Monday 27 January 2014

திருமுறைகளை ஓதுவதன் பயன்



தமிழ் வேதங்களாகிய திருமுறைகளினால்  பெற முடியாத ஒன்றை வேறு எம்முறையிலும் பெறவே முடியாது .

நாலும்திருமுறைகளை ஓதுவது - நம் கடமை

    திருமுறைப் பாடல்களை அருளாளர்கள் தமக்காகப் பாடவில்லை. அவர்கள் ஞானம் பெற்ற பின்பே பாடியிருக்கிறார்கள். ஆகவே திருமுறைகள் நமக்காகப் பாடப்பட்டவை. நமக்கு வேண்டியவற்றை இறைவனே காப்பாற்றிக் கொடுத்திருக்கிறான். அவற்றை ஓதி பயன்பெற வேண்டுவது நம் கடமையாகும்.

 


 திருமுறைகளை ஓதுவதன் பயன் :-


எத்தனை தான் திருந்த வேண்டும் என்று நாமாக விரும்பினாலும்  நமக்குள்ள அறியாமை காரணமாக , திரும்பத் திரும்பத் தவறுகளை நாம் செய்து கொண்டு தான்  இருக்கிறோம் . அந்த அறியாமையிலிருந்து நம்மை நாம் காத்துக் கொள்வதற்கு திருமுறை வாக்குகள் பெரிதும் துணை செய்கின்றன .

    இறைவன் , வினைவயபட்டுத்  துன்பப்படும் நாம் அனைவரும் , திருந்தி உய்யும் பொருட்டு , அருளாளர்களை இப்பூவுலகற்கு அனுப்பி , அவர்கள் வாயிலாக நமக்குத் தன்  அருளிப்பாடுகளை செய்துள்ளான் . அருளாளர்களை அதிட்டித்து நின்ற , இறைவனே திருவாய் மலர்ந்து அருளிய சொற்களே திருமுறைகளில் உள்ளன .  இவ்வுண்மையை  எனது உரை தனது உரையாக  என்று அருளிச் செய்துள்ள சம்பந்தப் பெருமான்  திருவாக்கிலிருந்து அறியலாம் . திருமுறைகளில் உள்ள ஒவ்வொரு சொல்லும் மந்திர ஆற்றல் உடையது  . எனவே , திருமுறைகளை நாம் பாராயணம் செய்யும் போது , அதில் உள்ள மந்திர ஆற்றல் , நமது உயிரில் கலந்து , நமது அறியாமையை போக்கும் திறன் உடையது . 

திருமுறைகளை ஓதி  , ஊழ்வினை(5 வகைஊழ்வினை-allready updated topic)யிலிருந்து நாம் விடுபட்டு , பிறவிப்  பயனைப்  பெரும் பொருட்டே திருமுறைகளை இறைவன் நமக்கு வழங்கியுள்ளான் . திருமுறைகளை  இறைவன் தோற்று  வித்த தன்   நோக்கம் இதுவே ஆகும் . இவ்வுண்மையை  சம்பந்தப் பெருமான் திருக்கடைக்காப்பில் நாம் தெளிவாக புரிந்து கொள்ளலாம் .




 திருமுறை என்பதன் பொருள் திரு என்றால் செல்வம், முறை என்றால் நூல்.மாறாத செல்வத்தை மக்கள் எளிதாகப் பெறுவதற்கு வழிகாட்டும் நூல் என்பதைக் குறிக்கும்
நம்முடைய பிறப்பில் இருந்து இறைவன் திருவடியை அடையும் வரை நமக்
கு ஏற்படும் இன்னல்களை நீக்க அவனருளாலே அவன் தாள் வணங்கி நின்று திருமுறைகளைப் பாடி பயன் அடையவேண்டும் நாம் நம்முடைய தேவைகளை திருமுறைகளின் மூலம் பெற்று திருவருளின்
துணையோடு அனுபவிப்பதே சிவானுபவம் ஆகும். இவ்வுலகிற்கு தேவையான பொருள் மற்றும் அருள் உலகத்திற்கு தேவையான அருள் என அனைத்தையும் ஒருங்கே கொடுப்பது திருமுறைகளே

கருவாகி,உருவாகி உழலும் நாம் அதில்
இருந்து மீள தில்லையுள் கூத்தனை தென் பாண்டிநாட்டானை அல்லல் பிறவி அறுப்பானை சொல்லுவதற்கு அரியானின் திருவடியை வாழ்த்தி வணங்கி போற்றி அவன் தாள் பற்றி செல்ல மிக சிறந்த வழிகாட்டியாக அவரே அளித்த பொக்கிசமே திருமுறைகள் சம்பந்தசுவாமிகள் அருளிய தேவாரத்தில்
வினைநீக்கம் பற்றியே அதிகமாக பாடியுள்ளார்
உயிரைப்பற்றிய ஆணவ மலத்தினை நீக்கும்
பொருட்டு பிறப்பு இறப்பு என்ற செயல்களை இறைவன் ஏற்படுத்துகிறார் .இந்த உயிர் நால்வகைத் தோற்றம் ஏழ் வகை பிறப்பு எண்பத்திநாலு லட்சம் யோனி பேதம் என பிறந்து உழல்கிறது இதை கடலை கையால் நீந்திகரையேறுவதை போல என்று அருள்நந்தி சிவாசாரியார் கூறுகிறார்
கருத்தரிக்க,கரு காக்க ,சுகப்பிரசவம் ஆக ,
வாதம் முதலான நோய் இல்லாமல் நடக்க,
கல்வி ஞானம் சிறக்க , படித்து வேலை கிடைக்க ,வேலை ,தொழில் இலாபம் பெற , இல்வாழ்க்கை அமைய ,அமைந்த வாழ்வு சிறக்க ,நாட்களாலும் கோள்களாலும் வரும்
இன்னல்களை போக்க ,நோய்நொடி இல்லா
வாழ்வு பெற ,இறைவன் திருவருள் கிடைக்க
அமைதி பெற முக்தி பெற என அனைத்து
வாழ்வியல் மற்றும் வாழ்விற்குப் பிறகும் பெரும் பேறு கிடைக்க திருமுறைகள் வழிகாட்டுகின்றன

சில திருமுறைப் பெருமைகள்
1.வேதங்களால் பூட்டப்பட்ட திருக்கதவு திறந்தது பிறகு திருத்தாளிட்டது

2.பாலை நிலம் நெய்தல் ஆனது

3.பாண்டியன் சுரம் தீர்த்து கூன் நிமிர்த்தியது

4.தேவார ஏடுகளை தீயில் கருகாமல் பச்சை யாக எடுத்தது எதிர் நீச்சல் இடவைத்தது

5.ஆண் பனை பெண் பனையாகியது

6.விஷத்தினால் இறந்த செட்டி உயிர்பெற்றது

7.எலும்பை பெண்ணாக்கியது

8.சுண்ணாம்புக் காளவாயில் 7 நாட்கள் இருந்தும் உயிர் பிழைத்தது

9.மத யானையை வலம் வரச்செய்து வணங்கவைத்தது

10.மானசரோவரில் மூழ்கி திருவையாற்றில் எழுந்தது

11.கல்லை தெப்பமாக கொண்டு கரையேறியது

12.செங்கல்லைப் பொன்னாக்கியது

13.விருதாசலத்தில் மணிமுத்தாற்றில் இட்ட பொன்னை ஆரூர் குளத்தில் எடுத்தது

14.முதலை விழுங்கிய பிள்ளையை மீட்டது

15.காவேரி பிரிந்து வழி விட்டது

16.நரியை குதிரையாக்கியது

17.வெள்ளானையில் கயிலாயம் சென்றது

18.குதிரையை நரியாக்கியது

19.பிறவி ஊமையை பேச வைத்தது

20.பரம்பொருளான சிவபெருமானே எழுதிய பெருமைக்குரியது

இப்படி திருமுறைகளின் அற்புதங்கள் ஏராளம் அதன் பெருமைகளை அளவிட முடியாது திருமுறைகளை நாளும் ஓதுவோம் சிவன் அருளுக்கு பாதிரமாவோம்....

No comments:

Post a Comment

நன்றி