Saturday 22 June 2013

ஜோதிட பரிகாரம் வீண்



                                     ஓம் நமசிவாய

ஜோதிட பரிகாரம் வீண்

இன்று இறை வழிபாட்டுக்கு கோயில் என்பது போய் கோயில் என்பது ஒரு பரிகார தலம் என்றாகி விட்டது . இந்த பரிகாரம் என்பது எப்படி வந்தது ? நாம் செய்த பாவம் எனும் வினையை  நீக்க பரிகாரம் செய்தால் நம் பாவம் குறைந்து நற்பயன்கிட்டும்  என்று சொல்லி வைத்தார்கள்.கிடைக்குமா? என்றால் கண்டிப்பாக கிடையாது. அப்படி என்றால் தவறு செய்து விட்டு பரிகாரம் செய்து தப்பி விடலாமே. எல்லோரும் சுலபமாக தவறு செய்வார்களே .உடனே பாவமன்னிப்பு என்ற ஒன்றை வைத்தே ஒரு சமயம் வளர்(க்)கிறது.
பரிகாரம் என்பது யாரால் வந்தது ? கடவுள் கொள்கையில் தெளிவில்லாதவர்களாலும் கடவுள் பெயரால் காசு பார்த்து பிழைப்பவர்களாலும் பரிகாரம் சொல்ல, செய்யப்படுகிறது .

நமக்கு நாம் பிறக்கும்போதே முற்பிறவியில் நாம் செய்துள்ள நல்வினை தீவினைளுக்கேற்ப
இன்பம்  துன்பம் இறப்பு பிறப்பு குலம் துணை அனைத்தும் தீர்மானிக்கப்படுகிறது.நாம் இன்று ஒரு இன்பம் அனுபவிக்கிறோம் என்றால் முற்பிறவியில் ஒரு நல்ல செயல் செய்துள்ளோம் என்று பொருள் .ஒரு கஷ்டம் துன்பம் வருகிறது என்றால் அது போன்ற ஒரு துன்பத்தை நாம் செய்துள்ளோம் என்று பொருள் .தீதும்  நன்றும் பிறர் தர வாரா என்பார் கணியன்பூங்குன்றனார். கணியன்  என்றால் சோதிடர் .அவரே இதை தான் சொல்கிறார். நம்மால் செய்யப்பட்ட வினையை நாம் அனுபவித்து தான் தீர்க்க வேண்டுமே தவிர பரிகாரம் மூலம் தவிர்க்க இயலாது என்பது சத்தியமான உண்மை .

உலகத்தின் மிகத்தொன்மையானதும் தெளிவானதும் ஆன நம் சைவ சமயக்கடவுள்  கொள்கையை உணராதவர்கள் சொல்வதே பரிகாரம் .அதன் படி பரிகாரத்தின் மூலம் நம்முடைய கஷ்டம் தீர்கிறது என்றால்கடவுள் என்ற ஒருவன் தேவையில்லை.அவர் நம்ம ஊர் அரசியல் வாதியில்லை பழத்திற்கும் பரிகாரத்திற்கும் மயங்க .நாம் செய்த  பாவம் 40 சதவீதம் புண்ணியம் 20 சதவீதம் என்றால் புண்ணியம் 20 சதவீதம் கழித்து 20 சதவீதம் பாவத்திற்கு மட்டும் தண்டனை என்ற பண்ட மாற்று சமாச்சாரம் நம் சமயத்தில் இல்லை அப்படி   யாரும் சொன்னால் அது பொய் இன்னும் சொல்வதானால் 32.46 சதவீதம் என்றால் நம்முடைய கணக்குப்படி 32.5 என்று கொள்வோம் ஆனால்  கணக்கிலோ அது அப்படியே வரவு வைக்கப்படும். 32.8 சதவீதம் என்றால் 33 என்று வராது. இதை அப்பர்  சுவாமிகள் 

தொழுது தூமலர் தூவித் துதித்துநின்று
அழுது காமுற்று  அரற்றுகின் றாரையும்
பொழுது போக்கிப் புறக்கணிப் பாரையும்
எழுதும்  கீழ்க்கணக்கு  இன்னம்பர்  ஈசனே.

குறிப்பிட்டுள்ளார் . 

கடவுள் ஒரு வேலை கொடுத்து ஒன்பது கோள்களையும் மேற்பார்வை பார்க்க பணித்து 
உள்ளார் அந்த மேற்பார்வையாளர்களாகிய கோள்களுக்கு பரிகாரம் செய்தால் நம் வினையை மாற்றி அமைக்கும் தகுதியையோ வேலையையோ கடவுள் அவர்களுக்கு கொடுக்கவில்லை . கடவுள் ஒருவரேயன்றி  பலர் அல்லர். வேலையைச் செய்யும் ஏவலர் மட்டுமல்ல வேலையை  சொன்ன கடவுளே நம் விதியை மாற்ற இயலாது அது விதிக்கப்பட்டது வினை தீர்ந்தால் மரணம் மட்டுமே அதில் பாவ புண்ணியத்திற்கேற்ப முக்தி கூட கிடைக்கலாம் ஆனால் இப்பிறவிக்கு நாம் பெற்றுள்ள பேக்கேஜ் அதாவது  D.O .B ,D .O .D அனைத்தும் மாற்றத் தக்கதல்ல.எனவே பரிகாரம் என்பது வீண் முயற்சி.

நம் வினைகளை தீர்க்க வழிபாட்டின் மூலம் மட்டுமே இறைவன் இரங்குவார் .அதுவும் நம் பழவினை எனும் சஞ்சிதம் மட்டுமே குறையும். இப்பிறவி வினையாகிய பிராரப்தம் மற்றும் ஆகாமியம் அப்படியே இருக்கும் .பழவினை தீர்ந்தால் அடுத்த ஒரு பிறவி இல்லாமல் ஈசன் திருவடிபேறு கிடைக்கும் 

ஆன்மீகம் என்றால் கடவுள் வழிபாடு அல்ல ஆன்மாவை தூய்மை செய்து ஆன்மா உய்வு பெறுவதே .மக்களை இந்த நல்வழியில் இருந்து  திசை திருப்பி பரிகாரம் என்ற பெயரில் ஜோதிடம் என்ற பெயரில் பொய் பேசி வீண் செயல் செய்து அலைக்கழிக்கும் ஒரு கும்பல் இதை தொழிலாக செய்கிறது .

மண் விளக்கு போய் பூசணி விளக்கு தேங்காய் விளக்கு பழ விளக்கு அடுத்து என்ன விளக்கோ?
ஐந்தெழுத்து மந்திரம் என்ற சுவைமிக்க பழம் இருக்க சிறு தேவர் மந்திரம், காயத்ரி100முறை 330 முறை சொல்வது என்ற காய் ருசிக்காது உபயோகமில்லை 

ஜோதிடம் பார்ப்பது என்பது  நாள்,கிழமை கிரஹணம் அமாவாசை பௌர்ணமி சஷ்டி மற்றும் புண்ணிய நாட்கள் விரதங்கள் அறிந்து கொள்ள முகூர்த்தம் பார்த்து நல்ல காரியம் செய்ய பார்க்கலாம். அதுவே தவறு ஈசன் அடியார்களுக்கு எல்லா நாளும் நல்ல நாட்களே என்று சம்பந்தர் சுவாமிகள் ஆணையிட்டு அருளியுள்ளார் . அதை விடுத்து தொழிலுக்கு பரிகாரம் திருமண பரிகாரம் படிக்க பரிகாரம் குழந்தை பேறு பரிகாரம் வளர்பிறை தேய்பிறை ராகு கேது சனி என்று மக்களை குழப்பி நேரம் பணம் எல்லாம் வீணடிக்கிறார்கள் .

இனியாவது இறைவன் ஒருவனைத் தவிர மற்ற யாருக்கும் நம் விதியை மாற்றும் வல்லமை இல்லை என்று தெளிந்து அவன் அருளாலே அவன் தாள் வணங்குவோம் 
அவன் தாள் வணங்கி நற்கதி பெற விடாமல் இது போல தடைகள் வரும் ஏனெனில் நம் தீவினைகள் நல்வழி செல்லவொட்டாமல் நம்மை தடுக்கும்.நாம் சிறிது தெளிந்தால் அதுவே நம்மை வழி நடத்தும் .


                          போற்றி  ஓம் நமசிவாய



                                திருச்சிற்றம்பலம் 

3 comments:

  1. சிவ சிவ !! அருமையான பதிவு
    அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே

    ReplyDelete
    Replies
    1. திருசிற்றம்பலம்...

      பதிவை படிதமைக்கு நன்றி....

      நாமார்கும் குடிஅல்லோம் நமனை அஞ்ஜோம்.....
      வேயுறு தோலி பங்கன்.......
      போன்ற பாடல்கள் மூலம் விலக்கியும்.......அஞ்ஞானிகலின் அரிவுறுத்தலால் இரை வழியிலிறுந்து விலகி வீனாக பரிகாரங்களில் மூழ்குகிண்றனர்...

      Delete
  2. குருவின் பார்வை என் மீது தெளித்த நற் சிந்தனை
    உங்கள் பாதார விந்தங்களை மானசீகமாக வணங்குகிறேன் ...........சுவாமி

    ReplyDelete

நன்றி