Tuesday, 20 January 2015

ஐந்தொழில் வல்லான் நிலை - 'நமச்சிவாய’ என்ற சொல்லுக்கு உரிய விளக்கம்





ஐந்தொழில் வல்லான் நிலை - 'நமச்சிவாயஎன்ற சொல்லுக்கு உரிய விளக்கம்
(
நடராசர் சிலை- ஓரு தத்துவ விளக்கம்)
_________________________________________

நடராசர் சிலை - ஆடல்வல்லான் சிலை - கூத்தர்பெருமான்சிலை - பதினெண்சித்தர்களின் செயல்நிலை சித்தாந்தத்தின் தத்துவ விளக்கமே! ஆகும்.

பதினெண்சித்தர்களின் உருவ வழிபாட்டுக் கொள்கையின் மிகப் பெரிய செயல் விளக்கச் சிலையே இந்த ஆடல்வல்லான் சிலை.

இறைவனுக்குரிய ஆக்கல், அழித்தல், காத்தல், அருளல், மறைத்தல், என்ற ஐந்தொழில்களின் விளக்கமாகத்தான் இந்த ஆடல் வல்லான் சிலை உருவாக்கப்பட்டது.

1.
வலக்கையில் உள்ள உடுக்கை ஒலி = ஆக்கல் தொழிலை விளக்குகிறது

2.
இரண்டாவது வலதுகையின் வாழ்த்துகின்ற தோற்றம் = காத்தல் தொழிலைக் குறிக்கிறது.

3.
மேல் இடைக்கையில் உள்ள சுடர் நெருப்பு = அழித்தலைக் குறிக்கிறது.

4.
கீழ் இடக்கையும், முயலகனை மிதிக்கும் வலது காலும் மறைத்தலைக் குறிக்கிறது.

குறிப்பு:- கீழ் இடக்கை மட்டும்தான் மறைத்தலைக் குறிக்கிறது என்றும், முயலகனை மிதிக்கும் வலதுகால் கொடியனவற்றை ஒடுக்குதல் என்ற தத்துவத்தைக் குறிக்கின்றது என்றும் பதினெண்சித்தர்களின் வாக்குகளிலும், வாக்கியங்களிலும், வாசகங்களிலும், நான்மறைகளிலும் மிகத் தெளிவாக குறிக்கப்படுகின்றன.

அதாவது நமசிவாய என்ற ஐந்தெழுத்து: நமச்சிவாய என்ற ஆறு எழுத்தாக வடிவப்படும்போது இந்த நடராசர் ஆறுவகை இறைமைச் செயல் நிலை விளக்கத்தை வழங்கிறது.

5.
இடக்காலின் தூக்கிய திருவடி அருளுதல் எனும் தத்துவத்தை விளக்குகிறது. இந்த இடக்கால்தூக்கிய திருவடிஅல்லதுகுஞ்சிதபாதம்எனப்படும். வலக்கால்அனைத்தையும் ஒடுக்கி மறைக்கின்ற்ஆடியபாதம்எனப்படும். சிறப்பாக, முயலகனின் (அரக்கன்) ஆட்டங்களை எல்லாம்அடக்கிய பாதம்ஒடுக்கிய பாதம்அவனால் விளந்த அச்சங்களையெல்லாம் மறைத்த பாதம் அல்லதுஅழித்த பாதம்எனப்படும்.

6.
இப்படி 1.ஆக்கல், 2. காத்தல், 3. அழித்தல், 4. ஒடுக்குதல் அல்லது மறைத்தல் 5. அருளல், என்று ஐந்தொழில்களை செய்யும் இறைவனின் நிலையை விளக்கும் இந்த நடராசர்சிலைஐந்தொழில் வல்லான் சிலைஅல்லதுஐந்தொழில் வல்லான் நிலைஎன்று சிறப்பிக்கப்படுகிறது.

நமசிவாயநமச்சிவாயஎன்ற சொல்லின் பொருள் விளக்கம்

இதே நடராசர் சிலையினைநமச்சிவாயஎன்ற சொல்லுக்கு உரிய விளக்கமாகவும் விளக்கிக் காட்டியுள்ளார்கள் பதினெண்சித்தர்கள்.

ஆக்கல்வலது மேல் கை

காத்தல்வலது கீழ்க் கை

சிஅழித்தல்மேல் இடக்கை

வாமறைத்தல்கீழ் இடக்கை

- அருளுதல்தூக்கிய இடக்கால்

ச்ஒடுக்குதல்ஊன்றிய வலதுகால்

இப்படி ஐந்தொழில் வல்லான் சிலை, ஆறு தொழில்களை விளக்கக்கூடிய ஒன்றாகவும் இருக்கிறது.

குறிப்பு:- இதைத்தான் பதினெண்சித்தர்கள் ஐந்தும் ஆறும் அறியாதவன், ஐந்தை ஆறாக்கத் தெரியாதவன், ஐந்தும் ஆறும் ஒன்றென உணரத் தெரியாதவன் .. என்று குறிக்கிறார்கள்.

ஆடல் வல்லான், கூத்தர் பெருமான், தாண்டவ மூர்த்தி, நடராசர், ஆடும்பெருமான், மன்றாடியார்,.., என்று பல பெயர்கள் பதினெண்சித்தர்களின் குருபாரம்பரியத்தில் உள்ளன.

---------------------------------------------------------
உங்களுக்குத் தெரியுமா!

நடராசர் சிலையும், ஆயிரத்தெட்டு சிவாலயங்களும்

நடராசர் சிலை ஆயிரத்தெட்டு வடிவ வேறுபாடுகளைக்கொண்டு வடிக்கப்பட்டு அமைக்கப்பட்ட ஆலயங்களே ஆயிரத்தெட்டு சீவாலயங்கள்.
---------------------------------------------

Sunday, 4 January 2015

திருமன தடை நீங்க--->நந்திக் கல்யாணம் பார்த்தால் முந்திக் கல்யாணம் நடக்கும்


            "நந்திக் கல்யாணம் பார்த்தால் முந்திக் கல்யாணம் நடக்கும்' என்பது பழமொழி.

நந்தியானவர் திருக்கயிலையில் வாயில் காப்பாளராக இருப்பவர். இவர் பூமியில் அவதரித்துத் திருமணம் செய்து கொண்டது பற்றிப் புராணம் கூறுகிறது.

பூலோகத்தில் வாழ்ந்த சிலாத முனிவருக்கு குழந்தை பாக்கியம் இல்லை. அதனால் திருவையாற்றில் அருள்புரியும் ஸ்ரீஐயாறப்ப ரைப் பூஜித்துத் தவம் செய்தார். அப்போது ஓர் அசரீரி, "முனிவரே, நீர் புத்திரகாமேஷ்டி யாகம் செய்து, யாகம் முடிந்ததும் பூமியை உழ வேண்டும். அப்போது ஒரு பெட்டகம் தோன்றும். அதில் ஒரு புத்திரன் காணப் படுவான். அவனுக்கு ஆயுள் பதினாறுதான்' என்று கூறியது.

அசரீரி வாக்குப்படி முனிவர் யாகம் செய்தார். யாகம் முடிந்ததும் பூமியை உழுதார். அப்போது ஒரு பெட்டகம் கிடைத்தது. அதில் ஓர் ஆண் குழந்தை இருந்தது. பிறந்த அன்றே ஸ்ரீபஞ்சநதீஸ்வரரால் அபிஷேகிப்பட்ட பெருமை அவருக்குக் கிடைத்தது. அவர்தான் ஜபேஸ்வரர் என்று பெயர் சூட்டப்பட்ட நந்தி. இந்த அபிஷேகம், அவர் அவதரித்த நாளான பங்குனி மாத திருவாதிரை நட்சத்திரத்தன்று மாலை நடைபெற்றதாகப் புராணம் கூறுகிறது.

"ஜபேஸ்வரர் பதினாறு ஆண்டு காலம்தான் பூலோகத்தில் இருப்பார்' என்று சிவபெருமான் அசரீரியாகச் சொன்ன தகவல் முனிவரை வாட்டியது.

இதனை அறிந்த ஜபேஸ்வரர், திருவை யாற்று ஈசனை நோக்கி அங்குள்ள சூரிய புஷ்கரணி தீர்த்தத்தில் கழுத்தளவு நீரில் நின்று கடும்தவம் புரிந்தார். காலம் கடந்தது. ஜபேஸ்வரரின் தவத்தைப் போற்றிய சிவபெருமான், "என்றும் பதினாறாய், சிரஞ்சீவி யாக வாழ்வாய்' என்று அருளியதுடன், ஜபேஸ்வரருக்கு அதிகார நந்தி என்ற பட்டத்தையும் கொடுத்தார்.

இறைவனிடம் வரம் பெற்று நீண்ட ஆயுளு டன் திரும்பிய ஜபேஸ்வரருக்குக் காலாகாலத்தில் திருமணம் செய்து வைக்கப் பெண் தேடினார்கள். (சிவபெரு மானே பெண் தேடியதாக வும் சொல்வர்.) வசிஷ்ட முனிவரின் பேத்தியும்- வியாக்ர பாத முனிவருடைய மகளும்- உபமன்யு முனிவரின் தங்கையுமாகிய சுயம்பிரகாசை என்ற பெண்ணைத் தன் மகனாகிய ஜபேஸ்வரருக்கு பங்குனி மாத புனர்பூச நட்சத்திரத்தில் திருமணம் செய்வித்தார் சிலாத முனிவர்.

பிறகு, ஜபேஸ்வரர் ஸ்ரீஐயாறப்பனிடம் உபதேசம் பெற்று, கயிலையில் சிவ கணங்களுக் குத் தலைவர் ஆனார். இந்தப் புராண வரலாற்றின் அடிப்படையில் திருவையாற்றி லும் திருமழபாடியிலும் சிறப்பாகத் திருவிழா நடைபெறுகிறது. சிலாத முனிவர் பூமியை உழும்போது நந்திதேவர் கிடைத்த இடம் "அந்தணர்புரம்' ஆகும். அங்கு வெள்ளிக் கலப்பையால் பூமியை உழும் நிகழ்ச்சி நடைபெறும். அங்கு நந்திதேவர் கிடைத்த இடத்தில் கலப்பை செல்லும்போது ஓர் பெட்டியை எடுப்பார்கள். அந்தப் பெட்டியிலிருந்து நந்தியை வெளியே எடுத்து அபிஷேக ஆராதனைகள் செய்வார்கள்.

அன்று மாலை திருவை யாற்றில் நந்திக்கு பட்டாபி ஷேகம் நடைபெறும்.

மறுநாள், திருமழபாடியில் நந்தியெம்பெருமானுக்கும் வசிஷ்ட முனிவரின் புதல்வியான சுயம்பிரகாசை தேவிக்கும் திருமண வைபவம் நடைபெறும். அப்போது அந்த ஊரே வாழைமரம், தோர ணங்கள் கட்டி விழாக்கோலம் பூண்டிருக்கும்.

திருமணத்திற்கு திருவையாற்றிலிருந்து இறைவனும் இறைவியும் பல்லக்கில் வருவார் கள். நந்திதேவர் குதிரை வாகனத்தில் வெள்ளித் தலைப்பாகை அணிந்து, செங்கோலைக் கையில் எடுத்துக் கொண்டு செல்வார்.

இறைவன் திருவையாற்றிலிருந்து திருமழ பாடிக்குச் செல்லும்போது, வைத்தியநாதன் பேட்டை என்ற ஊரின் வழியாகச் செல்வார். திருமணம் முடிந்து வரும்போது புனல்வாயில் என்ற ஊரின் வழியாக வருவார். இதனை, "வருவது வைத்தியநாதன் பேட்டை; போவது புனல்வாயில்' என்ற பழமொழியாகச் சொல்வர்.

இந்த விழாவின் தொடர்ச்சிதான் திருவை யாறு சப்த ஸ்தான விழாவாகும். திருவை யாற்று பஞ்சநதீஸ்வரர், நந்தி சகிதமாக திருப் பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த் தானம் ஆகிய ஊர்களுக்குச் செல்வார்.

சப்த ஸ்தான விழாவில் முக்கியமான ஊர் திருக்கண்டியூர். இங்கே இறைவன் இளைப் பாறுவார். சிலாத முனிவரின் அண்ணன் சதாதாப முனிவர் இறைவனுக்கும் நந்திக்கும் கட்டுச்சாதம் கட்டிக் கொடுத்தாராம். அந்த நிகழ்ச்சி இன்றும் இந்தத் திருமண விழாவினை யொட்டி நடைபெறுகிறது.

திருமணத்தடை உள்ளவர்கள் (ஆண், பெண்) நந்திக் கல்யாணத்தைத் தரிசித்தால், தடைகள் உடைக்கப்பட்டு உடனே நல்ல இடத்தில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை. இதனால்தான், "நந்திக் கல்யாணம் பார்த்தால் முந்திக் கல்யாணம் நடக்கும்' என்ற பழமொழி ஏற்பட்டது என்பர்.

100% குழந்தை (புத்திரபாகியம்)அருளும் புத்திரகாமேட்டீஸ்வரர்


இறைவன்புத்திரகாமேட்டீஸ்வரர்
இறைவிபெரிய நாயகி
தல மரம்பவளமல்லி
தீர்த்தம்கமண்டல நதி
புராண பெயர்தர்மாரண்ய÷க்ஷத்ரம்
கிராமம்/நகரம்ஆரணி
மாவட்டம் திருவண்ணாமலை
மாநிலம் தமிழ்நாடு

வரலாறு : அயோத்தியை ஆண்ட தசரத சக்கரவர்த்திக்கு, நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லை. தனக்கு பின் நாட்டை ஆள இளவரசர் இல்லாததால் தசரதர் மிகவும் வருந்தினர். குழந்தைப்பேறு உண்டாவதற்கு வழி சொல்லும்படி, தன் குலகுரு வசிஷ்டரிடம் ஆலோசனை கேட்டார். அவர், இத்தலத்தைச் சுட்டிக்காட்டி சிவனை வழிபட அந்த பாக்கியம் கிடைக்குமென்றார். அதன்படி தசரதர், இவ்விடத்தில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து, ரிஷ்யசிருங்க மகரிஷியின் தலைமையில் புத்திரகாமேஷ்டி யாகம் நடத்தி சிவனை வழிபட்டார். இதன்பின், அவர் ராமர், பரதன், லட்சுமணன், சத்ருக்கனன் என நான்கு பிள்ளைகளைப் பெற்றார். இங்கு சிவனுக்கு கோயில் எழுப்பிய தசரதர், அவருக்கு யாகத்தின் பெயரால் "புத்திரகாமேட்டீஸ்வரர்' என்றே பெயர் சூட்டினார்.

திருவிழா : ஆடி சுவாதியில் லட்ச தீபம், நவராத்திரி, சிவராத்திரி.
சிறப்பு : எந்த ஒரு செயலையும் விநாயகரிடம் துவங்கி, ஆஞ்சநேயரிடம் முடிக்க வேண்டும் என்பர். இங்கு நதிக்கரையில் வடக்கு நோக்கி விநாயகரும், அவருக்கு எதிரே ஆஞ்சநேயரும் உள்ளனர். பக்தர்கள் தாம் ஏதேனும் செயலைத் துவங்கும்போது, இந்த விநாயகரை வணங்கிச் செல்கின்றனர். அச்செயல் சிறப்பாக முடிந்ததும் ஆஞ்சநேயரை வழிபட்டுச் செல்கின்றனர். ஆஞ்சநேயர் சிலையில் சங்கு, சக்கரம் உள்ளது மற்றொரு சிறப்பு. இவ்வாறு, எதிரெதிரே விநாயகர், ஆஞ்சநேயரைக் காண்பது அரிது.
திறக்கும் நேரம் : காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல் : பிரகாரத்தில் அறுபத்துமூவர், சொர்ணவிநாயகர், அம்பிகையருடன் பஞ்சலிங்கம், அஷ்டோத்ர லிங்கம், காளியுடன் வீரபத்திரர், வள்ளி தெய்வானையுடன் சண்முகர், பாமா ருக்மிணியுடன் கோபாலகிருஷ்ணர், காலபைரவர், சனீஸ்வரர், சூரியன் ஆகியோர் உள்ளனர்.

பிரார்த்தனை : திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தைப்பேறு இல்லாதவர்கள், புத்திரகாமேட்டீஸ்வரரை வழிபட, விரைவில் அந்த பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன் : பிரார்த்தனை நிறைவேறியவுடன் சுவாமிக்கும், அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து வழிபாடு செய்கின்றனர்.
தல சிறப்பு : தசரதர் சன்னதி: ஒருசமயம் ஜமதக்னி மகரிஷியின் கமண்டலத்தில் இருந்து கொட்டி நதியாக பெருக்கெடுத்த தீர்த்தம், கமண்டல நதி எனப்பட்டது. இதன் கரையில் அமைந்த கோயில் இது. கோயில் எதிரே மட்டும் இந்த நதி வடக்கில் இருந்து கிழக்காக திரும்பி சுழித்துக் கொண்டு ஓடுகிறது. மழைக்காலங்களில் இந்நதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். மூலஸ்தானத்தில் சிவன், 9 தலை நாகத்தின் கீழ் காட்சியளிக்கிறார். பவுர்ணமிதோறும் இவருக்கு விசேஷ பூஜை நடக்கும். அன்று, சுவாமி புறப்பாடும் உண்டு. அம்பாள் பெரியநாயகிக்கு, தனிக் கொடிமரத்துடன் கூடிய சன்னதி உள்ளது. கோயிலுக்கு நேரே வெளியில் தசரதருக்கும் சன்னதி உள்ளது. இவர் சக்கரவர்த்தியாக இல்லாமல், யாகம் நடத்தியபோது இருந்த அமைப்பில் முனிவர் போல காட்சியளிக்கிறார். கைகளில் ருத்ராட்ச மாலை, கமண்டலம் வைத்திருக்கிறார். விழா நாட்களில் இவருக்கு பூஜை உண்டு.

குழந்தை பாக்கிய தலம்: புத்திரகாமேட்டீஸ்வரர் கிடைப்பதற்கான பிரதான வழிபாட்டுத் தலம் இது. திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தைப்பேறு இல்லாதவர்கள், புத்திரகாமேட்டீஸ்வரரை வழிபட, விரைவில் அந்த பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. குழந்தை வேண்டி புத்திரகாமேட்டீஸ்வரரை வணங்குபவர்கள், ஆறு திங்கள் கிழமைகள் விரதமிருக்க வேண்டும். முதல் திங்களன்று விரதம் துவங்கி, மதியம் மட்டும் ஒரு குழந்தைக்கு அன்னம் கொடுத்து, பின் சாப்பிட வேண்டும். இரண்டாம் வாரத்தில் 2 குழந்தைகள், மூன்றாம் வாரத்தில் 3 என்ற அடிப்படையில், ஆறாவது திங்களன்று ஆறு குழந்தைக்கு அன்னதானம் பரிமாறி விரதமிருக்க வேண்டும். ஏழாவது திங்கள் கிழமையன்று இங்கு புத்திரகாமேட்டீஸ்வரருக்கு செவ்வலரிப்பூ மற்றும் கோயிலில் உள்ள பவள மல்லி மாலை அணிவித்து, மிளகு சேர்ந்த வெண்பொங்கல் நைவேத்யம் செய்து வணங்க வேண்டும். ஆனி பவுர்ணமியன்று சிவனுக்கு 11 சிவாச்சாரியார்கள், "புத்திரகாமேஷ்டி யாகம்' நடத்துவர். இதிலும் கலந்து கொள்ளலாம். ஜாதக ரீதியாக 5ம் இடத்தில் கேது இருந்தால் உண்டாகும் புத்திர தோஷம், நாக தோஷம் நீங்க கோயில் வளாகத்திலுள்ள வேம்பு, ஆலமரத்தடியில் தங்கள் நட்சத்திர நாளில் நாக பிரதிஷ்டை செய்தும், புத்திர காமேஷ்டி யாகம் நடத்தியும் வேண்டிக்கொள்கிறார்கள். இவ்விரு பூஜைகளுக்கும் கட்டணம் உண்டு.

முகவரி : அருள்மிகு புத்திரகாமேட்டீஸ்வரர் திருக்கோயில், புதுக்காமூர், ஆரணி-632 301 திருவண்ணாமலை மாவட்டம்.
தகவலுக்கு: 99947 84478

நவ கைலாயங்களின் மூலமான உரோம ரிஷி சித்தர் பற்றிய வரலாறு

உரோம ரிஷி .


                            
உரோம ரிஷி  சித்தர்களில் முதன்மையானவரும், கும்பமுனி, குறுமுனி என்று அழைக்கப்பட்டவருமான அகஸ்திய மகரிஷியின் சீடர்களில் முக்கியமானவர் உரோமச ரிஷி. இவருக்கு சிவபெருமானை நேரில் தரிசித்து அவருடைய அருளாசியைப் பெற வேண்டும் அப்படியே முக்தியடைந்து விட வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டது. இவரது தன் ஆசையை தனது குருவான அகத்திய முனிவரின் மூலமாகவே நிறைவேற்றிக் கொள்ள விரும்பி அகஸ்திய முனிவரிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்தார். அகத்திய மகரிஷியும் அவரின் ஆசையை நிறைவேற்ற அவரிடம் உறுதியளித்தார். இதன்படி அகஸ்திய முனிவர் தாமிரபரணி ஆற்றில் ஒன்பது தாமரை மலர்களை மிதக்க விடுவதாகவும், இந்த ஒன்பது தாமரை மலர்களும் தாமிரபரணி ஆற்றங்கரையின் ஓரத்தில் ஒவ்வொன்றாக கரை ஒதுங்கும் என்றும், அவை கரை ஒதுங்கும் இடங்களில் சங்கு முகத்தினால் நீராடி நவக்கிரகங்களின் வரிசையில் சிவபெருமானை வழிபட்டால் சிவபெருமானின் காட்சி கிடைத்துவிடும் என்றும் அதன் மூலம் அவர் முக்தி அடையலாம் என்றார். அதன் பிறகு ஒன்பது தாமரை மலர்களை தாமிரபரணி ஆற்றில் மிதக்க விட்டார். உரோமச ரிஷியும் அந்த மலர்களைத் தொடர்ந்து சென்றார்.  அந்த மலர்களில் ஒன்று பாபநாசம் எனும் இடத்தில் கரை ஒதுங்கியது. 
                           உரோமச ரிஷியும் அகத்திய மகரிஷி சொன்னபடி அந்த இடத்தில் சிவபெருமானுக்குப் பூஜைகள் செய்து வழிபட்டார். இதையடுத்து ஒவ்வொரு மலர்களும் சேரன் மகாதேவி, கோடகநல்லூர், குன்னத்தூர், முறப்பநாடு, திருவைகுண்டம், தென் திருப்பேரை, ராஜபதி. சேர்ந்த பூ மங்கலம் எனும் ஊர்களின் தாமிரபரணி ஆற்றங்கரையில் கரை ஒதுங்கியது. அந்த ஊர்களிலெல்லாம் உரோமரிஷி சிவபெருமானை வழிபட்டார்.  அகஸ்திய முனிவர் சொன்னபடி சிவபெருமான் உரோம ரிஷிக்குக் காட்சியளித்து அவருக்கு முக்தியும் அளித்தார். உரோமரிஷி தாமிரபரணி ஆற்றங்கரையில் தாமரை மலர்கள் வழிபட்ட ஊர்களில் சிவாலயங்கள் இருக்கின்றன. இந்த ஒன்பது ஊர்களும் நவ கைலாயங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றில் முதல் மூன்று ஊர்களான பாப நாசம், சேரன் மகாதேவி, கோடக நல்லூர் ஆகிய இடங்கள் மேலக்கைலாயங்கள் என்றும், அடுத்த மூன்று ஊர்களான குன்னத்தூர், முறப்பநாடு, திருவைகுண்டம் ஆகியவை நடுக்கைலாயங்கள் என்றும், கடைசி மூன்று ஊர்களான தென்திருப்பேரை, ராஜபதி, சேர்ந்தபூமங்கலம் கீழ்க்கைலாயங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த நவ கைலாய ஊர்களிலுள்ள சிவாலயங்களில் வழிபாடு செய்பவர்களுக்கு அனைத்து வசதிகளும் கிடைக்கும் என்று இந்துமத புராணங்கள் சொல்கின்றன. 
                                                தமிழ்நாட்டில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி ஆற்றங்கரையில் இந்த நவ கைலாயக் கோவில்கள் உள்ள ஒன்பது ஊர்களும் இருக்கிறது. நவ கைலாயங்களுக்குச் சென்று சிவபெருமானை வழிபடுவோம். சிவபெருமான் அளிக்கும் அனைத்துப் பலனையும் பெறுவோம். உரோமபுரியிலிருந்து ஞானத்தை நாடி தென் தமிழ்நாட்டிற்கு வந்தார் எனவே உரோம ரிஷி என்றொரு கருத்தும், இல்லை, இவரின் உடலில் ரோமம் அதிகம் இருந்த காரணத்தால் உரோம முனி என பெயர் பெற்றிருக்கிறார் என்றொரு கருத்தும் நிலவுகிறது. ஆனால் அவரோ 
 
தன்னைப்பற்றி... 
"கால் வட்டம் தங்கி மதி அமுதப் பாலைக் 
கண்டு பசியாற்றி மண் சுவடு நீக்கி 
ஞால வட்டம் சித்தாடும் பெரியோர் பதம் 
நம்பினதால் உரோமன் என்பேர் நாயன் தானே " 
பால் : யோக நிலையில் இருக்கும் போது நாம் சிரசில் ஒழுகும் அமிழ்தம் . 
ஞால : பரிசுத்த மெய்ஞஞானம் 
பதம் : பாதம் இந்தப் பாடல் அவரது உரோம ரிஷி ஞானம் நூலில் இருந்து... 
இந்த ஞானவானின் ஞானத்தை அவரின் பாடல்களே நமக்கு காட்டி தருகின்றன.
 இதோ ஒரு பாடல்...

 தியானத்தைப் பற்றி... 
செலுத்துவது முண்ணாக்கி லண்ணாக் கையா! 
சென்றேறிப் பிடரிவழித் தியானந் தோன்றும்; 
வலுத்ததடா நாலுமுனக் கமுத மாச்சு; 
மவுனமென்ற நிருவி கற்ப வாழ்க்கை யாச்சு; 
சொலித்திருக்கும் பன்னிரண்டி லிருத்தி யூது 
சோடசமாம் சந்த்ரகலை தேய்ந்து போச்சு; 
பலித்ததடா யோகசித்தி ஞான சித்தி 
பருவமாய் நாடிவைத்துப் பழக்கம் பண்ணே. 

போலிகளைப் பற்றி.... 
மூடாமல் சிறுமனப் பாடம் பண்ணி 
முழுவதுமவன் வந்ததுபோல் பிரசங் கித்து 
வீடேதிங் குடலேது யோக மேது 
வீண்பேச்சாச் சொல்லி யல்லோ மாண்டு போனார்? 
காடேறி மலையேறி நதிக ளாடிக் 
காய்கிழங்கு சருகுதின்று காமத் தீயால் 
சூடேறி மாண்டவர்கள் கோடா கோடி 
சொருபமுத்தி பெற்றவர்கள் சுருக்க மாச்சே. 

தவநிலையைப் பற்றி...  
சொருபமுத்திக் கடையாளம் ஏதென் றக்கால் 
சுடர்போலக் காணுமடா தூல தேகம்; 
அருபமுத்தி யிடமல்லோ பிரம ஞானம் 
அபராட்ச மென்றுசொல்லுங் சிரவ ணந்தான் 
பருபதத்தை அசைப்பனெனச் சிற்றெ றும்பின் 
பழங்கதைபோ லாச்சுதிந்த யோகம் விட்டால் 
வெறுங்கடத்தி லீப்புகுந்த வாறுபோல 
வேதாந்த மறியாத மிலேச்சர் தாமே 
என உரோம ரிஷி ஞானம் கூறுகிறது. 

"காடேரி மலையேறி நதிகளாடி 
காய் கிழங்கு சருகு தின்று காமத் தீயால் 
சூடேறி மாண்டவர்கள் கோடா கோடி 
சொருப முத்தி பெற்றவர்கள் சுருக்க மாச்சே "
சித்தர்களாக,ரிஷிகளாக, குருமார்களாக பலரும் வேடமிட்டு, காடுகளுக்கு சென்று ,செழித்து வளர்ந்த கிழங்குகளை தின்று, நதிகளில் நீராடி இறுதியில் காமத் தீயில் அகப்பட்டு முத்தி பெறாமல் மாண்டவர் பலரே எனவும் அவர்களிடையே ஞானம் பெற்று சித்து நிலையை அடைந்தவர் சிலரே எனவும் உரோம ரிஷி ஞானம் சொல்கிறது. 
இவர் சிங்கி வைப்பு, 
உரோம ரிஷி வைத்திய சூத்திரம், 
வகார சூதிரம், 
உரோம ரிஷி முப்பு சூத்திரம் 
போன்ற நூல்களை எழுதியுள்ளார். 
நல்லோர் தாள் போற்றி! 
நாயகன் தாள் போற்றி !! 
உரோம ரிஷி என்னும் சித்தர் அருளிச்செய்த காயகல்ப்பமுறைஇந்த ஆசரமத்திற்கு கிழப் புறம் , செங்க்கொடிவேலி என்ற ஒரு செடி இருக்கிறது .அச்செடியின் பூ பிச்சிப்பூ போலவும்  ,நிறம் சிவப்பாகவும் ,வேர் ரத்த நிறமாகவும் இருக்கும் . அச்செடிக்கு சாபம் நீக்கி சமூலத்தையும் பிடிங்கி வந்து , இரும்பினால் செய்த ஒரு குழாயில் போட்டு ,அத்துடன் அமுரி சேர்த்து எட்டு நாள் உறிய பிறகு எடுக்க இரும்பு சுத்தியாகும் . அந்த இரும்பை உலையில் இட்டு தகடாக அடித்து , அத்தகடை ஆட்டு எருவில் புடமிட்டு ,ஏரஞ்சி தயலத்தில் சுருக்கிட பேதிக்கும் . அதை மறுபடி உலையில் காய்ச்சி செங்க்கொடிவேலி சாற்றில் சுர்க்கிட பத்து வயதாகும் . அதை சுண்ணம் செய்து   பசுவின் நெய்யில் ஒரு வாரம் புசித்துவர தேக சித்தியாகும் . மற்றொரு முறை அந்த செங்க்கொடிவேலி செடிக்குப் பக்கத்தில் , கருங்கொடி வேலி என்ற ஒரு செடி  இருக்கிறது .அதன் இலை நொச்சியிலை போல் இருக்கும் . அந்த இலையை பிடிங்கி வந்து கசக்கி சாறு பிழிந்து ,, வெந்த சோறில் ஒருக் கைப்பிடி எடுத்து ,அதில் அந்த சாரை முன்று துளியிட்டு அந்த சாதத்தை முன்று நாள் வரை சாப்பிட்டு வர தேகசிதியாகும் என்றார் .
தாடியினால் தங்கம் தந்த உரோமரிஷிஅஷ்டமா சித்தி பெற்ற 18 சித்தர்களில் இவரும் ஒருவர். இவர் புசுண்ட மாமுனிவரின் சீடராவார். இவரின் உடல் முழுவதும் உரோமம் முளைத்திருந்தபடியால் உரோமமுனி என்று காரணப் பெயர் பெற்றார். ஒரு பிரம்மா இறந்தால் இவருடைய மயிர் ஒன்று உதிரும். இவ்வாறு மூன்றரைக் கோடி பிரம்மாக்கள் இறந்தால் மட்டுமே இவருடைய வாழ்நாள் முடியும். ஒரு உரோமமுனி இறந்தால் அஷ்டகோண (8 கோண) முனிவருக்கு ஒரு கோணல் நிமிரும் என்று கூறுவர். இவர் கும்பகோணத்தை அடுத்த கூந்தலூரில் தங்கி தவம் செய்து வரும்போது தாடி வழியே பொன் வரவழைத்து அனைவருக்கும் கொடுத்து வந்தார். ஒரு சமயம் தாடி வழியே பொன் வருவது நின்று விடவே அந்த தாடியை உடவே நீக்கிவிட்டு இறைவனை வழிபட நீராடாமல் திருக்கோயிலை அடைந்தார். நீராடாமல் இறைவனை தரிசிக்க வந்த உரோமமுனியை விநாயகரும் முருகனும் தடுத்தனர். இதைக் கண்ட சித்தர் கோவில் வாயிலிலேயே நின்றார். புறத்தூய்மையை விட அகத்தூய்மையே சிறந்தது என்பதை மெய்பிக்கும் வண்ணம் இச்சித்தருக்கு கோவிலின் வெளியிலேயே இறைவன் தரிசனம் தந்ததாக கூறுவர். உரோமமுனி அற்புதமான பாடல்களைப் பாடியுள்ளார். இவர் பாடல்களில் உவமை நயங்களும் சிலேடைகளும் அதிகம்.இவர் செம்படவ தந்தைக்கும், குறத்தாய்க்கும் பிறந்ததாக போகர் தனது நூலில் குறிப்பிடுகிறார். இவர் புசுண்ட முனிவரின் சீடராவார். போகர் சீனதேசத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததுபோல, இவர் உரோமாபுரியுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தார் இதனால் உரோம ரிஷி என்று அழைக்கப் பட்டார். இவர் கும்பகோணதிட்கு அருகிலுள்ள கூந்தலூர் என்னுமிடத்தில் தங்கியிருந்த பொது தாடி வழியாக பொன் வரவழைத்து கொடுத்ததாக சொல்லப்படுகிறது. 
"உரோம ரிஷி ஞானம் " என்ற பெயரில் இவர் எழுதிய நூலில் மொத்தமாக பதின்மூன்று பாடல்களே இடம் பெற்றிருக்கின்றன. 
வகார சூதிரம் 
உரோம ரிஷி வைத்தியம் 1000 
உரோம ரிஷி பூஜா விதி 
உரோமரிஷி 
பஞ்சபட்சி சாத்திரம் 
ஆகிய நூல்களை இவர் எழுதியதாக சொல்லப் படுகிறது. 
உரோமமுனி இயற்றிய நூல்கள்
1. உரோமமுனி வைத்தியம் - 1000 
2. உரோமமுனி சூத்திரம் - 1000 
3. உரோமமுனி ஞானம் - 50 
4. உரோமமுனி பெருநூல் - 500 
5. உரோமமுனி குறுநூல் - 50 
6. உரோமமுனி காவியம் - 500 
7. உரோமமுனி மூப்பு சூத்திரம் – 30 
8. உரோமமுனி இரண்டடி - 500 
9. உரோமமுனி சோதிட விளக்கம் 
10. நாகாரூடம் 
11. பகார சூத்திரம் 
12. சிங்கி வைப்பு 
13. உரோமமுனி வைத்திய சூத்திரம் ஆகியன. 
உரோமமுனி தியான செய்யுள் 
கனிந்த இதயம், மெலிந்த உருவம், 
சொரிந்த கருணை, சொல்லில் அடங்குமோ? 
அலையும் மனதை அடக்கி அருள் அள்ளியே 
தருவாய் தாடியில் தங்கம் தந்த தெய்வமே 
தங்கள் திருவடி சரணம். 
உரோமசித்தரின் பூசை முறைகள் தேக சுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சளிட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அதன் மேல் உரோமரிஷி ஸ்ரீ கயிலாய கம்பளிச் சட்டைமுனி சித்தரின் படத்தை வைத்து அதற்கு முன் மஞ்சள், குங்குமம் இட்டு அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்கில் தீபமேற்ற வேண்டும். முதலில் இந்த சித்தருக்காக குறிப்பிடப்பட்டிருக்கும் தியானச் செய்யுளை கண்மூடி மனமுருக கூறி சாதிபுஷ்பம் அல்லது மல்லிகை புஷ்பம் அல்லது வில்வம் கொண்டு பின்வரும் பதினாறு போற்றிகளை கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். 
பதினாறு போற்றிகள் 
1. கயிலாயத்தில் வசிப்பவரே போற்றி! 
2. ஜடாமுடிப் பிரியரே போற்றி! 
3. சந்திரனை தரிசிப்பவரே போற்றி! 
4. சிவசக்தியாகத் தோன்றுபவரே போற்றி! 
5. நந்தி தேவரால் காப்பற்றப்படுபவரே போற்றி! 
6. சிவதாண்டவத்தை தரிசிப்பவரே போற்றி! 
7. சங்கீதப் பிரியரே போற்றி! 
8. தடைகளை நீக்குபவரே போற்றி! 
9. காகபுஜண்டரால் பூஜிக்கப்படுபவரே போற்றி! 
10. மகாலக்ஷ்மியின் அருள் பெற்றவரே போற்றி! 
11. முருகப் பெருமானை வணங்குபவரே போற்றி! 
12. உலகத்தைக் காப்பாற்றுபவரே போற்றி! 
13. சூரியன் போன்று காட்சி அளிப்பவரே போற்றி! 
14. காலத்தைக் கடந்தவரே போற்றி! 
15. தெய்வீகச் சித்தரே போற்றி! 
16. கைலாயத்தில் வாசம் செய்யும் ஸ்ரீ உரோமரிஷி முனியே போற்றி! போற்றி! 
இவ்வாறு பதினாறு போற்றிகளையும் கூறி அர்ச்சித்தபிறகு மூல மந்திரமான “ஓம் ஸ்ரீஉரோமரிஷி முனி சித்தர் சுவாமியே போற்றி” என்று 108 முறை ஜபிக்க வேண்டும். பூசைக்கு நிவேதனமாக இஞ்சி இல்லாமல் மிளகு, சீரகம் கலந்து குழைவாக செய்த வெண் பொங்கல், பழங்கள், தண்ணீர் வைக்க வேண்டும். பின்பு உங்கள் பிரார்த்தனையை மனமுருகக் கூற வேண்டும். நிறைவாக தீபாராதனை செய்யவும். 
உரோமரிஷி சித்தரின் பூஜா பலன்கள் இவர் சந்திர கிரகத்தைப் பிரதிபலிப்பவர். ஜாதகத்தில் உள்ள சந்திர கிரக தோஷங்களை நீக்குபவர். மனம் தெளிவாக இருந்து, மனோலயம் ஏற்பட வேண்டுமென்றால் மனோன்மணி சக்தி பெருக வேண்டுமென்றால் இச்சித்தரின் அருள் நமக்கு கிடைக்க வேண்டும். இவரை முறைப்படி வழிபட்டால்… 
1. மன வியாதி, மன அழுத்தம், மனப்புழுக்கம், மன சஞ்சலங்கள் அகன்று மன நிம்மதி கிடைக்கும். 
2. எதிலும் முடிவெடுக்க முடியாமல் தவறான முடிவுகள் எடுப்பது நீங்கிடும். 
3. சஞ்சல புத்தி நீங்கும். 
4. படிப்பிலும், தொழிலிலும் கவனம் செலுத்த முடியாமல் இருக்கும் நிலை மாறிடும். 
5. தாயார், மகன், மகள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அகன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைகொள்ளும்.
இவருக்கு வெள்ளை வஸ்திரம் அணிவித்து பூசித்தால் நினைத்த காரியம் நிறைவேறும். திங்கள் கிழமை இவருக்கு உகந்த நாள்.