Saturday 22 June 2013

சிவன் போற்றி-108

இந்தப் போற்றிகள் 108-ம் உங்களுக்கு உதவும். நினைவில் நிற்க வசதியாக அவை அமைந்துள்ளன. பாடிப் பாடிப் பரவவும், பணிந்து உவந்து போற்றவும். இதனால் பரமனருள் சித்திப்பது உறுதி. 

ஒவ்வொரு துதியின் முன்னாலும் `ஓம்' சேர்த்து, சொல்ல வேண்டும். இப்படி சொல்வதால் பலன் உண்டு. ஒவ்வொரு போற்றி முடிந்ததும், வில்வத் தழையோ மலரோ இறைவன் பாதங்களில் இட்டு, அருச்சனை செய்வது போல் மனப்பூர்வமாகப் பாவிக்கவும். இதுவும் மானச பூஜையின் பகுதிதான்.

அம்மையே அப்பா போற்றி
அளப்பிலா அருளே போற்றி
அன்பெனும் மலையே போற்றி
அடியார்கள் துணையே போற்றி
அணுவினுள் அணுவே போற்றி
அண்டங்கள் கடந்தாய் போற்றி
அகரமே அறிவே போற்றி
அறிந்திடு மொழியே போற்றி
அகத்தனே போற்றி போற்றி!
அலைகடல் விரிவே போற்றி
அழகனாம் அமுதே போற்றி
அரும்பிறை அணிந்தாய் போற்றி
அவிரொளி சடையாய் போற்றி
அகஞ்சுடர் விளக்கே போற்றி
அகந்தை நோய் அழிப்பாய் போற்றி
அருமறை முடிவே போற்றி
அருந்தவர் நினைவே போற்றி
அரஹரா போற்றி போற்றி
ஆதியே அருளே போற்றி
ஆலால கண்டா போற்றி
ஆதாரப் பொருளே போற்றி
ஆலமர் குருவே போற்றி
ஆலவாய் அப்பா போற்றி
ஆரூரின் தியாகா போற்றி
ஆடிடும் கூத்தா போற்றி
ஆடரவு அணியாய் போற்றி
ஆற்றலே போற்றி போற்றி!
இமையவர் உளத்தாய் போற்றி
இருட்கறை மிடற்றாய் போற்றி
இருவினை தவிர்ப்பாய் போற்றி
இரக்கமே வடிவாய் போற்றி
இனியசெந் தமிழே போற்றி
இலக்கியச் செல்வா போற்றி
இமயவள் பங்கா போற்றி
இன்னல்கள் களைவாய் போற்றி
இறைவனே போற்றி போற்றி!
இதயத்தே கனிவாய் போற்றி
இனிமையே நிறைப்பாய் போற்றி
இனியவர் மனத்தாய் போற்றி
இடபவா கனத்தாய் போற்றி
ஈடிலாப் பிரானே போற்றி
ஈந்தருள் தேவே போற்றி
ஈமத்தே குனிப்பாய் போற்றி
ஈசானத் திறையே போற்றி
ஈசனே போற்றி போற்றி!
உலகிதன் முதலே போற்றி
உமையொரு பாகா போற்றி
உள்ளொளிர் சுடரே போற்றி
உணவொடு நீரே போற்றி
உடுக்கையின் ஒலியே போற்றி
உடைகரித் தோலாய் போற்றி
உரைகடந் தொளிர்வாய் போற்றி
உருவொடும் அருவே போற்றி
உடையனே போற்றி போற்றி!
ஊரெல்லாம் உவப்பாய் போற்றி
 ஊழினை விதிப்பாய் போற்றி
ஊங்கார ஒலியே போற்றி
ஊக்கமே உணர்வே போற்றி
எல்லையில் எழிலே போற்றி
எரிதவழ் விழியாய் போற்றி
எண்குண வடிவே போற்றி
எருதேறும் ஈசா போற்றி
எம்பிரான் போற்றி போற்றி
ஏகநா யகனே போற்றி
ஏதிலார் புகலே போற்றி
ஏத்துவார் ஏத்தே போற்றி
ஏர்முனைச் செவ்வா போற்றி
ஏந்துகூர் மழுவாய் போற்றி
ஏகம்பா இறைவா போற்றி
ஏக்கமே களைவாய் போற்றி
ஏற்றமே தருவாய் போற்றி
ஏந்தலே போற்றி போற்றி
ஐயனே அரனே போற்றி
ஐம்பூத வடிவே போற்றி
ஐம்புலன் அவிப்பாய் போற்றி
ஐயங்கள் களைவாய் போற்றி
ஒப்பிலா மணியே போற்றி
ஒளியெறி நுதலாய் போற்றி
ஒள்ளிழை பாகா போற்றி
ஒண்குழைக் காதா போற்றி
ஒப்பிலாய் போற்றி போற்றி!
ஓதுவார் உளத்தாய் போற்றி
ஓதிடும் பொருளே போற்றி
ஓய்விலாக் கூத்தா போற்றி
ஓமென்னும் பொருளே போற்றி
ஓசையின் ஒலியே போற்றி
ஓர்மையின் உள்ளே போற்றி
ஓதுசெந் தமிழே போற்றி
ஓதிடும் பண்ணே போற்றி
ஓய்விலாய் போற்றி போற்றி!
கறைதிகழ் கண்டா போற்றி
காலனைக் கடிந்தாய் போற்றி
காமனை எரித்தாய் போற்றி
கந்தனைத் தந்தாய் போற்றி
கங்கைவாழ் சடையாய் போற்றி
கண்ணப்பர் முதலே போற்றி
கண்கள்மூன் றுடையாய் போற்றி
கருணைமா கடலே போற்றி
கடவுளே போற்றி போற்றி!
சிவமெனும் பொருளே போற்றி
செவ்வொளி வடிவே போற்றி
தவநிலை முடிவே போற்றி
தண்பதம் தருவாய் போற்றி
பவமெலாம் தவிர்ப்பாய் போற்றி
பரமெனும் பொருளே போற்றி
புலியூரான் உளத்தாய் போற்றி
புவிபுரந் தருள்வாய் போற்றி
புண்ணியா போற்றி போற்றி!

No comments:

Post a Comment

நன்றி