Sunday 5 January 2014

ஏவல், பில்லி, சூனியம், வைப்பு, வசியம், செய்வினை, மாந்திரீகம் போன்றவட்றில் இருந்து விடுபட சிவ தேவாரம்

உடுக்கை அடித்து, மந்திரப் பாடல்கள் பல பாடி, ஒருவருக்குள் இருக்கும் பில்லி மற்றும் சூனியத்தை விடுவிப்பார். வேப்பிலையால் மந்திரங்கள் ஓதி, வசியத்தை அகற்றுவார். பாதிக்கப்பட்டவரின் வீடுகளுக்குச் சென்று, பூசனைகள் நடத்தி, பூசனைக்கு வைத்த எலுமிச்சம் பழங்களை வீடுகளுக்கு அரணாக விட்டெறிந்து ஏவலை முறியடிப்பார். கோழிக் குஞ்சுகள் மற்றும் நரபலி இட்டு, இருப்பதாகக் கருதப்படும் வைப்புகளை நிர்மூலமாக்குவார்.


பில்லி என்றால், ஒருவரை ஆட்கொண்டு இருக்கும் நச்சு நிரலி என்பதாகும். அதாவது, ஒவ்வொரு மனிதரும் தன்னுள் இருக்கும் ஆன்மா எனும் நிரலியின் சொல்கேட்டுச் செயல்படக் கூடியவராகும். காலையில் எழுந்து, இந்த நேரத்திற்கு இங்கு செல்ல வேண்டும் என எண்ணம் துளிர்க்க, மெய்யானது அக்கட்டுப்பாட்டுக்கு இயங்கும். அக்கட்டுப்பாட்டில் குழப்பத்தை உண்டு செய்யும் விதமாக இயங்குவதுதான் பில்லி என்பதாகும்.

சூனியம் என்றால், ஒருவருக்கு எதுவுமே வாய்க்காது போதல். “அவனுக்கு யாரோ சூன்யம் வெச்சிட்டாங்க”, “அவன் ஒரு சூன்யம்டா” என்றெல்லாம் கிராமங்களில் சொல்லக் கேட்டிருப்பீர்கள். மந்திரிக்கப்பட்ட தகடுகளை வீடுகளில் வைத்தல், ஒருவரது மயிரில் மூன்று இழைகளைச் சேகரித்து அவர்தம் வீட்டில் அவர்தம் காலடி மண்ணோடு சுழியம் போல் புதைத்தல் என்பன அந்த வீட்டிற்கும், காலடி மண்ணுக்கு உரியவருக்கும் சூனியத்தை உண்டு செய்யும் என்பது நம்பிக்கை.

ஏவல் என்றால், துர்ப்பாக்கியமான காரியங்களுக்கு ஒருவரைத் தூண்டுவதன் மூலம் அவரைச் சீரழிப்பது அல்லது பாதிப்புக்கு உள்ளாக்குவதாகும். ஒருவருக்குப் பிடித்தமான பானங்கள், பண்டங்கள் முதலானவற்றைப் பூசனையில் வைத்து மந்திரங்கள் பல ஓதி, அவற்றை எல்லாம் அவ்ரைக் கொண்டு நுகரச் செய்வதன் மூலம், ஏவலில் சிக்க வைக்க முடியும் என்பது நம்பிக்கையாகும்.

வசியம் என்றால், தன்வசம் வயப்படுத்துவது. அல்லது, ஆகாக் குணங்களுக்கு ஒன்ற வைப்பது என்பதாகும். இறைச்சி உணவுகள் கொண்டு வசியம் செய்வது. அல்லது ஒரு பெண்ணின் வசம் வீழ்த்துவதற்கு, அப்பெண்ணின் நகம், மயிர் முதலான உடற்கூறினை மந்திரித்து அவரது இருப்பிடத்தில் தரிப்பது போனற செய்லகள் எல்லாம் வசியம் வைத்தல் என்பதாகும்.

வைப்பு என்பது, மேற்கூறியவற்றுக்காக எதோ ஒன்றை வைத்திடச் செய்வதே. அவர்தம் இடத்தில்தான் வைக்க வேண்டும் என்பது இல்லை. அவர் வேலை செய்யும் அலுவலகத்தில் வைக்கலாம். அவருக்கு முற்றிலும் தொடர்பில்லாத இடத்திலும் வைக்கலாம்.

செய்வினை என்பது, ஒவ்வாத மாந்திரிகச் செயல்களைச் செய்தல் என்பதாகும். ஆனைமலைக் கோயிலுக்குச் சென்று, அவன் நாசமாகப் போக வேண்டும் எனப் பிரார்த்தனை செய்து, மாசாணியம்மனுக்குச் சினத்தை உண்டாக்கும் வகையில் மிளகாயை அரைத்து அம்மனுக்கு அப்புவதெல்லாம் செய்வினை என்பதே ஆகும்.

மாந்திரீகம்  மந்திரங்கள் அறிந்தவரைக் கொண்டு, மற்றவருக்குக் கெடுதல் விளைவிக்கும் பொருட்டு எதைச் செய்தாலும் அதை மாந்திரிகம்/மாந்திரிகன் என்றழைக்கப்படுவது வழக்கம். ஆனால், மாந்திரிகம் என்பது நன்மை பயக்கவும் செய்யும். 

யார், என்ன பில்லி, சூன்யம், ஏவல், வசியம் ஆகியன வைத்தாலும், திருமுருகன் பூண்டி, அரசூர்ப் பரமசிவன் கோவில் மற்றும் கொடிமாடுச் செங்குன்றூர் எனும் திருச்செங்கோடு முதலான இடங்களுக்குச் சென்று பதிகங்கள் பாடி வருவதன் மூலம், அவற்றை எல்லாம் முறியடிக்க முடியும் என்பதும் ஐதீகம்.
இயலாதோர் அருகில் உள்ள (முரைபபடி  பூஜை நடைபெரும்) சிவாலயம் சென்று 48 நாட்கள் கீழ்கானும் தேவாரபதிகம் மனமுருகப் பாடி தொழுதால் ஏவல், பில்லி, சூனியம், வைப்பு, வசியம், செய்வினை, மாந்திரீகம் போன்றவட்றை எரித்து சங்கரர் நம்மை காப்பார்


அவ்வினைக் கிவ்வினை

என்றெடுத் தையர்அமுதுசெய்த

வெவ்விடம் முன்தடுத்

தெம்மிடர் நீக்கிய வெற்றியினால்

எவ்விடத்தும்அடி யார்இடர்

காப்பது கண்டமென்றே

செய்வினை தீண்டா 

திருநீல கண்டம்! 





பைரவரை வழிபடும் முறை :


தாங்க முடியாத அளவிற்கு எதிரிகளால் துன்பம் அடைபவர்களையும் , விபத்து , துர்மரணம் இவற்றிலிருந்தும்  காப்பவர் பைரவர் மட்டுமே . இத்துன்பங்களில்  இருந்து விடுபட பைரவரை தான் சரணடைய வேண்டும் 
பைரவரிடம் பிரார்த்தனை செய்து  கொண்டு உங்கள் பிரார்த்தனை நிறைவேரும் வரை ஒவ்வொரு  சனி கிழமையும் வெண்பூசணி யில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும் 

சனி கிழமை காலை 6  மணி முதல் மாலை  8 மணிக்குள் அல்லது கோவில்  நடை சாத்துவர்க்குள் வெண்பூசணி யில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும் 

திறந்திருக்கும்  பைரவருக்கு தான் விளக்கு போட வேண்டும் , கண்டிப்பாக பைரவர் சிலையை திரை இட்டு மூட்டி இருந்தாலோ , கதவு சாத்தி இருந்தாலோ அந்த பைரவருக்கு விளக்கு போட கூடாது 

64 பைரவர்களில் எந்த பைரவருக்கு வேண்டுமானாலும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் விளக்கு போடலாம் 

No comments:

Post a Comment

நன்றி