Tuesday, 22 April 2014

திருமூலர் கூறும் பகலிரவில்லாத ஆனந்த நிலை



         மூச்சுப் பயிற்சியை முறையாகச் செய்யும் வழிமுறைகளை சில திருமந்திரப் பாடல்களிலிருந்து அறிந்துகொண்டோம். இந்த மூச்சுப் பயிற்சிகளின் இலக்கு என்ன? இதற்கான விடையையும் திருமந்திரப் பாடல்களிலேயே தேடிப் பார்க்கலாம்.

"கூடம் எடுத்துக் குடிபுக்க மங்கையர்

ஓடுவர் மீளுவர் பன்னிரண்டு அங்குலம்

நீடுவர் எண்விரல், கண்டிப்பர் நால்விரல்

கூடிக்கொள்ளில் கோல அஞ்செழுத்து ஆமே.'

-திருமந்திரம் பாடல் எண்: 569.

பருவுடலை ஒரு வீடாகவும் (கூடம்) இடகலை, பிங்கலை ஆகிய இரு நாடிகளையும் அந்த வீட்டில் குடிபுக வந்த இரு மங்கையர் களாகவும் பாடலின் முதல் வரியில் உருவகம் செய்கிறார் திருமூலர். நமது உடலில் உள்ள தசவாயுக்களை ஆண்பாலாகக் குறிப்பிடுவர். பிராணன், அபானன், உதானன், வியானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்செயன் என பத்து வாயுக்களுக்கும் ஆண்பால் பெயர்களே சூட்டப்பட்டுள்ளன.

நாடிகள் அனைத்தையும் பெண் பாலாகக் கூறுவது தொன்றுதொட்டே தமிழில் நிலவிவரும் ஒரு மரபாகும். திருமூலரும் அந்த மரபின்படியே இடகலை, பிங்கலை நாடிகளை இரு மங்கையராக உருவகப்படுத்தியுள்ளார். இந்த முதல் வரியில் ஒரு நுட்பமான சூட்சுமம் உள்ளது. "கூடம் எடுத்துக் குடிபுக்க மங்கையர்' என்ற தொடரை சற்றே கூர்ந்து கவனியுங்கள்.

கூடம் என்பது பருவுடல். நமது உடலிலுள்ள கண், காது, மூக்கு போன்ற அவயங்களும்; இதயம், நுரையீரல், குடல், கல்லீரல், மண்ணீரல் போன்ற உள்ளுறுப்புகளும் இந்தப் பருவுடலின் அங்கங்கள்; பருவுடலைச் சார்ந்தவை. இவை அனைத்தும் இணைந்தே பருவுடல் உருவாகிறது.

நாடிகள் இந்த வீட் டைச் சார்ந்தவை அல்ல! வெளியிலிருந்து இந்த வீட்டினுள் வந்து குடியேறியவை! நாம் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக் குடிபுகுகிறோம் அல்லவா? அது போன்றே இடகலை, பிங்கலை ஆகிய இரு மங்கையரும் இந்தப் பருவுடலின் உள்ளே குடிவந்துள்ளனர். ("கூடம் எடுத்துக் குடிபுக்க மங்கையர்').

நமது நாடிகள் அனைத்துமே சூட்சுமமானவை. நமது ரத்த நாளங்கள், நரம்புகள் போன்றவை பருவுடலைச் சார்ந்தவை; கண்ணுக்குத் தெரிபவை. ஆனால் பிராணசக்தியைச் சுமந்து செல்லும் நாடிகள் பருவுடலைச் சார்ந்தவை அல்ல. அவை நமது சக்தி உடலைச் (ஊய்ங்ழ்ஞ்ஹ் இர்க்ஹ்) சார்ந்தவை. எனவேதான் திருமூலர் நாடிகளை பருவுடலினுள்ளே குடிபுக வந்த மங்கையர் என வர்ணிக்கிறார்! இந்தக் கூடம் அழியும் நாள் வரும்போது குடிபுகுந்த மங்கையர் அதிலிருந்து வெளியேறிவிடுவர். சக்தி உடல்களுக்கும், அதிலுள்ள சக்கரங்கள், நாடிகள் போன்றவற்றிற்கும் அழிவு என்பது கிடையாது. ஆன்மா மறுபிறவி எடுக்கும் போது சக்தி உடல்களும் சக்கரங்களும் நாடிகளும் வேறொரு பருவுடலில் குடிபுகும்.

சுவாசம் என்பது உள்சுவாசம், வெளி சுவாசம் என இடையறாது நடந்து கொண்டேயிருக்கிறது. வலது நாசி, இடது நாசி (பிங்கலை, இடகலை நாடிகள்) வழியே இது மாறி மாறி நடைபெறுகிறது என்பதை ஏற்கெனவே கண்டோம். இந்த சுவாசமானது தலைக்குக் கீழே எட்டு விரற்கடையும் (அங்குலம்), தலைக்குள் நான்கு விரற்கடையும் பாய வேண்டும். மொத்தம் 12 விரற்கடை களே நலமான சுவாசத்தின் அளவாகும். இதையே இந்தப் பாடலின் இரண்டாவது அடியில் காண்கிறோம்.

"ஓடுவர் மீளுவர் பன்னிரண்டு அங்குலம்'.

ஒரு குழந்தை பிறக்கும்போது சுவாசத்தின் அளவு 12 அங்குலமாக இருக்கும். ஆனால் வளர வளர இது குறைந்து கொண்டே வரும். தவறான மூச்சு முறை, தவறான உணவுப் பழக்கங்கள், தவறான வாழ்க்கை முறைகளால் சுவாசத்தின் அளவு பாதிக்கப்பட்டு படிப்படியாகக் குறையும்.

வயது முதிர்ந்த நிலையில் (நீடுவர்) மூச் சின் அளவு எட்டு விரற்கடையே இருக்கும். தலைக்குக் கீழே மட்டுமே சுவாசம் பாயும். தலைக்கு உள்ளே செல்ல வேண்டிய நான்கு விரற்கடை சுவாசம் குறைந்து போய்விடும்.

"நீடுவர் எண் விரல், கண்டிப்பர் நால்விரல்'

என்ற மூன்றாவது அடி இதையே குறிக்கிறது.

இவ்வாறு குறைவுபடும் நான்கு அங்குல மூச்சை முறையான மூச்சுப் பயிற்சிகளின் மூலமாகக் கூட்டிக் கொண்டால் ("கூடிக் கொள்ளில்') நமது உடல் "நமசிவாய' எனும் ஐந்தெழுத்தாக மாறும். அதாவது உடல் சிவசொரூபமாகும். ("கோல அஞ்செழுத்து ஆமே'). ஜீவாத்மா வசிக்கின்ற இந்த உடல் நரை, திரை, மூப்பு நீங்கி, பரமாத்மாவின் அம்சமாக ஒளிவீசத் துவங்கும். இதுவே மூச்சுப் பயிற்சியின் நோக்கமும் இலக்கும் என்பதே இந்த திருமந்திரப் பாடலின் சுருக்கமான கருத்தாகும்.

இந்த நிலையை அடையும்போதுதான் எல்லையற்ற ஆனந்த நிலை மனதிலும் ஆன்மாவிலும் உருவாகும். இதையே "பரமானந்த நிலை' என்கிறோம். இந்த நிலையை அடைந்த ஆன்மாவில் "தான்' என்ற அகங்காரம் அழிந்து போகும். இரவு- பகல் என்ற பேதங்களும் அந்த ஆன்மாவிற்கு இராது. காலங்களைக் கடந்த ஒருவித பரவச நிலையில் இறைவனோடு ஒன்றி அந்த ஆன்மா வாழும். இதை அடுத்த பாடலில் திருமூலர் விளக்குகிறார்.

"பன்னிரண்டு ஆனைக்குப் பகல் இரவுள்ளது

பன்னிரண்டு ஆனையைப் பாகன் அறிகிலன்

பன்னிரண்டு ஆனையைப் பாகன் அறிந்தபின்

பன்னிரண்டு ஆனைக்குப் பகல் இரவு இல்லையே.'

-திருமந்திரம் பாடல் எண்: 570.

உயிருக்கு அடிப்படை மூச்சு எனும் பிராணன். பிராணன் இன்றி உயிர் இல்லை. எனவே பிராணனே உயிர் எனக் கொள்ளலாம். இந்தப் பிராணனையே "ஆனை' என்கிறார் திருமூலர். அது 12 விரற்கடை பாயும். எனவேதான் "பன்னிரண்டு ஆனை' என்கிறார். இடகலை, பிங்கலை ஆகிய இரு நாடிகளின் வழியே மாறி மாறி ஓடிக் கொண்டிருக்கும் இந்த ஆனைக்கு (மூச்சுக்கு) பகல்- இரவு என்ற பேதங்கள் உண்டு.

பகலில் இந்த ஆனை சற்றே விரைவாக நடைபோடும். இரவில் இதன் வேகம் குறையும். சாதாரணமாக நாம் அனைவருமே பகலில் ஒரு நிமிடத்திற்குப் பதினாறு முறை சுவாசிக்கிறோம் சற்றே கடினமான வேலை களில் ஈடுபடும்போது இது இன்னும் அதிக மாகும். இரவில் உறங்கும்போது உடலின் இயக்கங்கள் அனைத்தும் குறைவதால் தேவை யான பிராணனின் அளவும் குறைகிறது. அதற்கேற்ப மூச்சின் வேகமும் குறையும்.

இரவில் பெரும்பாலும் நிமிடத்திற்கு பன்னிரண்டு முறை என்ற அளவிலேயே இருக்கும். இவ்வாறு பகலிலும் இரவிலும் மூச்சில் ஏற்படும் மாறுதல்களையே,

"பன்னிரண்டு ஆனைக்குப் பகல் இரவுள்ளது'

என்று திருமூலர் குறிப்பிடுகிறார்.v உடலுக்கும் பிராணனுக்கும் அதிபதியாக இருப்பது "ஆன்மா'. இந்த ஆன்மாவையே "பாகன்' என்று உருவகம் செய்கிறார் திருமூலர். ஆன்மா என்பது உடலினுள் இருக்கும்வரைதான் பிராணனும் உடலில் தங்கியிருக்கும்; சுவாசமும் நடைபெறும். ஆன்மா பருவுடலை விட்டு நீங்கும்போது சுவாசமும் நின்றுவிடும். எனவேதான் சுவாசம் எனும் ஆனையை இயக்கும் பாகனாக ஆன்மாவைக் குறிப்பிடுகிறார்.

மூச்சை இயக்குவது ஆன்மாவே எனினும் அந்த மூச்சின் இயக்கங்களை ஆன்மா உணர்ந்து கொள்வதில்லை. இதையே,

"பன்னிரண்டு ஆனையைப் பாகன் அறிகிலன்'

என இரண்டாவது வரியில் திருமூலர் குறிப்பிடுகிறார். பாகனின் அறிதலும் புரிதலும் இன்றியே அந்த ஆனை தொடர்ந்து நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! மூச்சுப் பயிற்சிகளை மேற்கொள்ளாத அனைவரது உடலிலும் இதுவே நடைபெறுகிறது.

"பன்னிரண்டு ஆனையைப் பாகன் அறிந்தபின்

பன்னிரண்டு ஆனைக்குப் பகல் இரவு இல்லையே.'

மூச்சு எனும் ஆனையை அதன் பாகனா கிய ஆன்மா உணர்ந்து கொண்டு, முறையான மூச்சுப் பயிற்சிகளின் மூலமாக அதைத் தன்வசப்படுத்தியபின் அந்த ஆனைக்கு (மூச்சுக்கு) பகல் இரவு என்ற பேதங்கள் இல்லாமற் போகும். இது எப்படி சாத்தியமாகும்? சற்றே விரிவாகக் காணலாம்.

சாதாரணமாக சுவாசம் என்பது இடகலை, பிங்கலை ஆகிய இரு நாடி களிலுமே மாறி மாறி நடைபெறுகிறது. ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் நாடியில் மாற்றம் ஏற்படும் என்பதை ஏற்கெனவே கண்டோம். அதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

மொத்தமுள்ள நாடிகள் 72,000. இவற்றுள் சுழுமுனை, இடகலை, பிங்கலை ஆகிய மூன்றை முதன்மை நாடிகள் அல்லது மிக முக்கியமான நாடிகள் என்று கூறுகிறோம். இடகலையும் பிங்கலையும் சுழுமுனை நாடியைச் சுற்றி பாம்பு போல் பின்னிக் கிடப்பவை. இவை மூலாதாரத்தின் அருகிலிருந்து துவங்கி, மேலெழும்பி, நாசித் துவாரங்களில் சென்று முடிவடைகின்றன. இந்த நாடிகளில் மட்டுமே சுவாசம் நடைபெறும்போது நாசித் துவாரங்களில் துவங்கி மூலாதாரம் வரையிலேயே பிராணன் பாயும்.

முறையான மூச்சுப் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்துவரும்போது பிராணன் மூலாதாரத்தைக் கடந்து சுழுமுனை நாடியிலும் பாயத் துவங்கும்! இவ்வாறு சுழுமுனையில் பிராணன் பாயத் துவங்கும்போது மூலாதாரத்தின் கீழே உறங்கிக் கிடக்கும் குண்டலினி சக்தியும் தூண்டப்படும். குண்டலினி மேலெழும்பி சுழுமுனை வழியே மேல்நிலைச் சக்கரங் களைச் சென்று அடையும்போதுதான் எல்லையற்ற ஆனந்த நிலை உருவாகும். "காலம்' எனும் தளையிலிருந்து ஆன்மா விடுதலை பெறும்! பகல்- இரவு என்ற பேதங்கள் மறைந்து போகும்.

Saturday, 19 April 2014

கர்மா(பாவங்கள்)

போன ஜென்மத்தில் என்ன செய்தேன் எப்படிபட்டவனாக வாழ்ந்தேன் என்பது எனக்கு தெரியாது நான் செய்தது எல்லாம் பாவமாகவே இருக்கட்டும் அதற்கான தண்டனையாக இந்த வாழ்க்கை அமையட்டும் ஆனால் நான் கேட்பதெல்லாம் ஒன்று தான் அந்த பாவ சுமை என்னில் இருந்து நீங்க அல்லது அதன் கனம் குறைய நான் செய்ய வேண்டியது என்ன? என்பது தான் என்று பலர் ஏங்கி தவிக்கிறார்கள் உண்மையில் நமது பாவங்கள் தொலைவதற்காகவே மறு ஜென்மம் என்ற ஒன்றை கருணை கடலான கார்முகில் வண்ணன் நமக்கு தந்திருக்கிறான் ஆனால் இந்த பிறப்பு சென்ற பிறப்பின் பாவத்தை தொலைப்பதற்காக நாம் பெற்றிருக்கும் வரம் என்பதை நம்மில் எத்தனை பேர் உணர்ந்திருக்கிறோம் உணர்ந்தவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்
 
 
 
               பலவகையான தவறுகளையும் பாவங்களையும் ஜென்மஜென்மாவாக செய்து கொண்டே வருகிறோம் கடலின் தண்ணீர் எப்படி இடையீடு இல்லாமல் நிறைந்திருக்கிறதோ அதை போலவே நமது பாவங்களும் நிறைந்திருக்கிறது உடம்பில் ஒட்டிய சகதி விலகாமல் உடல் சுத்தம் ஏற்படுமா? நாம் செய்த பாவ வினைகளின் பலனை அனுபவிக்காமல் ஆத்மானுபவம் என்னும் பேரானந்த நிலை நமக்கு கிடைக்குமா? கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது நியாயமாகுமா? அறிவுக்கு பொருந்தியும் வருமா? கண்களில் விழுந்த துசியை எடுக்கும் வரை கண்ணெரிச்சல் போகாது என்பது போல பண்ணிய பாவத்தின் பலனை அனுபவிக்காமல் மனம் ஒருநிலைப்பட்டு வராது வரவும் முடியாது
 
 
                நேற்று உடம்பில் ஒட்டிய சேற்றை கழுவி சுத்தப்படுத்துவதற்கு பதிலாக மீண்டும் இன்று புதிய சேற்றை எடுத்து உடல் முழுவதும் பூசிக்கொள்கிறோம் அதாவது பழைய பாவமூட்டையை இன்னும் பெரியதாக ஆக்கிக் கொள்ள புதிய பாவங்களை செய்து கொண்டே போகிறோம் ராணி எறும்புக்கு பின்னால் அடிமை எறும்புகள் அணிவகுத்து வருவது போல் பழைய புதிய பாவங்களின் வரிசையானது நம் பின்னால் தொடர்ந்து கொண்டே இருக்கிறது இரண்டு கைகளிலும் தூக்க முடியாத சுமைகளை தூக்கி கொண்டு தோள்பட்டை வலியெடுக்கிறது என்று சொல்வதை போல இத்தனை பாவத்தை நமக்குள் வைத்து கொண்டு மனம் குவியவில்லையே என அழுது புலம்புவது எப்படி சரியாகும்?
 
 
                   
இருட்டை போக்க வேண்டுமென்றால் அதை வாரி வாரி வெளியில் கொட்டினாலும் அது போகவே போகாது ஒரு சிறிய தீபத்தை ஏற்றி வைத்தாலே இருட்டு பின்னங்கால் பிடரியில் பட ஓடிவிடும் அதே போலவே நமது பாவ சுமைகள் குறைவதற்கு புண்ணிய காரியங்கள் செய்ய வேண்டும் தண்ணீர் மட்டும் தான் தாகத்தை தீர்க்கும் நெருப்பு மட்டும் தான் சுடும் புண்ணியம் மட்டும் தான் பாவத்தை போக்கும் என்பதை உறுதியாக நம்ப வேண்டும்


நான் தான் தினசரி நிறைய புண்ணிய காரியங்கள் செய்கிறேனே சாலையை கடந்து போக சிரமப்படும் வயோதிகர்களையும் பார்வையற்றோர்களையும் வழிகாட்டி நடத்தி வைக்கிறேன் படிக்க வசதி இல்லாத சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு பாடபுத்தகங்கள் வாங்கி தருகிறேன் பள்ளிக்கூட கட்டணத்தையும் கட்டுகிறேன் எனக்கு தெரிந்து யாரும் பசியோடு இருக்க கூடாது என்பதற்காக அன்னதானமும் செய்கிறேன் தெருவோரத்தில் வீடுகள் இல்லாத வறியவர்களுக்கு குளிர்காலத்தில் போர்த்திக் கொள்ள போர்வையும் கொடுக்கிறேன் இப்படி எத்தனையோ நல்ல காரியங்களை வெளியில் தெரிந்தும் தெரியாமலும் செய்து வருகிறேன் ஆனாலும் என் மனது ஒருநிலைப்பட வில்லையே என் பாவங்கள் எப்போது தொலைவது நான் எப்போது பேரின்ப நிலையை எட்டிபிடிப்பது என்று சிலர் புலம்புவது நம் காதில் விழுகிறது
 
 
                 சாஸ்திரங்கள் சொல்லுகிறப்படி பாவங்கள் இரண்டு வகைப்படுகிறது ஒன்று சரீரத்தால் செய்கின்ற பாவம் மற்றொன்று மனத்தால் செய்கின்ற பாவம் உடம்பால் செய்கிற பாவத்திற்கு உடம்பாலும் மனத்தால் செய்கிற பாவத்திற்கு மனதாலும் பிராயச்சித்தம் செய்ய வேண்டும் தானங்கள் நன்கொடைகள் யாகங்கள் பூஜைகள் என்பதெல்லாம் உடம்பால் செய்கின்ற பாவத்தின் பரிகாரமே ஆகும்

நெஞ்சம் நிறைய வஞ்சகத்தை வைத்துக் கொண்டு நான் வருடம் தோறும் சபரிமலை போகிறேனே மாதம் தோறும் திருப்பதி செல்கிறேனே தினம் தோறும் பெருமாளை சேவிக்கிறேனே என்பதால் எந்தபயனும் இல்லை நமது சனாதன தர்மத்தில் சொல்லப்படுகின்ற வேத நெறிப்படியான வாழ்க்கை முறையை வாழ பழக வேண்டும் அதாவது சொந்த லாபத்திற்காக காரியங்களை செய்வதை விட்டு விட்டு பொது நன்மைக்கான காரியங்களை செய்வது தான் வேத வழிப்பட்ட வாழ்க்கையாகும் இந்த வாழ்க்கை முறை நமது மனதிற்குள் ஆழமாக பதிந்துள்ள துவேசம் துக்கம் பயம் முதலிய கெட்ட சைத்தான்களை அடியோடு வேரறுத்து விடும்

Friday, 4 April 2014

முத்திகள் பலவிதம்!



மதங்கள் பல உள. ஆயினும் அவை எல்லாம் கூறுவது ஒன்றே. அதாவது விடுதலை அல்லது வீடுபேறு. இவ்வாறு வெவ்வேறாக உள்ள மதங்கள் கூறவது வீடுபேறு ஆயினும், அவை கூறும் வீடு பேற்று நிலைகளில் பெரும் வேறுபாடுகள் உள்ளன.
ஒரு மதம் சுவர்க்கத்தை அடைந்து அங்கு அழகான பெண்களுடன் போகத்தை அனுபவித்துக்கொண்டிருத்தல் முத்தி என்கின்றது. இஸ்லாத்தில் இவ்வாறான விவரணம் காணப்படுகின்றது. இன்னொரு மதம் இந்த உடல், மனம் என்ற இருப்புகள் கெடுவது முத்தி என்கின்றது. பௌத்தம் இவ்வாறான முத்தியைப்பற்றிப் பேசுகின்றது. சில மதங்கள் எமது ரஜோ, தமோ, சத்துவ குண பேதங்கள் அடங்குவது முத்தி என்கின்றன. எமது தீய செயல்கள் அல்லது வினைகள் எல்லாம் விடுபடுவது முத்தி என்று சில மதங்கள் கூறுகின்றன. எம்மைப் பீடித்திருக்கும் மலமாசான ஆன்ம அழுக்குகள் நீங்குவதே முத்தி என்று சில மதங்கள் கூறுகின்றன. நித்திய ஜீவனாகும் தன்மையே முத்தி என்று சில மதங்கள் கூறுகின்றன. விவேகம் அல்லது ஞான நிலையே முத்தி என்று சில மதங்கள் பேசுகின்றன. உயிர் என்ற இருப்பே இல்லாது போதலே முத்தி என்று சில மதங்கள் கூறுகின்றன. அட்டமாசித்திகளை அடைதலை முத்தி என்று சில மதங்கள் கூறுகின்றன. கல்லைப்போல துக்கம், சுகம் எது வந்தாலும் சலனம் இல்லாமல் இருக்கும் நிலையை அடைதலே முத்தி என்று சில மதங்கள் கூறுகின்றன.
மற்ற மதங்கள் கூறுவது இருக்கட்டும். இந்து மதத்திலேயே பல விதமான முத்திகள் கூறப்படுகின்றனவே. இறைவன் உயிர் என்ற பேதம் இல்லாமல் உயிர் தானே இறை என்று உணர்தல் முத்தி என்று சங்கரரின் அத்துவிதம் கூறுகின்றது. உயிரும் இறையும் ஒருபோதுமே ஒன்றாக முடியாது; உயிர் இறையை அடைந்து அணுக்கத்தில் பேரின்பத்துடன் இருத்தலே முத்தி என்று மத்துவரின் துவைதம் கூறுகின்றது.  உயிருக்குள் உயிராக உடனாக இருக்கும் இறையை அறிந்து அனுபவிப்தே முத்தி என்று இராமானுஜரின் விசிட்டாத்துவிதமும், நீலகண்டரின் சிவாத்துவிமும் கூறுகின்றன.
உண்மை ஒன்றாகத்தானே இருக்கவேண்டும். இவ்வாறு ஒவ்வொரு மதமும் முத்தியைப்பற்றி பலபல விதமாகக் கூறுகின்றனவே. இவை எல்லாம் ஒன்றுக்கு ஒன்று முரணாக ஒரே குழப்பமாக இருக்கின்றனவே என்று எண்ணுகின்றீர்களா? இவற்றுள் எது உண்மை என்று கேட்டால் ஒவ்வொரு மதமும் தத்தமது முத்திக் கொள்கையே உண்மை என்று சாதிக்கின்றன; மற்ற மதங்களுடன் பேதிக்கின்றன; அவையெல்லாம் கூறுவது பொய் என்றும் போதிக்கின்றன. இதற்காக ஒன்றையொன்று எதிர்க்கவும், தாக்கவும் இவை தயங்குவதில்லை. இதை தமது மதக் கடமையாகவும்,  கடவுளுக்கு செய்யும் மிகப்பெரிய தொண்டாக தமக்கு கிடைத்த ஒரு பேறாகவும் எண்ணி இவ்வாறு செய்கிறார்கள். ஜீவனுக்கான சாந்தியையும், உலகத்துக்கான சமாதானத்தையும் வார்த்தைக்கு வார்த்தை கத்திக் கத்திப் போதிக்கும் இம் மதங்களால் மனித வரலாற்றில் பல யுத்தங்கள் நிகழ்ந்திருக்கினறன; பல உயிர்கள் அழிந்திருக்கின்றன. இவ்வாறு அழிந்த மனித உயிர்களின் எண்ணிக்கை இரண்டு உலக மகா யுத்தங்களில் அழிந்த மனித உயிர்களைவிட அதிகம் என்றும் அறிகின்றோம். ஆனால் அறிவியல் வானத்தை முட்ட வளர்ந்துவிட்டது என்று பெருமை பேசும் இக்காலத்திலும் கூட இந்த யுத்தங்களும் அழிவுகளும் தொடருகின்றன.
சமயவாதிகள் தத்தம் மதங்களே அமைவதாக அரற்றி மலைந்தனர்”.-என்றும்
இத்தேவர் அவர் தேவர் தேவரவர் என்றிங்கன்
பொய்தேதவு பேசிப் புலம்புகின்ற பூதலத்தே- என்றும் திருவாசகம் இவர்களைப்பற்றி 1100 ஆண்டுகளுக்கு முன்னர் கூறியிருக்கின்றது. .
இந்தச் சமயங்கள் ஒன்றுதானும் உலக சமாதானத்துக்கோ, உலக மக்களின் ஒருமைப்பாட்டுக்கோ உதவுவதாகத்தெரியவில்லை. இவற்றினால் உலக சாமாதனாத்துக்கும் மனித குல ஒற்றுமைக்கும் பெரும் அச்சுறுத்தல் இருப்பதாகவே தெரிகின்றது. இவர்கள் கூறும் சமாதானம் எல்லாம் உலகம் முழுமையும் தமது ஒரே மதத்தின் கீழ் வரும்போது வருகின்ற சமாதானமே. இவர்களுடைய கடவுள் இறுதிக்காலத்தில் மற்றவர்களை நியாயம் தீர்த்து நரகத்துக்கு அனுப்பியபின் இவர்களுக்கு உலகைக் கொடுக்கும்போது வருகின்ற நித்திய சமாதானம் பற்றியும் இவர்கள் பேசுகின்றார்கள். .
சைவம் இதைப்பற்றி என்ன சொல்லுகின்றது?
அரிவையர் இன்புறும் முத்தி, கந்தம் ஐந்தும்
அறும் முத்தி, திரி குணமும் அடங்கும் முத்தி,
விரவு வினை கெடும் முத்தி, மலம் போம் முத்தி,
விச்சிரகம் நித்தம் முத்தி, விவேகம் முத்தி,
பரவும் உயிர் கெடும் முத்தி, சித்தி முத்தி,
பாடாண முத்தி, இவை பழி சேர் முத்தி
திரி மலமும் அகல, உயிர் அருள் சேர் முத்தி
திகழ் முத்தி, இது முத்தித் திறத்தது ஆமே       
என்று இவ்வாறான பல வகைப்பட்ட முத்திகள் பற்றி சைவத்தின் மெய்கண்ட சாத்திரங்களில் ஒன்றான சிவப்பிரகாசம் நூலின் 50வது பாடல் கூறுகின்றது. அந்தந்த மதங்களை அனுசரித்து அதன்படி வாழ்ந்தவர்கள் அடைகின்ற இவ்வகையான முத்திப்பேறுகள் எல்லாவற்றையும் சைவம் ஏற்றுக்கொள்கின்றது. ஆயினும் இவ்வாறான முத்திகள் எல்லாம் பத முத்திகள், அதாவது ஒவ்வொரு விதமான பதவி நிலைகளை அடைந்து அனுபவிக்கும் முத்திகள் என்றும், உயிர்களின் இந்த அனுபவ காலம் முடிந்ததும் அவை மீண்டும் தமது பயணத்தை தொடர வேண்டும் என்றும் சைவம் கூறுகின்றது.
இவ்வாறு உயிர்கள் நாத்திகம் முதலான பல்வேறு விதமான மதங்களில் பல பிறவிகளில் பிறந்து அவ்வச்சமய நூல்களும் தாபகர்களும் போதகர்களும் கூறும் முறைப்படி ஒழுகி அவ்வச் சமயங்கள் கூறும் சுவர்க்க போகங்களையும், முத்தி பதங்களையும் அனுபவித்து ஈற்றில் வேதங்கள் கூறும் வைதிக மதங்களில் பிறந்து, அவற்றின் பல வழிகளையும் அனுசரித்து ஒழுகி, அவை கூறும் துவைத, விசிட்டாத்துவித, அத்துவித முத்தி நிலைகளில் தோய்ந்து, கடைசியாக உயிர் இறையுடன் இரண்டலா நிலையில் ஒன்றி அனுபவிக்கும் நித்தியானந்த சுத்த அத்துவித முத்தி நிலையை அடைகின்றன என்று சைவ சித்தாந்தம் கூறுகின்றது.  மெய்யியல் ரீதியாக இதற்கு மேலான நிலை என்று ஒன்றை கூறவோ அல்லது கற்பனை பண்ணவோ  முடியாத நிலை உள்ளது. ஆகவே தான் சைவம் இதுவே இறுதியில் வருகின்ற நித்தியமான பேரின்ப வீடு என்றும் இதற்கு மேல் எந்தவிதமான முத்தியும் இல்லவே இல்லை என்றும் அறிவியல் ரீதியாக ஆணையிட்டுக் கூறுகின்றது.
அத்துவிதம், துவிதம், விசிட்டாத்துவிதமாம் என்று
அபேதம், பேதாபேதம், பேதமாக
முத்தி பலவும் பகர்ந்தோம் பக்குவத்துகு ஈடா(ய்)
முத்தி அதி ரிக்குச் சொன்ன முத்தி குக கேள்,
சுத்த அத்துவிதமான சாக்ஷாத் தாரகையாஞ்
சொன்ன இம் முத்திக்கு மேல் அறிவது ஒன்றும் இல்லை
சத்தியமா(ய்), முதற், புனர், சத்தியம் முக்காலும்
சத்தியமாகும், நாத்தி, நாத்தி, நாத்தி
 அத்துவிதம், துவிதம், விசிட்டாத்துவிதம் என்று அபேதம், பேதம், பேதாபேதமாக பக்குவத்துக்கீடா(க) முத்தி அதிகாரிக்குச் சொன்ன முத்தி(யை) குக(னே) கேள்! சுத்த அத்துவிதமான சாட்சாட்காரதையாக          ( விளங்கப்பெறுகின்ற) சொன்ன முத்திக்கு மேல் அறியத்தக்கது ஒன்றும் இல்லை. நாத்தி நாத்தி நாத்தி. ( இல்லை, இல்லை, இல்லை.) இது முதல் சத்தியம், புனர் (மீண்டும்)சத்தியம், முக்காலும் சத்தியம்.
                  -சர்வஞானோத்தர ஆகமம்; பாடல் 32-
 ­இதையே திருமூலர் பத்தாம் திருமுறையான திருமந்திரத்திலே பின்வருமாறு கூறுகின்றார்.
ஒன்றும் இரண்டும் இலதுமாய் ஒன்றாக
நின்று சமய நிராதாரம் நீங்கியே
நின்று பராபரை நேயத்தைப் பாதத்தாற்
சென்று சிவமாதல் சித்தாந்த முத்தியே
                                                -திருமந்திரம் 1437-

விபூதி அணியும் முறை



பத்தியொடு சிவசிவா என்று திரு நீற்றைப்
பரிந்து கையால் எடுத்துப்
பாரினில் விழாதபடி அண்ணாந்து செவியோடு
பருத்த புயமீதில் ஒழுக
நித்தமூ விரல்களால் நெற்றியில் அழுந்தலுற
நினைவாய்த் தரிப்பவர்க்கு
நீடு வினை அணுகாது தேக பரி சுத்தமாம்
நீங்காமல் நிமலன் அங்கே
சித்தியோடு நித்தம் விளையாடுவன் முகத்திலே
தாண்டவம் செய்யும் திரு
சஞ்சலம் வராது பரகதி உதவும் இவரையே
சத்தியம் சிவம் என்னலாம்
மத்தினிய மேருஎன வைத்து அமுதினைக் கடையு(ம்)
மால்மருகனான முருகா
மயிலேறி விளையாடு குகனே புல்வயல் நீடு
மலைமேவு குமரேசனே
விபூதியை எப்படித் தரிக்க வேண்டும்?
நிலத்திலே சிந்தா வண்ணம் அண்ணாந்து 'சிவ சிவ' என்று சொல்லி, வலக்கையின் நடுவிரல் மூன்றினாலும் தரித்தல் வேண்டும். இப்படியன்றி, நடுவிரல் ஆழி விரல்களினால் இடப்பக்கந் தொடுத்திழுத்துப் பெருவிரலினால் வலப்பக்கந் தொடுத்திழுத்துத் தரித்தலுமாகும். வாயை அங்காந்து கொண்டும் தலை நடுங்கிக் கொண்டும் கவிழ்ந்து கொண்டும் தரிக்கலாகாது. ஒரு விரலாலேனும் ஒரு கையாலேனும் தரிக்கலாகாது
எவ்வெவர் முன் விபூதி தரிக்கலாகாது?
சண்டாளர் முன்னும், பாவிகள் முன்னும், அசுத்த நிலத்தும், வழி நடக்கும் போதும், கிடக்கும் போதும் தரிக்கலாகாது.
 ஆசாரியராயினும், சிவனடியாராயினும் விபூதி தந்தால் எப்படி வாங்கித் தரித்தல் வேண்டும்?
மூன்று தரமாயினும் ஐந்து தரமாயினும் நமஸ்கரித்து, எழுந்து கும்பிட்டு, இரண்டு கைகளையும் நீட்டி வாங்கித் தரித்துக்கொண்டு, முன்போல் மீண்டும் நமஸ்கரித்தல் வேண்டும்.
  எப்படிப்பட்ட விபூதி தரிக்கலாகாது?
ஒரு கையால் வாங்கிய விபூதியும் விலைக்குக் கொண்ட விபூதியும் சிவதீட்க்ஷையில்லாதார் தந்த விபூதியும் தரிக்கலாகாது.
 சுவாமி முன்னும், சிவாக்கினி முன்னும், குரு முன்னும், சிவனடியார் முன்னும் எப்படி நின்று விபூதி தரித்தல் வேண்டும்?
முகத்தைத் திருப்பி நின்று தரித்தல் வேண்டும்.

சைவத்தில் சோதிடம் பற்றி நம் ஆதிசைவர்கள் குறிப்பு



தெய்வ நம்பிக்கையும், வழிபாடும் உடையவர்களுக்கு கிரகங்கள் ஒன்றும் செய்யாதது மட்டுமல்ல என்றும் நன்மையையே செய்யும் என்று மெய்கண்ட சாத்திரங்கள் பதினான்கில் ஒன்றாகிய நெஞ்சுவிடு தூது பின்வருமாறு குறிப்பிடுகின்றது.
'நாள் இருபத்து ஏழும் நவக்கிரகமும் நலியும்
கோள் இது என்று எண்ணிக் குறிப்பரோ'
-உமாபதிசிவம் எழுதிய நெஞ்சுவிடுதூது-
இதையே இவருக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த திருஞான சம்பந்தரும்  " வேயுறு தோளி பங்கன்"  என்ற கோளறு பதிகத்தின் மூலம் விளக்குகின்றார்.
"ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழம் வெள்ளி
சனி பாம்பிரண்டு முடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே"
                                       - சம்பந்தரின் கோளறு பதிகம்-.
இங்கு ஞானசம்பந்தர் கிரகங்கள் அடியவர்களுக்கு நல்லவையே செய்யும் என்று ஒன்றுக்கு நான்கு முறை சொல்லுகின்றார். இது சம்பந்தர் போன்ற உயர் ஞான நிலையில் உள்ள அடியவர்களுக்கு முழுதும் பொருந்தும். அதற்காக அவர் சோதிடம் பார்க்க்ககூடாது என்று சொல்லவில்லை. 'ஒன்பதொன்றோடேழு பதினெட்டொடாறும் உடனாய நாள்கள் அவைதாம்' என்று ஆகாத நாட்களை எல்லாம் பட்டியலிட்டுப் பாடியிருக்கின்றார். சம்பந்தர் நாள் கோள் சரியில்லாமல் இருந்தும் மதுரைக்குப்புறப்பட்டுச் சென்றது தனக்காக அல்ல; சிவப்பணிக்காகவே. ஆயினும் அவர் பல இடர்களை எதிர் கொள்ளத்தான் நேர்ந்தது. இது அவருடைய வாழ்க்கையிலேயே ஒரு சோதனையான காலம். அவர் அடியார்களுடன் தங்கிய மடத்துக்கு தீ வைத்தார்கள். சமணருடன் பல போட்டிகளில் பங்கு பற்றவேண்டி இருந்தது. அது மட்டுமல்ல எண்ணாயிரம் சமணரைக் கழுவேற்றுவதற்கு உடந்தையானார் என்ற பழிச்சொல்லும் அவர்மீது விழுந்தது. பெரிய புராணத்திலும், திருவிளையாடற்புராணத்திலும் அவருடைய வாழ்க்கை வரலாற்றை விளக்கும் சைவ சமயப் பேச்சாளர்கள், எழுத்தாளர்கள் யாவரும் யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர், ஏழாலை பண்டிதர் மு. கந்தையா உட்பட இதற்கு விளக்கம் சொல்லியே செல்லவேண்டியிருந்தது.  ஆயினும் இறை நம்பிக்கையில் ஊன்றியவர்களுக்கும், இவ்விதமான பதிகங்கள், தோத்திரங்கள் ஓதி வழிபடுபவர்களுக்கும் கிரகங்களின் தீயபலன்களும், அவற்றின் தாக்கங்களும் குறைவாக இருக்கும்.  இதை "கண்ணுக்கு வந்தது புருவத்துடன் போன மாதிரி" என்றும் "தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது மாதிரி" என்றும் உவமித்துச் சொல்லவுவார்கள்.

திருஞான சம்பந்தரின் அவதாரத்தைச் சொல்லும் பன்னிரண்டாம் திருமுறையான பெரிய புராணம் திருஞான சம்பந்தரின் பிறப்புச் சாதக கிரகநிலையையும் கூறுகின்றது. அவர் பிறக்கும்போது சூரியன் முதலான கிரகங்கள் அனைத்தும் சிறப்பாக உச்சத்தானங்களில் நின்றதாக இப்பாடலில் இருந்து அறிகின்றோம்.
அருக்கன்முதற் கோளனைத்தும் அழகியுச் சங்களிலே
பெருக்கவலி யுடன்நிற்கப் பேணியநல் லோரையெழத்
திருக்கிளரும் ஆதிரைநாள் திசைவிளங்கப் பரசமயத்
தருக்கொழியச் சைவமுதல் வைதிகமுந் தழைத்தோங்க
                                                   -பெரிய புராணம், பாடல்-1925
இதே போன்று மார்க்கண்டேயர் பிறந்தபோது உள்ள கிரக நிலையையும் அதில் தேவ குருவான வியாழனும், அசுர குருவான வெள்ளியும் உச்சம் பெற்று விளங்குதலையும் கந்தபுராணம் குறிப்பிடுகின்றது.
மீனமும் முடிந்த நாளும் மேவுற மிதுனம் செல்ல
ஊனமில் வெள்ளிதானும் ஒண்பொனும் உச்சமாகும்
தானம் உற்று இனிதுமேவ தபனனே முதலா உள்ள
ஏனையர் முனிவர் நாகர் இடம் தொறும் இருப்ப மன்னே
                                                        -கந்த புராணம் 2-5-186-
இவ்வாறே தேவி மதுரையை தடாதகைப்பிராட்டியாக இருந்து சோமசுந்தரருடன் ஆண்ட காலத்தில் கர்ப்பமுற்று உக்கிரகுமார பாண்டியரைப் பெற்றபோதும் அவர் வியாழன் முதலிய நற்கோள்கள் கேந்திர தானமென்னும் ஒன்று, நான்கு, ஏழு, பத்து ஆகிய தானங்களில் நிற்க சிறந்த ஓரையிலே குழந்தை பிறந்தது என்று திருவிளையாடற் புராணம் கூறுகின்றது.
---பசும் பொற்கோள் வந்து
தேசொடு கேந்தி ரத்திற் சிறந்தநல் லோரை வாய்ப்ப ...”
       - திருவிளையாடற் புராணம், பாடல் 931-
இவை வான்மீகி இராமாயணத்தில் உள்ள ஸ்ரீ ராமர் பிறந்த போதுள்ள கிரகநிலைக் குறிப்புகளுடன் ஒப்பிடத்தக்கன.  ஸ்ரீ ராமர் பிறந்தபொழுது குரு, சுக்கிரன், செவ்வாய், புதன், சனி ஆகிய ஐந்து கிரகங்களும் உச்சம் பெற்று  ( குரு கடகத்திலும், வெள்ளி மீனத்திலும், செவ்வாய் மகரத்திலும், புதன் கன்னியிலும், சனி துலாத்திலும் உச்சம் பெறுகின்றன. ), கேந்திர, தானங்களில் ( சாதகத்தில் இலக்கினம் அல்லது சந்திரனில் இருந்து 1ம் 4ம் 7ம் பத்தாம் இடங்கள் கேந்திர தானங்கள் ஆகும்.) இருந்ததாக அறிகின்றோம். இது பஞ்ச மாகா புருஷ யோகம் என்று சோதிடத்தில் சொல்லப்படுகின்ற ஐந்து சிறப்பான யோகங்களின் சேர்க்கையாகும்.
இதேபோல முகூர்த்தம், வாரம், நட்சத்திரம், திதி, கரணம், யோகம் ஆகிய யாவும், நவக்கிரகங்களும் நன்னிலையில் விளங்கும் வேளையில் தர்மன் பிறந்தான் என்று மகாபாரதம் கூறுகின்றது. இது ஐப்பசி மாதத்து வளர்பிறைப் பஞ்சமி திதியும் கேட்டை நட்சத்திரமும் கூடிய நாளாகும்.
சிவம்உற முகூர்த்தம் வாரம் தினம் திதி கரணம் யோகம்
நவமென வழங்கு கோளும் நன்னிலை நின்ற போதில்
அவனியிர் ஒருகோல் ஓச்சி ஆளும் என்றறிவின் மிக்க
தவநெறி முனிவர் கூறப் பிறந்தனன் தர்மன் மைந்தன்
                  -வில்லிபுத்தூர் ஆழ்வார் பாரதம் பாடல் 245-
இதேபோல அர்ச்சுனனும் நல்ல நிமித்தங்கள் தோன்ற பங்குனி மாதத்து பௌர்ணமியில், உத்தர நட்சத்திரத்தில் பிறந்ததாக மகாபாரதம் கூறுகின்றது.
எங்குநன் நிமித்தம் செல்ல இருநில மகிழ்ச்சி கூரப்
பங்குனி நிறைந்த திங்கள் ஆதபன் பயிலு நாளில்
வெங்குனி வரிவில் வாகை விசயனும் பிறந்தான்
                 -வில்லிபுத்தூர் ஆழ்வார் பாரதம் பாடல் 261-
சைவத்தில் ஊன்றி நின்று வழிபடுவோருக்கு சோதிட பலன்கள் தேவையில்லை என்றாலும் சைவத்தில் சோதிடத்தையும் அதன் பலன்களையும் ஏற்றும், மதித்தும் வந்த மரபைக் காலம் காலமாகக் காணக்கூடியதாக உள்ளது. ஆனால் இதற்கு மேலாக இறை ஒன்று உள்ளது என்பதை எப்போதும் உணர்ந்திருந்தார்கள்.
"ஆறங்கம் நால் வேதம் ஆனாய் போற்றி" என்று திருநாவுக்கரசர் பாடும்போது வேதங்களின் ஆறு அங்கங்களுள் ஒன்றாகிய சோதிடத்தையும் சேர்த்தேதான் போற்றுகின்றார்.
"மகத்தில் புக்கதோர் சனியெனக் கானாய்என்று நிந்தா ஸ்துதியாக சுந்தரர் சிவனைப்பாடியுள்ளார். மகர இராசியில் சனி வரும் காலம் கொடிய காலமாகும் இது தனி மனிதருக்கு மட்டுமல்ல உலகத்துக்கும் பொருந்தும்.
விலங்கல் அமர் புயன் மறந்து மீன்சனிபுக்கு ஊன் சலிக்கும் காலம் தானும்
கலங்கல் இலா மனப்பெருவண் கையுடைய மெய்யர் வாழ் கழுமலமே 
என்று மகரத்தில் சனி புகும் கொடிய காலத்திலும்கூட கலங்காத மனம் உடைய மெய்யடியார்கள் வாழும் திருக்கழுமலம் என்று சம்பந்தர் பாடுகின்றார்.
சூரியனும், செவ்வாயும் முன்னே செல்ல வெள்ளி அவற்றின் பின்னே செல்லும் காரணத்தால் பன்னீராண்டு மழை வளம் குன்றும் என்று திருவிளையாடல் புராணத்தின் இந்திரன் முடிமேல் வளை எறிந்த படலம் கூறுகின்றது.
காய்சின வெய்யோன் சேயோன் முன்செலக் கதிர்கால் வெள்ளித்
தேசிகன் பின்பு சென்று நடக்குமிச் செயலான் முந்நீர்த்
தூசி உலகில் பன்னீ ரா     ண்டுவான் சுருங்கு மென்று
பேசின நூல்கள் மாரி பெய்விப்போன் சென்று கேண்மின்
          -திருவிளையாடற் புராணம், பாடல் 1055-
சிவஞானபோதத்தைத் தமிழில் செய்த மெய்கண்டாரின் மாணாக்கரான அருணந்தி சிவம் சிவஞான சித்தியார் என்ற நூலைச் செய்திருக்கின்றார். இதுவும் பதினான்கு மெய்கண்ட சாத்திரங்களுள் ஒன்று. இதிலே ஒரு பாடலில் 'குற்றமில்லாத வேத நூல்களைக் குறைவின்றி ஓதி உணர்ந்தவர்கள் இந்த உலகிலே இன்னது நடக்கப்போகின்றது என்று முன்னரேயே சோதிடம் வழியாக ஊகித்து சொல்வதும் அங்ஙனமே அவர்கள் கூறியபடி நடப்பதும் காண்கின்றோம்' என்று கூறுகின்றார்.
பழுதி லாமறை கண்ட நூல்பழுது
இன்றி உண்டது பாரின்மேல்
மொழிவர் சோதிடம் உன்னி இன்னது
முடியும் என்பது முன்னமே  
அழிவிலாதது கண்ட னம்அவை
                       -சிவஞான சித்தியார், பரபக்கம்-
முன்னர் குறிப்பிட்ட உமாபதி சிவத்தின் குருவே இந்த அருணந்தி சிவம்.
இன்றைய முறையில் ஒன்பது கிரகங்களையும் ஒன்றாக தாபித்து கோவிலில் வழிபடும் நவக்கிரக வழிபாடு பழைய ஆகம முறைகளில் இல்லாதது என்றாலும் நவக்கிரகங்களின் வழிபாடு புதிதாகப் புகுத்தப்பட்ட ஒன்று அல்ல. நவக்கிரகங்களில் சூரியன், சந்திரன், வியாழன், வெள்ளி போன்ற கிரக அதிதேவதைகளின்  மூர்த்தங்கள் கோவில் கர்ப்பக்கிருகங்களுக்கு உட்புறத்திலும், வெளிப்புறத்தில் பரிவார மூர்த்தங்களாகவும் பிரதிட்டை செய்யப்படும் விதிகள் சைவ ஆகமங்களில் பரவலாக உள்ளன.
கர்மபலன்களை உடனிருந்து ஊட்டுகின்ற இறையின் வழிபாட்டை ஒதுக்கி விட்டு, வெறும் கிரக வழிபாடு செய்து உழலும்போதுதான்  நாம் தவறிழைக்கின்றோம். பலர் வைத்தீசுவரன் கோவிலுக்குப்போய் செவ்வாயை மட்டும் வழிபட்டுவிட்டு வருவார்கள்; திருநள்ளாறு போய் சனைச்சுரனை மட்டும் வழிபட்டுவிட்டு வருவார்கள். சோதிடமும், எதிர்காலத்தைப்பற்றிய பயமும், நமது வாழ்க்கையின் துன்பங்களும் வழி தவறிப்போகும் நம்மை இறையிடம் திருப்புவதற்கேயாம்.
" நல்ல குருநாதன் என்னை வருத்துவது
கொல்ல வல்ல; கொல்ல வல்ல; என்
பொல்லா வினையைப் போக்குதற்கே "
ஈசுவரன் அல்லது ஈசன் என்றால் எல்லா ஐஸ்வரியங்களுக்கும் அதிபதி என்று பொருள். "ஈசனடி போற்றி" என்ற சிவ புராண வரிக்கு இவ்வாறுதான் பொருள் கூறுவர். "ஈஸாவாஸ்யம் இதம் ஸர்வம்" இந்த எல்லாமே ஈசுவரனுடைய உடமைப்பொருள் என்று ஈசாவாஸ்ய உபநிடதம் தொடங்குகின்றது. இது முழுமுதலான இறையையே குறிக்கும்.
கிரகங்களுக்கு ஆதிபத்தியமும், ஆற்றலும், பலன்களும் கொடுத்து, அவைகளின் இயக்கத்துக்கும் காரணமாக உள்ள இந்த ஈசுவரனை வணங்கி வர எமது முன்செய்த கர்ம வினைகள் கழியும்.
இவ்வாறு சேமிப்பில் உள்ள எமது கர்மாவை சஞ்சித கர்மா என்பர். சஞ்சித பாப விநாசஹ லிங்கம் என்று ஆதி சங்கரர் லிங்காஷ்டகத்தில் பாடியுளார். குருவருளால் இருவினையொப்பு நிலை கைகூடி வர வருவினை ஏறாது. இந்த வருவினையை ஆகாமிய கர்மா என்பர். ஸ்ரீ கிருஷ்ணர் மகாபாரதப்போரில் அர்ச்சுனனுக்கு பகவத்கீதையை உபதேசித்து அவனுக்கு இந்த இருவினையொப்பு நிலையைக்கூட்டி அவனை யுத்தம் செய்ய வைத்தார். இதனால் அவனுக்கு போரின் கர்மவினை ஏறவில்லை.                             ஆயினும் நாம் இப்பிறப்பில் அனுபவிப்பதற்கு கொண்டு வந்த கர்மவினையை அழிக்க முடியாது. இதை பிராரப்த கர்மா என்பர். இதையே விதி என்றும் ஊழ்வினை என்றும் கூறுவர். திருவள்ளுவரும்
ஊழிற் பெருவலி யாவுள மற் றொன்று
சூழினும் தான் முந்துறும் என்று கூறுகின்றார். இந்த ஊழ் வினையைக் குறைப்பதற்கும், விதியின் வலியைக் குறைப்பதற்கும்  பிராயச்சித்த வழிமுறைகள் உதவும். இதற்கு வழிகாட்டியாக சோதிட சாத்திரம் உள்ளது. விரும்பியோர் பாவித்துப் பயன் பெறலாம்.  
உற்றதொழில் நினைவு உரையில் இருவினையும் உளவாம்;
ஒன்று ஒன்றால் அழியாது; ஊண் ஒழியாது; உன்னின்
மற்றவற்றின் ஒருவினைக்கு ஓர் வினையால் வீடு
வைதிகசைவம் பகரும் வழியில் ஆற்றப்
பற்றியது கழியும்; விலையால் ஏற்கும் பான்மையுமாம்; முன்னர்
சொற்றருநூல் வழியின் வரின் மிகுதி சோரும்;
சோராததங்கு அது மேலைத் தொடர்ச்சியாமே
-சிவப்பிரகாசம் பாடல் 31-

Monday, 24 March 2014

எத்தகைய ஆபத்து வந்தாலும் காக்க கூடிய மஹா ம்ருத்யுஞ்சய மந்திரம்

’’ஓம் த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டி வர்த்தனம் உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்…’‘ 
 

video url's

http://www.youtube.com/watch?v=51dbuDzTxp8&feature=player_embedded

http://www.youtube.com/watch?v=OLNOzjh1_HY&feature=player_embedded

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=q1uj3_rW7Uc

திருச்சிற்றம்பலம்

திருமுறை கூறும் இசைக்கருவிகள்.

இசைக்கருவிகளின் பட்டியல்

சைவ திருமுறைகள் கூறும் இசைக்கருவிகள்.

ஆகுளி

ஆகுளி வெல் படைத் தறுகண் வெஞ்சொல் வேட்டுவர் கூட்டம் தோறும்
கொல் எறி குத்து என்று ஆர்த்துக் குழுமிய ஓசை அன்றிச்
சில்லரித் துடியும் கொம்பும் சிறு கண் ஆகுளியும் கூடி
கல் எனும் ஒலியின் மேலும் கறங்கிசை அருவி எங்கும் 12.0654

இடக்கை

இடக்கை கத்திரிகை துத்திரிக றங்குதுடி தக்கையொ டிடக்கைபடகம்
எத்தனையு லப்பில்கரு வித்திரள லம்பஇமை யோர்கள்பரச
ஒத்தற மிதித்துநட மிட்டவொரு வர்க்கிடம தென்பருலகில்
மெய்த்தகைய பத்தரொடு சித்தர்கள் மிடைந்துகளும் வேதவனமே. 3.76.5

இலயம்

கூடிய இலயம் சதிபிழை யாமைக்
கொடியிடை உமையவள் காண
ஆடிய அழகா அருமறைப் பொருளே
அங்கணா எங்குற்றா யென்று
தேடிய வானோர் சேர்திரு முல்லை
வாயிலாய் திருப்புகழ் விருப்பால்
பாடிய அடியேன் படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே. 7.69.2

உடுக்கை

உடுக்கை உண்டுடுக்கை யின்றியேநின் றூர்நகவேதிரிவார்
கண்டுடுக்கை மெய்யிற்போர்த்தார் கண்டறியாதவிடந்
தண்டுடுக்கை தாளந்தக்கை சாரநடம்பயில்வார்
பண்டிடுக்கண் தீரநல்கும் பல்லவனீச்சரமே. 1.65.10

ஏழில்

காத லாலே கருதுந் தொண்டர் கார ணத்தீ ராகி நின்றே
பூதம் பாடப் புரிந்து நட்டம் புவனி யேத்த ஆட வல்லீர்
நீதி யாக ஏழி லோசை நித்த ராகிச் சித்தர் சூழ
வேத மோதித் திரிவ தென்னே வேலை சூழ்வெண் காட னீரே. 7.6.07
கோழி சிலம்புச் சிலம்பும் குருகுஎங்கும்
ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்குஎங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
வாழிஈ தென்ன உறக்கமோ வாய்திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங் காளனையே பாடேலோர் எம்பாவாய். 8.திருவா.162

கத்திரிகை

கத்திரிகை துத்திரிக றங்குதுடி தக்கையொ டிடக்கைபடகம்
எத்தனையு லப்பில்கரு வித்திரள லம்பஇமை யோர்கள்பரச
ஒத்தற மிதித்துநட மிட்டவொரு வர்க்கிடம தென்பருலகில்
மெய்த்தகைய பத்தரொடு சித்தர்கள் மிடைந்துகளும் வேதவனமே. 3.76.5

கண்டை

சங்கொடு தாரை காளம் தழங்கொலி முழங்கு பேரி
வெங்குரல் பம்பை கண்டை வியன் துடி திமிலை தட்டி
பொங்கொலிச் சின்னம் எல்லாம் பொரு படை மிடைந்த பொற்பின்
மங்குல் வான் கிளர்ச்சி நாண மருங்கு எழுந்து இயம்பி மல்க 12.581
பரசும் கருணைப் பெரியோன் அருளப் பறி புன் தலையோர் நெறி பாழ்பட வந்து
அரசு இங்கு அருள் பெற்று உலகு உய்ந்தது எனா அடியார் புடை சூழ் அதிகைப் பதி தான்
முரசம் பட கந்துடி தண்ணுமை யாழ் முழவம் கிளை துந்துபி கண்டை உடன்
நிரை சங்கு ஒலி எங்கும் முழங்குதலால் நெடு மா கடல் என்ன நிறைந்துளதே 12.1341

கரதாளம்

விச்சா தரர்இயக்கர் கின்னரர் கிம்புருடர்
அச்சா ரணர்அரக்க ரோடசுரர் - எச்சார்வும்
சல்லரி தாளந் தகுணிதந் தத்தளகம்
கல்லலகு கல்ல வடம்மொந்தை - நல்லிலயத்
தட்டழி சங்கஞ் சலஞ்சலந் தண்ணுமை
கட்டழியாப் பேரி கரதாளம் - கொட்டும்
குடமுழவம் கொக்கரை வீணை குழல்யாழ்
இடமாந் தடாரி படகம் - இடவிய
மத்தளந் துந்துபி வாய்ந்த முருடிவற்றால்
எத்திசை தோறும் எழுந்தியம்ப - ஒத்துடனே
மங்கலம் பாடுவார் வந்திறைஞ்ச மல்லரும்
கிங்கரரும் எங்குங் கிலுகிலுப்பத் 11.300

கல்லலகு

விச்சா தரர்இயக்கர் கின்னரர் கிம்புருடர்
அச்சா ரணர்அரக்க ரோடசுரர் - எச்சார்வும்
சல்லரி தாளந் தகுணிதந் தத்தளகம்
கல்லலகு கல்ல வடம்மொந்தை - நல்லிலயத்
தட்டழி சங்கஞ் சலஞ்சலந் தண்ணுமை
கட்டழியாப் பேரி கரதாளம் - கொட்டும்
குடமுழவம் கொக்கரை வீணை குழல்யாழ்
இடமாந் தடாரி படகம் - இடவிய
மத்தளந் துந்துபி வாய்ந்த முருடிவற்றால்
எத்திசை தோறும் எழுந்தியம்ப - ஒத்துடனே
மங்கலம் பாடுவார் வந்திறைஞ்ச மல்லரும்
கிங்கரரும் எங்குங் கிலுகிலுப்பத் 11.300

கல்லவடம்

கல்லவடம் மொந்தைகுழல் தாளமலி கொக்கரைய ரக்கரைமிசை
பல்லபட நாகம்விரி கோவணவர் ஆளுநகர் என்பரயலே
நல்லமட மாதரரன் நாமமும் நவிற்றிய திருத்தமுழுகக்
கொல்லவிட நோயகல்த ரப்புகல்கொ டுத்தருளு கோகரணமே. 3.79.7

கவிழ்

பாடும் பறண்டையு மாந்தையு மார்ப்பப் பரந்துபல்பேய்க்
கூடி முழவக் குவிகவிழ் கொட்டக் குறுநரிகள்
நீடுங் குழல்செய்ய வையம் நெளிய நிணப்பிணக்காட்
டாடுந் திருவடி காண்கஐ யாறன் அடித்தலமே. 4.92.9
நத்தார்புடை ஞானம்பசு ஏறிந்நனை கவிழ்வாய்
மத்தம்மத யானைஉரி போர்த்தமழு வாளன்
பத்தாகிய தொண்டர்தொழு பாலாவியின் கரைமேற்
செத்தாரெலும் பணிவான்றிருக் கேதீச்சரத் தானே. 7.80.1

கழல்

கழலினோசைசிலம் பின்னொலியோசை கலிக்கப்பயில் கானிற்
குழலினோசைகுறட் பாரிடம்போற்றக் குனித்தாரிட மென்பர்
விழவினோசையடி யார்மிடைவுற்று விரும்பிப்பொலிந் தெங்கும்
முழவினோசைமுந் நீரயர்வெய்த முழங்கும்புக லூரே. 1.2.6
தோலொடு நூலிழை சேர்ந்தமார்பர் தொகுமறை யோர்கள் வளர்த்தசெந்தீ
மால்புகை போய்விம்மு மாடவீதி மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
சேல்புல்கு தண்வயல் சோலைசூழ்ந்த சீர்கொள் செங்காட்டங் குடியதனுள்
கால்புல்கு பைங்கழ லார்க்கஆடுங் கணபதி யீச்சரங் காமுறவே. 1.6.3

காளம்

சங்கொடு தாரை காளம் தழங்கொலி முழங்கு பேரி
வெங்குரல் பம்பை கண்டை வியன் துடி திமிலை தட்டி
பொங்கொலிச் சின்னம் எல்லாம் பொரு படை மிடைந்த பொற்பின்
மங்குல் வான் கிளர்ச்சி நாண மருங்கு எழுந்து இயம்பி மல்க 12.581
செய்ய பொன் புனை வெண்டரளத்து அணிசிறக்க
சைவ மா மறைத் தலைவர் பால் பெறும் தனிக் காளம்
வையம் ஏழுடன் மறைகளும் நிறை தவத்தோரும்
உய்ய ஞானசம்பந்தன் வந்தான் என ஊத 12.2119

கிணை

கிணை தக்கைதண்ணுமை தாளம்வீணை தகுணிச்சங்கிணை சல்லரி
கொக்கரைகுட முழவினோடிசை கூடிப்பாடிநின் றாடுவீர்
பக்கமேகுயில் பாடுஞ்சோலைப்பைஞ் ஞீலியேனென நிற்றிரால்
அக்கும்ஆமையும் பூண்டிரோசொல்லும் ஆரணீய விடங்கரே. 7.36.9

கிண்கிணி

வரந்தையான் சோபுரத்தான் மந்திரத்தான் தந்திரத்தான்
கிரந்தையான் கோவணத்தான் கிண்கிணியான் கையதோர்
சிரந்தையான் செங்காட்டங் குடியான்செஞ் சடைசேருங்
கரந்தையான் வெண்ணீற்றான் கணபதீச் சரத்தானே. 1.61.3

கிளை

பரசும் கருணைப் பெரியோன் அருளப் பறி புன் தலையோர் நெறி பாழ்பட வந்து
அரசு இங்கு அருள் பெற்று உலகு உய்ந்தது எனா அடியார் புடை சூழ் அதிகைப் பதி தான்
முரசம் பட கந்துடி தண்ணுமை யாழ் முழவம் கிளை துந்துபி கண்டை உடன்
நிரை சங்கு ஒலி எங்கும் முழங்குதலால் நெடு மா கடல் என்ன நிறைந்துளதே 12.1341

கின்னரம்

மைஞ்ஞல மனைய கண்ணாள் பங்கன்மா மலையை யோடி
மெய்ஞ்ஞரம் புதிரம் பில்க விசைதணிந் தரக்கன் வீழ்ந்து
கைஞ்ஞரம் பெழுவிக் கொண்டு காதலால் இனிது சொன்ன
கின்னரங் கேட்டு கந்தார் கெடிலவீ ரட்ட னாரே. 4.28.10

குடமுழா

குடமுழா வண்டணை கொன்றை வன்னியு மத்தம் மருவிய கூவிளம் எருக்கொடு மிக்க
கொண்டணி சடையர் விடையினர் பூதங் கொடுகொட்டி குடமுழாக் கூடியு முழவப்
பண்டிகழ் வாகப் பாடியோர் வேதம் பயில்வர்முன் பாய்புனற் கங்கையைச் சடைமேல்
வெண்பிறை சூடி உமையவ ளோடும் வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே. 1.75.4

குழல்

குழல் கழலினோசைசிலம் பின்னொலியோசை கலிக்கப்பயில் கானிற்
குழலினோசைகுறட் பாரிடம்போற்றக் குனித்தாரிட மென்பர்
விழவினோசையடி யார்மிடைவுற்று விரும்பிப்பொலிந் தெங்கும்
முழவினோசைமுந் நீரயர்வெய்த முழங்கும்புக லூரே. 1.2.6

கையலகு

நீறேறு திருமேனி நிகழக் கண்டேன்
நீள்சடைமேல் நிறைகங்கை யேறக் கண்டேன்
கூறேறு கொடுமழுவாள் கொள்ளக் கண்டேன்
கொடுகொட்டி கையலகு கையிற் கண்டேன்
ஆறேறு சென்னியணி மதியுங் கண்டேன்
அடியார்கட் காரமுத மாகக் கண்டேன்
ஏறேறி இந்நெறியே போதக் கண்டேன்
இவ்வகையெம் பெருமானைக் கண்ட வாறே. 6.97.8

கொக்கரை

மிக்கரை தாழவேங்கை யுரியார்த்துமை யாள்வெருவ
அக்கர வாமையேன மருப்போடவை பூண்டழகார்
கொக்கரை யோடுபாட லுடையான்குட மூக்கிடமா
எக்கரை யாருமேத்த இருந்தானவன் எம்மிறையே. 3.59.4

கொடுகொட்டி

வண்டணை கொன்றை வன்னியு மத்தம் மருவிய கூவிளம் எருக்கொடு மிக்க
கொண்டணி சடையர் விடையினர் பூதங் கொடுகொட்டி குடமுழாக் கூடியு முழவப்
பண்டிகழ் வாகப் பாடியோர் வேதம் பயில்வர்முன் பாய்புனற் கங்கையைச் சடைமேல்
வெண்பிறை சூடி உமையவ ளோடும் வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே. 1.75.4

கொட்டு

தட்டொடு தழைமயில் பீலிகொள் சமணரும்
பட்டுடை விரிதுகிலி னார்கள்சொற் பயனிலை
விட்டபுன் சடையினான் மேதகு முழவொடுங்
கொட்டமைந்த ஆடலான் கோடிகாவு சேர்மினே. 2.99.10

கொம்பு

கொம்பு வெல் படைத் தறுகண் வெஞ்சொல் வேட்டுவர் கூட்டம் தோறும்
கொல் எறி குத்து என்று ஆர்த்துக் குழுமிய ஓசை அன்றிச்
சில்லரித் துடியும் கொம்பும் சிறு கண் ஆகுளியும் கூடி
கல் எனும் ஒலியின் மேலும் கறங்கிசை அருவி எங்கும் 12.0654

சங்கு

சங்கு சங்கொலி இப்பிசு றாமகரந் தாங்கி நிரந்து தரங்கம்மேன்மேற்
பொங்கொலி நீர்சுமந் தோங்குசெம்மைப் புகலி நிலாவிய புண்ணியனே
எங்கள்பி ரானிமை யோர்கள்பெம்மான் எம்மிறையேயிது வென்கொல் சொல்லாய்
வெங்கதிர் தோய்பொழில் சூழ்மிழலை விண்ணிழி கோயில் விரும்பியதே. 1.4.6

சச்சரி

திருமணியைத் தித்திக்குந் தேனைப் பாலைத்
தீங்கரும்பின் இன்சுவையைத் தெளிந்த தேறற்
குருமணியைக் குழல்மொந்தை தாளம் வீணை
கொக்கரையின் சச்சரியின் பாணி யானைப்
பருமணியைப் பவளத்தைப் பசும்பொன் முத்தைப்
பருப்பதத்தி லருங்கலத்தைப் பாவந் தீர்க்கும்
அருமணியை ஆரூரி லம்மான் றன்னை
அறியா தடிநாயேன் அயர்த்த வாறே. 6.29.1

சலஞ்சலம்

கங்கை தங்கிய சடையுடைக் கரும்பே
கட்டி யேபலர்க் குங்களை கண்ணே
அங்கை நெல்லியின் பழத்திடை அமுதே
அத்தா என்னிடர் ஆர்க்கெடுத் துரைக்கேன்
சங்கும் இப்பியுஞ் சலஞ்சலம் முரல
வயிரம் முத்தொடு பொன்மணி வரன்றி
ஒங்கு மாகடல் ஓதம்வந் துலவும்
ஒற்றி யூரெனும் ஊருறை வானே. 7.54.3

சல்லரி

சல்லரிய யாழ்முழவம் மொந்தைகுழல் தாளமதி யம்பக்
கல்லரிய மாமலையர் பாவையொரு பாகநிலை செய்து
அல்லெரிகை யேந்திநட மாடுசடை அண்ணலிட மென்பர்
சொல்லரிய தொண்டர்துதி செய்யவளர் தோணிபுர மாமே. 3.81.2

சிரந்தை

வரந்தையான் சோபுரத்தான் மந்திரத்தான் தந்திரத்தான்
கிரந்தையான் கோவணத்தான் கிண்கிணியான் கையதோர்
சிரந்தையான் செங்காட்டங் குடியான்செஞ் சடைசேருங்
கரந்தையான் வெண்ணீற்றான் கணபதீச் சரத்தானே. 1.61.3

சிலம்பு

கழலினோசைசிலம் பின்னொலியோசை கலிக்கப்பயில் கானிற்
குழலினோசைகுறட் பாரிடம்போற்றக் குனித்தாரிட மென்பர்
விழவினோசையடி யார்மிடைவுற்று விரும்பிப்பொலிந் தெங்கும்
முழவினோசைமுந் நீரயர்வெய்த முழங்கும்புக லூரே. 1.2.6

சின்னம்

ஏறுதற்குச் சிவிகை இடக்குடை
கூறி ஊதக் குலவு பொன் சின்னங்கள்
மாறில் முத்தின் படியினால் மன்னிய
நீறு வந்த நிமலர் அருளுவார் 12.2093

தகுணிச்சம்

விலகினார் வெய்யபாவம் விதியாலருள் செய்துநல்ல
பலகினார் மொந்தைதாளந் தகுணிச்சமும் பாணியாலே
அலகினால் வீசிநீர்கொண் டடிமேல்அல ரிட்டுமுட்டா
துலகினா ரேத்தநின்றான் உறையும்மிடம் ஒற்றியூரே. 3.57.5

தக்கை

வழங்குதிங்கள் வன்னிமத்தம் மாசுணம் மீசணவிச்
செழுங்கல்வேந்தன் செல்விகாணத் தேவர் திசைவணங்கத்
தழங்குமொந்தை தக்கைமிக்க பேய்க்கணம் பூதஞ்சூழ
முழங்குசெந்தீ யேந்தியாடி மேயது முதுகுன்றே. 1.53.5

தடாரி

விச்சா தரர்இயக்கர் கின்னரர் கிம்புருடர்
அச்சா ரணர்அரக்க ரோடசுரர் - எச்சார்வும்
சல்லரி தாளந் தகுணிதந் தத்தளகம்
கல்லலகு கல்ல வடம்மொந்தை - நல்லிலயத்
தட்டழி சங்கஞ் சலஞ்சலந் தண்ணுமை
கட்டழியாப் பேரி கரதாளம் - கொட்டும்
குடமுழவம் கொக்கரை வீணை குழல்யாழ்
இடமாந் தடாரி படகம் - இடவிய
மத்தளந் துந்துபி வாய்ந்த முருடிவற்றால்
எத்திசை தோறும் எழுந்தியம்ப - ஒத்துடனே
மங்கலம் பாடுவார் வந்திறைஞ்ச மல்லரும்
கிங்கரரும் எங்குங் கிலுகிலுப்பத் 11.300

தட்டழி

(தோலிசைக் கருவிகளில் ஒன்று, திருச்செந்துறைக் கோயில் கல்வெட்டு குறிக்கிறது) விச்சா தரர்இயக்கர் கின்னரர் கிம்புருடர்
அச்சா ரணர்அரக்க ரோடசுரர் - எச்சார்வும்
சல்லரி தாளந் தகுணிதந் தத்தளகம்
கல்லலகு கல்ல வடம்மொந்தை - நல்லிலயத்
தட்டழி சங்கஞ் சலஞ்சலந் தண்ணுமை
கட்டழியாப் பேரி கரதாளம் - கொட்டும்
குடமுழவம் கொக்கரை வீணை குழல்யாழ்
இடமாந் தடாரி படகம் - இடவிய
மத்தளந் துந்துபி வாய்ந்த முருடிவற்றால்
எத்திசை தோறும் எழுந்தியம்ப - ஒத்துடனே
மங்கலம் பாடுவார் வந்திறைஞ்ச மல்லரும்
கிங்கரரும் எங்குங் கிலுகிலுப்பத் 11.300

தத்தளகம்

விட்டி சைப்பன கொக்க ரைகொடு கொட்டி தத்த ளகங்
கொட்டிப் பாடுமித் துந்து மியொடு குடமுழா நீர் மகிழ்வீர்
மொட்ட லர்ந்து மணங்கமழ் முருகன் பூண்டி மாநகர் வாய்
இட்ட பிச்சைகொண் டுண்ப தாகில்நீர் எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே. 7.49.6

தண்டு

குண்டுந் தேருங் கூறை களைந்துங் கூப்பிலர் செப்பில ராகி
மிண்டும் மிண்டர் மிண்டவை கண்டு மிண்டு செயாது விரும்பும்
தண்டும் பாம்பும் வெண்டலை சூலந் தாங்கிய தேவர் தலைவர்
வண்டுந் தேனும் வாழ்பொழிற் சோலை மல்கு பெருந்துறை யாரே. 1.42.10

தண்ணுமை

தண்ணுமை தண்டுந் தாளமுங் குழலுந் தண்ணுமைக் கருவியும் புறவில்
கொண்ட பூதமும் உடையார் கோலமும் பலபல வுடையார்
கண்டு கோடலும் அரியார் காட்சியும் அரியதோர் கரந்தை
வண்டு வாழ்பதி உடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே. 2.94.06

தமருகம்

கறைமலி திரிசிகை படையடல் கனல்மழு வெழுதர வெறிமறி
முறைமுறை யொலிதம ருகமுடை தலைமுகிழ் மலிகணி வடமுகம்
உறைதரு கரனுல கினிலுய ரொளிபெறு வகைநினை வொடுமலர்
மறையவன் மறைவழி வழிபடு மறைவனம் அமர்தரு பரமனே. 1.22.6

தாரை

சங்கொடு தாரை காளம் தழங்கொலி முழங்கு பேரி
வெங்குரல் பம்பை கண்டை வியன் துடி திமிலை தட்டி
பொங்கொலிச் சின்னம் எல்லாம் பொரு படை மிடைந்த பொற்பின்
மங்குல் வான் கிளர்ச்சி நாண மருங்கு எழுந்து இயம்பி மல்க 12.581

தாளம்

மாந்தர்தம் பால்நறு நெய்மகிழ்ந் தாடி வளர்சடை மேற்புனல் வைத்து
மோந்தை முழாக்குழல் தாளமோர் வீணை முதிரவோர் வாய்மூரி பாடி
ஆந்தை விழிச்சிறு பூதத்தர் பாச்சி லாச்சிரா மத்துறை கின்ற
சாந்தணி மார்பரோ தையலை வாடச் சதுர்செய்வ தோவிவர் சார்வே. 1.44.5

துத்திரி

கத்திரிகை துத்திரிக றங்குதுடி தக்கையொ டிடக்கைபடகம்
எத்தனையு லப்பில்கரு வித்திரள லம்பஇமை யோர்கள்பரச
ஒத்தற மிதித்துநட மிட்டவொரு வர்க்கிடம தென்பருலகில்
மெய்த்தகைய பத்தரொடு சித்தர்கள் மிடைந்துகளும் வேதவனமே. 3.76.5

துந்துபி

காலையொடு துந்துபிகள் சங்குகுழல் யாழ்முழவு காமருவுசீர்
மாலைவழி பாடுசெய்து மாதவர்கள் ஏத்திமகிழ் மாகறலுளான்
தோலையுடை பேணியதன் மேலோர்சுடர் நாகமசை யாவழகிதாப்
பாலையன நீறுபுனை வானடியை யேத்தவினை பறையுமுடனே. 3.72.3

துடி

துடி மாசேறிய உடலாரமண் கழுக்கள்ளொடு தேரர்
தேசேறிய பாதம்வணங் காமைத்தெரி யானூர்
தூசேறிய அல்குல்துடி இடையார்துணை முலையார்
வீசேறிய புருவத்தவர் வேணுபுர மதுவே. 1.9.10

தூரியம்

பூரண பொற்குடம் வைக்க மணிமுத்தம் பொன்பொதிந்த
தோரணம் நீடுக தூரியம் ஆர்க்கதொன் மால்அயற்கும்
காரணன் ஏரணி கண்ணுத லோன்கடல் திலலையன்ன
வாரண வும்முலை மன்றலென்(று) ஏங்கும் மணமுரசே. 8.கோவை.296

திமிலை

கமலநான்முகனுங் கார்முகில் நிறத்துக்
கண்ணனும் நண்ணுதற்கரிய
விமலனே எமக்கு வெளிப்படா யென்ன
வியன்தழல் வெளிப்பட்ட எந்தாய்
திமிலநான் மறைசேர் திருப்பெருந்துறையில்
செழுமலர்க் குருந்தமே வியசீர்
அமலனே அடியேன் ஆதரித் தழைத்தால்
அதெந்துவே என்றரு ளாயே. 8.திருவா.461

தொண்டகம்

தொண்டக முரசும் கொம்பும் துடிகளும் துளை கொள் வேயும்
எண்டிசை நிறைந்து விம்ம எழுந்த பேர் ஒலியினோடும்
திண்டிறல் மறவர் ஆர்ப்புச் சேண் விசும்பு இடித்துச் செல்லக்
கொண்ட சீர் விழவு பொங்கக் குறிச்சியை வலம் கொண்டார்கள் 12.0687

நரல் சுரிசங்கு

திருவளர் தாமரை மேவினா னுந்திகழ் பாற்கடற்
கருநிற வண்ணனுங் காண்பரி யகட வுள்ளிடம்
நரல்சுரி சங்கொடும் இப்பியுந் திந்நலம் மல்கிய
பொருகடல் வெண்டிரை வந்தெறி யும்புன வாயிலே. 3.11.9

படகம்

காரியன்மெல் லோதிநதி மாதைமுடி வார்சடையில் வைத்துமலையார்
நாரியொரு பால்மகிழும் நம்பருறை வென்பர்நெடு மாடமறுகில்
தேரியல் விழாவினொலி திண்பணில மொண்படக நாளுமிசையால்
வேரிமலி வார்குழல்நன் மாதரிசை பாடலொலி வேதவனமே. 3.76.3

படுதம்

ஆடல் அழல்நாக மரைக்கிட் டசைத்தாடப்
பாடல் மறைவல்லான் படுதம்பலி பெயர்வான்
மாட முகட்டின்மேல் மதிதோய் அதிகையுள்
வேடம் பலவல்லா னாடும்வீரட் டானத்தே. 1.46.3

பணிலம்

காரியன்மெல் லோதிநதி மாதைமுடி வார்சடையில் வைத்துமலையார்
நாரியொரு பால்மகிழும் நம்பருறை வென்பர்நெடு மாடமறுகில்
தேரியல் விழாவினொலி திண்பணில மொண்படக நாளுமிசையால்
வேரிமலி வார்குழல்நன் மாதரிசை பாடலொலி வேதவனமே. 3.76.3

பம்பை

பம்பை நெடுஞ் சடை கரந்திட நெறித்த பம்பையும்
விடுங் கதிர் முறுவல் வெண்ணிலவும் மேம்பட
இடும் பலிப் பாத்திரம் ஏந்து கையராய்
நடந்து வேட்கோவர் தம் மனையில் நண்ணினார் 12.0371

பல்லியம்

பல்லியல்பாணிப் பாரிடமேத்தப் படுகானின்
எல்லிநடஞ்செய் யீசனெம்மான்றன் இடமென்பர்
கொல்லையின்முல்லை மல்லிகைமௌவற் கொடிபின்னிக்
கல்லியல்இஞ்சி மஞ்சமர்கண்ணார் கோயிலே. 1.101.3

பறண்டை

பாடும் பறண்டையு மாந்தையு மார்ப்பப் பரந்துபல்பேய்க்
கூடி முழவக் குவிகவிழ் கொட்டக் குறுநரிகள்
நீடுங் குழல்செய்ய வையம் நெளிய நிணப்பிணக்காட்
டாடுந் திருவடி காண்கஐ யாறன் அடித்தலமே. 4.92.9

பறை

பறை பறையின்னொலி சங்கின்னொலி பாங்காரவு மார
அறையும்மொலி யெங்கும்மவை யறிவாரவர் தன்மை
நிறையும்புனல் சடைமேலுடை யடிகள்நின்றி யூரில்
உறையும்மிறை யல்லதென துள்ளம் முணராதே. 1.18.3

பாணி

துடிக ளோடு முழவம் விம்மவே
பொடிகள் பூசிப் புறங்கா டரங்காகப்
படிகொள் பாணி பாடல் பயின்றாடும்
அடிகள் சோற்றுத் துறைசென் றடைவோமே. 1.28.6

பாண்டில்

பாண்டில் ஆண்(டு)இல் எடுத்தவ ராம்இவர் தாம்அவர் அல்குவர்போய்த்
தீண்டில் எடுத்தவர் தீவினை தீர்ப்பவன் தில்லையின்வாய்த்
தூண்டில் எடுத்தவ ரால்தொங்கொ(டு) எற்றப் பழம்விழுந்து
பாண்டில் எடுத்தபல் தாமரை கீழும் பழனங்களே. .. 8.கோவை.249

பிடவம்

காடலாற் கருதாதார் கடல்நஞ் சுண்டார்
களிற்றுரிவை மெய்போர்த்தார் கலன தாக
ஓடலாற் கருதாதார் ஒற்றி யூரார்
உறுபிணியுஞ் செறுபகையு மொற்றைக் கண்ணாற்
பீடுலாந் தனைசெய்வார் பிடவ மொந்தை
குடமுழவங் கொடுகொட்டி குழலு மோங்கப்
பாடலா ராடலார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே. 6.10.2

பேரிகை

கூவிளங் கையது பேரி சடைமுடிக் கூட்டத்தது
தூவிளங் கும்பொடி பூண்டது பூசிற்று துத்திநாகம்
ஏவிளங் குந்நுத லாளையும் பாகம் உரித்தனரின்
பூவிளஞ் சோலைப் புகலியுள் மேவிய புண்ணியரே. 1.117.3

மத்தளம்

மருவமுழ வதிரமழ பாடிமலி மத்தவிழ வார்க்கஅரையார்
பருவமழை பண்கவர்செய் பட்டிசர மேயபடர் புன்சடையினான்
வெருவமத யானையுரி போர்த்துமையை அஞ்சவரு வெள்விடையினான்
உருவமெரி கழல்கள்தொழ உள்ளமுடை யாரையடை யாவினைகளே. 3.73.5

மணி

பணியுடை மாலும் மலரினோனும் பன்றியும் வென்றிப் பறவையாயும்
நணுகல் அரியநள் ளாறுடைய நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
மணியொலி சங்கொலி யோடுமற்றை மாமுர சின்னொலி என்றும்ஓவா
தணிகிளர் வேந்தர் புகுதுங்கூடல் ஆலவா யின்கண் அமர்ந்தவாறே. 1.7.9

மருவம்

மருவமுழ வதிரமழ பாடிமலி மத்தவிழ வார்க்கஅரையார்
பருவமழை பண்கவர்செய் பட்டிசர மேயபடர் புன்சடையினான்
வெருவமத யானையுரி போர்த்துமையை அஞ்சவரு வெள்விடையினான்
உருவமெரி கழல்கள்தொழ உள்ளமுடை யாரையடை யாவினைகளே. 3.73.5

முரசு

முரசு பணியுடை மாலும் மலரினோனும் பன்றியும் வென்றிப் பறவையாயும்
நணுகல் அரியநள் ளாறுடைய நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
மணியொலி சங்கொலி யோடுமற்றை மாமுர சின்னொலி என்றும்ஓவா
தணிகிளர் வேந்தர் புகுதுங்கூடல் ஆலவா யின்கண் அமர்ந்தவாறே. 1.7.9

முரவம்

மரவஞ்சிலை தரளம்மிகு மணியுந்துவெள் ளருவி
அரவஞ்செய முரவம்படும் அண்ணாமலை யண்ணல்
உரவஞ்சடை யுலவும்புனல் உடனாவதும் ஓரார்
குரவங்கமழ் நறுமென்குழல் உமைபுல்குதல் குணமே. 1.10.5

முருகியம்

பிரசம் திகழும் வரைபுரை யானையின் பீடழித்தார்
முரசம் திகழும் முருகியம் நீங்கும் எவர்க்குமுன்னாம்
அர(சு)அம் பலத்துநின்(று) ஆடும் பிரானருள் பெற்றவரின்
புரைசந்த மேகலை யாய்துயர் தீரப் புகுந்துநின்றே. 8.கோவை.299

முருடு

அன்பராகிமற் றருந்தவம் முயல்வார்
அயனும் மாலுமற் றழலுறு மெழுகாம்
என்பராய் நினைவார் எனைப்பலர்
நிற்க இங்கெனை எற்றினுக் கண்டாய்
வன்பராய் முருடொக்கும் என்சிந்தை
மரக்கண் என்செவி இரும்பினும் வலிது
தென்பராய்த் துறை யாய் சிவலோகா
திருப்பெருந்துறையுறை மேவிய சிவனே. 401

முழவு

முழவு கழலினோசைசிலம் பின்னொலியோசை கலிக்கப்பயில் கானிற்
குழலினோசைகுறட் பாரிடம்போற்றக் குனித்தாரிட மென்பர்
விழவினோசையடி யார்மிடைவுற்று விரும்பிப்பொலிந் தெங்கும்
முழவினோசைமுந் நீரயர்வெய்த முழங்கும்புக லூரே. 1.2.6

மொந்தை

மாந்தர்தம் பால்நறு நெய்மகிழ்ந் தாடி வளர்சடை மேற்புனல் வைத்து
மோந்தை முழாக்குழல் தாளமோர் வீணை முதிரவோர் வாய்மூரி பாடி
ஆந்தை விழிச்சிறு பூதத்தர் பாச்சி லாச்சிரா மத்துறை கின்ற
சாந்தணி மார்பரோ தையலை வாடச் சதுர்செய்வ தோவிவர் சார்வே. 1.44.5

யாழ்

யாழ் கன்னிய ராடல் கலந்துமிக்க கந்துக வாடை கலந்துதுங்கப்
பொன்னியல் மாடம் நெருங்குசெல்வப் புகலி நிலாவிய புண்ணியனே
இன்னிசை யாழ்மொழி யாளோர்பாகத் தெம்மிறையேயிது வென்கொல் சொல்லாய்
மின்னியல் நுண்ணிடை யார்மிழலை விண்ணிழி கோயில் விரும்பியதே. 1.4.3

வங்கியம்

ஏழு விரல் இடை இட்ட இன்னிசை வங்கியம் எடுத்துத்
தாழுமலர் வரிவண்டு தாது பிடிப்பன போலச்
சூழுமுரன்று எழ நின்று தூய பெரும் தனித் துளையில்
வாழிய நந்தோன்றலார் மணி அதரம் வைத்தூத 12.0948

வட்டணை

கட்டிணை புதுமலர் கமழ்கொன்றைக் கண்ணியர் வீணையர் தாமுமஃதே
எட்டுணை சாந்தமொ டுமைதுணையா இறைவனா ருறைவதோ ரிடம்வினவில்
பட்டிணை யகலல்குல் விரிகுழலார் பாவையர் பலியெதிர் கொணர்ந்துபெய்ய
வட்டணை யாடலொ டிவராணீர் வாய்மூ ரடிகள் வருவாரே. 2.111.8

வயிர்

வயிர் மறை முழங்கின தழங்கின வண்தமிழ் வயிரின்
குறை நரன்றன முரன்றன வளைக்குலம் காளம்
முறை இயம்பின இயம்பல ஒலித்தன முரசப்
பொறை கறங்கின பிறங்கின போற்றிசை அரவம் 12.2131

வீணை

மாந்தர்தம் பால்நறு நெய்மகிழ்ந் தாடி வளர்சடை மேற்புனல் வைத்து மோந்தை முழாக்குழல் தாளமோர் வீணை முதிரவோர் வாய்மூரி பாடி ஆந்தை விழிச்சிறு பூதத்தர் பாச்சி லாச்சிரா மத்துறை கின்ற சாந்தணி மார்பரோ தையலை வாடச் சதுர்செய்வ தோவிவர் சார்வே. 1.44.5

வீளை

வீளைக்குரலும் விளிசங்கொலியும் விழவின்னொலியோவா
மூளைத்தலைகொண் டடியாரேத்தப் பொடியாமதிளெய்தார்
ஈளைப்படுகில் இலையார்தெங்கின் குலையார்வாழையின்
பாளைக்கமுகின் பழம்வீழ்சோலைப் பழனநகராரே. 1.67.6

வெங்குரல்

சங்கொடு தாரை காளம் தழங்கொலி முழங்கு பேரி
வெங்குரல் பம்பை கண்டை வியன் துடி திமிலை தட்டி
பொங்கொலிச் சின்னம் எல்லாம் பொரு படை மிடைந்த பொற்பின்
மங்குல் வான் கிளர்ச்சி நாண மருங்கு எழுந்து இயம்பி மல்க 12.581