Friday 21 June 2013

சிற்றின்ப வாழ்வு சிறு வாழ்வு



சிற்றின்ப வாழ்வு சிறு வாழ்வு

மனிதன் தன்னுடைய வாழ்நாளில் சிற்றின்ப சிந்தனைகளுக்கே அதிக இடம் கொடுக்கிறான், பெரும்பாலும் சிற்றின்பங்கள் அவனுக்கு பெருந்துன்பத்தையே தரும். துன்பம் வரும் என்று தெரிந்தும் கூட அவன் சிற்றின்ப ஆசையில் இருந்து தன்னை விடிவித்துக்கொள்ள முயற்சி செய்வதில்லை.
http://thirukovilula.in/wp-content/uploads/2012/09/setrinbam.jpg


சிற்றின்பம் எதை போன்றது என்பதை விளக்க பல்வேறு நீதி நூல்கள் நமக்கு சொல்லியிருக்கின்றன, அவற்றுள் விவேகசிந்தாமணி எனும் நூலில்
அடுகரி தொடர வீழ
ஐந்தலை நாகம் காண
இடிகிணற்று அறுகின் வேரைப்
பற்றிநான் றிடஅவ் வேரைக்
கடுகஒர் எலியும் வந்து
கறித்திட அதில்நின் றோனுக்கு
இடைதுளித் தேன்நக்கும் இன்பம்
போலும் இப்பிறவி இன்பம்
இந்த பாடலின் கருத்தை பார்ப்போம்
ஒருவன் காட்டு வழியே பிரயாணம் செய்து கொண்டிருந்தான். அப்போது அவனை மத யானை ஒன்று விரட்ட தொடங்க (அதனால் பயந்து ஒடிய அவன்) தடுமாறி ஒரு கிணற்றில் வீழ்ந்தான். அந்த பள்ளத்தில் ஐந்தலை நாகம் ஒன்று படமெடுத்து ஆடியது, அதிலிருந்து தன்னை காத்துக் கொள்ள அந்த கிணற்றில் இருக்கின்ற வேரைப் பற்றி ஏற முயன்றான், அந்த கிணற்றின் மேல் இருந்த எலி ஒன்று அவ்வேரை கறித்துக்கொண்டிருந்தது, இவ்வளவு துன்பத்துக்கு மத்தியில் நின்ற அவனுக்கு அந்த கிணற்றின் மேல் இருந்த தேன் கூட்டில் இருந்து சிதறிய சிறு துளி தேனை சுவைப்பதால் ஏற்படும் இன்பம் போலும் இப்பிறவி இன்பம்.
இந்த பாடலின் வழியே மானுடப்பிறவியில் சிற்றின்பம் என்பது ஒரு சிறு துளியே என்று உணர்ந்து கொண்டால் பேரின்பம் எனும் இறைவன் திருவடியை அடையும் வழியை நாம் அறியலாம்.

No comments:

Post a Comment

நன்றி