Tuesday 13 August 2013

பேரானந்தம் எது?

மகா விஷ்ணுவின் பரம பக்தரான நாரதர் ஒருசமயம் பெரும் துக்கத்தால் பீடிக்கப் பட்டார்,
எவ்வளவோ முயன்றும் அந்த துக்கத்தில் இருந்து மீள முடியாமல் மகாவிஷ்ணுவை சரணடைந்தார்
விஷ்ணு, நாரதரிடம் " உன் துயர் நீங்க புனித யாத்திரை செய் " என்று அறிவுரை கூறினார். அவ்வாறே நாரதர்
செல்லும் வழியில் கங்கையில் நீராடிய போது, ஒரு மீன் நாரதர் அருகில் வந்தது.
"என்ன மீனே? நலமா?" எனக்கேட்ட நாரதரிடம், அம்மீன் சோகமாக " என் தாகத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் மிகவும் துன்புறுகிறேன் " என்றது. அதை கேட்ட நாரதர் ," என்ன மீனே உளறுகிறாய்? முட்டாள் மீனே ! தண்ணீரில் இருந்து கொண்டு தாகத்தால் துன்புறுகிறாயா?" என்றார்.
"ஆனந்த அமிர்தவடிவான பகவானின் அருகிலேயே இருந்துகொண்டு தாங்கள் துன்பபடுவதை விட இது ஒன்றும் வியப்பில்லையே!" என்று பதிலளித்தது மீன்.
பகவானை மறந்ததே துன்பங்களுக்கு எல்லாம் காரணம் என்று நாரதர் உணர்ந்த மறு கணம், அம்மீன் மகாவிஷ்ணுவாக காட்சி அளித்தது.
"இறைவனை மறப்பதே மனிதரின் துன்பங்களுக்கு எல்லாம் மூல காரணம்"

No comments:

Post a Comment

நன்றி