Sunday 13 January 2019

திதிகளின் அதிதேவதைகள்

திதிகளின் அதிதேவதைகள்; ------------------------------------- திதிகளின் எண்ணிக்கை மொத்தம் 15 ஆகும்.வளர்பிறை திதிகள் பூர்வபட்ச திதிகள் என்றும்,தேய்பிறை திதிகள் அமரபட்ச திதிகள் என்றும் அழைக்கப்படுகின்றன. பிரதமை முதல் பவுர்ணமி வரையிலுள்ள - திதிகள் - பதினைந்தற்கும் - பதினைந்து தேவிகள் உள்ளனர். அவர்கள் நித்யா தேவிகள் என்று அழைக்கப்படுவர். திதியும் - தேவிகளின் பெயர்களும் (அதிதேவதைகள்); 1. பிரதமை - காமேஸ்வரி 2. துவதியை - பகமாலினி 3. திரிதியை - நித்யக்லின்னை 4. சதுர்த்தி - டேருண்டா 5. பஞ்சமி - வந்நிவாசினி 6. ஷஷ்டி - மஹாவஜ்ரேஸ்வரி 7. ஸப்தமி - சிவதூதி 8. அஷ்டமி - த்வரிதா 9. நவமி - குலசுந்தரி 10. தசமி - நித்யா 11. ஏகாதசி - நீலபதாகா 12. துவாதசி - விஜயா 13. திரயோதசி - ஸர்வமங்களா 14. சதுர்த்தசி - ஜ்வாலாமாலினி 15. பவுர்ணமி - சித்ராதேவி
மேற்கண்ட திதிகளில் பிறந்தவர்கள் அவர்களுக்குடைய தேவதைகளை வணங்கினால் துன்பங்கள் விலகும்,மனம் தெளிவாகும்.காரியம் ஈடேறும்,வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.

No comments:

Post a Comment

நன்றி