Thursday, 18 September 2014

விஜய & ஜய வருடத்தின் மைத்ர முகூர்த்தம் வரும் நாட்கள்(1.9.2014 முதல் 13.4.2015 வரை)

கலியுகம் என்றாலே துன்ப யுகம் என்றுதான் அர்த்தம்;எனவே,இந்த கலியுகத்தில் மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரையும் கடன் அல்லது நோய் அல்லது எதிரி அல்லது கர்மவினை வாழ்நாள் முழுக்க துரத்திக்கொண்டே இருக்கும்.இதை சரிசெய்ய ஜோதிட அறிவியல் வழிகாட்டுகிறது.
நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்; அந்த ஆளு ஒரு வீடு கட்டுனான்பா! அன்னிலிருந்து இன்னிக்கி வரைக்கும் வீடுகளாக கட்டிக்கிட்டே இருக்கான்பா;பத்து வருஷமாக வீடாகக் கட்டி,இப்போ கோடீஸ்வரனாகிட்டான்பா! எங்கியோ அவனுக்கு மச்சம் இருக்குது;ஹீம் அதுக்கெல்லாம் குடுப்பினை வேணும்.
இந்த குடுப்பினை நம்  அனைவருக்குமே இருக்கிறது.வீணாப்போன நாத்திகத்தால் இந்த அரிய அறிவுப்பொக்கிஷத்தை நாம் நம்புவதில்லை; ஒரு வேளை நம்பி செயல்படுத்திட ஆரம்பித்த பின்னர்,நான் இப்படிச் செய்யுறேன்னு நம்மைச் சுற்றியுள்ளவர்களிடம் நம்மால் பெருமையடிக்காமல் இருக்கமுடிவதில்லை;நம்மோடு இருப்பவர்கள் நமக்கு நன்மை மட்டுமே செய்வர் என்றுதான் நம்புகிறோம்;அவர்கள் பொறாமைப்படுவர் என்பதை உணருவதில்லை;நாம் இப்படி பெருமையடித்ததும்,அவர்கள் நுணுக்கமான ஒரு பொய்யை நம்மிடம் சொல்வதன் மூலமாக நமது ஜோதிட முயற்சியை பாதியிலேயே நிறுத்திவிடுகின்றனர்.  “ஆமாம்,இவன்/ள் மட்டும் இந்த ஜோதிட ஆலோசனையைப் பின்பற்றி பெரிய ஆளாயிட்டா. . .” தமிழ்நாடு முன்னேறாமல் போனதற்கு காரணமே இதுதான் காரணம்.
இந்த மைத்ர முகூர்த்த நேரம் இந்தியாவில் தமிழ்நாடு,ஆந்திரா,கர்நாடகா மற்றும் கேரளா,இலங்கை,மாலத்தீவு,லட்சத்தீவு,அந்தமான் பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும்.பிற நாடுகளில் வசிப்போர் இந்திய நேரத்திற்கும்,அந்த நாட்டின் நேரத்திற்கும் இருக்கும் வித்தியாசத்தை பொறுத்து மாறுபடும்.உதாரணமாக,இன்று காலை 9 முதல் 11 வரை ஒரு மைத்ர முகூர்த்த நேரம் இருப்பதாக வைத்துக்கொண்டால்,இங்கிலாந்தில் ஒருவர் இதே மைத்ர முகூர்த்த நேரத்தைப் பயன்படுத்திட,இந்தியாவின் நேரத்திலிருந்து 5.30 மணி நேரம் முன்னதாக வரும் நேரத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்தியாவுக்குள் கடன் தீர்க்கும் நேரமாக இதைக் கணித்திருக்கிறோம்.கனடாவில் வசிக்கும் ஒருவர்,இந்தியாவில் வாழும் ஒருவரிடம் கடன் வாங்கியிருந்தால்,இந்திய நேரப்படி கனடாவிலிருந்து,இந்தியாவில் இருப்பவரின் வங்கிக்கணக்கில் அசலை இந்த மைத்ர முகூர்த்த நேரத்தில் செலுத்த வேண்டும்.
தமிழ்நாட்டில் இருப்பவர்கள் செய்ய வேண்டியது:மாரிமுத்து என்பவரிடம் நான் ரூ.2,00,000/-கடனை 2007 இல் வாங்கியிருக்கிறேன்.இன்று வரையிலும் வட்டி மட்டுமே கட்டிக்கொண்டிருக்கிறேன் எனில்,பின்வரும் மைத்ர முகூர்த்த நேரப்பட்டியல் நேரங்களில் மாரிமுத்துவிடம் வாங்கிய கடனில் அசலில் ஒரு பகுதியை திருப்பிச் செலுத்த வேண்டும்.அது ரூ.1000/- ஆக இருந்தாலும் சரி,ரூ.500/- ஆக இருந்தாலும் சரி;அப்படி ஒரே ஒரு முறை அசலில் ஒரு பகுதியை திருப்பிச் செலுத்தினாலே,மீதி ரூ.1,99,000/- அல்லது ரூ.1,99,500/- வெகு சீக்கிரமாக தீர்ந்துவிடும்.இந்த நேரத்தில் வட்டியை செலுத்தக் கூடாது.கந்துவட்டிக்கு இது பொருந்தாது;மீட்டர் வட்டி,கடப்பாறை வட்டி போன்றவைகளுக்கும் இது பொருந்தாது.
 
விஜய & ஜய வருடத்தின் மைத்ர முகூர்த்தம் வரும் நாட்கள்(1.9.2014 முதல் 13.4.2015 வரை)
2.9.14 செவ்வாய் காலை 11.04 முதல் மதியம் 1.04வரை;
12.9.14 வெள்ளி இரவு 8.20 முதல் 10.20 வரை;
29.9.14 திங்கள் காலை 9.44 முதல் 11.44 வரை;
9.10.14 வியாழன் மாலை 6.30 முதல் 8.30 வரை;
26.10.14 ஞாயிறு காலை 7.34 முதல் 9.34 வரை;
5.11.14 புதன் மாலை 6.36 முதல் இரவு 8.36 வரை;
23.11.14 ஞாயிறு காலை 6.20 முதல் 8.20 வரை;
3.12.14 புதன் மதியம் 3.04 முதல் மாலை 5.04 வரை;
20.12.14 சனி காலை 4.16 முதல் 6.16 வரை;
30.12.14 செவ்வாய் மதியம் 1 முதல் 3 வரை;
16.1.15 வெள்ளி விடிகாலை 2.05 முதல் 4.05 வரை;
27.1.15 செவ்வாய் மதியம் 12.44 முதல் 2.44 வரை;
13.2.15 வெள்ளி இரவு 12 முதல் 2 வரை;
23.2.15 திங்கள் காலை 10.40 முதல் மதியம் 12.40 வரை;
11.3.15 புதன் இரவு 10.15 முதல் 12.15 வரை;
23.3.15 திங்கள் காலை 6.34 முதல் 8.06 வரை;
8.4.15 புதன் இரவு 8.24 முதல் 10.24 வரை;

ருத்ராட்சம் அணிவதுபற்றி சிவபுராணம்


  பஞ்சாட்சர மந்திரங்களை உச்சரித்தல்,திருநீறு தரித்தல்,ருத்ராடம் அணிதல் இம்மூன்றையும் ஒருவன் ஒருசேர செய்வது: திரிவேணி சங்கமத்தில் நீராடுவதன் புண்ணியத்தைப் பெற்றுத்தரும்.
ருத்ராட்சங்களை எண்ணற்ற அளவில் உடலில் தரித்துக் கொள்பவன்,மகேசனைப் போல அனைத்துத் தேவர்களாலும் தலை தாழ்ந்து வணங்கப்படுகிறான்.

  ஒருவன் எவ்வகைப் பிறவி எடுத்திருந்தாலும் சரி, அவன் ருத்ராட்சத்தை அணிவானாகில்,நரகங்களிலிருந்து விடுபடுகிறான்.
எவ்வகை வர்ணத்தை(ஜாதியை)ச் சேர்ந்தவனாக இருந்தாலும் சரி;எவ்வகை ஆசாரத்தைக் கடைபிடிப்பவராயினும் சரி; பெண்களாயினும் சரி; அவர்கள் ‘ஓம் நமசிவாய’ என்னும் மந்திரத்தை உச்சரித்து,ருத்ராட்சங்களை அணிந்து கொள்ளலாம்.

 ருத்ராட்சத்தை ஒருவன்/ள் ஒரு பகலில் அணிந்திருப்பானாயின், அவன் இரவில் செய்த பாவங்களை அது எரித்துவிடும்.இரவில் அணிந்திருப்பானாகில் அது அவன் பகலில் செய்த பாவங்களை எரித்துவிடுகிறது.ஆதலால் ஒருவன் எந்நேரமும் ருத்ராட்சங்களை அணிந்து கொண்டிருக்க வேண்டும்.

  ருத்ராட்சமும் திருநீறும் அணிந்தவன் ஒருபோதும் யமலோகம் செல்வதில்லை;

  ருத்ராட்சம் அணிந்து ஒருமுறை எவ்வித மந்திரம் கூறினாலும்,அதை 1,00,00,000 முறை உச்சரித்த பலனைத் தரும்.
ருத்ராட்சம் அணிந்து ம்ருத்யுஞ்ச மந்திரம் உச்சரிப்பவன் எல்லாவித நோய்களிலிருந்தும் விடுபடுகிறான்.அவனை அகால மரணமோ,துர்மரணமோ நெருங்குவதில்லை.

ருத்ராட்சம் அணிவது பற்றி ஸ்ரீமத் தேவி பாகவதம்

 



  எவ்வித மந்திரங்களை உச்சரிக்காதவனும்,எவ்வித யாகங்களைச் செய்யாதவனும் கூட ருத்ராட்ச மணிகளை வெறுமனே தொடுவதன்மூலம் தன் பாவங்கள் அனைத்திலிருந்தும் விடுபட்டு மறுபிறவியில் ருத்ரனாகவே அவதரிக்கிறான்.

 ருத்ராட்சத்தை அணிபவனும்,வழிபடுபவனும் சம்சார பந்தங்களிலிருந்து விடுபட்டு,தொடரவிருக்கும் அனேக கோடி பிறப்புகளிலிருந்தும் விடுபடுகிறான்.

 ருத்ராட்சம் அணிந்த ஒருவனுக்கு உணவும்,உடையும் தருபவனும்,ருத்ராட்சம் அணிந்த சிவனடியார்களின் பாதங்களைக் கழுவிய நீரை தீர்த்தமாக ஏற்றுக்கொள்பவனும் அனைத்துப்பாவங்களிலிருந்தும் விடுபட்டு,சிவலோகத்தை அடைகிறான்.

 நம்பிக்கையோடும்,நம்பிக்கையில்லாமலும் ருத்ராட்சத்தை அணிந்துகொள்பவன் ருத்ர அம்சத்தைப் பெறுகிறான்.
ருத்ராட்சத்தின் மகிமையை என்னாலும் விளக்கிக் கூற முடியாது என்று சிவபெருமான் தேவிக்கு உரைத்ததாக ஸ்ரீமத் தேவிபாகவதம் கூறுகிறது.
அனைத்துவித ஸ்தோத்திரங்களை உச்சரிப்பதன்  மூலமும்,விரதங்களை அனுசரிப்பதன் மூலமும் அடைகின்ற பலனை,ஒருவன் ருத்ராட்சத்தை அணிந்து கொள்வதன் மூலம் பெறுவான்.

 ருத்ராட்ச மாலையை அணிந்தவருக்கு ஒருவன் உணவு அளிப்பானாகில்,அவனது 21 தலைமுறை மக்களும் பாவங்களிலிருந்து விடுபட்டு ருத்ரலோகத்தை அடைவார்கள்.
சண்டாளனாகப் பிறந்தவனும்,ருத்ராட்சத்தோடு தொடர்பு கொள்வானாயின் அவனது பாவங்கள் அவனை விட்டு விலகி ஓடிவிடும்.
கள் உண்பவனும்,மாமிசம் உண்பவனுமாகிய பாவியின் தலையில் ருத்ராட்சம் படுமேயானால் அவனது பாவங்கள் அனைத்தும் விலகும்.

 ருத்ராட்சமாலையை ஒருவன் வெறுமனே கையில் பிடித்திருந்தாலும், நான்கு வேதங்களையும்,சாஸ்திரங்களையும்,உபநிடதங்களையும் கற்றறிந்தவனைவிட சிறப்பு பெறுவான்.அனைத்துக் கல்வி வேள்விகளும் அவன் வசமாகின்றன.பல புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பலனைவிட அதிக பலனைப் பெறுகிறான்.
ஒருவன் மரணம் அடையும் தருவாயில் ருத்ராட்சத்தை தரித்துக் கொண்டிருப்பானாகில்,அவன் இறந்தபின் ருத்ர லோகத்தை அடைகிறான்.

 பிறப்பால் ஒருவன் பிராமணனோ அல்லது சண்டாளனோ அல்லது மிலேச்சனோ; உண்ணக்கூடாததை உண்பவனோ யாராகிலும் அவன் ருத்ராட்சத்தை அணிவானாகில் அவன் ருத்ரனுக்கு இணையாகிறான்.

 ருத்ராட்சத்தைத் தலையில் தரிப்பவன் கோடி புண்ணியங்களைப் பெறுவான்.காதுகளில் அணிபவன் பத்துகோடிப் புண்ணியங்களைப் பெறுகிறான்;கழுத்தில் அணிபவன் நூறுகோடிப் புண்ணியங்களைப் பெறுகிறான்;பூணூலில் அணிபவன் ஆயிரம் கோடிப் புண்ணியங்களைப் பெறுகிறான்;கைகளில் அணிபவன் லட்சம் கோடிப் புண்ணியத்தைப் பெறுகிறான்; இடுப்பில் அணிபவன் மோட்சத்தை அடைகிறான்.

 ருத்ராட்சத்தை அணிந்தவாறு , வேத நியமங்களை ஒருவன் கடைபிடிப்பானாகில் அவன் பெறும் பலன்களை அளவிட முடியாது;
கழுத்தில் ருத்ராட்ச மாலையை அணிந்தவன் இந்த உலகத்தளைகளிலிருந்து விடுபடுகிறான்.
ருத்ராட்சம் அணிந்தவன் சிவபெருமானைப் போலவே முப்பத்துமுக்கோடி தேவர்களாலும் வணங்கப்படுகிறான்.
ருத்ராட்சத்தைத் தலையில் தரித்து ஒருவன் நீராடுவான் எனில்,ருத்ராட்சத்தைத் தொட்ட நீர் அவன் உடலைத் தீண்டுமாயின்,அது கங்கையில் நீராடியதைவிட அதிகப்புண்ணியப்பலன்களைத் தரும்.

 மனிதன் மட்டுமல்ல;ஓரறிவுள்ள பிராணிகள் முதல் ஐந்தறிவுள்ள உயிர்கள் வரை ருத்ராட்சத்தோடு சம்பந்தம் பெற்றால்,அவை அனைத்தும் மறுபிறவியில் சிவலோகத்தை அடைந்தே தீரும்.பல்வேறு யுகங்களில் நாயும்,கழுதையும்,கோழியும், ருத்ராட்சத்தோடு தொடர்பு பெற்றதால் அவை சிவலோகம் சென்றடைந்தன.மறு ஜன்மத்தில் சிறந்த சிவ பக்தர்களாகப் பிறந்தன.

உருத்திரனும் உருத்திராட்சமும்-பற்றி இ.அ.மகாராசன்










Tuesday, 16 September 2014

மகத்தான ஸ்ரீ பைரவ மந்திரம்


இறைவன் பிரபஞ்சத்தை படைத்த காலத்தில் பிரம்மா, விஷ்ணு முதலான தெய்வங்கள் தோன்றினார்கள். ஒரு காலத்தில் படைப்புக் கடவுளான பிரம்மாவுக்கும், காக்கும் கடவுளான விஷ்ணுவுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற பேதம் உண்டாயிற்று. இவர்களின் பேதத்தை போக்குவதற்காக இறைவன் சிவபெருமான் ஆதி அந்தம் இல்லாத அக்னி ரூபத்தை காட்டி உங்களில் யார் என் அடி முடியை முதலில் காண்கிறீர்களோ அவர்களே பெரியவர் என்று கூறினார். பிரம்மாவும், விஷ்ணுவும் உடனே அடி முடியை காண்பதற்காக விரைந்தனர். பல யுகங்கள் கடந்து பயணித்தும் காணமுடியவில்லை, அந்த சமயம் இறைவனின் முடியில் இருந்து வந்த கங்கையை பிரம்மா கண்டார். உடனே நான் எம்பெருமானின் முடியை கண்டேன் என்று பொய் உரைத்தார். அந்த கனத்தில் அக்னி பிழம்பில் இருந்து கடும் உக்ரத்தோடு ஸ்ரீ கால பைரவர் தோன்றி, பிரம்மாவின் ஒரு சிரஸை கொய்தார். இவராக ஸ்ரீ கால பைரவர் தோன்றினார் என புராணங்கள் கூறுகிறது.

ஸ்ரீ கால பைரவரின் மந்திரத்தை கடுமையான விரதத்தோடு பாராயணம் செய்து வந்தால் பில்லி, சூனியம், ஏவல் மற்றும் எப்பேற்பட்ட தீய சக்திகளிடம் இருந்தும் நம்மை துன்பம் அனுகாது. பைரவருக்குரிய மந்திரங்களில் மூன்று(3) மந்திரங்கள் வருமாறு.

“ஓம் பைரவாய நமஹ”

“ஓம் ப்ராம் பைரவாய நமஹ”

“ஓம் நமோ ருத்ராய கபாலியாய
பைரவாய த்ரைலோக் நாதாய
ஓம் ஹ்ரீம் பட் சுவஹா”

சனிக்கிழமைகளிலோ, பிரதோஷ தினங்களிலோ, ஞாயிற்றுக்கிழமை ராகு காலங்களிலோ, செவ்வாய்க்கிழமைகளிலோ அல்லது மிக முக்கியமாக தேய்பிறை அஷ்டமி தினத்தன்றோ ஸ்ரீ பைரவரின் சன்னிதியில் வெண்பூசணியில் நல்லெண்ணெய் விட்டு பஞ்சுத் திரியில் விளக்கேற்ற வேண்டும். தினமும் 48 முறை ஜபம் செய்து வந்தால் துன்பங்களுக்கு துன்பம் தரும் தூய சக்தியாகி விடுவோம். பைரவர் சன்னதிக்கு சென்றது முதல் வீடு திரும்பும் வரை யாரிடமும் பேசாமல், எதுவும் சாப்பிடாமல் இருக்க வேண்டும். அசைவ உணவு பழக்கம் முழுவதுமாக தவிர்த்திட வேண்டும். சனிக்கிழமைகளில் தொடர்ந்து ஜபம் செய்து வருவது நல்ல பலன்களை உணரலாம்.

ஸ்ரீ மஹா மிருத்யுஞ்சய மந்திரம்

 
மந்த்ரம்:
ஓம் த்ரியம்பகம் யஜா மஹே,
சுகந்திம் புஷ்டி வர்தனம்;
உருவாருகமிவ பந்தனான்,
ம்ரித்யோர் மோக்ஷியே மா அம்ருதாத்.

பொருள் :
மூன்று கண்களை உடைய, சுகந்தமான நறுமணத்தை உடைய, நம் எல்லோருக்கும் உணவு அளிப்பவரும், நம்மை வளர்ச்சி அடைய செய்பவருமான சிவ பெருமானை போற்றி வணங்குகிறோம். விளா பழம் எப்படி தன் காம்பில் இருந்து பிரிந்து விழுகிறதோ, அதே போல நம்மை பந்தங்களில் இருந்து விடுவித்து, மரணம் என்னும் பயத்தில் இருந்து விடுவித்து, அழியாத நிலை அதாவது மோக்ஷ நிலை அடைய செய்வாயாக. என்றும் அழியாதவனே ஈஸ்வரா.

பஞ்சாட்சரம்


ஸ்தூல பஞ்சாட்சரம் - நமசிவய
சூட்சும பஞ்சாட்சரம் - சிவயநம
காரணபஞ்சாட்சரம் - சிவ சிவ

மந்திர சாஸ்திரம் மிகவும் நுட்பமான செயல் திட்ட வரையறைகளை கொண்ட சூட்சுமமானது. அதில் பல்வேறு தேவதா ரூபங்களின் வடிவங்கள் சப்த வடிவில் அடங்கியுள்ளது. அதை சப்த பிரம்மம் என்றே வழங்குவார்கள். ஸ்தூல சாரம், சூட்சும சாரம், காரண சாரம் என்று மூன்று வித தேக அமைப்புகள் நமக்கு உண்டு. ஸ்தூல சாரமான இந்த பரு உடலுக்குள் சூட்சும சாரமும் அதற்குள் காரண சாரமும் அடங்கியுள்ளது. ஒரு மந்திரத்தை உச்சரிப்பதற்கு முன்பு பலவித துவக்கநிலை செயல்பாடுகள் அவசியமாகின்றது. மந்திரங்கள் பஞ்சபூதங்களோடு தொடர்பு படுத்தபடுகின்றன. பஞ்சாட்சர மந்திரத்தின் சிறப்புகளை காணலாம்.

ஸ்தூல பஞ்சாட்சரம்
நமசிவய” என்னும் ஸ்தூல பஞ்சாட்சரம் ஓம்கார பிரணவத்தோடு சேர்த்து “ஓம் நமசிவய” என்று உச்சரிப்பதே மரபாகும். சித்தர்கள் இம் மந்திரத்தை பஞ்சபூதங்களின் ஒருமித்த வெளிப்பாடகவே உணர்ந்தனர். இம் மந்திரத்தில் சித்தி அடைவதால் பஞ்சபூதங்கள் கட்டுப்படுவதொடு ஐம்பொறிகளும் நமது கட்டுக்குள் அடங்கி நிற்கும். பஞ்சபூதங்களில் இம் மந்திரத்தின் ஆளும் தன்மை

ந – நிலத்தைக் குறிக்கிறது,
ம – நீரைக் குறிக்கிறது,
சி – நெருப்பைக் குறிக்கிறது,
வ – காற்றைக் குறிக்கிறது,
ய – ஆகாயத்தைக் குறிக்கிறது.

சிவ மகாபுராணத்தில் வாயு சம்ஹிதையில் உள்ள உத்தர பாகத்தின் ஆரம்பத்தில் ஐந்து அட்சரங்களும் அதற்கு உரிய நிறங்களும், ரிஷிகளும், சிவபெருமானுடைய எந்தெந்த முகத்துக்கு எந்தெந்த அட்சரங்கள் என்று தெளிவாக விளக்கப்பட்டிருகிறது.

ந - கிழக்கு நோக்கிய முகத்திற்கு உரியது, மஞ்சள் நிறம், கௌதம மகரிஷி
ம – தெற்க்கு நோக்கிய முகத்திற்கு உரியது, கருப்பு நிறம், அத்திரி மகரிஷி
சி – மேற்க்கு நோக்கிய முகத்திற்கு உரியது, புகையின் நிறம், விஸ்வாமித்ர மகரிஷி
வ – வடக்கு நோக்கிய முகத்திற்கு உரியது, பொன்னிறம், ஆங்கீரஸ மகரிஷி
ய –மேல் நோக்கிய திருமுகத்திற்கு உரியது, சிவந்த நிறம், பரத்வாஜ மகரிஷி

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமசிவாயவே

என்று திருஞானசம்பந்தரின் நமசிவாய பதிகம் உள்ளம் உருக நமசிவய மந்திரத்தின் பெருமையை உயிரும் உருக விவரிக்கிறது.

சூட்சும பஞ்சாட்சரம்
சிவய நம” என்பது சூட்சும பஞ்சாட்சரம் ஆகும். இம் மந்திரம் பிரணவத்தோடு சேர்த்து “ஓம் சிவய நம” என்றே உச்சரிக்க வேண்டும். சிவபெருமானின் ஐந்து முகங்களில் இருந்து ஓம் எனும் பிரணவம் உதித்தது. வாமதேவம் வடக்கு முகத்திலிருந்து ‘அ’ காரமும், சத்யோஜாதம் மேற்க்கு முகத்திலிருந்து ‘உ’ காரமும், அகோரம் தெற்கு முகத்திலிருந்து ‘ம’ காரமும், தத்புருஷம் கிழக்கு முகத்திலிருந்து ‘பிந்து’ எனப்படும் நாதத்தின் தொடக்கமும், ஈசானம் மேல் நோக்கிய முகத்திலிருந்து நாதமான சப்த ரூபமும் தோன்றின. இவ்வாறு ஓம் என்ற பிரணவத்தோடு சிவய நம சேர்ந்து முழுமையான மந்திரஸ்வரூபம் உருவானது.

அவ்வும், உவ்வும், மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே
என்று சிவ வாக்கியர் மிக அழகாக கூறுகிறார்.

சிவய நம என்று சிந்தித்திருப்போர்க்கு அபாயம் ஒரு நாளுமில்லையே
என்ற உத்திரவாதத்தை மிகவும் உறுதியாக தருகிறார் ஔவையார்.

சித்தம் ஒருங்கிச் சிவய நம என்று இருக்கினல்லால்
அத்தன் அருள் பெறலாமோ அறிவிலாப் பேதை நெஞ்சே...
என்று திருநாவுக்கரச பெருமான் தமது நெஞ்சத்திற்கே எடுத்து சொல்கிறார்.

திருவாய் பொலியச் சிவய நம என்று நீறணிந்தேன்
தருவாய் சிவகதி நீ பாதிரிப் புலியூர் அரனே
என்று உளமுருகப் பிரார்த்திக்கிறார் மாணிக்க வாசக! என்று சிவபெருமானாலேயே அழைக்கப்பட்ட திருவாதவூரார்.

காரண பஞ்சாட்சரம்
“சிவ சிவ என்றிடத் தீவினை மாலும்
சிவ சிவ என்கிலார் தீவினையாளர்
சிவ சிவ என்றிடத் தேவருமாவர்
சிவ சிவ என்னச் சிவ கதி தானே”

என்று திருமந்திரம் சிவ சிவ என்பதன் மகத்துவத்தை பற்றி சொல்கிறது. அது காரணப் பஞ்சாட்சரம் என வழங்கப்படும்.சிவ சிவ எனும் மந்திரம் நமது காரண சாரத்தில் உள்ள பிறள் பதிவுகளை நீக்க வல்லது என்பது ஞானியாரின் அழ்ந்த கருத்து. இந்த மந்திரத்தில் சாதாரண உலகின் ஆசாபாசங்களுக்கு அப்பாற்பட்ட, ஞான நிலைக்கு ஒருவரை இட்டு செல்லக்கூடியது. ஆகையால் இந்த மந்திரத்தின் மூலமாக லவ்கீக லாபங்களை எதிர் பார்க்க முடியாது. அதாவது உலகியல் குறிகோள்களை பூர்த்தி செய்த ஒருவருக்கு (துறவு நெறி பூண்டவர்களும், மிக வயதானவர்களும்) இந்த மந்திரம் பொருத்தமானது.

ருத்ராட்சம் அணியும் முறை மற்றும் உண்மைத்தன்மை




ருத்ராட்சம் அணிவதாயின் முதலில் உண்மையான ருட்ரட்சத்தை அறிந்து வாங்க வேண்டும். ருத்ராட்சம் ஒரு முகத்தில் இருந்து இருபத்தியொரு முகங்கள் வரை உள்ளன. ஒரு இலந்தைப் பழத்தின் அளவுள்ள ருத்ராட்சம் மத்தியமான தரம், அதன் அளவு கூட கூட அதன் தரம் உயரும், அளவு குறைய குறைய தரம் குறையும்.

பத்ராட்சம் என்ற மணி ருத்ராட்சம் போலவே இருக்கும், அவை நல்ல பலன்களைத் தராது. உண்மையான ருத்ராட்சத்தை நீரில் போட்டால் மூழ்கி விடும் போலியானவை மிதக்கும். மேலும் கல்லில் உரைக்கும் போது தங்க நிற கோடுகள் கல்லில் பதியும். இரு செம்பு நாணயங்கள் நடுவில் ருத்ராட்சத்தை வைத்தால், மின் சுழற்சியின் காரணமாக அது சுழலும். இவ்வாறு உண்மையான ருத்ராட்சத்தை சில ஆய்வுகள் மூலம் கண்டறியலாம். தாவர வகைகளில் மின் காந்த சக்தி ஒரு குறிப்பிடும் அளவு உள்ளது ருட்ராட்சதில் மட்டும்தான்.

ருத்ராட்சத்தை அணிவதாயின் சிவப்பு நிற நூலில் அணியவேண்டும். அல்லது செம்புக் கம்பியிலோ, தங்கக் கம்பியிலோ, வெள்ளிக் கம்பியிலோ அணியலாம். ஒரு சிவனடியாரிடம் இருந்து ருத்ராட்சத்தை அணியும் வழிமுறைகளை கேட்டு தெரிந்து கொள்வது நல்லது.

ஒரு நன்னாளில் நமக்குகந்த ருத்ராட்சத்தை வாங்கி சுத்தமான நீரில் கழுவிய பின்பு காய்ச்சாத பசும்பால், தேன், கற்கண்டு பொடி, நெய், தயிர் ஆகிய ஐந்து பொருட்களையும் ஒன்றாக கலந்து அபிசேகம் செய்ய வேண்டும். பிறகு சுத்தமாக துடைத்துவிட்டு ஒரு வளர்பிறை திங்கட்கிழமை அதிகாலையில் திருகோவிலில் பூஜை செய்து அணியவேண்டும்.

ருத்ராட்சத்தை தினமும் அணிவதற்கு முன்பாக நமது இஷ்ட தேவதா மந்திரத்தை நிச்சயமாக சொல்ல வேண்டும். சர்வ மந்திரங்களும் வசியம் ஆகக்கூடிய சிறந்த காந்த ஈர்ப்பு மண்டலத்தைக் கொண்டது ருத்ராட்சம்.

Thursday, 4 September 2014

அர்ச்சனை செய்யக் கூடாதது



விஷ்ணுவை அக்ஷதையால் அர்ச்சிக்கக் கூடாது.
பவளமல்லியால் சரஸ்வதியை அர்ச்சனை செய்யக் கூடாது.விஷ்ணு சம்பந்தமான தெய்வங்களுக்கு மட்டுமே துளசி தளத்தால் அர்ச்சனை செய்யலாம். அதுபோல, சிவசம்பந்தமுடைய தெய்வங்களுக்கே வில்வார்ச்சனை செய்யலாம்.
விநாயகரை துளசியால் அர்ச்சனை செய்யக் கூடாது.
 (விநாயகர் சதுர்த்தியன்று மட்டும் அர்ச்சனைசெய்யலாம்.)
பரமசிவனுக்குத் தாழம்பூ உதவாது. தும்பை, வில்வம், கொன்றை முதலியன விசேஷம். ஊமத்தை, வெள்ளெருக்கு ஆகியவற்றாலும் அர்ச்சிக்கலாம்.துலுக்க சாமந்திப்பூவைக் கண்டிப்பாக உபயோகப்படுத்தக் கூடாது.
மலரை முழுவதுமாக அர்ச்சனை செய்ய வேண்டும். இதழ் இதழாகக் கிள்ளி அர்ச்சனை செய்யலாகாது.
வாடிப்போன, அழுகிப்போன, பூச்சிகள் கடித்த மலர்களை உபயோகிக்கக் கூடாது.
அன்று மலர்ந்த மலர்களை அன்றைக்கே உபயோகப்படுத்த வேண்டும்.
ஒரு முறை இறைவன் திருவடிகளில் சமர்ப்பிக்கப்பட்ட மலர்களில் எடுத்து, மீண்டும் அர்ச்சனை செய்யக் கூடாது. வில்வம், துளசி ஆகியவற்றை மட்டுமே மறுபடி உபயோகிக்கலாம்.

தாமரை, நீலோத்பலம் போன்ற நீரில் தோன்றும் மலர்களை தடாகத்திலிருந்து எடுத்த அன்றைக்கே உபயோகப்படுத்த வேண்டும் என்கிற விதியில்லை.
வாசனை இல்லாதது, முடி, புழு ஆகியவற்றோடு சேர்ந்திருந்தது, வாடியது, தகாதவர்களால் தொடப்பட்டது, நுகரப்பட்டது, ஈரத்துணி உடுத்திக் கொண்டு கொண்டு வரப்பட்டது, காய்ந்தது, பழையது, தரையில் விழுந்தது ஆகிய மலர்களை அர்ச்சனைக்கு உபயோகப் படுத்தக்கூடாது.சம்பக மொட்டுத் தவிர, வேறு மலர்களின் மொட்டுகள் பூஜைக்கு உகந்தவை அல்ல.
மலர்களைக் கிள்ளி பூஜிக்கக் கூடாது. வில்வம், துளசியைத் தளமாகவே அர்ச்சிக்க வேண்டும்.முல்லை, கிளுவை, நொச்சி, வில்வம், விளா-இவை பஞ்ச வில்வம் எனப்படும். இவை சிவபூஜைக்கு உரியவை.துளசி, முகிழ்(மகிழம்), சண்பகம், தாமரை, வில்வம், செங்கழுநீர், மருக்கொழுந்து, மருதாணி, தர்பம், அருகு, நாயுருவி, விஷ்ணுக்ராந்தி, நெல்லி ஆகியவற்றின் இலை பூஜைக்கு உகந்தவை.
பூஜைக்குரிய பழங்கள் நாகப்பழம், மாதுளை, எலுமிச்சை, புளியம்பழம், கொய்யா, வாழை, நெல்லி, இலந்தை, மாம்பழம், பலாப்பழம்.
திருவிழாக் காலத்திலும், வீதி வலம் வரும் போதும், பரிவார தேவதைகளின் அலங்காரத்திலும் மற்றைய நாட்களில் உபயோகிக்கத் தகாததென்று விலக்கப்பட்ட மலர்களை உபயோகிக்கலாம்.அபிஷேகம், ஆடை அணிவிப்பது, சந்தன அலங்காரம், நைவேத்யம் முதலிய முக்கிய வழிபாட்டுக் காலங்களில் கட்டாயமாகத் திரை போட வேண்டும். திரை போட்டிருக்கும் காலத்தில் இறை உருவைக் காணலாகாது.குடுமியுள்ள தேங்காயைச் சமமாக உடைத்துக் குடுமியை நீக்கி விட்டு நிவேதனம் செய்ய வேண்டும்.பரு விரலும் மோதிர விரலும் சேர்த்துத் திருநீறு அளிக்க வேண்டும். மற்ற விரல்களைச் சேர்க்கக் கூடாது.கோவில்களில், பூஜகர்களிடமிருந்துதான் திருநீறு போன்ற பிரசாதங்களைப் பெற வேண்டும். தானாக எடுத்துக் கொள்ளக் கூடாது.பூஜையின் துவக்கத்திலும், கணபதி பூஜையின் போதும், தூபதீபம் முடியும் வரையிலும், பலிபோடும் போதும், கை மணியை அடிக்க வேண்டும்.

பித்ரு சாபம் அல்லது ப்த்ரு தோஷம் எப்படி உண்டாகிறது


ஒவ்வொரு தலைமுறையிலும் தற்கொலை மற்றும் கொலை நடைபெறத்தான் செய்கிறது.இவ்வாறு செயற்கையான முறையில் இறந்தவர்களின் ஆத்மாக்களுக்கு மறுபிறவி இல்லாமல் அலைந்து கொண்டிருக்கும்;அவர்களின் நான்காம் ஐந்தாம் தலைமுறையினரை இது பீடிக்கும்.பாட்டன் காலத்து சொத்தை மட்டுமா நாம் அனுபவிக்கிறோம்? இல்லை பாட்டன் காலத்து பாவங்களையும் சேர்த்துத் தான் அனுபவிக்கிறோம்.சுலபமாக விளக்கம் இதோ:
 
எனது அப்பாவின் தாத்தாவின் சகோதரி அவரதுபிறந்த ஜாதகப்படி 71 வயது வரை வாழ வேண்டியவர் என்று வைத்துக்கொள்வோம்;அவர் 17 ஆம் வயதில் குடும்ப கவுரவத்துக்காக கொலை செய்யப்பட்டாலோ/ குடும்ப விரோதத்தினால் வேற்று குடும்பத்தாரால் கொல்லப்பட்டாலோ,இறந்த அந்த தாத்தாவின் சகோதரி எங்கு கொல்லப்பட்டாரோ,அந்த இடத்தில் 71 ஆம் வயது வரை ஆவியாக இருப்பார்;முறைப்படி அவரது ஆயுள் முடிந்ததும்,எம லோகத்திற்கு ஓராண்டு வரை பயணிப்பார்;அங்கு அவர் 17 வயது முதல் 71 வயது வரையிலும் எந்த ஒரு நன்மை தீமைகளையும் அனுபவிக்க முடியாமல் இருந்தது கண்டு,அவர் விசாரணைக்கைதியாக ஒதுக்கி வைக்கப்படுவார்;இவ்வாறு இறந்தவர்களின் எண்ணிக்கை ஒரு பரம்பரையில் ஐந்துபேர்களைத் தாண்டினால்,நான்காம்/ஐந்தாம் தலைமுறையில் இருந்து பித்ருதோஷம் வேலை செய்யும்.

 
ஒருவரின் ஜாதகத்தில் ராகு ,லக்னத்துக்கு 3,5,9 ஆம் இடங்களில் ஒன்றில் இருந்தால் அப்பாவழி பித்ரு தோஷம் என்றும்,கேது இந்த இடங்களில் இருந்தால் அம்மாவழி பித்ரு தோஷம் என்றும் அறியலாம்.இந்த ஜாதகருக்கு அப்பா வழி பித்ரு தோஷம் இருக்கிறது எனில்,இவரது அப்பாவின் உடன் பிறந்த சகோதரசகோதரிகளின் குழந்தைகளில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் இதே பித்ரு தோஷம் கண்டிப்பாக இருக்கும் என்பது நிச்சயம்.
இந்த பித்ரு தோஷம் நாம் சேர்க்கும் எந்த ஒரு புண்ணிய காரியத்தையும் நம்மிடம் சேர்க்காமல் தடுக்கும் சக்தி வாய்ந்தது

மந்திரங்கள் ஏழு கோடி


சைவ சமய நூல்களைச் சான்றோர் தோத்திரம், சாத்திரம் என இருவகையாகப் பகுத்துள்ளனர். தோத்திரம் அன்பின் அடிப்படையில் எழுவது. சாத்திரம் அறிவின் அடிப்படையில் எழுவது.
                                             
 
                                                         தோத்திரம்
 
இறைவனது கருணைப் பெருக்கால் நடைபெறும் ஐந்தொழிற் சிறப்புகளையெல்லாம் அன்பினால் ஆவியோடு ஆக்கை ஆனந்தமாய்க் கசிந்துருகப் புகழ்ந்து பாடுதல் தோத்திரம் எனப்படும்.
 
                                                   சாத்திரம்
 
சாத்திரம் என்பதும் அன்புடையார் அறிவு மிகுதிப்பாட்டால் இறைவன் பெருமைகளையும் உயிர்களின் சிறுமைகளையும் உலக இயல்புகளையும் திருவருள் வலிமையால் ஒக்க ஆய்ந்து மக்கள் கடைத்தேற அருளிச் செய்ததாகும்.
 
இவ்விரு வகையிலும் பல நூல்கள் இருப்பினும் சைவ உலகில் சமயாச்சாரியர் உள்ளிட்ட 27 ஆசிரியர்கள் அருளிய 12 திருமுறைகளே சிறப்பாகத் தோத்திரங்கள் எனப் போற்றப் பெறுவன.
 
இதேபோல் சந்தானாச்சாரியர் உள்ளிட்ட அறுவர் அருளிச் செய்த பதினான்கு நூல்களே சாத்திரங்கள்.
 
இந்த அடிப்படையில் பார்த்தால், திருமூலர் அருளிச் செய்த திருமந்திரம் தோத்திரத்தை விட சாத்திரக்கூறுகளே அதிகம் உள்ளன. இது பத்தாம் திருமுறையாகப் போற்றப்பெறுவது.
 
மந்திரங்கள் எழுகோடி  என்றால் ஏழு கோடி மந்திரங்கள் என்பது பொருள் அல்ல. ஏழு முடிவுகளை உடைய மந்திரங்கள் என்பதே பொருளாகும்.
 
                                 எழுகோடி மந்திரங்கள்
 
                                  நமஹா      -ஐஸ்வர்யம் அளிப்பது.
 
                                   சுவாஹா   -தேவதைகளைத் திருப்தி செய்வது.
 
                                   சுவதா         -தைரியம், வசீகரம் கொடுப்பது.
 
                                   பட்                 -விக்கினங்களைத் துரத்துவது.
 
                                   உம்பட்         -காமாதிகளைப் போக்குவது.
 
                                   வௌஷட்  -தேவதைகளை இழுப்பது.
 
                                    வஷட்          -தேவதைகளை வசம் செய்வது.
 
திருமுறைகள் அனைத்துமே மந்திரங்கள் ஆகையினால் ஏழு   முடிவுகளை  வைத்தே மூவர் தேவாரங்களை 7 திருமுறைகளாக வகுத்தனர்.