போற்றும் யஜூர்வேதப் பாடலாகும். இதைப் பலமுறை உச்சரித்து ருத்ர யாகம் செய்வார்கள். நமது காலத்தில் சென்னையிலும் புட்டபர்த்தியிலும் ஸ்ரீ சத்ய சாய் பாபா இதைப் பெரிய அளவில் நடத்தி உலகையே வியப்பில் ஆழ்த்தினார்:–
ருத்ர ஏகாதசி: 11 புரோகிதர்கள் 11 முறை ருத்ரத்தைப் பாராயணம் செய்து 121 தடவை ஹோமம் செய்வது
மஹாருத்ரம்: ருத்ரத்தை 1331 (11X11X11) தடவைப் பாடி யாகம் செய்வது
அதிருத்ரம்: ருத்ரத்தை 14641 (11X 11X11X11) தடவைப் பாடி யாகம் செய்வது.
தமிழ்க் கலைகளஞ்சிய தகவல்
நூறு ஆண்டுகளுக்கு முன் ஆ. சிங்காரவேலு முதலியார் தொகுத்த அபிதான சிந்தாமணி என்ற என்சைக்ளோபீடியா தரும் தகவல் பின்வருமாறு:–
யாகங்கள்: இவை பிரமம், தெய்வம், பூத, பிதுர், மானுஷம் என்பன. இவற்றுள் வேதம் ஓதல் பிரம யாகம். ஓமம் வளர்த்தல் தெய்வ யாகம். பலியீதல் பூத யாகம். தர்ப்பணம் செய்தல் பிதுர் யாகம். இரப்போர்க்களித்தல் மனுஷயாகம். இவை வேதங்களிலும் புராணங்களிலும் கூறிய அக்னி காரியங்களாம். இவற்றின் குண்ட மண்டல மந்திராதி கிரியைகள் ஆங்காங்கு வழக்கங்குறைந்து சிதைந்தும் பிறழ்ந்தும் கிடத்தலின் அவைகளின் கிரியைகளையும் குண்ட மண்டல வேதிகைகலையும் எழுதாது பெயர் மாத்திரம் எழுதுகிறேன்.
(1).அக்னிஷ்டோமம் (2)அத்யனிஷ்டோமம் (3) உக்தீயம் (4) சோடசீ (5) வாசபேயம் (6) அதிராத்ரம் (7) அப்தோரியாமம் (8)அக்னியாதேயம் (9) அக்னிஹோத்ரம் (10) தரிச பூர்ணமாசம் (11) சாதுர்மாஸ்யம் (12) நிருட பசுபந்தம் (13) ஆக்கிரயணம் (14) சௌத்திராமணி (15) அஷ்டகை (16) பார்வணம் (17) சிராத்தம் (18) சிராவணி (19) அக்ரசாயணி (20) சைத்திரி (21) ஆச்வயுசீ (22) விசுவசித் (23) ஆதானம் (24) நாசிகேதசயனம் (25) காடகசயனம் (26) ஆருண கேதுக சயனம் (27) கருடசயனம் (28) பௌண்டரீகம் (29) சத்திரயாசம் (30) சாவித்ரசயனம்

Tuesday 7 October 2014

துன்பங்கள்,மனக்கவலைகள் நீங்க



சிவலிங்கத்திற்குத் தும்பைப் பூவால் அர்ச்சனை செய்து இந்த மந்திரத்தை 27 தடவை ஜெபித்து வரத் துன்பங்களும் மனக்கவலைகளும் தீரும்.


ஓம் மகேசாய த்ரிநேத்ராய நமஸ்தே சூலபாணயே |
ப்ரனதா க்லேச நாசாய மகாதேவாயதே நமஹ ||

ஸ்ரீ ஹனுமன் வழிபாடு



                              ஸ்ரீ ராம் ஜெயராம் ஜெய ஜெய ராம் ||
ஆஞ்சநேய ஆஞ்சநேய ஆஞ்சநேய பாஹிமாம்|| 
ஹனுமந்த ஹனுமந்த ஹனுமந்த ரக்ஷமாம் ||

ஸ்ரீ ஹனுமன் சிவ அம்சம் சிவனது வீரியத்தில் இருந்து தோன்றியவர் எனவே இவரது சஹஸ்ரநாமத்தில் '' ருத்ர வீர்ய ஸமுத்பவாய '' என்றொரு நாமம் உண்டு.
  
ஸ்ரீ ஹனுமானை மகான்கள் ராமாயணம் என்ற பெரிய மாலையில் உள்ள ரத்தினம் என்று குறிப்பிடுகிறார்கள்.

ஸ்ரீ ஹனுமான் பிரம்மா சரஸ்வதி முதலான அனைத்து தெய்வங்களின் ஆசீர்வாதமும்,பல சிறப்பான சக்திகளும்,தன்மைகளும் கொண்டவர்.
இராமாயண காலத்தில் ராமாவதார நோக்கம் பூர்த்தி அடைந்த பின் ராமர் ,சீத முதலானோர் விண்ணுலகம் செல்லும் போது ஸ்ரீ அனுமன் ஸ்ரீ ராமரிடம் நான் உங்கள் திருநாமத்தை ஜெபித்துக்கொண்டு இந்த மண்ணிலேயே இருந்து விடுகிறேன் எனக் கூறி சிரஞ்சீவியாய் இருந்து வருபவர்.

ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி,ஸ்ரீ மஹா வாராஹியைப்போல் ஸ்ரீ ஹனுமனும் விரைந்து அருள் செய்பவர்.

மாந்திரீகத்தில் இவரைக் கட்ட முடியாது.இவரைக்கொண்டு நியாயமான மற்றும் நல்ல காரியங்களை மட்டுமே செய்ய முடியும்.

இவருக்குத் தன் பலம் தெரியாததால் இவரைப் போற்றித் துதிப்பவர்களுக்கு மற்ற தெய்வங்களை விடச் சிறப்பான அருளை வழங்குவார்.இதன் காரணமாகவே "ஸ்தோத்ரப்பிரியர்" என்று அழைக்கப்படுகிறார்.

எல்லா தெய்வங்களைப்போல இவருக்கும் 108,1008 நாமங்கள் உள்ளன. இருந்தாலும் இவரது நாமங்களில் கீழ்க்காணும் 12 நாமங்கள் பிரசித்தி வாய்ந்தவை அவற்றைத் தினமும் அதிகாலையில் ஜெபித்து வருவது அவர் அருளை நிறைவாய்ப் பெற்றுத்தரும்.

1.ஹனுமத் த்வாதச நாமங்கள் :-

ஹனுமான்
ஆஞ்சநேயன்
வாயுபுத்திரன்
மகாபலிஷ்டன்
ராமேஷ்டன்
அர்ஜுனசகன்
பிங்காக்ஷன்
அமிர்தவிக்ரமன்
உததிக்ரமணன்
சீதாசோகவினாசகன்
லக்ஷ்மணப்ராண  ரக்ஷகன்   
தசக்ரீவஸ்யதர்ப்பஹன்

                                தினமும் குளித்து முடித்து மேற்க்கண்ட இவரது பன்னிரு திருநாமங்களை ஜெபித்து  வர இவர் அருளைப் பூரணமாகப்  பெறலாம்.
மேலும், இந்த நாமங்களை யாத்திரையின் போதும்,ஆபத்தான தருணங்களிலும்,பயம் கொண்ட நேரத்திலும் ஜெபித்து வேண்டக் காவலாய் விளங்குவதோடு காரிய வெற்றியும் தரும்.


2. ஸ்ரீ ஹனுமான் ராம் பக்தருள் சிறந்தவர். மேலும் இவர் தன்னை வணங்குபவர்களை விட ஸ்ரீ ராமரை வணங்கி அவர் நாமத்தைப் பாடுபவர்களுக்கு சிறப்பான பலன்களை நல்குவார்.எனவே .அதிகாலையில் குளித்த பின்னர்  "ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம்" என்று குறைந்தது 27 தடவைகள் அதிகமாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஜெபித்து வர இவர் அருளைப் பூரணமாகப் பெறலாம்.

ஆபத்தான தருணங்களில் ஜெபிக்கவேண்டிய அனுமன் மந்திரம்

ஆபத்தான தருணங்களில் கீழ்க்கண்ட ஸ்லோகத்தை ஜெபித்து அவரை வேண்ட ஆபத்துகள் விலகும்.

ஆஞ்சநேய ஆஞ்சநேய ஆஞ்சநேய பாஹிமாம்|| 

ஹனுமந்த ஹனுமந்த ஹனுமந்த ரக்ஷமாம் ||

பாதுகாப்பான பயணத்திற்கு ஸ்ரீ ஆஞ்சநேய மந்திரம்



தொலைதூரப் பயணம் செல்கையில் வழியில் எந்த விதமான ஆபத்தும் ஏற்படாமல் இருக்கவும்,தனிமையில் பயணம் செய்யும் போது பயம்,ஆபத்து நீங்கவும்,அடிக்கடி வாகன விபத்துகளைச் சந்திப்பவர்களும் இந்த ஸ்லோகத்தை 3 தடவை ஜெபித்து ஸ்ரீ ஆஞ்சநேயரை வணங்கிய பின் வெளியில் கிளம்ப  ஆபத்துகள், விபத்துக்கள் ஏற்படாது .

அபராஜித நமஸ்தேஸ்து நமஸ்தே ராமபூஜித |
பிரஸ்தானந்த கரிஷ்யாமி சித்திர்ப்பவது மே  ஸதா|| 



Monday 6 October 2014

கர்ப்பிணிகளின் பாதுகாப்பிற்கு கர்ப்ப ரக்ஷா மந்திரம் :-

கர்ப்பிணிகளின் பாதுகாப்பிற்கு கர்ப்ப ரக்ஷா மந்திரம் :- :-

அடிக்கடி கர்ப்பம் கலைந்து விடுதல்,குறைப்பிரசவம் ,ஊனம் மற்றும் ஆயுள் குறைவான குழந்தைப் பிறப்பு இவை நீங்கக் கீழே சொல்லியுள்ள மந்திரப்பிரயோகத்தைச் செய்து வர நல்ல பலன் உண்டாகும்.

கர்ப்ப ரக்ஷா மந்திரம் :-

ஓம் பரப்ரம்ம பரமாத்மனே  |
மம கர்ப்ப தீர்க்க ஜீவி சுதே குரு குரு ஸ்வாஹா||


இதைக் கர்ப்பமான பின்னர் வரும் முதல் மாத பௌர்ணமி அன்று ஆரம்பிக்கவும்.ஜபம் ஆரம்பிக்கும் முன்னர் ஒரு புதுப் பாத்திரம் அல்லது கிண்ணத்தில் கொஞ்சம் தண்ணீர் விட்டு சிறிது  மஞ்சள் பொடி போட்டுக் கலந்து அதில் ஒரு பருத்தி நூலை நனைத்து (இடுப்பில் கட்டும் அளவு)  வைத்துக்கொள்ளவும். பின்னர் இந்த மந்திரத்தை மேற்கு முகமாக அமர்ந்து 1008 தடவை ஜெபித்து அந்த நூல் கயிற்றைக் கர்ப்ப ஸ்தீரியின் இடுப்பில் கட்டிக்கொள்ளச் செய்யவும்.கரு கலையாமல் பாதுகாக்கப்படும்.
மேலும் இந்த மந்திரத்தைத்  தினமும் 3 தடவை சொல்லி  வயிற்றைக்   கடிகாரச்சுற்றில் 3 தடவை சுற்றித் தடவிக் கொள்ளவும்.


நைவேத்தியம் -

வெற்றிலை, பாக்கு, பழங்கள், பால்,பாயசம்.

ஸ்ரீ கருட மந்திரம் :- சர்ப்ப தோஷம் நீங்க,விஷம் நீங்க

ஸ்ரீ கருட பகவான் மந்திரம் :

சர்ப்ப தோஷம் நீங்க,விஷம் நீங்க 





                                                           ஸ்ரீ கருட காயத்ரி 

                                                ஓம் தத்புருஷாய வித்மஹே|
                                                ஸ்வர்ண பக்ஷாய தீமஹி |
                                                தன்னோ கருட ப்ரசோதயாத் ||


ஸ்ரீ கருடன் பகவான் ஸ்ரீ மன் நாராயணனின் வாகனமாவார்.பெரிய திருவடி என்றும் சுபர்ணன் என்றும் அழைக்கப்படுகிறார்.

கேரளாவில் இவரை மட்டுமே உபாசனா தெய்வமாக வழிபடுபவர்கள் பலர். ஆனால் சுத்த சாத்வீகம் அவசியம்.அசைவ உணவு உண்பவர்களுக்கு இவரது மந்திரம் சித்திக்காது.எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.

ஸ்ரீ கருடனின் கதையை விளக்கினால் அதிகம் நீளும்.எனவே நேரே விஷயத்திற்கு வந்து விடுகிறேன்.

இவர் ஆவணி மாதம் வளர்பிறைப் பஞ்சமி திதியும்  சுவாதி  நட்சத்திரமும் கூடிய அன்று அவதரித்தார்.

சோதிட சாஸ்திரம் சுவாதி நட்சத்திரத்தைப் பற்றி  மிக உயர்வாகக் குறிப்பிடுகிறது.

ப்ரகலாதப்ரியன் பகவான் ஸ்ரீ நரசிம்மரும் ,பெரியாழ்வாரும் அவதரித்தது சுவாதி நட்சத்திரத்தன்று தான் .

ஸ்ரீ கருடபகவானுக்கு இரண்டு மனைவியர் அவர்கள் ருத்ரா மற்றும் சுகீர்த்தி.

 ஸ்ரீ ரங்கத்தில் ஸ்ரீ கருடபகவான் நின்ற திருக்கோலத்தில் நாமக்கல் ஆஞ்சநேயரைப்போல மிகப் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறார்.
கருட உபாசனை  பற்றியும் அவரது பிரபாவம் பற்றியும் மிகச்  சிலரே அறிவர்,கருட உபாசனை அஷ்டமா சித்துக்களைத் தரவல்லது என்றால் ஆச்சர்யம் அடைவீர்கள் ஆம் கருட உபாசானையின் பலன்களுள் அதுவும் ஒன்று.

ஸ்ரீ கருட பகவானுக்கு சிவந்த பட்டு வேஷ்டி சார்த்தி மல்லி,மரிக்கொழுந்து, சண்பக மலர்களால் அர்ச்சிக்க வரங்களை மகிழ்ந்து அருள்வார்.


கருட மந்திரங்கள் பல உள்ளன.அதில் மிக எளியதும் மிக வலிமையானதும் காருடப் பிரம்ம வித்யா என்றழைக்கப்படும் கருட பஞ்சாக்ஷரி  மந்திரம் தான்.

கருட பஞ்சாக்ஷரி மந்திரம் :-

ஓம் க்ஷிப ஸ்வாஹா 

ஒரு வளர்பிறைப் பஞ்சமி அன்று ஜபத்தை தொடங்கி 90 நாட்களில் அல்லது 90 நாட்களுக்குள் லக்ஷம் உரு ஜெபித்தால் மந்திரம் சித்தியாகும். பின்னர் விஷம் தீண்டியவர்களுக்கு நீரில் 108 உரு மந்திரம் ஜெபித்து அருந்தச் செய்தாலும், பிரம்பு அல்லது கத்தி கொண்டு மந்திரித்தாலும் விஷம் நீங்கும்.

கிரஹண காலத்தில் நீரில் நின்று ஜெபிக்க நிறைவான சித்தி கிடைக்கும்.

பயந்த சுபாவம் கொண்டவர்கள் கருடனை வழிபட்டு  வர மனோதிடம் உண்டாகும்.

கருடனுக்கு 8 விதமான திருஷ்டிகள் (பார்வை) உண்டு.

கருட த்ருஷ்டிகளும் அவற்றின் விதமும்:-

1.விசாலா -புன்னகை பூத்த பார்வை
2.கல்யாணி - மான் போன்ற பார்வை
3.தாரா - குருக்குப்பார்வை
4.மதுரா - அருளும் பிரேமையும் வழங்கும் பார்வை
5.போகவதி -தூக்ககலக்கமான பார்வை
6.அவந்தீ  -  பக்க வாட்டுப் பார்வை
7.விஜயா  -  கணவன் மனைவியிடையே நேசத்தைப்  பூக்கச் செய்யும் பார்வை
8.அயோத்யா - வெற்றியைத் தரும் பார்வை


இவ்வளவு சிறப்புகள் உள்ள கருட பகவானைப் பற்றி அறியாமல் இருப்பது சரிதானா?

முற்காலத்தில் சன்யாசிகள்,சாதுக்கள் கிடைத்ததை உண்டு எங்காவது தங்கி தேசம் முழுவதும் சஞ்சாரம் செய்வார்கள் .அவர்கள் தங்கள் கையில் ஒரு பிரம்பு அல்லது கம்பு வைத்திருப்பார்கள் .கருட மந்திரத்தை லக்ஷம் உருவேற்றி அதன் சக்தியை அந்த கம்பில் இறக்கி வைத்திருப்பார்கள்.இரவில் உறங்கும் தாங்கள் படுக்கும் இடத்தில் அந்த கம்பினால் கருட மந்திரம் ஜெபித்தபடி ஒரு வட்டம் போட்டு அதனுள் உறங்கி விடுவார்கள்.அந்த வட்டத்திற்குள் எந்த விஷ ஜந்துக்களும் தீய சக்திகளும் வராது.யாரையேனும் விஷ ஜந்துக்கள் தீண்டினாலும் அந்த கம்பு கொண்டு மந்திரித்து விஷத்தை நீங்கச் செய்வார்கள்.

ஜன்ம ஜாதகத்தில் ராகு,கேது என்ற சர்ப்ப கிரகங்களின் அமைப்பு கெடுபலங்களைச் செய்யும் அமைப்பு உள்ளவர்கள் ஸ்ரீ  கருட பகவானை வழிபட்டு வரக் கெடுபலன்கள் குறையும்.கால சர்ப்ப தோஷ  பாதிப்புகள் குறைய ஸ்ரீ கருட உபாசனை செய்து வரலாம்.


தோல் வியாதி கொடிய கர்ம வினையினால் வருவதே என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.சில சித்தர் நூல்கள் தோல் வியாதி உள்ளவர்களுக்கு மருத்துவம் செய்தால் அந்த கர்மா நம்மைப் பாதிக்கும் என்று சொல்கின்றன.தோல் வியாதி உள்ளவர்கள் குளிக்கும் பொது கிழக்கு நோக்கி நின்று கொண்டு கருட மந்திரத்தை 108 ஜெபித்து அதன் சக்தி நீரில் இறங்கட்டும் என சங்கல்பம் செய்து குளித்து வர தோல் வியாதிகள் நீங்கும்.


பாம்பு கடித்து விஷம் தலைக்கேறினால் முகம் நிறம் மாறிவிடும் காப்பாற்றுவது கடினம்,விரைவில் மரணம் ஏற்படும் .அப்படி விஷத்தால் கடுமையாகப் பாதிப்பு அடைந்தவர்களைக் கூட எனது சிலம்ப ஆசான் கருட மந்திரப் பிரயோகத்தினால் விஷம் நீக்கி இயல்பு நிலை பெறச்செய்துள்ளார். இது நான் கண்ணாரக் கண்ட அனுபவம்.

அடிக்கடி பாம்பு,தேள் மற்றும் இதர விஷ ஜந்துக்களால் தொல்லை ஏற்பட்டால் அதற்கு சித்தர்கள் முறைப்படி மந்திரிக்க உடனே விஷம் இறங்கும்.மேலும் விஷ நிவாரண கருடரக்ஷை கட்டிக்கொள்ள விஷ ஜந்துக்கள் தீண்டாது.




Sunday 5 October 2014

இறைவனுக்கு எப்படி நமஸ்காரம் செய்ய வேண்டும்?



அருளை நல்கி, மருளைப் போக்கும் கருணைக் கடல் இறைவன். அகந்தையை விட்டொழித்து, `நீயன்றி வேறு கதி இல்லை' என்ற மனோபாவத்தோடு, நம் உடலை தரையில் கிடத்தி இறைவனை வணங்குவதே நமஸ்காரத்தின் உட்பொருள். நமஸ்கார வகைகள் வருமாறு...
ஏகாங்க நமஸ்காரம்:- தலையை மட்டும் குனிந்து வணங்குவது,
த்ரியங்க நமஸ்காரம்:- தலைக்கு மேல் இரு கரங்களையும் கூப்பி வணங்குதல்,
பஞ்சாங்க நமஸ்காரம்:- (பெண்களுக்கு மட்டும்) கைகள் இரண்டு, முழங்கால் இரண்டு, தலை ஆக 5 அங்கங்கள் தரையில் படும்படி நமஸ்கரித்தல்,
அஷ்டாங்க நமஸ்காரம்:- (ஆண்களுக்கு) தலை, கை இரண்டு, இரு காதுகள், மார்பு, இரு கால்கள் ஆகிய 8 அங்கங்கள் தரையில் படவேண்டும்.
இறைவனுக்கு 3 முறை, சன்னியாசிகளுக்கு 4 முறை, தாய்-தகப்பனுக்கு ஒருமுறை நமஸ்காரம் செய்ய வேண்டும்.
மனிதர்களுக்கு நமஸ்காரம் செய்யும் போது, அவர்கள் அவசியம் ஆசியளிக்க வேண்டும். கோவிலில், இறைவனைத்தவிர வேறு யாருக்குமே நமஸ்காரம் செய்யவே கூடாது.

சுப காரியம் செய்யக்கூடாத நட்சத்திரங்கள்

சுப காரியம் செய்யக்கூடாத நட்சத்திரங்கள்
27 நட்சத்திரங்களில் 12 மிகவும் ஒதுக்கப்பட வேண்டும் என்பது ஜோதிட சாஸ்திரம் சொல்லும் முக்கிய குறிப்பாகும்...
பரணி,கிருத்திகை,திருவாதிரை,ஆயில்யம்,பூரம்,பூராடம்,பூரட்டாதி,கேட்டை,விசாகம்,சித்திரை,மகம் ஆகியவை ஆகும்..
இந்த நட்சத்திரங்களில் வெளியூர் பயணமோ ,கொடுக்கல் வாங்கலோ கூடாது..வெளியூர் தூரப்பயணம் சென்றவர் திரும்பி வருவது மிகவும் கடினம் ஆகும்..உடல் நலக்குறைவு ஏற்பட்டால் ஆரோக்கியம் உண்டாவதும் கடினம்...
ஒருவருடைய ஜென்ம  நட்சத்திரமும் 3,5,7,10,14,19,22,27 ஆகிய நட்சத்திரங்களும் சுப காரியங்களுக்கு முகூர்த்தம் போன்ற முக்கிய காரியங்களுக்கு தவிர்க்க வேண்டும்..கெடு பலன்களை இவை தரும்....

விநாயகர் 108 போற்றி

 
ஓம் சக்திவிநாயகா போற்றி
ஓம் சிவனார் தவப்புதல்வா போற்றி
ஓம் முழுமுதற் பொருளே போற்றி
ஓம் மூலாதார மூர்த்தியே போற்றி
ஓம் உமையவள் மதலாய் போற்றி
ஓம் உத்தமர் உள்ளத்தாய் போற்றி
ஓம் மாங்கனி பெற்றாய் போற்றி
ஓம் அவ்வைக்கருளினாய் போற்றி
ஓம் கந்தனுக்கு மூத்தோய் போற்றி
ஓம் சித்தி புத்தி நாதனே போற்றி
ஓம் பாரதம் எழுதினாய் போற்றி
ஓம் மோதகம் ஏற்பாய் போற்றி
ஓம் காவிரி தந்த கருணை போற்றி
ஓம் கஜமுகனை வென்றாய் போற்றி
ஓம் அருகம்புல் ஏற்பாய் போற்றி
ஓம் அச்சினை முறித்தாய் போற்றி
ஓம் ஐங்கரத்து ஆண்டவா போற்றி
ஓம் அல்லல் அறுப்பாய் போற்றி
ஓம் பிரணவ சொரூபமே போற்றி
ஓம் வேதாந்த வித்தகனே போற்றி
ஓம் வாதாபி கணபதியே போற்றி
ஓம் சதுர்த்தி நாயகனே போற்றி
ஓம் சங்கடம் தீர்ப்பவனே போற்றி
ஓம் இளம்பிறை சூடினோய் போற்றி
ஓம் தம்பிக்கு உதவினாய் போற்றி
ஓம் கற்றோர்க்கு இனியாய் போற்றி
ஓம் கல்லார்க்கும் எளியாய் போற்றி
ஓம் உற்ற துணை நீயே போற்றி
ஓம் குற்றம் பொறுப்பாய் போற்றி
ஓம் விண்ணோர் தலைவா போற்றி
ஓம் இருவினை தீர்ப்பாய் போற்றி
ஓம் அம்மையின் பிள்ளாய் போற்றி
ஓம் ஆதிமூல விநாயகா போற்றி
ஓம் துண்டி விநாயகா போற்றி
ஓம் கருணை செய்வாய் போற்றி
ஓம் வழித்துணை வருவாய் போற்றி
ஓம் வேதவிழுப்பொருளே போற்றி
ஓம் வேண்டும் வரமருளாய் போற்றி
ஓம் மூஞ்சூறு வாகனனே போற்றி
ஓம் பிள்ளைக் கடவுளே போற்றி
ஓம் ஆனைமுகத்தானே போற்றி
ஓம் ஒற்றைக்கொம்பனே போற்றி
ஓம் வேழமுகத்தானே போற்றி
ஓம் வரமருள் வள்ளலே போற்றி
ஓம் காலத்தை வென்றாய் போற்றி
ஓம் சிந்தாமணி விநாயகா போற்றி
ஓம் வியாசருக்கு உதவினாய் போற்றி
ஓம் கயிலை சேர்ப்பிப்பாய் போற்றி
ஓம் திருமுறை காட்டியவனே போற்றி
ஓம் முத்தமிழ் வித்தக சாமியே போற்றி
ஓம் பெற்றோர் வலம் வந்தாய் போற்றி
ஓம் எருக்க மலர் ஏற்றாய் போற்றி
ஒம் ஊழ்வினை ஒழிப்பாய் போற்றி
ஓம் பொல்லாப் பிள்ளையே போற்றி
ஓம் மாற்றுரைத்த விநாயகா போற்றி
ஓம் வல்லபையை மணந்தாய் போற்றி
ஓம் பெருவயிறு கொண்டாய் போற்றி
ஓம் காட்சிக்கு சாட்சியானாய் போற்றி
ஓம் பக்தர்க்கு அருளும் பரமனே போற்றி
ஓம் தாயினும் பரிந்தருள்வாய் போற்றி
ஓம் வன்னியிலை ஏற்பாய் போற்றி
ஓம் காலம் கடந்த கற்பகமே போற்றி
ஓம் வெவ்வினை அறுப்பாய் போற்றி
ஓம் வேட்கை தணிவிப்பாய் போற்றி
ஓம் கண்ணுதற் கடவுளே போற்றி
ஓம் முருகனின் அண்ணனே போற்றி
ஓம் முக்திக்கு வித்தானாய் போற்றி
ஓம் முக்குணம் கடந்தாய் போற்றி
ஒம் வெயிலுகந்த விநாயகா போற்றி
ஓம் கோடிசூரிய ஒளியினாய் போற்றி
ஓம் வக்ரதுண்ட விநாயகா போற்றி
ஓம் நம்பினோர் வாழ்வே போற்றி
ஓம் ஏழைக்கு இரங்கினாய் போற்றி
ஓம் விடலை விரும்பினாய் போற்றி
ஓம் எருக்குவேர் ஏற்றாய் போற்றி
ஓம் அனலாசுரனை அழித்தாய் போற்றி
ஓம் புத்தியருளும் புண்ணியா போற்றி
ஓம் ஆபத்தில் காப்பாய் போற்றி
ஓம் பாவமறுப்பாய் போற்றி
ஓம் விகடச் சக்கர விநாயகா போற்றி
ஓம் விண்ணவர் தொழும் விமலா போற்றி
ஓம் மண்ணுயிர்க்கொரு மருந்தே போற்றி
ஓம் கள்ளவாரணப் பிள்ளையே போற்றி
ஓம் திருமுறை காட்டிய திருவே போற்றி
ஓம் பேழைவயிற்று பெருமானே போற்றி
ஓம் இருவேறு உருவ இறைவா போற்றி
ஓம் தம்பிக்கு வள்ளியைத் தந்தாய் போற்றி
ஓம் வேண்டும் வரமருள்வாய் போற்றி
ஓம் கரிமுகத்து எந்தாய் காப்பாய் போற்றி
ஓம் கற்றவர் விழுங்கும் கனியே போற்றி
ஓம் ஐந்தொழில் ஆற்றும் அப்பா போற்றி
ஓம் பாலும் தேனும் புசிப்பாய் போற்றி
ஓம் குணம் கடந்த குன்றமே போற்றி
ஓம் எண்ணும் எழுத்தும் ஆனாய் போற்றி
ஓம் பிறவிப்பணியை தீர்ப்பாய் போற்றி
ஓம் தோணியாய் வந்த துணைவா போற்றி
ஓம் மாலுக்கு அருளிய மதகரி போற்றி
ஓம் கரும்பாயிரம் கொள் கள்வா போற்றி
ஓம் அப்பமும் அவலும் புசித்தாய் போற்றி
ஓம் முப்புரி நூலணி மார்பினாய் போற்றி
ஓம் கருதிய செயலை முடிப்பாய் போற்றி
ஓம் செம்பொன் மேனி பெம்மான் போற்றி
ஓம் தடைகளை போக்கும் தயாபரா போற்றி
ஓம் சிறுகண் களிற்றுத் திருமுகா போற்றி
ஓம் அறுமுகச் செவ்வேள் அண்ணா போற்றி
ஓம் உள்ளத்து இருளை ஒழிப்பாய் போற்றி
ஓம் ஆக்கமும் ஊக்கமும் தருவாய் போற்றி
ஓம் வையம் வாழ்விக்க வந்தருள் போற்றி! போற்றி!! 

108 - குபேர போற்றி !

பூசம் நட்சத்திரம் வரும் நாட்களில் , நிறைந்த அமாவாசை நாட்களில்  எல்லாம் குபேரனை மனதில் தியானித்து - கீழ்க்கண்ட குபேர போற்றியை சொல்லி வரவும்... ! பொருளாதார மேம்பாடு நிச்சயம் உருவாகும்...
 
1. அளகாபுரி அரசே போற்றி
2. ஆனந்தம் தரும் அருளே போற்றி
3. இன்பவளம் அளிப்பாய் போற்றி
4. ஈடில்லாப் பெருந்தகையே போற்றி
5. உகந்து அளிக்கும் உண்மையே போற்றி
6. ஊக்கம் அளிப்பவனே போற்றி
7. எளியோனுக்கு அருள்பவனே போற்றி
8. ஏழ்மை நிலை அகற்றுவாய் போற்றி
9. ஐஸ்வர்யம் அளிப்பவனே போற்றி
10. ஒன்பது நிதி பெற்றவனே போற்றி
11. ஓங்கார பக்தனே போற்றி
12. கருத்தில் நிறைந்தவனே போற்றி
13. கனகராஜனே போற்றி
14. கனகரத்தினமே போற்றி
15. காசு மாலை அணிந்தவனே போற்றி
16. கிந்நரர்கள் தலைவனே போற்றி
17. கீர்த்தி அளிப்பவனே போற்றி
18. கீரிப்பிள்ளைப் பிரியனே போற்றி
19. குருவாரப் பிரியனே போற்றி
20. குணம் தரும் குபேரா போற்றி
21. குறை தீர்க்கும் குபேரா போற்றி
22. கும்பத்தில் உறைபவனே போற்றி
23. குண்டலம் அணிந்தவனே போற்றி
24. குபேர லோக நாயகனே போற்றி
25. குன்றாத நிதி அளிப்பாய் போற்றி
26. கேடதனை நீக்கிடுவாய் போற்றி
27. கேட்டவரம் அளிப்பவனே போற்றி
28. கோடி நிதி அளிப்பவனே போற்றி
29. சங்க நிதியைப் பெற்றவனே போற்றி
30. சங்கரர் தோழனே போற்றி
31. சங்கடங்கள் தீர்ப்பவனே போற்றி
32. சமயத்தில் அருள்பவனே போற்றி
33. சத்திய சொரூபனே போற்றி
34. சாந்த சொரூபனே போற்றி
35. சித்ரலேகா பிரியனே போற்றி
36. சித்ரலேகா மணாளனே போற்றி
37. சிந்தையில் உறைபவனே போற்றி
38. சிந்திப்போர்க்கு அருள்பவனே போற்றி
39. சீக்கிரம் தனம் அளிப்பாய் போற்றி
40. சிவபூஜை பிரியனே போற்றி
41. சிவ பக்த நாயகனே போற்றி
42. சிவ மகா பக்தனே போற்றி
43. சுந்தரர் பிரியனே போற்றி
44. சுந்தர நாயகனே போற்றி
45. சூர்பனகா சகோதரனே போற்றி
46. செந்தாமரைப் பிரியனே போற்றி
47. செல்வ வளம் அளிப்பவனே போற்றி
48. செம்மையான வாழ்வளிப்பாய் போற்றி
49. சொர்ணவளம் அளிப்பவனே போற்றி
50. சொக்கநாதர் பிரியனே போற்றி
51. சௌந்தர்ய ராஜனே போற்றி
52. ஞான குபேரனே போற்றி
53. தனம் அளிக்கும் தயாபரா போற்றி
54. தான்ய லெட்சுமியை வணங்குபவனே போற்றி
55. திகட்டாமல் அளித்திடுவாய் போற்றி
56. திருவிழி அழகனே போற்றி
57. திருவுரு அழகனே போற்றி
58. திருவிளக்கில் உறைவாய் போற்றி
59. திருநீறு அணிபவனே போற்றி
60. தீயவை அகற்றுவாய் போற்றி
61. துன்பம் தீர்த்திடுவாய் போற்றி
62. தூயமனம் படைத்தவனே போற்றி
63. தென்னாட்டில குடி கொண்டாய் போற்றி
64. தேவராஜனே போற்றி
65. பதுமநிதி பெற்றவனே போற்றி
66. பரவச நாயகனே போற்றி
67. பச்சை நிறப் பிரியனே போற்றி
68. பவுர்ணமி நாயகனே போற்றி
69. புண்ணிய ஆத்மனே போற்றி
70. புண்ணியம் அளிப்பவனே போற்றி
71. புண்ணிய புத்திரனே போற்றி
72. பொன்னிற முடையோனே போற்றி
73. பொன் நகை அணிபவனே போற்றி
74. புன்னகை அரசே போற்றி
75. பொறுமை கொடுப்பவனே போற்றி
76. போகம்பல அளிப்பவனே போற்றி
77. மங்கல முடையோனே போற்றி
78. மங்களம் அளிப்பவனே போற்றி
79. மங்களத்தில் உறைவாய் போற்றி
80. மீன லக்னத்தில் உதித்தாய் போற்றி
81. முத்து மாலை அணிபவனே போற்றி
82. மோகன நாயகனே போற்றி
83. வறுமை தீர்ப்பவனே போற்றி
84. வரம் பல அருள்பவனே போற்றி
85. விஜயம் தரும் விவேகனே போற்றி
86. வேதம் போற்றும் வித்தகா போற்றி
87. வைர மாலை அணிபவனே போற்றி
88. வைகுண்டவாசப் பிரியனே போற்றி
89. நடராஜர் பிரியனே போற்றி
90. நவதான்யம் அளிப்பவனே போற்றி
91. நவரத்தினப் பிரியனே போற்றி
92. நித்தியம் நிதி அளிப்பாய் போற்றி
93. நீங்காத செல்வம் அருள்வாய் போற்றி
94. வளம் யாவும் தந்திடுவாய் போற்றி
95. ராவணன் சோதரனே போற்றி
96. வடதிசை அதிபதியே போற்றி
97. ரிஷி புத்திரனே போற்றி
98. ருத்திரப் பிரியனே போற்றி
99. இருள் நீக்கும் இன்பனே போற்றி
100. வெண்குதிரை வாகனனே போற்றி
101. கைலாயப் பிரியனே போற்றி
102. மனம் விரும்பும் மன்னவனே போற்றி
103. மணிமகுடம் தரித்தவனே போற்றி
104. மாட்சிப் பொருளோனே போற்றி
105. யந்திரத்தில் உறைந்தவனே போற்றி
106. யௌவன நாயகனே போற்றி
107. வல்லமை பெற்றவனே போற்றி
108 குபேரா போற்றி போற்றி